தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Monday, December 23, 2013

National Council meeting on 23rd December, 2013.

23-12-2013 தேசிய கவுன்சில் கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது ,
மாநிலசெயாளர் தோழர் பட்டாபி பங்கேற்பு ,, 
தேசிய கவுன்சில் கூட்டம் மற்றும் விவாதங்கள் சிறப்புற நமது 
வாழ்த்துக்கள் ,,,

Saturday, December 14, 2013

மத்திய சங்க செய்திகள்



10/12/2013 அன்று டெல்லியில் 
அகில இந்தியத்தலைவர் தோழர்.இஸ்லாம் அகமது
 அவர்கள் தலைமையில் நமது மத்திய சங்க 
வழிகாட்டும் குழுவின் கூட்டம் நடைபெற்றது. 

தமிழ் மாநிலச்செயலர் தோழர்.பட்டாபி, 
அகில இந்திய அமைப்புச்செயலர் தோழர்.கோபாலகிருஷ்ணன், 
புதுவை மாவட்டச்செயலர் தோழர்.காமராஜ் ஆகியோர்
 தமிழகத்தில் இருந்து கலந்து கொண்டனர்.
கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

  • அகில இந்திய மாநாட்டை ஏப்ரல் 2014 முதல் வாரத்தில் மத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்பூர்  நகரில் நடத்துவது.
  • அனைத்து மாவட்டங்களிலும் JCM தலமட்டக்குழு கூட்டங்களை விரைந்து நடத்துவது.
  • WORKS COMMITTEE - பணிக்குழு கூட்டங்களை பயனுள்ள வகையில் அனைத்து மாவட்டங்களிலும் தவறாமல் நடத்துவது.
  • மாநில, மாவட்ட மாநாடுகளை 2014க்குள் சிறப்புற நடத்துவது.
  • ஜனவரி 2014க்கான புதிய உறுப்பினர் சரிபார்ப்பை முழு மூச்சுடன் புது வீச்சுடன் மேற்கொள்வது. NFTEன் பலத்தை உரமாக்குவது.
  • தோழர்கள். கோபாலகிருஷ்ணன், சேஷாத்ரி ஆகியோர் மத்திய சங்கத்தின் சார்பாக கேரள மாநிலத்திற்கு பொறுப்பாளர்களாக செயல்படுவது.
  • (நன்றி: காரைக்குடி மாவட்ட சங்க இணையத்தளம்)   

Thursday, December 5, 2013

TM தேர்வு முடிவுகள்

11/08/2013 அன்று நடந்த போன் மெக்கானிக் போட்டித் தேர்வின்  
முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 
தமிழகத்தில் மொத்தம் 14 தோழர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 
தேர்ச்சி பெற்ற தோழர்களுக்கு நமது வாழ்த்துக்கள்.

வெற்றி பெற்றோர் விவரம்.

கோவை
1. C. ஜான் பிரிட்டோ,  RM
2. R. விவேகானந்தன்,  RM
3. I . அந்தோணி இளங்கோ, RM
4. N. மூர்த்தி, RM
5. M . மதன், RM

கடலூர்
1. P. மணிகண்டன், RM

ஈரோடு
1. M. இராஜேஷ் கண்ணா, RM

தஞ்சை
1. J . அமர்நாத்  ராவ், RM
2. L . கலையரசன், RM

திருச்சி
1. A .அப்துல் நசீர், RM

தூத்துக்குடி
1. S . நாகராஜன், GR' D

வேலூர்
1. A.மனோன்மணி, RM 

விருதுநகர் 
1. B. செந்தில்பாபு, RM 
2. M. இராமலட்சுமி, RM 

கோவை S.இராஜுமணி, RM  என்ற  
தோழரின் தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


தஞ்சையில் தேர்ச்சிபெற்ற தோழர்கள் இருவருக்கும் நமது மாவட்டத்தின் நெஞ்சி நிறை நன்றிகள் ,பாராட்டுக்கள் .
இலாக்காவில்  அவர்கள் மேலும் ,மேலும் சிறப்பாய் 
பணியாற்றி பதவிஉயர்வு பெற நமது வாழ்த்துக்கள் ,,,  


1. J . அமர்நாத்  ராவ், RM
2. L . கலையரசன், RM

Wednesday, December 4, 2013

         

மாநில சேம நல நிதி கூட்டம் 29-11-2013

           மாநில சேம நல நிதி கூட்டத்திற்கு முன் தயாரிப்புக்காக 29-11-2013 அன்று முற்பகலில் மாநில சேம நலக்குழு NFTE உறுப்பினர் இரா ஸ்ரீதர் , மாநில செயலர் R பட்டாபிராமன் மற்றும் RGMTTC கிளை செயலர் சீனிவாசன் ஆகியோருடன் மாநில சங்க அலுவலகத்தில் விவாதித்தார் 

       பின்னர் நாம் அளித்த விவாதப்பொருள் 8 உட்பட விவாதிக்கப்பட்டது .

1. ஓய்வு பெறும்போது GIFT CHEQUE ரூ 1200/- லிருந்து ரூ 2000/- ஆக உயர்த்தல்-  ஏற்கப்பட்டது 

2. மூக்குக்கண்ணாடிக்காக ரூ 400/- லிருந்து ரூ 800/- உயர்த்தல்- ஏற்கப்பட்டது 

3. சேம நலப்பிரிவு ஊழியருக்காக மதிப்பூதியம் இரண்டு மடங்காக உயர்த்தல் - ஒப்புக்கொள்ளப்பட்டது 

4.புத்தக உதவித்தொகை , தொழிற்நுட்ப மற்றும் தொழிற்நுட்பமல்லாத படிப்பு உதவித்தொகையை உயர்த்திட கேரளா மற்றும் கர்நாடகா நடைமுறையை பரிசீலனை செய்து முடிவு செய்ய ஒப்புக்கொள்ளப்பட்டது 

5. திருமண கடன் தமிழகம் முழுவதும் ரூ 50000/-ஆக ஒரே மாதிரி அமுல்படுத்தப்படும்  திருமண கடன் ரூ 1 லட்சம் வரை உயர்த்துவது குறித்து அடுத்த கூட்டத்தில் சாதகமாக பரிசீலிக்க ஒப்புக்கொள்ளப்பட்டது 

6. பெண்களுக்கு முழுமையான மருத்துவ பரிசோதனை மீண்டும் ஒருமுறை அனுமதிக்க வேண்டப்பட்டது . முதன்மை பொது மேலாளர் இரு பாலருக்கும் அனுமதிக்கவும் தொகையை உயர்த்தவும் இசைந்துள்ளார் 

7.மருத்துவ முகாம்கள் -நல்ல யோசனை என்று வரவேற்கப்பட்டு முகாம் ஏற்பாடு செய்ய அனைத்து மாவட்டங்களுக்கும் குறிப்பு அனுப்ப ஒப்புக்கொள்ளப்பட்டது 

8. கடன் தவணை பிடித்தத்தை  HRMS PACKAGE -ல் இணைக்க CGM அலுவலக கணக்குப்பிரிவு முன்முயற்சி எடுக்கும். பூனா ITPC பிரிவுக்கு எழுதி உடனடியாக அமல்படுத்த ஏற்கப்பட்டது 

9. ஊழியர் வங்கி கணக்கு மூலம்( NEFT /RTGS ) மாவட்டங்களில் சேம நல கடன்களை வழங்கிட ஏற்கப்பட்டது 

10. வங்கிக்கடன் பெறும்போது இன்ஷூர் செய்வதன் முக்கியத்துவம் விவாதத்தில் வெளிப்பட்டது உரிய முறையில் வங்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU ) செய்யும்போது காப்பீடு செய்வதையும் இணைக்க கார்பரேட் அலுவலகம் டெல்லிக்கு பிரச்சினையை பரிசீலிக்க அனுப்ப ஒப்புக்கொள்ளப்பட்டது 

11.சேம நல மாதாந்திர சந்தா ரூ 50/- ஆக முந்தைய 09-01-2013 கூட்டத்தில்  எடுக்கப்பட்ட முடிவை தமிழகம் முழுவதும் அமல் செய்து சேமநல நடவடிக்கைகளை மேலெடுத்து செல்ல முடிவு செய்யப்பட்டது 
நவம்பர் 30
விழிப்புணர்வுக்கூட்டம் 


  • நவம்பர் 30 அன்று டெல்லியில் 
  • BSNL நிறுவனத்தை  மேம்படுத்துவதற்காக 
  • அனைத்து சங்கங்களும் BSNL உயர்மட்ட அதிகாரிகளும் 
  • கலந்து கொண்ட விழிப்புணர்வுக்கூட்டம் நடைபெற்றது.
  • கீழ்க்கண்ட பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன.

  • BSNLன் வருவாய் பெருக்கப்படவேண்டும்.
  • சில இடங்களில் உபகரணங்கள் இருந்தும் சேவை தரப்படாத நிலை மாற்றப்பட வேண்டும்.
  • செல் கோபுரங்களின் செயல்பாடு செம்மைப்படுத்தப்படவேண்டும்.
  • தொலைபேசி துண்டிப்பு DISCONNECTION நிறுத்தப்பட வேண்டும்.
  • 2.5 லட்சம் ஊழியர்களும் நமது BSNL பொருட்களை விற்பனை செய்ய தயாராக வேண்டும்.
  • வருவாய் பெருக்கத்தில் பின்தங்கியுள்ள ஜார்க்கண்ட்,சென்னை , கொல்கத்தா போன்ற மாநிலங்கள்  முன்னேறிட  தொழிற்சங்கங்கள் ஒத்துழைக்க  வேண்டும்.
  • அடையாளம் காட்டும் தொலைபேசிக்கருவிகளும் ,  கேபிள்களும் தேவைக்கேற்ற அளவு அந்தந்த மாநிலக்கிடங்குகளில் உள்ளன. அவற்றை பயன்படுத்துதல் வேண்டும்.
  • மேற்கு பகுதிகளில் WESTERN ZONE வேண்டிய உபகரணங்கள் வாங்கும் பணி துரிதப்படுத்த படவேண்டும்.
  • BSNL செல் கோபுரங்களை தனியாருக்கு வாடகைக்கு விட வேண்டும்.
  • அலுவலகங்களில் காலியாக உள்ள இடங்களை வாடகைக்கு விட வேண்டும்.
  • மின்சாரம் சிக்கனமாக பயன்படுத்தப்பட வேண்டும்.
  • ENTERPRISE BUSINESS எனப்படும் நிறுவன சேவை வணிகம் மேம்படுத்தப்பட வேண்டும்.
  • LEASED CIRCUITS வாடகைச்சுற்றுக்கள் கொடுப்பதில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
  • கிராமப்பஞ்சாயத்துகளை NOFN - NATIONAL OPTICAL FIBER NETWORK மூலம் இணைத்து இணையதள சேவை அளிக்கும் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்.
  • முன்னேறியுள்ள 44 தொலைத்தொடர்பு மாவட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் உபரியாக உள்ள கருவிகளை தேவையான இடங்களுக்கு பயன்படுத்திட வேண்டும்.
  • BROAD BAND அகன்ற அலைவரிசை சேவையில் பழுதுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவாய் குறைவு ஏற்பட்டு வருகின்றது. இது உடனடியாக சரி செய்யப்பட வேண்டும்.
  • வருவாயின் அடிப்படையில்  SSA எனப்படும் தொலைத்தொடர்பு மாவட்டங்கள் இணைக்கப்பட வேண்டும்.

Friday, November 29, 2013

Computer வை பை பிரச்சனைகளை வை பை பிரச்சனைகளை சரிசெய்ய

வை பை பிரச்சனைகளை சரிசெய்ய.   {WIFI  Problem }

! இன்று வயர்லெஸ் இன்டர்நெட் நெட்வொர்க் என அழைக்கப்படும் வை-பை இன்டர்நெட் இணைப்பு நமக்கு, ஓரிடத்தில் அமர்ந்து மட்டுமே இன்டர்நெட் இயக்கும் சிக்கலைத் தவிர்க்கிறது. ஜாலியாக, வீட்டில் அல்லது அலுவலகத்தில் எந்த இடத்திலும் அமர்ந்து இன்டர்நெட்டில் உலா வர உதவுகிறது. கேபிளை இணைக்காமல், எளிதாக இன்டர்நெட் உலகைக் காண, அனுபவிக்க முடிகிறது. இருப்பினும், இதிலும் பல தொல்லைகளை நாம் சந்திக்கிறோம். இன்டர்நெட் இணைப்பைத் தரும் ரேடியோ அலைகளுக்குப் பல தடைகள் உருவாகின்றன. சிக்னல் வட்டம் சுருங்குதல், ஹார்ட்வேர் பிரச்னைகள், நமக்கு இணைப்பு சேவையினைத் தரும் நிறுவனம் தரும் பிரச்னைகள் எனப் பலவகைகளில் வை-பி இணைப்பிற்கு தடைகள் கிடைக்கின்றன. இவை கூடுமானவரை ஏற்படாமல் இருக்க சில குறிப்புகள் இங்கு தரப்படுகின்றன.
லேப்டாப்பில் உள்ள வை-பை பட்டன்: காபிஷாப், வீடு அல்லது அலுவலகத்தில் வை-பை இணைப்பு பெறுவதில் பிரச்னை உள்ளதா? முதலில் உங்கள் கம்ப்யூட்டரில் பிரச்னை உள்ளதா எனப் பார்க்கவும். உங்கள் லேப்டாப் கம்ப்யூட்டரில் வை-பை பட்டன் அல்லது ஸ்விட்ச் உள்ளதா எனவும் அது எந்த நிலையில் உள்ளது எனவும் கண்டறியவும். இதனை நீங்கள் அறியாமலேயே அழுத்தி அதன் இயக்கத்தை நிறுத்தியிருப்பீர்கள். எனவே அதனை மீண்டும் அழுத்தி இயக்கவும்.
கம்ப்யூட்டர் மற்றும் ரௌட்டர் ரீ பூட்: வை-பை பட்டனை அழுத்திய பின்னரும், இன்டர்நெட் இணைப்பு கிடைக்கவில்லை எனில், உங்கள் கம்ப்யூட்டர் அல்லது இன்டர்நெட் இணைப்பு கிடைக்கப் பயன்படுத்தும் சாதனத்தையும், ரௌட்டரையும் ரீ பூட் செய்திடவும். இதனால், இந்த சாதனங்களின் ஹார்ட்வேர் பாகங்கள் ஏதேனும் பிரச்னை தருவதாக இருந்தால் அல்லது சாப்ட்வேர் குறையுடன் இயக்கப்பட்டிருந்தால், அவை சரி செய்யப்படும். அப்படியும் கிடைக்கவில்லை எனில், ரௌட்டரை இணைக்கும் கேபிள்களை 5 முதல் 10 விநாடிகள் கழற்றி வைத்துவிட்டு, பின்னர் இணைக்கவும். இதனை "power cycling" வழி என்பார்கள். மின் சக்தி மற்றும் இணைப்பு அகற்றப்பட்டு, மீண்டும் தரப்படுகையில், இவை சரியாக இயங்கத் தொடங்கும்.

























ஒப்பந்ததொழிலாளர்கள் சங்க கூட்டம்

ப்பந்ததொழிலாளர்கள்  சங்க கூட்டம் பூந்தோட்டத்தில் 27-11-2013 அன்று 
மாலை தோழர் A .தியாகராஜன் TM தலைமையிலும் ,தோழர் ராஜாஜி 
மாவட்ட அமைப்பு செயலர் முன்னிலையிலும் நடைபெற்றது .கூட்டத்தில் 
தோழர்கள் V .நடராஜன் மாவட்ட துணை செயலர் ,K .தங்கமணி 
கிளைசெயலர் ,works committee member A .சேகர் ,SDOT கிளை தலைவர் 
R .குணா ,தோழர் பாலதண்டாயுதம் ,ஸ்ரீனிவாசன்TTA ,மற்றும் ஒப்பந்ததொழிலாளர்கள் பலரும் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை முன் வைத்தனர் ,,
தோழர்கள் கோவிந்த் ,சந்திரஹாசன் ,முருகேசன் ,பாஸ்கரன் 
P .ராஜேந்திரன் ,ரவி மற்றும் NNL /PSM பகுதி தோழர்கள் கலந்து 
கொண்டனர் 

Sunday, November 24, 2013


         

    
NFTE பேரியக்கத்திற்கு 60 வயது தொடங்குகிறது .
1954  ல்   NFPTE தொடங்குவதற்கு முன்பாக 
UPTW என்ற பெயரில் இயங்கி வந்த சங்கத்தை 
POSTAL ,தந்தி ,RMS ,TELECOM ,ADMINISTRATION
பகுதி அனைத்தையும் ஒன்று சேர்த்து 
P3&P4,T3&T4,R3& R4,E3&E4,&
Administrative union    
என 9 சங்கங்களை ஒன்றிணைத்து NFPTE சம்மேளனத்தை 
உருவாக்கினார் தோழர் OP குப்தா ,
எத்தனை போராட்டங்கள் ,எத்தனை  தடைகள் ,
பல பிரதமர்கள் ,பல துறை மந்திரிகள் ,அதிகாரிகள் 
என பலரையும் சந்தித்து சாதனை படைத்த சங்கம் 
NFTE க்கு வயது 60,,,,,,,,,,,தொடர்ந்தது வெற்றி நடை 
போட சபதமேற்போம் ,,, 
தோழர். SST (S.S. தியாகராஜன்) மறைந்தார்.
தேசத்தின் முதல் தொழிற்சங்கம் AITUC யின் அகில இந்திய துணைத் தலைவர் நேற்று  23-11-2013 அன்று மாலை மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி கேட்டு பெரிதும் வருந்துகிறோம்.   அவருக்கு கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்துவோம்.   அவர் ஆற்றிய உரை, கொடுத்த கல்வி கொஞ்ச நஞ்சமல்ல!  நமது மாநாடுகள் பலவற்றில் அவர் உரையாற்றியிருக்கிறார். அவரது மறைவு
தொழிற்சங்க இயக்கத்துக்கு பேரிழப்பு என்றால் மிகையாது



.

Tuesday, November 19, 2013

மாநில செயற்குழு

     தருமபுரி SSA ல் கிருஷ்ணகிரியில் 20-11-2013 மாநில செயற்குழு 
             L JCM ,RJCM ,NJCM அமைக்கப்பட்ட சுழலில் ,     
            bonus  போராட்டம் நடத்தி முடித்த நிலையில் ,     
         ஒலிக்கதிர் பொன்விழா நடக்கயிருக்கிற வேளையில் , DEC 2013 டெல்லி தொழிலாளர் பேரணி நடக்கயிருக்கிற காலக்கட்டத்தில்      தருமபுரியில்  கூடி நாம் எடுக்கும் முடிவு இயக்கத்தை மேலும் முன்
எடுத்து செல்லவும் ,jan 2014 மேலும் கூடுதலாக உறுப்பினர் சேர்க்கவும் 
புத்தாண்டில் மேலும் பொலிவோடு நடை போடவும்  உதவும் ,,,,,  


                                   team of achievers celebrating victory in a competition-...


தக்க தருணத்தில் 
       உற்ற துணைவனாய் 
            விளங்கும்  சேலம் மாவட்டத்தின்  
                              புதிய மாவட்டச் செயலராக 
                                                 தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள
 தோழர். பாலகுமார் அவர்களை 
 வாழ்த்தி மகிழ்கிறது தஞ்சை மாவட்டச் சங்கம். 


   தலைவர் நூருல்லாவின் பாசறையில் 
வளர்ந்த, தேர்ந்த  இளைஞன் 
தோழன். பாலகுமாரின் பணி சிறக்கட்டும்.   
விருப்ப ஓய்வில் செல்லும் நமது மாநிலத் தலைவர் 
 தோழர். நூருல்லாவின் பணி ஓய்வுக்காலம் 
சிறப்பாக அமைய வேண்டும் என்றும்  
அவரை வணங்கி வாழ்த்துகிறோம்.

Tuesday, November 12, 2013

வாழ்த்துக்கள்
தமிழ் மாநில ஊழியர் சேமநலநிதிக்குழுவில்
(TAMILNADU CIRCLE  STAFF WELFARE BOARD) 
 NFTE சார்பில் ஊழியர் பிரதிநிதியாக 
நியமனம் செய்யப்பட்டுள்ள 
கடலூர் மாவட்டச்செயலர் 

அருமைத்தோழர்.
 R . ஸ்ரீதர் 
அவர்களின் பணி சிறக்க 
வாழ்த்துகின்றோம்.

Saturday, November 9, 2013

 திரு. J.V. ராஜாரெட்டி அவர்கள் 
5 ஆண்டு டெபுடேசனில் இப்போது ISRO வில்.

     முன்னாள் நமது பொது மேலாளரும் இந்நாள் திருச்சி பொது மேலாளரும் ஆன திரு. J.V. ராஜாரெட்டி அவர்கள் 5 ஆண்டு டெபுடேசனில் ISRO வில் பணியாற்ற ஸ்ரீஹரிகோட்டா செல்கிறார் என்ற செய்தி அறிந்து பெருமகிழ்வு கொள்கிறது தஞ்சை மாவட்டம். SHAR கண்ட்ரோலர் ஆக நவம்பர் 8 முதல்  துவங்கும் அவரது பணி மேலும் சிறக்கும் என்பதில் வியப்பில்லை.   தஞ்சை BSNL பொது மேலாளராக அவர் ஆற்றிய சிறப்பான சேவை சிறப்பு  ஸ்ரீஹரிகோட்டாவில் மேலும் மிளிரட்டும் என்று வாழ்த்துகிறோம்.

Friday, November 1, 2013

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!


Tuesday, October 29, 2013

போனஸ் கேட்டு 30-10-2013 அன்று 
ஒரு நாள் உண்ணாவிரதம்.
     எல்லா சங்கமுமா! தெரியாது? எல்லா தோழர்களுமா!  சொல்ல முடியாது.   3 ஆண்டு காலமாய் வராதது இப்போவா வரப் போகிறது. வராத 4 ஆம் ஆண்டுதான் வரப் போகிறது.   பின் எதற்கு உடல் வருத்தி, வேலையைக் கெடுத்து, தோழர்களை ஒருங்கிணைத்து இந்த உண்ணாவிரதம்?
     நமது கோரிக்கையின் நியாயத்தை நாம் எந்த அளவிற்கு உணர்ந்திருக்கிறோம்?  நமது துறை என்ன நினைக்கிறது.  எல்லா சங்கத்திலும் உள்ளவர்கள் எந்தளவு உணர்கிறார்கள்!  இந்த விடைதான் நமது எஞ்சிய கோரிக்கைகளை எதிர் காலத்தில் வென்றடைய வாய்ப்பை உருவாக்கும்! அதனால்தான் நமது மாநிலச் செயலர் Let this voice be clear and louder என்ற பதத்தை பயன்படுத்தியிருக்கிறார். 
                       போனஸ் என்பது லாபம் வந்தால் மட்டுமே தரப்படும் ஒன்றல்ல.  தொழிலாளிக்கு அது உரிமையாக்கப்பட்ட ஒன்று என்பதை உணர வேண்டும்.   Steel பிரிவு தொழிலாளிக்கு 18000 முதல் போனஸ் கிடைக்க AITUC, CITU, HMS, INTUC  எல்லாம் இணைந்து போராடி வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள்.   இங்கு  மட்டும் ஒன்றுபட என்ன  தயக்கம்!  
      (ஒன்று பட்டால் வென்று விடுவோம்!    வென்று விட்டால் ஒன்று பட வேண்டி வருமே  என்ற கவலையாக இருக்குமோ!}
      100 கோடி நமது துறைக்கு மிச்சம் நாம் அனுபவித்த LTC நிறுத்தப்பட்டதால்.
                      1000 கோடி  மிச்சம் 78.2 IDA நிலுவை மறுத்ததால்.
                      400    கோடி நமது துறைக்கு மிச்சம் MRS  ஐ நிறுத்தியதால்.

        இன்னும் ALLOWANCE போன்றவைகளிலும் நிறைய இழந்து மிச்சத்தை ஏற்படுத்திய நமக்கு நிர்வாகம் வெறும் 70 கோடி ரூபாய் செலவாகும்  போனசை மட்டும் மறுப்பதேன்?
இவ்வளவுக்கும் உத்தரகாண்ட் பேரழிவுக்கு நமது BSNL தோழர்கள் மட்டும் 18 கோடியை தந்திருக்கிறோம்.

   எனவே, இந்த உண்ணா நோன்புப் போராட்டத்தில் தோழர் பட்டாபி கூறியது போல, நமது நியாயத்தை தெளிவாகவும், உரக்கவும் ஒலிப்போம்.
தோழமையுடன்,
சிவசிதம்பரம்/பட்டுக்கோட்டை.

Saturday, October 26, 2013

TN Circle news.
JTO LICE : Revised key will be released shortly.
TM LDCE : Paper valuation going on.
TTA Outsider Results : Expected to be published next week.


JTO திருத்தி அமைக்கப்பட்ட KEY மிக

 விரைவில் வெளிடப்படும்,

TM போட்டி தேர்வு வினா தாள் திருத்தும் பணி நடை 

பெற்றுக்கொண்டுள்ளது,

TTA வெளியார் தேர்வு முடிவுகள் அடுத்த வாரம் 

எதிர்ப்பார்க்கப்படுகிறது ,,,,,,,,, 

Friday, October 25, 2013

  • 25-10-13 Airport Authority Festival Allowance Order-3.5 % of annual pப pay((Nobody  will get less than 3500 - for CL 2500)


    airport authority pli  குறைந்த பட்சமாக Rs 3500/
    கொடுத்துள்ளது .BSNL போனஸ் குறித்து இன்னமும் 
    எந்த சாதகம்மான முடிவும் எடுக்காதது  துரதிர்ஷ்டமானது ,,,,,




                                        Voice of Freedom / Heartfield


Wednesday, October 23, 2013

தமிழ் மாநில தொலைதொடர்பு ஒப்பந்தத் 
தொழிலாளர் சங்கம் 
TMTCLU - தஞ்சை மாவட்டம். 

போனஸ் அறிவிப்பு 

     ஒப்பந்தத் தொழிலாளர்கள் பிரச்சினைகள் குறித்து நமது தஞ்சை மாவட்டப் பொது மேலாளர் திருமதி S.E. ராஜம் அவர்களை கடந்த 10-10-2013 அன்று காலை 11 மணி அளவில் சந்தித்தோம். சந்திப்பில் தலைவர் கலைச்செல்வன், செயலர் கிள்ளிவளவன், NFTE  மாநில துணைச் செயலர் கே. நடராஜன், திருவாரூர் சிவா, கூத்தா நல்லூர் பன்னீர், மாநில மகளிர் கன்வீனர் தோழியர்  லைலாபானு, வல்லம் தாஜுபால், கூடூர் குணா ஆகியோர் பங்கேற்றனர்.   
   நீண்ட நேர பேச்சு வார்த்தைக்குப் பின் கீழ்க்கண்ட  முடிவுகள் எடுக்கப்பட்டது. 
முடிவுகள் 

   - கேபிள் காண்ட்ராக்ட் மற்றும் செக்யூரிட்டி தோழர்களுக்கு போனஸ்                         தொகை ரூபாய்   2000 வழங்கப்படும். 

  - ஹவுஸ் கீப்பிங் தோழர்களுக்கு போனஸ் தொகை ரூபாய் 1500                                   வழங்கப்படும். 

 - தீபாவளியை ஒட்டி இம்மாத சம்பளம் இம்மாதம் 25 ஆம் தேதியே                                வழங்கப்படும். அன்றே போனஸ் தொகையும் அனைவருக்கும் பட்டுவாடா        செய்யப்படும். 

  - பிரதி மாதம்  10 ஆம் தேதிக்குள் சம்பளம் வழங்கிட கோரியிருக்கிறோம்.                நிர்வாகமும் ஏற்றுக்கொண்டுள்ளது. 

  - ஒப்பந்த ஊழியர் அனைவருக்கும் அடையாள அட்டை ( ID கார்டு)                           ஏஜென்சி மூலம் வழங்கிட கோரியுள்ளோம். 

 - அனைவருக்கும் எட்டு மணி நேர வேலை தரும்படி                                                       வலியுறுத்தப்பட்டுள்ளது.

  - அதேபோல் சம்பள உயர்வுக்கும் வழிவகை காண வலியுறுத்தப்பட்டுள்ளது. 

மேற்கண்ட கோரிக்கைகள் நிறைவேற 
ஒத்துழைப்பும், உறுதியும் அளித்திட்ட 
பொது மேலாளர் மற்றும் அதிகாரிகளுக்கும், 
ஏஜென்சிக்கும்  
நமது நெஞ்சார்ந்த நன்றியை 
தெரிவித்துக்கொள்கிறோம்.

தோழமையுடன்,
K . கிள்ளிவளவன்,  மாவட்டச் செயலர்.
கலைச்செல்வன், மாவட்டத் தலைவர்.
எஸ். சிவசிதம்பரம்,  மாவட்டப் பொருளர்.

போனஸ் போராட்டம்

          மத்திய சங்கம் போனஸ்                         கோரி போராட்டம் 
      அறிவித்துள்ளது.அகிலஇந்திய 
        தலைவர் /செயலர் 
      மாநில தலைவர் /மாநில              செயலர் ,மாவட்ட தலைவர் ,      
  மாவட்ட செயலர் 30.10.2013    போனஸ் கோரி பட்டினி போர் ,,,
  உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் 




தி அல்கெமிஸ்ட்: உங்கள் இதயத்தை பின்தொடருங்கள்..!

புத்தகக் காட்சிகளில் சமையல் புத்தகங்களுக்கு அடுத்தபடியாக குவிந்து கிடப்பவை சுய முன்னேற்ற புத்தகங்கள். அத்தனை புத்தகங்களின் ஆதார சுருதி... ஆசைப்படு, கனவு காண், நம்பு, முயற்சி செய், வெற்றி பெறு.
பாலோ கோஹெலோவின் 'தி அல்கெமிஸ்ட்'டும் கனவையும் நம்பிக்கையும் பேசுகிற ஒரு புத்தகம்தான். ஆனால் அது கட்டுரை அல்ல. புதினம். சுவாரசியமான ஒரு நாவல். 'நம்பிக்கை ஒன்றே நன்மருந்து' என்று உபதேசம் செய்கிற புத்தகங்களின் பட்டியலிலே இதைச் சேர்த்துவிட முடியாது. மற்றவர்களிடமிருந்து கோஹெலோ ஒரு விஷயத்தில் ரொம்பவே வித்தியாசப்படுகிறார்.
வாழ்வில் எல்லோருமே ஏதாவது ஒரு லட்சியத்தை, கனவை துரத்தி ஓடிக்கொண்டிருக்கிறோம். இந்த கனவும் லட்சியமும் நம் பிள்ளைப் பிராயத்தில், பால்யத்தில் உருவானவையா? நிச்சயமாக இல்லை. அவை வேறு... இன்றைய கனவும் லட்சியமும் வேறு. இன்று காலம் கொடுத்த மரண அடியில் பால்யத்தின் கனவுகளைத் தொலைத்துவிட்டு புதிய லட்சியங்களை வரித்துக் கொண்டோம். இதுதான் சாத்தியம். இதுதான் நம்மால் முடியும் என்று அவற்றை துரத்திக் கொண்டு ஓடுகிறோம். மற்ற சுயமுன்னேற்ற புத்தகங்கள் ஜே போடுவது... இந்த ஓட்டத்தை வாழ்த்தித்தான். ஆனால் கோஹெலோ இதைத் தப்பு என்கிறார். பால்யத்தின் கனவுகளும் லட்சியங்களுமே நம் இலக்காக இருக்கவேண்டும் என்கிறார்.
அறியாத வயதில், விவரம் புரியாத பருவத்தில் நம்முள் எழும் ஆசைகளும் கனவுகளுமே இயற்கையானவை. நம் இதயத்தின் குரல் அதுதான். நாம் பின்தொடர்ந்து செல்ல வேண்டியதும் அதைத்தான். அதற்காகவே நாம் படைக்கப்பட்டிருக்கிறோம். இதுதான் கோஹெஹோ தன் நாவலில் சொல்லவருவது. ஆனால் யதார்த்தத்தில் சிறு வயது கனவை யாரும் துரத்துவதில்லை. ஏனென்றால் அனுபவமும் அறிவும் அந்த கனவுகள் நடைமுறை சாத்தியம் இல்லை என்று நம் சிறகுகளை முறித்துப் போட்டுவிடுகின்றன. அதனால் பறக்க முடியாமல் கால்களால் ஓடத்துவங்கி விடுகிறோம்.
ஸ்பெயின் நாட்டில் அண்டளுசியா கிராமத்தில் ஆடு மேய்க்கும் சாண்டியாகோவுக்கு ஒரு கனவு வருகிறது. பாலைவன பிரமிட்டில் புதைந்திருகிறது ஒரு புதையல். அந்தப் புதையலை தேடிப் போகிறான் சாண்டியாகோ. பல்வேறு மனிதர்கள்... விதவித அனுபவங்கள்... இடையே ஒரு காதல்... இரண்டு வருடம் வெற்றிகரமான வியாபாரியாக ஒரு வாழ்க்கை... செம்பையும், தகரத்தையும் தங்கமாக மாற்றும் ரசவாதியான அல்கெமிஸ்ட்டுடன் நட்பு.
இப்படியான பயணத்தில் பாலைவனத்தில் மணற்புயலை உருவாக்குகிற ஆற்றலையும் அடைகிறான் சாண்டியாகோ. இறுதியாக புதையல் இருக்கும் இடத்தை அடைந்து தோண்டிப் பார்க்க ஒன்றையும் காணோம். 'இந்த மாதிரி கனவில் வந்ததை நம்பியெல்லாம் வாழ்கையை இழக்காதே... எனக்குக்கூடத்தான் அண்டளுசியாவில் புதையல் கிடைக்கிற மாதிரி அடிக்கடி கனவு வரும்' என்று புத்தி சொல்லிவிட்டு போகிறான் ஒருவன்.
சாண்டியாகோவுக்கு புதையல் ரகசியம் இப்போது தெரிந்து விட்டது. அது வேறெங்கும் இல்லை. அவன் ஆடுமேய்த்து, படுத்துறங்கி கனவு கண்டானே அதே இடத்தில்தான் அந்தப் புதையல் இருக்கிறது!
தன் கனவைக் கைவிடாமல் கடைசி வரை பின்தொடர்ந்து போனதால்தான் புதையல் இருக்கிற இடம் அவனுக்கு தெரிய வந்தது. அவனால் வெற்றி பெற முடிந்தது. உங்கள் பால்ய கனவுதான் இயற்கையின் உத்தரவு. அதைத் துரத்திக் கொண்டு போனால் இயற்கை நிச்சயம் உங்களுக்கு உதவும். இதுதான் 'தி அல்கெமிஸ்ட்' நாவலின் அடிநாதம்.
ஒருவகையில் இப்புதினம் தேடுதல் மற்றும் சாகசக் கதைதான். ஆனால் சாண்டியாகோ இடத்தில் நம்மை உருவகப்படுத்திக் கொண்டால் நமக்கே நமக்கான வேறு வேறு தரிசனங்கள் கிட்டும்.
“இந்த புதினத்தை நான் திட்டமிட்டெல்லாம் எழுதவில்லை. இது என்னால்தான் எழுதப்பட வேண்டும் என்பது இயற்கையின் உத்தரவு. நான் அந்த உத்தரவை நிறைவேற்றினேன்” என்கிறார் பாலோ கோஹெலோ.
ஒருவேளை இயற்கை நம் பால்ய கனவுகளுக்கு உதவ தயாராக இருக்கலாம். ஆனால் நாம்தான் அதை உதாசீனப்படுத்திவிட்டு வேறு திசையில் போய்க் கொண்டிருக்கிறோம்.
'என் சின்ன வயதில் இந்தியாவில் ஒரு புரட்சியை நிகழ்த்தி லெனின்னாக ஆசைப்பட்டேன் நான்' என்கிற என் பக்கத்து வீட்டுக்காரர் பேசாமல் அந்தக் கனவை துரத்திக் கொண்டுபோயிருக்கலாம். மனிதர்... 'வாழ்ந்திருப்பார்'. சே... அதெல்லாம் பைத்தியக்காரத்தனம் என்று பிராக்டிக்கல் மனிதராகி... இன்று ஏதோ வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
'பறவை கிளையில் வந்து உட்காருவது கிளையின் பலத்தை நம்பி இல்லை... கிளை திடீரென முறிந்தாலும் தன்னால் பறக்க முடியும் என்கிற நம்பிக்கையினால் தான்'. பறவைக்கு சிறகின் மீதிருக்கும் நம்பிக்கையை நாம் நம் கனவுகளின் மீது வைப்போம். சிறகை விரிப்போம்.
'தி அல்கெமிஸ்ட்' புத்தகத்துடன் எழுத்தாளர் பாலோ கோஹெலோ

Tuesday, October 22, 2013


Our CHQ leadership is trying their best to impress upon management that Bonus issue cannot be set aside and clarified that quantum need not be an issue to nullify Bonus. DPE has clarified that PLI is nothing connected with the question of Profit and well within the ceiling of perks of 50 % Basic.  As per this clarification 30 % HRA places are due with 36 % (for 2011-12 and 2012-13  18+18) of Basic,  20% HRA places employees  are due with 56% and 10 % HRA places employees are having due with 76 % of their Basic as Bonus.  No Profit mercy is needed for this.
As per the Bonus Act, all those workmen below the basic of 10000 should be given Bonus 3500. No profit mercy is needed for this. Moreover customary Bonus is also a concept that makes us eligible as per the Bonus act, not linking profit. Airport Authorities are giving customary Bonus as Festival allowance.New formula can be evolved by discussion but getting Bonus before Deepawali is having its own urgency.All that needed is united approach and struggle to achieve our proper dues, however meager it may be.. Can we? 



நமது அகில சங்க தலைவர்கள் தொடர்ந்து நிர்வாகத்துடன்  
போனஸ் குறித்து பேசி வருகின்றனர் ,DPE  ன் கூற்று படி PLI க்கும் லாபத்திற்கும் தொடர்பில்லை .bonus act படி 10,000 ரூபாய்க்கு குறைவாக basic pay உள்ளவர்களுக்கு  Rs 3500/போனஸ்தரப்படவேண்டும்.லாபத்தோடு போட்டு குழப்பக்கூடாது ,airport  authoritiesபோனஸ்வழங்கி உள்ளது.நமக்கான புதியபோனஸ்விதிபிறகு
உருவாக்கிக்கொள்ளலாம் ..தீபாவளிக்கு முன்பாக போனஸ் பெறவேண்டும் என்பதே நமது சங்கத்தின் லட்சியம் ...
                                               



                                                 

சொசைட்டி செய்திகள் 

- சாதாரண கடன் ரூபாய் 4 லட்சத்திலிருந்து 5         லட்சமாக உயருகிறது.    
    01-02-2014 முதல் வழங்கப்படவுள்ளது.
       
- கடனுக்கான வட்டி விகிதம் 16.5 % லிருந்து         15.5 % சதமாக குறைகிறது.

- டிவிடென்ட் வழக்கம்போல் 12 % சென்ற ஆண்டுக்கு வழங்கப்படுகிறது. இதை 10-10-2013 முதல் பெற்றுக் கொள்ளலாம்.  இம் மாத சம்பளத்திலும் அட்ஜஸ்ட் செய்யப்படும். 

- குடும்ப நல நிதி 600 ரூபாயாக இருந்தது  கடன் உயர்வு காரணமாக 800 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.  இதன் காரணமாக இன்சூரன்ஸ் தொகை 3 லட்சத்திலிருந்து 4 லட்சமாக உயருகிறது.

- FESTIVAL ADVANCE ரூபாய் 10000/- உடன் பெற்றுக் கொள்ளலாம். மாதா மாதம் ரூபாய் 1000 பிடித்துக்கொள்ளப்படும். 
25-10-2013 முதல் வழங்கப்படும்.  சனிக்கிழமையும் சொசைட்டி இயங்கும்.

சொசைட்டி நிலம் பிரித்துக் கொடுக்கும் முயற்சி வழக்கம்போல் குழப்ப நிலையிலேயே உள்ளது.   இந்த RGB கூட்டத்திற்கு என்னால் செல்ல இயலாததால் முழு விபரமும் தெரிய வில்லை. குழப்பம் தீர்ந்து நல்ல முடிவு ஏற்படும் சாத்திய கூறுகளும் தென்படுகிறது.  பொறுத்திருந்து பார்ப்போம்!

வாழ்த்துக்களுடன்,
எஸ். சிவசிதம்பரம்,
RGB, பட்டுக்கோட்டை. 

Monday, October 21, 2013

COAL INDIA SFVRS



AITUC, CITU, BMS, INTUC மற்றும் HMS சங்கங்களின் கோரிக்கையின் அடிப்படையில் COAL INDIA நிறுவனத்தில் மகளிருக்கான சிறப்பு 
விருப்ப ஒய்வுத்திட்டத்தை நடைமுறைப்படுத்த COAL INDIA நிர்வாகம் சம்மதித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. 


வாரிசுக்கு வேலை (VRS )என்று தலைவர் குப்தா கேட்ட போது 

அதனை மாற்று சங்கத்தார் ஊழியர் விரோதம் என்றனர் 

ரயில்வேயை தொடர்ந்து COAL INDIA வாரிசுக்கு வேலை

கோரிக்கை எழுந்துள்ளது ,காலத்தின் தேவையை 

வெளிப்படுத்துகிறது ,,,,,,,,





Sunday, October 20, 2013

தோழர்களே மன்னிக்கவும்

                      வெகு நாட்களுக்குப்பின் website சரியாகிவுள்ளது .


போனஸ் அது மறந்து போன ஒன்றாகிவிட்டது,
அது நமது உரிமை என்பதுவும் மறந்துவிட்டது,
போராடி பெற்ற போனசை காற்றில் ,
பறக்கவிட்டுவிட்டனர் 8 ஆண்டு அங்கீகாரத்தில்,

adhoc  போனஸ் வழங்கக்கோரி நமது அகில இந்திய சங்கம் நிர்வாகத்துக்கு கடிதம் கொடுத்துள்ளது ,


மாநில சங்கத்தின் பெரும் முயற்சிக்கு பின்னர் temporary transfer ல் சென்றவர்களின் காலகெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
மாநில செயலருக்கு நமது நன்றி .
இதன் மூலம் தஞ்சையிலிருந்து சென்னைக்கு  தற்காலிக மாற்றலில் 
சென்ற பல தோழர்கள் பிரச்னை எதுவுமின்றி நீடிக்கலாம் .
(ref: circle intranet hr) 
  

Thursday, September 19, 2013

nfte -bsnl சங்க அலுவலக திறப்பு விழா

nfte -bsnl சங்க அலுவலக திறப்பு விழா 17-9-2013கோலாகலமாக 
நடைபெற்றது .நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் பிரின்ஸ் தலைமை 
ஏற்றார்,மாவட்ட செயலர் பன்னீர் வரவேற்புரை நிகழ்த்தினர் ,
TMTCLU  மாவட்ட தலைவர் கலை , தஞ்சை இளங்கோவன் முன்னிலை, 
வகித்தனர் ,மாநில துணை செயலர் நடராசன் துவக்க உரை ஆற்றினார் 
மாநில செயலர் பட்டாபி ,மாநில பொருளர் அசோக்ராஜ் ,aibsnl 
மாநில செயலர் வீரபாண்டியன் ,பொறுப்பாளர்கள் துரையரசன்,உதயன் ,
கோபாலகிருஷ்ணன் ,aibsnloa மாவட்ட செயலர் கிருஷ்ணராவ் ,
ஜெயராமன் ,snea மாவட்ட செயலர் பழனியப்பன் ,குணசேகரன் ,
அதிகாரிகள் DGM (ADMIN),DGM (FIN ),DGM (CM ),AGM (admin ),
சகோதர சங்க பொறுப்பாளர்கள் தோழர் கஜா மாவட்ட செயலர்
அண்ணா தொழிற்சங்கம் ,அதன் பொறுப்பாளர்கள் சுந்தர்ராஜன் ,
ராஜேஷ்கன்னா ,SNATTA மாவட்ட செயலர் ராஜேஷ்வரன் ,பிரபாகரன் ,
AIBCTES மவட்டசெயலர் ஜெயராஜ்,SEWA மாவட்ட செயலர் 
சுந்தரமுர்த்தி,குணசேகரன் ,FNTOBEA மாவட்ட செயலர் சிவகுமார் ,
FNTO மாவட்ட செயலர் ஜெயசீலன்,மகளிர் ஒருங்கிணைப்பு குழு 
லைலாபானு ,மல்லிகா சுகுமாரன் , TMTCLU மாவட்ட செயலர் 
கிள்ளிவளவன் மற்றும் மாவட்ட சங்க /கிளை சங்க பொறுப்பாளர்கள் 
தோழர்கள்/தோழியர்கள் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தோழர் பக்கிரிசாமி நன்றி கூறி முடித்து வைத்தார் ,outdoor கிளை 
தோழர்கள் மற்றும்தோழர் மேகநாதன் விழா சிறக்க உதவினார்கள் .  
































கே.நடராஜன் MA /TTA ,PSM   
ACS -NFTE -BSNL 
தஞ்சாவூர் .






செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR