தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Thursday, September 30, 2010

IDA உயர்வு

     IDA  4 . 7 % உயர்ந்துள்ளது.  
           35.1 % TO 39. 8 %
                     01 - 10 - 2010 முதல்                                           

Wednesday, September 29, 2010

போனஸ் கேட்டு பொதுச் செயலாளர் கடிதம்.

    நமது போர்ட் சேர்மனுக்கு அகில இந்திய பொதுச் செயலர் தோழர் சந்தேஸ்வர்சிங் அவர்கள் செப் 27 ஆம் தேதி கடிதம் எழுதியுள்ளார்.   கடிதத்தில், 

     தசரா பூஜையும், துர்க்கா பூஜையும் நெருங்கி வருகின்ற நிலைமையில் ஊழியர்கள் போனசை எதிபார்த்துக் காத்திருக்கிறார்கள்.  கொடுபடாத ஊதியமே போனஸ் என்கின்றபோது அதில் கம்பெனி லாபம் ஈட்டுகிறதா, இல்லையா என்பதை இணைத்துப் பார்க்கக்  கூடாது.     கோடிக்கணக்கான ரூபாயை வெளிநாட்டுப் பயணத்திற்காக செலவு செய்யும் நிர்வாகம் ஊழியர்களுக்குப் போனஸ் தருவதில் தயக்கம் காட்டுவது வருத்தமளிக்கிறது.   லாபம் ஈட்டாத பல அரசு அலுவலங்களில் கூட போனஸ் அளிக்கப்படுகிறது என்பதை நிர்வாகம் கணக்கில் எடுத்துக் கொள்வது நல்லது. எனவே, ஊழியர்களுக்கு காலத்தே போனசை  அளித்திட வேண்டும்  என்று நிர்வாகத்தை வேண்டிக் கேட்டு எழுதியுள்ளார்.  
                                                               S . சிவசிதம்பரம், பட்டுக்கோட்டை.
அறிவிப்பு: பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு வரவிருக்கிறது. அதன் காரணமாக அசம்பாவிதம் ஏதும் நடந்து விடக் கூடாது என்பதற்காக செப் 30 கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.      அன்புடன் G. கேசவன்.  DS /TNJ

Shaheed Bhagat Singh Biography

 Born: September 27, 1907
Martyrdom: March 23, 1931


Achievements: Gave a new direction to revolutionary movement in India, formed 'Naujavan Bharat Sabha' to spread the message of revolution in Punjab, formed 'Hindustan Samajvadi Prajatantra Sangha' along with Chandrasekhar Azad to establish a republic in India, assassinated police official Saunders to avenge the death of Lala Lajpat Rai, dropped bomb in Central Legislative Assembly along with Batukeshwar Dutt.

Bhagat Singh was one of the most prominent faces of Indian freedom struggle. He was a revolutionary ahead of his times. By Revolution he meant that the present order of things, which is based on manifest injustice must change. Bhagat Singh studied the European revolutionary movement and was greatly attracted towards socialism. He realised that the overthrow of British rule should be accompanied by the socialist reconstruction of Indian society and for this political power must be seized by the workers.

Though portrayed as a terrorist by the British, Sardar Bhagat Singh was critical of the individual terrorism which was prevalent among the revolutionary youth of his time and called for mass mobilization. Bhagat Singh gave a new direction to the revolutionary movement in India. He differed from his predecessors on two counts. Firstly, he accepted the logic of atheism and publicly proclaimed it. Secondly, until then revolutionaries had no conception of post-independence society. Their immediate goal was destruction of the British Empire and they had no inclination to work out a political alternative. Bhagat Singh, because of his interest in studying and his keen sense of history gave revolutionary movement a goal beyond the elimination of the British. A clarity of vision and determination of purpose distinguished Bhagat Singh from other leaders of the National Movement. He emerged as the only alternative to Gandhi and the Indian National Congress, especially for the youth.

Bhagat Singh was born in a Sikh family in village Banga in Layalpur district of Punjab (now in Pakistan). He was the third son of Sardar Kishan Singh and Vidyavati. Bhagat Singh's family was actively involved in freedom struggle. His father Kishan Singh and uncle Ajit Singh were members of Ghadr Party founded in the U.S to oust British rule from India. Family atmosphere had a great effect on the mind of young Bhagat Singh and patriotism flowed in his veins from childhood.

While studying at the local D.A.V. School in Lahore, in 1916, young Bhagat Singh came into contact with some well-known political leaders like Lala Lajpat Rai and Ras Bihari Bose. Punjab was politically very charged in those days. In 1919, when Jalianwala Bagh massacre took place, Bhagat Singh was only 12 years old. The massacre deeply disturbed him. On the next day of massacre Bhagat Singh went to Jalianwala Bagh and collected soil from the spot and kept it as a memento for the rest of his life. The massacre strengthened his resolve to drive British out from India.

In response to Mahatma Gandhi's call for non-cooperation against British rule in 1921, Bhagat Singh left his school and actively participated in the movement. In 1922, when Mahatma Gandhi suspended Non-cooperation movement against violence at Chauri-chaura in Gorakhpur, Bhagat was greatly disappointed. His faith in non violence weakened and he came to the conclusion that armed revolution was the only practical way of winning freedom. To continue his studies, Bhagat Singh joined the National College in Lahore, founded by Lala Lajpat Rai. At this college, which was a centre of revolutionary activities, he came into contact with revolutionaries such as Bhagwati Charan, Sukhdev and others.

To avoid early marriage, Bhagat Singh ran away from home and went to Kanpur. Here, he came into contact with a revolutionary named Ganesh Shankar Vidyarthi, and learnt his first lessons as revolutionary. On hearing that his grandmother was ill, Bhagat Singh returned home. He continued his revolutionary activities from his village. He went to Lahore and formed a union of revolutionaries by name 'Naujavan Bharat Sabha'. He started spreading the message of revolution in Punjab. In 1928 he attended a meeting of revolutionaries in Delhi and came into contact with Chandrasekhar Azad. The two formed 'Hindustan Samajvadi Prajatantra Sangha'. Its aim was to establish a republic in India by means of an armed revolution.

In February 1928, a committee from England, called Simon Commission visited India. The purpose of its visit was to decide how much freedom and responsibility could be given to the people of India. But there was no Indian on the committee. This angered Indians and they decided to boycott Simon Commission. While protesting against Simon Commission in Lahore, Lala Lajpat Rai was brutally Lathicharged and later on succumbed to injuries. Bhagat Singh was determined to avenge Lajpat Rai's death by shooting the British official responsible for the killing, Deputy Inspector General Scott. He shot down Assistant Superintendent Saunders instead, mistaking him for Scott. Bhagat Singh had to flee from Lahore to escape death punishment.

Instead of finding the root cause of discontent of Indians, the British government took to more repressive measures. Under the Defense of India Act, it gave more power to the police to arrest persons to stop processions with suspicious movements and actions. The Act brought in the Central Legislative Assembly was defeated by one vote. Even then it was to be passed in the form of an ordinance in the "interest of the public." Bhagat Singh who was in hiding all this while, volunteered to throw a bomb in the Central Legislative Assembly where the meeting to pass the ordinance was being held. It was a carefully laid out plot, not to cause death or injury but to draw the attention of the government, that the modes of its suppression could no more be tolerated. It was decided that Bhagat Singh and Batukeshwar Dutt would court arrest after throwing the bomb.

On April 8, 1929 Bhagat Singh and Batukeshwar Dutt threw bombs in the Central Assembly Hall while the Assembly was in session. The bombs did not hurt anyone. After throwing the bombs, Bhagat Singh and Batukeshwar Dutt, deliberately courted arrest by refusing to run away from the scene. During his trial, Bhagat Singh refused to employ any defence counsel. In jail, he went on hunger strike to protest the inhuman treatment of fellow-political prisoners by jail authorities. On October 7, 1930 Bhagat Singh, Sukh Dev and Raj Guru were awarded death sentence by a special tribunal. Despite great popular pressure and numerous appeals by political leaders of India, Bhagat Singh and his associates were hanged in the early hours of March 23, 1931.

Monday, September 27, 2010

செப் 27
மாவீரன் பகத்சிங் பிறந்த நாள் 

     1901 செப் 27 ம் நாள் மாவீரன் பகத்சிங்குக்கு 103 ஆவது பிறந்த நாள்.  1931 ம் வருடம் மார்ச் 23 அன்று பிரிட்டிஷாரால் தூக்கிலிடப்பட்ட அம் மாவீரனுக்கு வயது 23 தான்.  தேச விடுதலைக்காக 
இன்னுயிர் ஈந்த அத் தோழனை எண்ணிப்பார்ப்பது கூட தியாக உணர்வை வளர்க்கும்.  



Sunday, September 26, 2010

செப் - 30  நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் 
தஞ்சை CTMX வாயிலில் 
செப் - 30 காலை 10 மணி.
     
  NFTE, FNTO, WRU, ATM, PEWA, EC,  ES, BTEU, NTSU  ஆகிய ஒன்பது  சங்கங்கள்
 இணைந்து  நாடு முழுவதும் நடத்துகின்ற ஆர்ப்பாட்டம்.    
          கடந்த 2008 நவம்பர் 11  அன்று  4  ஆவது சரிபார்ப்பு தேர்தல் முடிந்த பின்னர் நடைபெற்ற பேச்சு வார்த்தையில்,   புதிய விதிகளை  (Code of  Discipline )  உருவாக்க ஒப்புக் கொண்ட  தலைமை தொழிலாளர் ஆணையர்,   BSNLEU மற்றும் TEPU  சங்கத்தின் கோரிக்கையை ஏற்று, ஒருமித்த குரலில் நிலைமையை எடுத்துச் சொன்ன ஒன்பது சங்கங்களைப் புறந்தள்ளியதைக்  கண்டித்து நடத்துகின்ற ஆர்ப்பாட்டம். 
          விகிதாசாரப் பிரநிதித்துவம் மூலம் ஒற்றுமையைப் பலப்படுத்தியிருக்க வேண்டிய இத் தருணத்தில், அதிகார ஆசையால் வேண்டுமென்றே அதைக் கை நழுவவிட்டு நிர்வாகத்திற்கு துணைபோய்விட்ட BSNLEU  சங்கத்தைக் கண்டித்து நடத்தப்போகும் ஆர்ப்பாட்டம். 
          தொழில் அமைதிக்கு நல்லதோர் வாய்ப்பு வந்த சூழலை பயன்படுத்திக்கொள்ள அங்கீகரிக்கப்பட்ட சங்கம் விரும்பவில்லை என்பதை, தோழர்களுக்குச் சொல்ல வேண்டாமா! அதற்கான  ஆர்ப்பாட்டம் தான் தோழர்களே!
          BSNLEU வுக்கு ஆதரவாக கூட்ட நிகழ்ச்சி நிரலையே மாற்றி அமைத்து பிப்ரவரி 1, 2011 என்று தேர்தல் தேதியையும்  அறிவித்த நிர்வாகத்திற்கு சரியான    பாடம் புகட்டுவோம். 
   
      BSNL  நிர்வாகமே புதிய அங்கீகார விதிகளை  
       வகுத்திடு! 
       புதிய விதிகளின்படி தேர்தலை நடத்து! 
    அனைத்து தொழிற்சங்கங்களுக்கும் குறைந்த       
    பட்ச  தொழிற்சங்க சலுகைகளை, உரிமைகளை   
    வழங்கிடு!
     என்பதற்கான  நியாயத்தை இப் போராட்டத்தின் மூலம் ஓங்கி ஒலித்து, ஊழியர் தரப்பு ஒற்றுமைக்கு விளைந்த ஊறினை களைந்திடுவோம் தோழர்களே!!

     அனைவரையும் அன்போடு அழைக்கிறேன்.     G .  கேசவன், DS , தஞ்சை.




Wednesday, September 22, 2010

BSNL DAY 01-01-2010

BSNL நிறுவன நாள் 01 - 10 - 2010
       வருகிற அக்டோபர் 1 ம் தேதி அன்று BSNL  நிறுவன தினத்தை சிறப்பாக கொண்டாடிட  மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது.  கடந்த 17 - 09 - 10 அன்று நமது பொது மேலாளர் அவர்கள் OPINION LEADER கூட்டத்தை   கூட்டி, தொழிற்சங்கங்களுடன் கலந்தாலோசித்து கீழ்க்கண்ட முடிவுகளை எடுத்துள்ளார். 
1. ஊழியர்கள், அதிகாரிகள் ரத்த தானம் அளிப்பது.
2. குடியிருப்பைச் சுற்றிலும் மரக்கன்றுகள் நடுவது. 
3.1000 ஆண்டுகளாக கம்பீரமாகநிலைத்து நிற்கும்   
  நமது தஞ்சை பெரிய கோவிலின்பெருந்திருவிழா  
  வருகிற 22 முதல் 26 ஆம் தேதிவரை  சிறப்பாக  
  நடைபெறுவதை  ஒட்டி   நுழைவுப்   பகுதிகளில் 
  நமது    BSNL  நிறுவனத்தின்   பத்து  ஆண்டுகள் 
  நிறைவை வெளிப்படுத்தும் விதமாய்  துறையின் 
  சார்பில் வரவேற்பு  வாசகம் எழுதி வைப்பது.
4. அன்றைய   தினம்   வாடிக்கையாளர்   சேவை  
  மையத்திற்கு வருகை  தரும்  ஊழியர்கள் மற்றும் 
  வாடிக்கையாளர்களுக்கு  KEY CHAIN வழங்குவது. 
6. அனைத்து ஊழியர்களின்  வாகனங்களில் ஓட்ட      ஸ்டிக்கர் வழங்குதல். 
5. இறுதியாக மேரீஸ் கார்னர் தொலைபேசியகம்    
    துவங்கி    திலகர்   திடல்    வரை   ஊழியர்கள்  
    அனைவரும் பேரணியாகச்  செல்வது என்றும்  
    முடிவு செய்யப்பட்டது. 
         தோழர்கள் மற்றும் தோழியர்கள் அனைவரும் தவறாது  ஈடுபாட்டோடு  பங்கேற்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
                                                        தோழமையுடன்,
                                            உங்கள் G . கேசவன், மாவட்டச் செயலர்.


   

புகைப் பிடிப்பவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய விஷயம்

 புகைப்பிடிக்கும் ஒருவருக்கு உச்சி முதல் உள்ளங் கால் வரை என்ன பிரச்சினைகள் வரலாம் என்பதை பட்டியல் இட்டிருக்கிறேன்!
முடி : நிற மாற்றம்
மூளை : பாரிசவாதம்
புகைத்தலுக்கு அடிமையான நிலை
கண் :  பார்வைக் குறைபாடு Cataracts    
மூக்கு : மன நுகர்ச்சித் தன்மை குறைதல்
தோல் : தோல் சுருக்கம் வயது முதிர்ந்த தோற்றம்
பல் : நிற மாற்றம்
பதிவுகள்  : பல்லின் மேற்புறத்தில் ஏற்படும் அழற்சி (gingivitis)
வாய் மற்றும் தொண்டை :  உதடு மற்றும் தொண்டை புற்று நோய்
                                                         உணவுப் பாதை புற்று நோய்
                                                        சுவை நுகர்ச்சி குறைதல் கெட்ட வாசனை
கை :   ரத்த ஓட்டம் குறைதல்
            நிக்கேட்டின் படிவுகள்
சுவாசப் பை :  சுவாசப் பை புற்று நோய்
நாட்பட்ட சுவாச அடைப்பு நோய் (COPD)
சுவாசப் பைத் தொற்று(நியுமோனியா)
கச ரோகம் (டப்)
ஆஸ்துமா
இதயம் :  மாரடைப்பு
ஈரல் :  புற்று நோய்
வயிறு :  அல்சர் குடல் , இரப்பை,சதையி புற்று நோய்
                   நாடி வெடிப்பு(Aortic அனஐர்ய்சம்)
சிறு நீரகம் :  புற்று நோய்  சிறு நீர்ப் பை புற்று நோய்
எலும்பு : எலும்பின் உறுதி குறைதல்
இனப்பெருக்கத் தொகுதி : விந்துகளின் வீரியம் மற்றும் எண்ணிக்கை குறைதல்
                                                      குழந்தையின்மை
ஆணுறுப்பின் விறைப்புத் தன்மை குறைதல்
இரத்தம் :  புற்று நோய்
கால் :   உறுதிச் சுற்றோட்டம் குறைந்து கால் பகுதியில் நோ மற்றும் காயம்                     ஏற்படல்
நிர்ப்பீடனம் :   நோய் எதிர்ப்புச் சக்தி குறைதல்
இனி அடுத்த முறை புகைப் பிடிக்கும் போது இவற்றை நினைத்துக் கொண்டே பிடியுங்கள் ..

Sunday, September 19, 2010

தியாகத்தை நினைவு கூர்வோம்.....
  ( S. சிவசிதம்பரம் )
 தியாகிகள் தினம்   -    செப்டம்பர் 19

     தபால் தந்தி, ரயில்வே, பாதுகாப்பு பிரிவு ஊழியர்கள் இணைந்து 1968, SEP  19  அன்று நடத்திய ஒரு நாள் வேலை நிறுத்தம்தான் தியாகிகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.  
வரலாற்றுச் சிறப்புமிக்க இவ் வேலை நிறுத்தத்தின் கோரிக்கைகள்: 
   * தேவைக்கேற்ற குறைந்தபட்ச ஊதியம்  அளித்திட வேண்டும்.
   * கிராக்கிப்படியை சம்பளத்துடன் இணைத்திட வேண்டும்.
   * DA FORMULA வினை மாற்றி அமைக்க வேண்டும்.
     இதை அறிவித்து வேலை நிறுத்தம் துவங்குவதற்கு முன்னமேயே தலைவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையை மத்திய அரசு துவக்கி விட்டது.   பாண்டிச்சேரியில் செப் 17 அன்று கைது துவங்கியது.    பொதுச் செயலர் D. ஞானையா செப் 18 காலையில் கைது செய்யப்பட்டார்.      ஞானையா
கைது செய்தி கேள்விப்பட்டவுடன் டெல்லியில் உள்ள அனைத்து P & T  அலுவலக  ஊழியர்கள் WALKED OUT  செய்தனர்.   டெல்லியில் உள்ள அனைத்து P & T நிர்வாக பகுதிகளில் 18 ம தேதி காலை 11  மணிக்கே வேலை நிறுத்தம் துவங்கி விட்டது. 
     டெல்லியில் மட்டும் 1650  P & T ஊழியர்களும் 350 மற்ற பிரிவு ஊழியர்களும் கைது ஆனார்கள். P & T தோழர்கள் 4000 பேர் உள்ளிட்ட   10000 பேர் கைது செய்யப்பட்டனர். 
     வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற 280000  பேரில் பாதி தோழர்கள் நாம்தான்.   140000 ஊழியர்கள்.   கைதானதிலும் 40 %  நாம்தான். 
     8700 பேர் சஸ்பென்ட் செய்யப்பட்டனர். இதில் P & T தோழர்கள் 3756 பேர்.   44000 தற்காலிக ஊழியர்களை Termination  செய்ய நோட்டிஸ் கொடுக்கப்பட்டது. 
   எந்த ஒரு ஜனநாயக நாட்டிலும் இது போன்ற கடுமையான பழிவாங்கல் நடவடிக்கை ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் நடைபெற்றதில்லை. 
     மேற்கு வங்கம், அஸ்ஸாம், கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான், பீகார் ஆந்திரா, டெல்லி ஆகிய இடங்களில் வேலைநிறுத்தம் தீவிரப்பட்டது. 
     மத்திய பிரதேசம், ஒரிசா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய பகுதிகளில் பரவலாக நடைபெற்றது. 
     கர்நாடகா, குஜராத், ஜம்மு காஷ்மீர் போன்ற மாநிலங்களில் மட்டும் அவ்வளவான பங்களிப்பு இல்லை. 
     பிகானிர், பதான்கோட், மரியாணி, பொங்கைகான் ஆகியவிடங்களில் காவல் துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு 9  ரயில்வே தொழிலாளிகள் பலியானார்கள்.   பல இடங்களில் கண்ணீர்ப் புகைக் குண்டுகளும் வீசப்பட்டன.       கூட்டு நடவடிக்கைக் குழு அரசிடம் பழிவாங்கலைக் கைவிடக்கோரியும் அசையாததால் விதிப் படி வேலை போராட்டத்தை துவங்கியது. 
     விதிப்படி வேலை ( work to rule ) போராட்டத்தை நாடுமுழுதும் பெரிய அளவில் செய்திட வேண்டி திகார் ஜெயிலிலிருந்து பொதுச் செயலாளர் ஞானையா கடிதம் எழுதினார்.  இக் கடிதம்   ஜெயிலிலிருந்து கடத்தப்பட்டு அனைத்துக் கிளைகளுக்கும் பரப்பப்பட்டது.   கடிதத்தில்,  
    அரசின் பாசிச போக்கிற்கு, பழிவாங்கலுக்கு எதிரான போராட்டத்தை மன உறுதியுடன் நாம் எடுத்துச் செல்வோம்.   அரசு ஊழியர்க்கெதிரான நடவடிக்கைகளை வாபஸ் பெரும் வரை விதிப்படி வேலை போராட்டத்தோடு மட்டுமல்லாது மற்ற மற்ற உபாயங்களையும் மன உறுதியோடு, போர்க்குணத்தோடு செயல்படுத்துங்கள் தோழர்களே. தபால் தந்தி சேவையின்  இயல்பு வாழ்க்கையை நிலைகுலைய வையுங்கள். நம்மை யாரும் அச்சுறுத்தி பணிய வைக்க முடியாது.  நமது வெற்றியை நோக்கி முன்னேற கடுமையான போராட்டத்திற்கு தயாராகுங்கள். 
     பாதிக்கப்பட்ட தோழர்களுக்கு நிவாரண நிதி திரட்டுங்கள்.  எல்லா வழிகளிலும் முயற்சி செய்து பெருமளவிலான  நிதி திரட்டுவதற்கு ஆயத்தமாகுங்கள்  தோழர்களே.  O T  WORK பார்க்கவிடாதீர்கள்.   உள்ளே, வெளியே மற்றும் வாய்ப்பு உள்ள இடங்களில் எல்லாம் ஆர்ப்பாட்டம் செய்யுங்கள் என்று 21 ம தேதி கடிதம் எழுதினார்.
     
     இந்த எழுச்சிமிக்க போராட்டம் தொழிற்சங்கங்களை எல்லாம் ஒன்று படுத்த உதவியது.  தொழிலாளர் சக்தியை அரசும் உணரத் துவங்கியது.
எதிர்காலப் போராட்டங்களுக்கு உந்து சக்தியாக விளங்கிய செப் 19 போராட்ட தியாகிகளுக்கு நமது வீர வணக்கத்தை உரித்தாக்குவோம்.

                                     நன்றி: D. GNANAIYA s  GLIMPSES OF A UNIQUE UNION  
 





 


















Saturday, September 18, 2010

15 - 09 - 2010  அன்று   திருவையாற்றில் நடைபெற்ற தஞ்சை மாட்ட செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.
      1. மாவட்டச் செயற்குழு, கிளை மாநாடு, பணி நிறைவு பாராட்டு விழா ஆகியவற்றை இணைத்து வெகு சிறப்பாக நடத்தித் தந்த திருவையாறு கிளைத் தோழர்களை இச் செயற்குழு வாழ்த்தி நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது .

      2.  மாவட்ட முழுமையும் ஏற்பட்டுள்ள Cable Fault , Cell tower   signal கிடைக்காத பிரச்சினை, WLL Problem  ஆகியவற்றை சரி செய்திட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்திட மாவட்ட நிர்வாகத்தை இச் செயற்குழு கோருகிறது. 
     
     3. இலவசத்தால் மக்களை மழுங்கடிக்கும் எந்தத் திட்டத்தையும் நாம் நிராகரிக்கிறோம்.   வருகிற 18-09-2010  முதல் வறுமைக்கோட்டிற்குக்  கீழ் உள்ள மக்களுக்கு செல் போனும், சிம் கார்டும் இலவசமாக BSNL வழங்கும் திட்டத்தால் வறுமைக்கோட்டை நீக்கி விட முடியாது என்று இச் செயற்குழு கருதுகிறது.   ஏற்கனவே, நஷ்டத்தில் இயங்கும் நமது துறைக்கு மேலும் நஷ்டத்தை ஏற்படுத்தும் இத் திட்டத்தைக் கண்டிக்கிறோம். 
     இதனால் BSNL க்கு ஏற்படும் நஷ்டத்தை மத்திய அரசு முழுமையாக ஏற்க வேண்டும் என்றும் கோருகிறோம்.   BSNL  ன் நிதி ஆதாரம் குறித்து கடந்த 2000 ல் NFTE - FNTO - BTEF  ஆகியவைகள் இணைந்து போராடிப் பெற்ற உரிமையை அமுல்படுத்து என்று செயற்குழு கூறுகிறது. 
     
     4. அக்டோபர் 19, 20, 21  ல் நடத்தப்பட இருக்கும் 3  நாள் வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்கிட இச் செயற்குழு வேண்டுகிறது. 
     5.  தோழர் ஹிந்தி பாஸ்கரன் TM, விமல்ராஜ் TTA, கைலாசம் TM  ஞானசுடர் TM, சீனிவாசன் Sr . TOA ( VRS ) பிரச்சினையை சுமூகமாக தீர்த்து வைத்த மாவட்ட நிர்வாகத்திற்கு நமது நெஞ்சு நிறைந்த நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறோம்.  துணை நின்ற அனைத்து அதிகாரிகளுக்கும் நன்றி. 
     6.  Housekeeping,  Cable Contract  மற்றும் ESM  தோழர்களுக்கு   மாத     ஊதியம் பிரதி மாதம் 7 ஆம் தேதிக்குள் அளித்திட   உறுதி செய்ய வேண்டுமென மாவட்ட நிர்வாகத்தை இச் செயற்குழு வேண்டுகிறது. 
     7. நமது சங்கம் மற்றும் கூட்டணிச் சங்கத் தோழர்களின் தீர்க்கப்படாத பிரச்சனைகளை ( மாற்றல் & தண்டனை ) நிர்வாகத்துடன் தொடர்ந்து  பேசித் தீர்க்கும் என செயற்குழு உறுதி அளிக்கிறது. 
     8.  நமது DLC / TNJ  தோழர் நாகராஜன் TM  அவர்களின் செயற்கைக் காலுக்கு நிதியைப் பெற்றுத்  தந்த மாநிலச் செயலருக்கு நமது நன்றி. கூடுதலாக நிதி பெற முயற்சிக்கின்றோம். 
     9.  ESM தோழர்களின் லீவ் சம்பளம் 28.98% பெற்றுத் தர மாவட்டச் சங்கம் நடவடிக்கை எடுக்கும். 
    10.  OPC  மற்றும் மார்க்கெட்டிங் பகுதி தோழர்களின் பிரச்சனைத் தீர்க்கவும் பிரத்யேகக் கவனம் செலுத்தவும் இச் செயற்குழு  முடிவு செய்கிறது. 
    11.  அனைத்து குருப் D , RM  தோழர்களை TM  தேர்வு எழுத அனுமதிக்க வேண்டுமென இச் செயற்குழு மாநிலச் சங்கத்தை வேண்டுகிறது.   10 th  passed என்ற நிபந்தனையை நீக்கிட வேண்டும் என்றும் கோருகிறோம். 
     12.  தனித்தனியே செயல்பட்டு வந்த OFC மைன்டனன்ஸ் மற்றும் நெட் ஒர்க் பிளான்னிங் ( NWP ) இணைப்பினை மறு பரிசீலனை செய்திட வேண்டுமென செயற்குழு வேண்டுகிறது.

     13.  TTA தோழர்களுக்கு JTO தேர்வு எழுத வழிவகை செய்திட நமது அகில இந்திய சங்கம் எடுத்த நடவடிக்கையை SNATTA  சங்கம் வரவேற்றுள்ளது மகிழ்ச்சிக்குரியது. அவர்களின் முன்னேற்றத்திற்கு அகில இந்திய மாநிலச் சங்கம் எடுக்கும் முயற்சியை இச் செயற்குழு வரவேற்கிறது. 

     14.  எஞ்சியிருக்கும் TOA  தோழர்களுக்கு Sr. TOA பதவி உருவாக்கத்திற்கான   நடவடிக்கையினை  எடுத்த மாநிலச் சங்கத்திற்கு இச் செயற்குழு தமது நன்றியைப் பதிவு செய்கிறது.  அவர்களுக்கு Sr. TOA
பயிற்சி விரைவில் அளித்திட இச் செயற்குழு  வேண்டுகிறது. 

     15. TTA  தேர்வில் தேர்வு பெற்று நீதிமன்றத் தடையால் பாதிக்கப்பட்டிருக்கும் TM  தோழர்களை TTA Officiating ஆக பணியமர்த்த ஆவன செய்யுமாறு மாநிலச் சங்கத்தை இச் செயற்குழு கோருகிறது. 


     16.  நமது மாநிலச் சங்க கட்டிட நிதிக்கு புரவலர் நிதியாக ரூபாய் 5000  அளித்திட்ட தோழர்கள்,
     பட்டுக்கோட்டை S.  சிவசிதம்பரம்,
     தஞ்சை                  K.  நடராஜன், 

     மன்னை                K.  கிள்ளிவளவன் 
     தஞ்சை                  L.  சந்திரப்ரகாஷ் 
     தஞ்சை                  T.  சிவதாஸ் 
     தஞ்சை                  T.  குமார் OPC 
     தஞ்சை                  D.  கலைச்செல்வன்
     அய்யம்பேட்டை  S.  ஞானசுடர் 
ஆகியோரை இச் செயற்குழு வாழ்த்துகிறது.
     அதே போல் கட்டிட நிதியாக ரூபாய் 5000 வழங்கிய 
பட்டுக்கோட்டை கிளையினையும், 
ரூபாய் 1001 வழங்கிய திருவையாறு கிளையினையும் 
இச் செயற்குழு பாராட்டுகிறது.  
     அதோடு கட்டிட நிதியினை அளிக்கவிருக்கும் தோழர்களும், கிளைகளும் தயவு செய்து இம் மாத இறுதிக்குள் அளித்து உதவிடுமாறும் செயற்குழு வேண்டுகிறது.
    17. செப்-7 ஆம் தேதி நடைபெற்ற அகில இந்திய பொது வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற அனைத்து தோழர்களுக்கும், தோழியர்களுக்கும் மாவட்டச் செயற்குழு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறது. 

                                                                  G. கேசவன், மாவட்டச் செயலர். 
 


Thursday, September 16, 2010

     தஞ்சை   பொது   மேலாளர்   அலுவலக்   கிளைச்   செயலாளர்   தோழியர்  A.லைலாபானு அவர்கள் 4  கட்ட பதவி உயர்வு சம்பந்தமாக் சில விளக்கங்களை அளித்துள்ளார். அதைக் கீழே கொடுத்திருக்கிறோம்.தொகுத்தளித்த தோழியருக்கு நமது நன்றியும் பாராட்டும்.  மேலும் விபரங்களுக்கு தோழியர் தொலைபேசி எண் 04362 - 237100 .
                                         அன்புடன், G. கேசவன், மாவட்டச் செயலர்.  
செப்டம்பர் 19 ஞாயிறு அன்று குடவாசலில் 
நடைபெறும்  செப் - 19  தியாகிகள் தின 
சிறப்புக் கூட்டத்தில் திரளாய் பங்கேற்போம் 
தோழர்களே! 

Monday, September 13, 2010

செக்யூரிட்டி தோழர்களின் லீவ் நாள் 
சம்பளப்  பிரச்சினை .........
     கடந்த  ஏப்ரல் 2009 முதல் செக்யூரிட்டி தோழர்களின் லீவ் நாள் சம்பளம் 28.98% இன்று வரை  கொடுக்கப்படாமல்  கடந்த 16 மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளது. இது பற்றி நிர்வாகத்திடம் நாம் இதுவரை வாய்மொழியாக தீர்த்துத் தரக் கோரியுள்ளோம்.   
   அவர்களே பார்த்து வரும் அந்த விடுமுறை நாள் வேலையைப் பார்ப்பதற்கு கூடுதலாக   செக்யூரிடிகளை நிர்வாகம்  ஏஜென்சியிடம் கோரியது.   அதற்கு  ஏஜென்சி Additional Security Forces தர தம்மால் இயலவில்லை என்பதை நிர்வாகத்திடம் பதிவு செய்துள்ளது. 
     நமது வேண்டுகோளும் அவர்களின் எதிபார்ப்பும் என்னவென்றால், இதுவரை holiday  duty  பார்த்தவர்களுக்கு ஏற்கனவே கொடுத்து வந்த அடிப்படையில் உடனடியாக சம்பளத்தைத் தந்துவிட வேண்டும்.   அதன் பிறகு வரும் காலங்களுக்கு additional  security guards வைத்துக் கொள்வதா அல்லது holiday salary  யைத் தருவதா என்பதை நிர்வாகம் முடிவு செய்யட்டும். 
     இது நாள் வரை பணி செய்தவர்களுக்கு அவர்களுக்கான நியாயத்தை வழங்காமலிருப்பது சரியல்ல.    சுமுகமாக இதைத் தீர்க்கக் கோருகிறோம்.   மாநிலச் சங்கத்திடம் இதைத் தெரிவித்திருக்கிறோம்  பட்டாபி அவர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் எழுத்துபூர்வமாக தெரிவித்துவிட்டு மாநிலத்திற்கு நகல் கொடுக்கச் சொல்லியிருக்கிறார்.   நாமும் நாளை மனு கொடுக்கவிருக்கிறோம்.
     நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவோம்.
                                                                                    K நடராஜன் மாநிலத் துணைச் செயலர்.

 

Thursday, September 9, 2010

Tuesday, September 7, 2010

செப். 7 வேலைநிறுத்தம் வெற்றி!
வாழ்த்துக்கள் தோழர்களே!!
    
வேலைக்கு  வருபவர்கள் எண்ணிக்கை           : 854
வேலை நிறுத்தம் செய்தவர்கள்  எண்ணிக்கை: 685 
     80 சதவிகிதத்திற்கும்    மேலானவர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர். 
    போராட்டத்தில்  பங்கேற்றவர்களின் பட்டியல் சங்க வாரியாக நாளை வெளியிடப்படும்.
    எழுச்சியோடு போராட்டத்தில் பங்கேற்ற BSNL தொழிலாளர் கூட்டணித் தோழர்களே!    
   வெற்றிகரமாக்கிய கிளைச் செயலாளர்களே!
  மாவட்ட, கிளைச் சங்கப் பொறுப்பாளர்களே!! 
உங்களை   
தஞ்சை மாவட்டச் சங்கம் 
உளமார 
வாழ்த்தி மகிழ்கிறது.                    

                                அன்புடன்,
                     G. கேசவன், மாவட்ட செயலர்


Sunday, September 5, 2010

வேலை  நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம் !
           
     பொருளாதார விடுதலைப் போராக செப் . 7  போராட்டத்தை மாற்றிக் காட்டுவோம் தோழர்களே! தேசத்தின் சொத்துக்கள் கொள்ளை  போவது ஒரு புறம் நடந்து கொண்டிருக்கும் போதே, மறுபுறம் நாட்டில் புதிய  புதிய     வளங்களும்    கண்டுபிடிக்கப்பட்டு   கொண்டுதான்    இருக்கின்றன.    பல மாநில மலைப்பகுதிகள் எல்லாம் இன்று கனிம  வளச்  சுரங்கங்களாக இருப்பது   கண்டுபிடிக்கப்பட்டுல்ளது.     ராஜஸ்தான்  பாலைவனம் பெட்ரோல்  ஊற்றாய்   இன்று மாறி இருக்கிறது              அடித்த  கொள்ளை போதும்  என்ற  மனம் ஆட்சியாளர்களுக்கும்,  அரசியல்வாதிகளுக்கும் ,  தேசவிரோத  சக்திகளுக்கும்  வரப் போவதில்லை.  அதை வரவழைக்க நம்மால்   ஒலிக்கப்படவிருக்கும்     எச்சரிக்கை     மணிதான்    செப் .7 ல் நடைபெறவிருக்கும் வேலைநிறுத்தம்.    
        
           திரட்டுவோம்!   திரள்வோம்!!   வெல்வோம்!!!  தோழர்களே.


                                                               G . கேசவன், மாவட்ட செயலர்.

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR