தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Monday, December 14, 2015




.வெள்ளம் பாதிக்கப்பட்ட சென்னையில்
தோழர்.ஆர்.கே., அவர்கள்
உள்ளமுவந்து உதவிகள் வழங்கிடும் காட்சி 



மகத்தான சாதனை...! கேடர் பெயர் மாற்றம்..
.!!
திருத்தங்களுடன் ஏற்பு...

 

நமது BSNL நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் 
(Group C & Group D) கேடர் பெயர் மாற்றத்திற்காக நிர்வாகத்தால் 
கேடர் பெயர் மாற்ற குழு அமைக்கப்பட்டது.

28-07-2015 அன்று நடைபெற்ற இக்குழுவின் கூட்டத்தில்... 
TTA, Sr.TOA, TM மற்றும் RM கேடர்களுக்கு கீழ்க்கண்ட 
புதிய பெயர்கள் உடன்பாடாக ஏற்கப்பட்டன.
  • TM களுக்கு - Telecom Technician 
  • RM களுக்கு - Telecom Assistant 
  • TTA களுக்கு - Junior Engineer 
  • Sr.TOA (NE-11 மற்றும் NE-12) களுக்கு - Office Superintendent 
  • இதர Sr.TOA களுக்கு - Office Associate 

இந்த உடன்பாடு Sr.TOA (NE-7 முதல் NE-10 வரை உள்ள) 
தோழர், தோழியர்கள் மத்தியில் பெரும் 
அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.

அதேபோல் TTA தோழர்களுக்கு JE என்ற பெயர் 
வழங்க நிர்வாகம் தயக்கம் காட்டியது.

இந்த பிரச்சனைக்கு தீர்வு காண... நமது சங்கம் மற்றும்...
ஊழியர் தரப்பு பல்வேறு ஆலோசனைகளை 
வழங்கியது. மேலும் குழுவின் கூட்டத்தை உடனடியாக 
கூட்ட தொடந்து வலியுறுத்தியது.

நமது தொடர் முயற்சியின் காரணமாக 11-12-2015 அன்று கேடர் 
பெயர் மாற்ற குழுவின் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில்... நமது ஆலோசனைகள் ஏற்கப்பட்டு, 
சில திருத்தங்களுடன் கீழ்க்கண்ட புதிய உடன்பாடு ஏற்கப்பட்டது.
  • TM களுக்கு - Telecom Technician 
  • RM களுக்கு - Assistant Telecom Technician 
  • TTA களுக்கு - Junior Engineer 
  • Sr.TOA (NE-7 மற்றும் NE-8) களுக்கு - Senior Office Associate 
  • Sr.TOA (NE-9 மற்றும் NE-10) களுக்கு - Assistant Office Superintendent 
  • Sr.TOA (NE-11 மற்றும் NE-12) களுக்கு - Office Superintendent

இந்த உடன்பாடு மூலம் Sr.TOA (NE-7 முதல் NE-10வரை உள்ள) 
மற்றும் RM தோழர்களுக்கு, திருத்தங்களுடன் நல்ல 
பதவி பெயர் மாற்றம் பெற்று தந்துள்ளோம்.

இந்த உடன்பாடு... நிர்வாகக் குழுவின் ஒப்புதலுக்கு பிறகு 
உத்தரவாக வெளிவரும். நமது மத்திய சங்கத்திற்கும் கேடர் பெயர்
மாற்றக் குழுவிற்கும் நமது பாராட்டுக்கள்.
தஞ்சை மாவட்ட BSNL தோழர்களுக்கு வாழ்த்துக்கள்!

  தஞ்சை மாவட்ட BSNL ஊழியர்கள்/அதிகாரிகள் அனைவரும் ஒன்றிணைந்து கடலூர் மாவட்டத்தில் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க தோழர் S.பிரின்ஸ் NFTE மாவட்டதலைவர் அவர்கள் தலைமையில் ரூபாய் ஒன்றரை லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருள்களுடன் (17 பொருள்கள் அடங்கிய பை) தோழர்கள் T.பன்னீர்செல்வம்,K.நடராஜன்.NFTE, V.வீரமணி-BSNLEU, C.துரையரசன்-AIBSNLEA, N.மேகநாதன்,F.ஆரோக்கியதாஸ், V.ராஜேந்திரன், G.ராஜ்மோகன், M.லட்சுமணன், S.இளங்கோ,ஆரூர் சேகர், R.குணசேகரன்,தோழியர் Tஉஷா-CTO, ஓட்டுனர் தோழர் M.சிவஞானம் மற்றும் தோழர். பிரின்ஸ் அவர்களின் மகள் தோழியர் P.பெரில்தோழர்.மேகநாதன் மகன் தோழர்M.சந்தோஷ் ஆகியோர் அடங்கிய  குழு சிதம்பரம் பகுதியை தேர்வு செய்து சட்டமன்ற உறுப்பினர் தோழர் K.பாலகிருஷ்ணன் அவர்களின் மூலம்  வழங்க சிதம்பரம் வந்தனர். அந்த தோழர்களை சிதம்பரம் பகுதி தோழர்கள்V.கிருஷ்ணமூர்த்தி-கிளைசெயலர், K.நாவு-கிளைத்தலைவர், D.ரவிச்சந்திரன் மாவட்ட உதவிசெயலர் ஆகியோர் வரவேற்று அவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை உடனிருந்து செய்து கொடுத்தனர். சட்டமன்ற உறுப்பினர் வேறு பகுதி நிவாரண பணியில் இருந்ததால் அவரால் வரமுடியவில்லை. அவரின் ஆலோசனையின் படி அண்ணாமலை நகர் பகுதியை சார்ந்த CPM மாவட்டக்குழு உறுப்பினர் தோழர் S.ராஜா அவர்களின் மேற்பார்வையில் அந்த பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்மையே நேரில் அழைத்து சென்று நிவாரணங்களை வழங்க ஏற்பாடு செய்தார். இதனால் சுமார் 250 பேர் பயன் பெற்றனர். தஞ்சை மாவட்ட BSNL நிர்வாகம் இலாக்கா கண்டைனர் லாரியை வழங்கி உதவியது. 
கடலூர் NFTE மாவட்ட சங்கம் சார்பாக தஞ்சை தோழர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.


நன்றி கடலூர் வலை தளம் 













Thursday, December 3, 2015



ஆரவாரச் சென்னை 
இன்று அலங்கோலமாகியது. 
சிங்காரச் சென்னை 
இன்று சீர்கேட்டின் உச்சம்.
இயற்கை தன் வெப்பத்தை
சீற்றத்தால் தணித்துக் கொண்டது.
தானுண்டு தன்  வேலையுண்டு 
என்றிருந்தவர்கள்  
இன்று தள்ளாடிப் போனார்கள்.
கூவம் சுத்தமாச்சு  என்ற மகிழ்ச்சி 
நிலையாமல் போனது.  
இன்று ஊரே கூவமானது.
தாழ்ந்த, உயர்ந்த என்று 
ஒரு பகுதியோ, மக்களோ 
இன்று சென்னையில் இல்லை.
எல்லோரும் ஓர் நிறை என்றாச்சு.
ஊடகச் செய்திகள் நெஞ்சை
உறைய வைக்கின்றது.
பத்தடி உயரத்தில் கடல் அலை 
பாய்ந்ததை பார்த்திருக்கிறோம்!
பத்தடிக்கும்   மேலே 
நமது வீடுகள்  நீரால் நிறைந்ததே. 
என்ன ஒரு கொடுமை!
இந்த மழை இன்னும் நாலு நாளாம்!! 
பம்பரமாய்ச் சுழன்றவர்கள் 
இன்று பம்மி, பதுங்கி பரிதவித்து.
ஏனிந்த வேதனை! 
இந்த ஆராய்ச்சி இப்போது வேண்டாம்.
நமது உறவுகளை, நட்புக்களை 
களங்கமில்லா உயிர்களை 
காத்திட களம் புகுவோம்.
நெருக்கடி சூழல் உருவாகும்போதுதான் 
உதவும் உள்ளங்களை அறிய முடிகிறது.
பள்ளிகள், கல்லூரிகள்,
அனைத்து மத ஆலயங்கள்,
திரையரங்குகள், நிறுவனங்கள் 
காட்டும் அக்கறை 
கனிந்துருகச் செய்கிறது.
ஆர்வலர்கள், அரசு ஊழியர்கள் 
ஏற்றிடும் உழைப்புக்கு
ஆற்றிடும் தொண்டுக்கு  
இருகரம் கூப்புவோம். 
அண்டை மாநிலங்களும், 
திரைத்துறை நடிகர்களும் 
ஊடகவியலாளர்களும் 
காலத்தில் செய்யும் உதவிகளை 
கணக்குப் பார்த்திட வேண்டா!
உதவி செய்யும் உள்ளங்களை 
உளமார வாழ்த்திடுவோம்.
உயிர், உடமைகளை 
இழந்து வாடும் 
நண்பர்களே, உறவுகளே!
இந்த நிலை எளிதில் மாறும்!
இனிதாகவும் மாறும்!. 
கவலை வேண்டாம்!

அன்புடன்,
எஸ். சிவசிதம்பரம், பட்டுக்கோட்டை.

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR