தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Thursday, May 31, 2018

மே மாதம் இன்று 31-05-2018 
பணி ஒய்வு பெரும் தோழர்களை 
NFTE தஞ்சை மாவட்டச் சங்கம் 
வாழ்த்தி மகிழ்கிறது. 
உங்களின் ஓய்வு காலம் சிறப்பாகவும், செழிப்பாகவும்  அமைந்திட
பெரிதும் வாழ்த்துகிறோம்.

01.    S. மாதவன்                   OS          தஞ்சாவூர்.
02.    D. ஜெயலட்சுமி          OS          தஞ்சாவூர்.
03.    G. குணசுந்தரி            OS          திருவாரூர். 
04.    G. குணசேகரன்         TT          திருவாரூர்.
05.    V. சந்திரசேகரன்       TT          குடவாசல். 
06.   R. கோவிந்தராஜ்        TT          தஞ்சாவூர்.
07.   T.  துரைமாணிக்கம் TT         தஞ்சாவூர்.  
பணி நிறைவு பாராட்டு விழா 
தோழர். S. மாதவன் STS  
 ( தஞ்சை MCRLU CSC )
அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழா இன்று 31-05-18 அன்று தஞ்சையில் 
 சிறப்பாக நடைபெற்றது.
மாவட்டச் செயலர் தோழர். K. கிள்ளிவளவன் அவர்கள் சால்வை அணிவித்து கவுரவித்தார்.

பணி நிறைவு பாராட்டு விழா 
தோழர். G. குணசேகரன் TT  
 ( திருக்கரவாசல் குணா )
அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழா இன்று 31-05-18 அன்று திருவாரூர் SDOT அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.






Monday, May 28, 2018


நமது மாவட்டச் செயலர் தோழர்.கிள்ளிவளவன் உங்களிடம் பேசுகிறார்.
அன்புத் தோழர்களே! 
உங்களில் சிலருக்கு நான் 
அழைப்பிதழ் நேரில் கொடுக்க முடியாமல் போயிருக்கிறது, சிலருக்கு அழைப்பிதழ் 
தர முடியாமல் விடுபட்டும் போயிருக்கிறது என்று கருதுகிறேன்!
தோழர்கள் அவைகளை பொருட்படுத்தாது இதனையே எனது நேரடி அழைப்பாக ஏற்று விழாவில் பங்கேற்க வேண்டுகிறேன்.  

உங்கள் கே. கிள்ளிவளவன்.

திருவாரூர் தோழர் சீதாராமன் மகள் 
திருமண விழா.
 27-05-18 அன்று திருவாரூரில் சிறப்பாக நடைபெற்ற விழாவில்  மாவட்டச் செயலர் தோழர். கிள்ளிவளவன், சிவசிதம்பரம், இப்ராம்சா மற்றும் பல தோழர்கள் 
பங்கேற்று வாழ்த்தினர்.



Wednesday, May 23, 2018

பெரிதும் வருந்துகிறோம்!
 
தோழர். ஜெகநாதன் STS, குடந்தை.
இன்று இயற்கை எய்தினார்.

NFTE யின் அனைத்து செயல்பாடுகளிலும் 
இரண்டறக் கலந்தவர்.
அவரது திடீர் மரணம் நமக்கு அதிர்ச்சியளிக்கிறது. 
தோழரின் இறுதிச் சடங்கு 
குடந்தையில் இன்று 23-05-18  மாலை நடைபெறும்.

தோழரின்  பிரிவால் வாடும் 
அவர்தம் குடும்பத்தாருக்கும், 
குடந்தை NFTE குடும்பத்திற்கும் 
தஞ்சை மாவட்டச் சங்கம் 
தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.

Tuesday, May 22, 2018

நமது பார்வையில் தேசிய டிஜிடல் 
தகவல் தொடர்பு கொள்கை 2018
தோழர். ஆர். பட்டாபிராமன் 

அனைவருக்கும், கட்டுப்படியான விலையில், உலகத் தரத்தில் தொலைபேசி என்ற முழக்கத்துடன் திரு. நரசிம்மராவ் பிரதமராக அமெரிக்கா புறப்படும் முன் அறிவிக்கப்பட்டது ’புதிய தொலைத்தொடர்பு கொள்கை’.  அதன் அடுத்தடுத்த பரிணாமங்கள், அரசுத் தொலைத்தொடர்பு துறை BSNL என்ற பொதுத்துறையாக மாறியது, புதிய புதிய டெலிகாம் தனியார் நிறுவனங்கள் உதயம், நிறுவனங்கள் இணைப்பு, நிறுவனங்கள் மூடல் என தொலைத்தொடர்பு வரலாறு தொடர்கிறது. அதன் அடுத்தக் கட்ட பரிணாம அவதாரம் மே 1-ம் தேதி அரசு அறிவித்துள்ள புதிய கொள்கை அறிவிப்பு.
இந்த முறை புதிய தொலைத்தொடர்பு கொள்கை என்ற முந்தைய பெயரைக் கைவிட்டு புதிய நாமகரணத்துடன் உதித்துள்ளது:  தேசிய டிஜிடல் தகவல் தொடர்பு கொள்கை -2018. இது வெறும் பெயர் மாற்றம் மட்டுமில்லை. இந்திய நாட்டின் டிஜிடல் தொலைத்தொடர்பு வர்த்தகப் பொருளாதாரத்தைச் சாராம்சத்தில், நாட்டின் மின்னணு முதலாளித்துவத்தை நோக்கித் தள்ளி உலகமயப்படுத்துவது என்பதை உணர்த்துவதே. தொலைத்தொடர்புத் துறை வெளியிட்டுள்ள அரசின் கொள்கை வரைவு நகலின் பெரும்பகுதியான அம்சங்கள் தொலைத்தொடர்பு ஒழுங்காற்றுக் குழு (TRAI) பல பெரும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் கலந்து பேசி பரிந்துரைத்தவைகளே டிஜிடல் கொள்கையில் இடம்பெற்றுள்ளன. 2025-ம் ஆண்டு வாக்கில் இந்திய டிஜிடல் பொருளாதாரம் (one trillion) பதினாயிரம் கோடி கோடி அமெரிக்க டாலர் என்பதாக ஆகப்பெரிதாக வளரக் கூடும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்தத் துறை, பெரும் முதலீடுகள் தீவிரமாகத் தேவைப்படும் துறை என்பது கொள்கை அளவில் ஏற்கப்பட்டிருக்கிறது.  ஆனால் இதில் ஏற்கனவே செயல்படும் பொதுத்துறை நிறுவனங்கள் அந்த முதலீட்டிற்கு என்ன செய்யும், எங்கே போகும், எப்படி அரசின் கொள்கைகளை நிறைவேற்றும்வகையில் தொலைத்தொடர்பு வசதி விஸ்தரிப்புகளை மேற்கொள்ளும் என்பது விளக்கப்படவில்லை.  இது சாத்தியமாக வேண்டுமானால், அரசு 4G/5G ஸ்பெக்ட்ரம் அலைகற்றைகளைச் சமச்சீரான வகையில் நமக்கு ஒதுக்கீடு செய்து வழங்கிட முன்வரவேண்டும்.  அரசு பெரிதும் வலியுறுத்தி முன்னிறுத்தும் கொள்கையான அனைத்து மக்களுக்கும் டிஜிடல் சேவையின் பலன் கிடைக்கச் செய்தல் என்ற ’டிஜிடல் இறையாண்மை’ என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டுமானால் --BSNL, MTNL போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் வலிமைப்படுத்தப்படுவதுடன் அதன் ஸ்திரத்தன்மையும் நீட்டிப்பும் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும்.  
வரைவுக் கொள்கையில் தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் அனைத்தும் சமமான சொற்களால் குறிப்பிடப்பட்டாலும், செயல்படும் சமமான வாய்ப்புள்ள தளமாக இல்லை. உதாரணத்திற்குத் தொலைத்தொடர்புத் துறையையும் அதிலுள்ள வேலை வாய்ப்பையும் எடுத்துக் கொள்வோம். பொதுத்துறை நிறுவனங்கள்தான் வேலையின்மையைப் போக்கும் சமூகக் கடப்பாடுள்ளதாகவும், நாட்டின் அனைத்து தொழிலாளர் நலச் சட்ட திட்டங்களைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டியவைகளாகவும் உள்ளன. தனியார் நிறுவனங்களைப் பொறுத்தவரை, வேலைவாய்ப்பை அதிகரிக்கவோ அல்லது அதற்கென எந்த நெறிமுறைகளைப் பின்பற்றவோ கிஞ்சிற்றும் கவலைப் படுவதில்லை. அவைகளிடம் வெளிப்படையான ஆளெடுப்புக் கொள்கைகளோ ஊழியர்களுக்கான சேவை விதிமுறைகளோகூடக் கிடையாது.  அவ்வளவு ஏன், நிரந்தரமான வேலை என்பதே இல்லை; எல்லாம், ஒப்பந்த முறையில்—ஒப்புக்கொண்டால் உள்ளே, இல்லையெனில் உடனடியாக வெளியே என்ற அடாவடி கொள்கைதான். எவ்வளவு பணிக்கு எத்தனைப் பணியாளர்கள் / மேற்பார்வையாளர்கள் என்பது பொதுவிதியாக ஆக்கப்படாவிட்டால், சமதளத்தில் விளையாட்டு என்பதோ இந்தக் கொள்கை அமலாக்கத்தால் இவ்வளவு இலட்சம் இலட்சம் புதிய வேலைவாய்ப்பு உருவாகும் என்ற அரசின் அறிவிப்போ கேலிக்கூத்தாகவே முடிந்து போகும். 
. இந்திய நாட்டில் 15 லட்சம் கி.மீ.  OFC கண்ணாடி இழை கேபிள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  ஆனால் இதில் எவ்வளவு கேபிள், யார் யாருடைய உரிமையாக உள்ளது என்பது பகுத்துத் தெரிவிக்கப்படவில்லை. இந்த கேபிள் சொத்து எந்தத் திசைவழியில், ’முதலில் கண்ணாடி இழைமூலம் அனைவருக்கும் இணைய வசதி’ என்ற இலக்கை அடைய எப்படிப் பயன்படுத்தப்படும் என டிஜிடல் கொள்கையில் விளக்கப்படவில்லை. கட்டவிழ்த்தல் என்ற பெயரில் பொதுத்துறைகள் வசமுள்ள கேபிள்கள் மற்றவர்களுக்குத் திறந்துவிடப்படுமா என்பதில் வெளிப்படைத்தன்மை இல்லை. அப்படிச் செய்யப்படுமானால் அது பொதுத்துறைகளின் உட்கட்டமைப்பு செல்வாதாரத்தைச் சீர்குலைப்பது மட்டுமல்ல, ’டிஜிடல் இறையாண்மையை’யும் பேரபாயத்திற்கு உள்ளாக்கும். அது மட்டுமா, ’தேசியக் கண்ணாடிஇழை அதிகார அமைப்பு’ (National Fibre Authority)’ ஒன்று உருவாக்கப்படும் என்று கூறும் வரைவுக்கொள்கை, அது வகிக்கப்போகும்  பங்கு குறித்து எந்த விவரமும் தரவில்லை.; அது BBNL போல இருக்குமா அல்லது இந்தியாவில் உள்ள அனைத்து கண்ணாடிஇழை கேபிள்களின் பொதுஅதிகார அமைப்பாக இருக்குமா என்பதும் தெரியாது. 
முன்பு கேட்டவுடன் அகல அலைக்கற்றை வசதி என்ற முந்தைய முழக்கம் தற்போது ’அனைவருக்கும் ப்ராட் பேண்ட்’  என்று உரத்துக் கூவுகிறது.  அதற்கென வரிச் சலுகைகள், நிதிச்சலுகைகள், தரைவழி நிரந்தர இணைப்பு மூலம் ப்ராட் பேண்ட்களுக்கான சலுகைகள் உண்டு என உறுதியளிக்கிறது.  ஆனால் பொதுமக்களுக்கு ப்ராட் பேண்ட் வசதி அளிப்பதில் BSNL போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் ஏற்கனவே முன்னணியில் செயல்பட்டன.  அந்த வகையில் 2011 புதியத் தொலைத்தொடர்புக் கொள்கையின் திட்ட இலக்கை அடைய விஸ்வாசமாகச் செயல்பட்டுச் சேவையாற்றிய அந்த நிறுவனங்களின் சாதனைப் பங்களிப்பிற்கு என்ன சலுகைகள் வழங்கப்படும் என்பது தெரியவில்லை. எனவேதான் நாம் வற்புறுத்துகிறோம், 2011 முதல் பொதுத்துறை நிறுவனங்கள் வழங்கிய ப்ராட் பேண்ட் சாதனைகளுக்குத் தற்போது உறுதியளிக்கப்படும் நிதிச் சலுகைகள், வரிச்சலுகைகள் கட்டாயம் அளிக்கப்பட வேண்டும் என்கிறோம். அப்படி வழங்குவதன் மூலம் தற்போதைய கொள்கையான அனைவருக்கும் இணையதள வசதி  என்பதைச் சாதிக்கவும் பெரும் ஊக்கமாக அது அமையும்.   
தற்போதைய வரைவுக்கொள்கை, அலைக்கற்றை என்பதைச் சமூகப் பொருளாதார இலக்கை அடைய உதவுகின்ற மிகக் கேந்திரமான இயற்கைச் செல்வாதாரம் என அங்கீகரிக்கிறது.  அரசு அந்தக் கருத்தில் உறுதியாக இருக்குமென்றால், 4G/5G  அலைக்கற்றையைப் பொதுத் துறை நிறுவனங்கள் வசம் முதலீட்டு பங்களிப்பாக ஒப்படைக்க முன்வர வேண்டும்.  அதற்கு மாறாக, சமூகப் பொருளாதார நோக்கம் ஏதுமின்றி லாபம் ஒன்றையே இலக்காகச் செயல்படும் தனியார் நிறுவனங்களைப்போல பொதுத்துறை நிறுவனங்களையும் சந்தைவிலையில், அலைக்கற்றை பெற நிர்பந்திக்கக் கூடாது.  
விண்வெளித் துறையின் ’சாட்காம்’ (SATCOM விண்வெளிக் கலங்கங்கள் மூலம் தொலைத்தொடர்பு) கொள்கையைப் பரிசீலிக்கும்போது, பொதுத்துறை நிறுவனங்களையும் நம்பிக்கைக்கு உரியதாக ஏற்று விவாதிக்க வேண்டும்.  அப்போதுதான், தேசியப் பாதுகாப்பும், மக்களுக்கு வழங்க நினைக்கும் ’டிஜிடல் இறையாண்மை’யையும் முழுமையாகக் சாதிக்க உதவ முடியும்.  
வரைவுக்கொள்கையில்  பெரிதும் பாராட்டி வரவேற்கத்தக்க ஒரு முன்முயற்சி காணப்படுகிறது.  அது அனைவரையும் இணைத்துக் கொண்டு முன்னேறுவது. இதுவரை தொலைத்தொடர்பு வசதி கிடைக்கப்பெறாத பகுதிகளையும், டிஜிடல் வசதி பெறாத பகுதிகளையும் வசதி பெறச் செய்வது, சமூகத்தில் விளிம்புநிலையில் ஒதுக்கப்பட்ட வகுப்பினர், பெண்கள், மாற்றுத் திறனாளிகள், நகரங்களில் சமூக- பொருளாதார நிலையில் நலிந்தவர்கள் என அனைவருக்கும் டிஜிடல் தகவல் தொடர்பால் அடையப்பெறும் பொருளாதார வளர்ச்சியின் பயன்களைப் பெறச்செய்தல்.  மேன்மையான இந்தச் சமூக உயர் நோக்கங்கள் அரசின் சிறப்புத் திட்டமாக, முழுமையாகப் பொதுத்துறை நிறுவனங்களின் மூலம் செயல்படுத்தப்படாவிட்டால், பயன்பெற வேண்டிய உரியவர்களைச் சென்றடையாது. 
2022-ம் ஆண்டிற்குள் அடைய வேண்டியவைகளாக பல பெரிய இலக்குகள் இந்தக் கொள்கையில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.  அவற்றில் மிக முக்கியமானது, 100 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 6.5 லட்சம் கோடி ரூபாய்) முதலீட்டைக் கவர்ந்து ஈர்ப்பது.  அது ஒரு வருடத்தின்  மொத்த டெலிகாம் துறையின் GDPக்குச் சமமானது.  முதலீட்டை ஈர்ப்பதற்கு முன்பு வழங்கப்பட்ட ஊக்கச் சலுகைகளின் கடந்தகால அனுபவம் எதுவும் விவரமாகத் தரப்படவில்லை.  தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பெற்ற 4. 5 லட்சம் கோடிக் கடனில் 80 சதவீதம் உள்நாட்டு வங்கிகளால் தரப்பட்டவை. தொடர்ந்து டெலிகாம் நிறுவனங்களுக்கு கடன் ஏதும் வழங்காதீர்கள் என்று அந்த வங்கிகள் அறிவுறுத்தப்பட்டு கதவை மூடிவிட்டன. காரணம், தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கடனைத் திருப்பிச் செலுத்தும் திறன் மீது அவநம்பிக்கை எற்பட்டுவிட்டதுதான்.  இந்த நிலையில் கொள்கைப் பிரகடனத்தில் அறிவிக்கப்பட்டுள்ள இவ்வளவு பெரிய முதலீட்டை அவை எங்கிருந்து, எப்படிப் பெறும் என்பது நமக்கு விளங்கவில்லை; அப்படி அது சாத்தியமாகுமென்றால், எத்தகைய கட்டுப்பாடுகளை நீர்த்துப் போகச்செய்து, எந்த அடிப்படையில், முதலீடுகள் வரும், யார் அறிவார் பராபரமே?
        ஆனால் நிறைவளிக்கக்கூடிய ஒன்று, டெலிகாமின் உட்கட்டமைப்பு மேம்பட சாலைப் போக்குவரத்து, இரயில்வே, நீர்வழி மற்றும் வான்வழி போக்குவரத்துக்கு நிகராகக் கருதி முக்கியத்துவமளித்து, குறைந்த செலவில் நிதி திரட்ட வழிவகை செய்யப்பட்ருப்பதே. இந்தக் கிரியாஊக்கி எப்படி அவர்களுக்குச் சேவையாற்றப் போகிறது என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.  புதியதாக நிர்மாணிக்கப்பட உள்ள நலந்திகழ் நகர்களில் (ஸ்மார்ட் சிட்டி) டிஜிடல் தகவல் தொடர்பு  ஆதார ஸ்ருதியாக விளங்கும் என்பது அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. ஸ்மார்ட் சிட்டிகளின் நிர்மாணம் தடங்கலின்றி முறையாகச் செயல்படுத்தும் நோக்கில் அனைத்துச் செயற்திட்டங்களும்  முழுமையாக BSNLக்கு வழங்கப்பட வேண்டும் என ஏற்கனவே கோரிக்கை எழுப்பியிருக்கிறது.  இந்த வகையில் வரைவுக் கொள்கை நமக்கு உதவிகரமாக இருக்கும் என நம்புகிறோம். 
லைசென்ஸ் கட்டணம், நிதி உதவி, ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டுக் கட்டணம் முதலியவற்றை மறுஆய்வு செய்வதையும், வரிகள் மற்றும் மேற்கட்டணங்களைச் சீரமைப்பதையும் பரிந்துரைத்துள்ள கொள்கையைப் பெரும்பாலான டெலிகாம் நிறுவனங்கள் வரவேற்றுள்ளன. தங்களது 30 சதவீதமான வருமானம் அரசால் வரிகளாகவும் கட்டணங்களாகவும் திரும்ப எடுத்துக் கொள்ளப்பட்டு விடுகின்றன என்று அவர்கள் ஏற்கனவே புகார் அளித்துள்ளனர்.  அந்த வகையில் இந்தப் பரிந்துரை மூலம் அரசு கஜானாவிலிருந்து சலுகைகளாக எவ்வளவு கோடியை டெலிகாம் கார்பரேட்டுகள் குறி வைத்திருக்கிறார்களோ? 
முந்தைய 2011-ம் ஆண்டு புதிய தொலைத்தொடர்பு கொள்கை போல பொதுத்துறைகளை வலுப்படுத்துவது என்பதை தற்போதைய கொள்கை அவ்வளவு ஆர்வமாகக் குறிப்பிடவில்லை. அதே போல பொதுத் துறைகளைத் தொடர்வது, பொதுத்துறை கடந்த காலங்களில் ஆற்றிய சேவையைப் பாராட்டுவது என்ற அம்சமும் இடம் பெறவில்லை .  மாறாக, தொழில்நுட்ப அறிவு மற்றும் தொழில்நுட்ப உயர்திறன் நிர்வகித்தல் என்ற அம்சங்களின் மீது கவனம் குவிக்கப்பட்டு மையப்படுத்தப்பட்டுள்ளது.  இது தற்போதைய தொழில்நுட்பத்தை மேம்படுத்தத் தொடர்ந்து பாடுபடும் (பொதுத்துறை) அகம்சார் தொழில்நுட்பவியலாளர்கள் மற்றும் அறிவுசார் நிர்வாகிகள் மனதில் மிகப்பெரிய சந்தேகத்தையும், தங்களின் எதிர்கால பங்குபணி முக்கியத்துவத்தைக் குறைத்துவிடுமோ என்ற  அச்சஉணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.  பொதுத்துறைகள் வசம் தற்போதுள்ள பயிற்சி உட்கட்மைப்புகளைத் திறன் மேம்பாட்டுக்காகப் பயன்படுத்தலாம் என்ற யோசனையை நாம் வரவேற்கலாம் – அதனால் பொதுத்துறைகளின் நிதி ஆதாரம் ஆரோக்கியமாக மேம்படும் என்றால்.  
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, இந்தக் கொள்கை பிரகடனம் நல்லவையும் அல்லவையும் கலந்த ஒரு கலவை.  கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகைகளைச் வழங்கும் ஊக்கியாகவும் அதன்மூலம் இந்தியத் தொலைத்தொடர்பு டிஜிடல் பொருளாதாரத்தை உலகப் பொருளாதாரத்தோடு இணைப்பதையும் நோக்கமாகக் கொண்டது.  அதன் மின்னணுமயமாக்கல் தொடர்பால் அதிகாரம் பெறுவது என்பது துணை விளைவாகலாம்.  எல்லாம் சரி, இதன் பலன் என்னவாகப் போகிறது?  யாருக்கு, எவ்வளவு, எத்துணை விரைவாகப் பலன் பெறுவர் என்பது பலலட்சம் டாலர் பெறுமானமுள்ள கேள்வி.  ஆனால் விடை ஒன்றும் பரம ரகசியம் அல்ல, நிச்சயம் பலன் பெறப் போவது ஆகப்பெரிய டெலிகாம் அசுர பகாசுரக் கம்பெனிகளே.  

Wednesday, May 16, 2018

தோழர். ஜெகன்
பிறந்த நாள் - 17-05-2018
தொகுப்பு: S. சிவசிதம்பரம்.

தோழர் ஜெகனின் நினைவுகள் 
நமக்கு மாறாத உற்சாகத்தையும் 
தெம்பையும் அளித்த காலம் நிழலாடுகிறது.   
பொறுமையும், சகிப்புத் தன்மையும், போர்க்குணமும், 
சக தோழரிடம், தொழிற்சங்கத்திடம்,   பழகும் பாங்கும், 
நேர்மையான அரசியலும் நாம் இன்னும் கற்றுத் தேற வேண்டியிருக்கிறது  என்பதை உணர்வோம், ஒப்புக் கொள்வோம்.   

தோழர் ஜெகனைப் பற்றி 
திருச்சி தோழர். S. பால்சாமி  அவர்கள் 
எழுதி இசையமைத்த பாடலும், 
அவருடன் அவர் எடுத்த பேட்டியும்  இத்துடன் உள்ளது. 
காணத் தவறாதீர்கள்.


     நமது மாநிலச் சங்கத்தின் வழிகாட்டல் அடிப்படையில் தோழர் ஜெகனின் பிறந்த நாளை இளைஞர் தினமாக நாம்   கொண்டாடுகிறோம்.  ஜெகன் என்று சொல்லும்போது அந்த சொல் ஒரு மந்திரச் சொல்லாக கடந்த 2000 ஆம்  ஆண்டு   வரை   பெரும்பான்மைத் தோழர்களின்  உணர்வில் கலந்திருந்தது.  இன்றைக்கு அதை மீட்டு நமது இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பதை  தலையாய கடமையாக உணர்கிறோம். 03-01-1992 அன்று கோவை பிரசிடென்சி ஹாலில் E 3 சங்கத்தின் 22 வது மாநில மாநாடு நடைபெற்றது.  அது தோழர் குப்தா, மோனிபோஸ், ஞானையா பங்கேற்ற மாநாடு.   அதில் தோழர் ஜெகன் பங்கேற்று  துவக்க உரையாற்றியதை தொகுத்து உங்களுக்கு 
தருகிறோம்.

கேளுங்கள் தோழர் ஜெகனின் உரையை:

     1971 ல் இதே இடத்தில் மாநில மாநாடு நடந்தது. 130 சார்பாளர்கள், 7 கோட்டம் பங்கேற்றது. தகராறு, பதட்ட நிலை எல்லாம் இருந்தது. போட்டியிட்டு வெற்றி பெற்றேன்.   இன்று அவைகளில் எல்லாம் பெரும் மாற்றம்.   1960 போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களில்   2 பேர் தோழியர்கள். பொள்ளாச்சியில் ஒரு தோழர். தொலைபேசி நிலையத்திலிருந்து ஒரு மைல் தூரத்திற்கு போலிஸ் கெடுபிடி. அந்தச் சூழ்நிலையில் நின்றவர்கள் இவர்கள்.  1957 -ல் வந்த எஸ்மா சட்டத்தை 1960 -ல் பயன்படுத்தினார்கள்.  அன்று அவர்கள் செய்த தியாகம்,  இன்று இந்த இயக்கம் இவ்வளவு வளர்வதற்கு ஒரு காரணம்.  இன்றைக்கு பல தலைவர்களின் ஏக்கம் இளைஞர்களை நம்மால் ஈர்க்க முடியவில்லையே என்பது.   ஆனால் நம்மால் ஈர்க்க முடிந்தது. கல்லூரி ஆசிரியர் போராட்டத்துக்கு ஆதரவான போராட்டம், சென்னையில் சரிவராது என்றபோது அதை வெற்றிகரமாக நாம் நடத்தினோம்.   கைதான 57 பேரில் 48 பேர் தொலை தொடர்பினர்.  அதில் 7 பேர் பெண்கள்.   ஒரு பகுதி போராடுகின்றபோது அதற்கு ஆதரவாக மற்ற பகுதியினர் போராடாது இருக்கக் கூடாது,  இருக்க முடியாது என்று காட்டினோம்.   சோவியத்தில் ஏற்பட்ட மாற்றங்களிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொண்டால் நாம் நிச்சயம் மேலும் வளர முடியும்.    பகத்சிங் எப்படி வாழ்ந்தான்?   அவனுக்கு ஆதர்ஷம் தந்தது எது?   நெல்சன் மண்டேலாவுக்கு எப்படி 26  வருஷம் சிறையில் இருக்க முடிந்தது.   அவனுக்கு எது ஆதர்ஷமாக இருந்தது?   இப்படிப்பட்ட லட்சியங்கள்தான் நம்மை வழி நடத்தும்.      

     என்னிடம்தான் நியாயம் இருக்கும் என்று இறுமாப்போடு கூறாமல், மற்றவரிடம் இருக்கும் நியாயத்தையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.     பஞ்ச பூதங்களையும் ஆளுகின்ற மேதாவித்தனம் நம்மிடம் உள்ளது.     Co-axial வந்து பரவுவதற்குள்      Microwave  வந்துவிட்டது.   மாற்றங்கள் வரும்போது நமக்கு வேலை போய் விடுமா? இது முதல் பயம்.   இந்த இலாக்காவில் மட்டும்தான் ஒரு    Non-Technical Cadre, Technical Cadre க்கு   Promotion -ல் போகலாம்.   
     காவிரி நீர் பந்த் 2 -1 -92 நேற்று நடந்தது.  அதில் எத்தனை TMC என்பது பிரச்னை அல்ல.   இந்த நாடு ஒன்றா இல்லையா!  ஒரு மனிதன், தோழன், இந்தியன் என்று பார்க்க வேண்டும்.   1800 கோடி இருந்தால், கோதாவரி, காவிரி, துங்கபத்ரா, பம்பை, மணிமுத்தாறு போன்ற தென்னக நதிகளை இணைத்தாலே பெருமளவில் நன்மை கிடைக்கும்.   அர்த்தமற்ற கொலைகளுக்கு என்ன காரணம்?   ஜாதிக் கலவரங்கள், இதில் இளைஞர்கள் முன்னால் நிற்கிறார்களே ஏன்?  இதைப் பற்றிய  கேள்வியெல்லாம் நம் முன்னே நிற்கிறது.      இந்த நாடே அமுங்கிவிடக்கூடிய அபாயம் இருக்கிறது.  இதைப் பற்றிய சிந்தனை நமக்கு அதிகம் வந்தாக வேண்டும்.  அப்பேர்ப்பட்ட ஊழியரை உருவாக்க நாம் சபதம் மேற்கொள்வோம். 

Monday, May 14, 2018

தமிழ் மாநில செயற்குழுக் கூட்டம்
================================== 
இன்று 14-05-2018 கரூரில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  
தோழர் பட்டாபி அவர்கள் 
துவக்கி வைக்கிறார்.

மூத்த தலைவர் 
குடந்தை ஜெயபால் அவர்கள் உரையாற்றுகிறார்.

நமது அகில இந்தியச் செயலர் தோழர். சந்தேஸ்வர்சிங் அவர்கள் சிறப்புரையாற்றுகிறார்.
==========================================================





















Saturday, May 12, 2018

நன்றி: தினமணி 10-05-018

Friday, May 11, 2018

TMTCLU 
மன்னார்குடி கிளைக் கூட்டம் 

10-05-18 அன்று மன்னார்குடியில் 
ஒப்பந்தத் தொழிலாளர் சங்கக் 
கிளைக் கூட்டம் நடைபெற்றது. 
30க்கு மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர்.
மாவட்டச் செயலர் 
தோழர். கிள்ளிவளவன் அவர்கள் 
பங்கேற்று விளக்கவுரையாற்றினார்.






அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள்
 சங்கக் கூட்டமைப்பு.
 தஞ்சை மாவட்டம்.
===================================
கண்டன ஆர்ப்பாட்டம் 
==============================
தனி டவர் நிறுவனம் 
( BSNL TOWER CORPORATION LIMITED )
அமைக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்தும், மத்திய அரசின் BSNL விரோதக் கொள்கைகளை எதிர்த்தும் 07-05-18 முதல் 10-05-18 வரை 5 நாட்கள் தெருமுனைப் பரப்புரை இயக்கம் தஞ்சை, பட்டுக்கோட்டை, மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி மற்றும் திருவாரூர் ஆகிய இடங்களில் சிறப்பாக நடைபெற்றது. 

அனைத்துச் சங்கத்தின் பொறுப்பாளர்களும் மிகச் சிறப்பாக பொதுமக்களிடம் நமது கோரிக்கையின் நியாயத்தை எடுத்துரைத்தனர்.

இறுதி நாளான இன்று  11-05-18 காலை 10 மணியளவில் தஞ்சை மேரிஸ் கார்னர் இணைப்பக வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
100 க்கும் மேற்பட்ட தோழர்கள் எழுச்சியோடு பங்கேற்று முழக்கமிட்டனர்.

ஐந்து நாள் போராட்டத்திலும் 
பேரெழுச்சியோடு 
பங்கேற்ற தோழர்களுக்கு 
மாவட்டச் சங்கம் 
வாழ்த்தையும், பாராட்டுகளையும் 
அன்போடு தெரிவித்துக் கொள்கிறது.

தோழமையுடன்,
A. லைலாபானு,
பொறுப்பு மாவட்டச் செயலர், தஞ்சை. 















செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR