தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Saturday, October 31, 2015

NFTE  

மத்திய செயற்குழு 

நவம்பர் 1 முதல் 3 வரை 
அவுரங்காபாத் - மகராஷ்டிரா 

- : ஆய்படு பொருள் :-
  • அமைப்பு நிலை 
  • ஊழியர் பிரச்சினைகள் 
  • DELOITTE  குழு பரிந்துரை 
  • BSNL  புத்தாக்கம் 
  • MTNL - BSNL  இணைப்பு 
  • செல் கோபுரங்கள் தனி நிறுவனம் 
  • போனஸ் 
  • மற்றும் ஏனைய பிரச்சினைகள்
---------------------------------------------------------------------------------------------

Friday, October 30, 2015

நமது மத்திய சங்கம் கீழ்க்கண்ட பிரச்சனைகளை வலியுறுத்தி 
BSNL நிர்வாகத்திற்கு கடிதங்கள் எழுதியுள்ளது.

  • இந்த ஆண்டு நமது வருமானம் ரூ.800/- கோடி உயர்ந்துள்ளதால் BSNL ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு உடனடியாக போனஸ் வழங்க வேண்டும்.
  • நமது BSNL நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்ட நேரடி நியமன ஊழியர்களுக்கு ஓய்வூதியப்பலன்கள் அளிப்பதற்கான கொள்கை உடனடியாக வகுக்கப்பட வேண்டும்.
  • TTA மற்றும் TM தோழர்களுக்கு புதிய தொழில் நுட்பத்தில் பயிற்சி அளிக்க வேண்டும். அதிகாரிகள் தாய்லாந்து சென்று பயிற்சி எடுத்து வருவது போல் ஊழியர்களுக்கு தாய்நாட்டில் பயிற்சி அளிக்க வேண்டும்.
  • 78.2% சத IDA அடிப்படைச் சம்பளத்தின் அடிப்படையில் வீட்டு வாடகைப்படி (HRA) வழங்கப்பட வேண்டும்.
  • டெலாய்ட்டி கமிட்டி அமுலாக்கத்தின் போது உபரியாகும் ஊழியர்களை அந்தந்த மாவட்டங்களிலேயே விற்பனைப்பிரிவு போன்ற பகுதிகளில் பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.
மருத்துவக்கொள்கை... மறுபரிசீலனைக்குழு...

medical policy க்கான பட முடிவு

தற்போதுள்ள மருத்துவத்திட்டத்தை மறுபரிசீலனை 
செய்வதற்காக குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்பது 
NJCM தேசியக்குழு கோரிக்கை.

அதன் அடிப்படையில் NFTE மற்றும் BSNLEU சங்கங்களிடம் 
BSNL நிர்வாகம் ஆலோசனைக் கேட்டுள்ளது.

மேலும் சங்கத்திற்கு ஒருவர் வீதம் குழு உறுப்பினரை நியமனம்
செய்யவும் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

மரித்துக் கொண்டிருக்கும்... நமது மருத்துவத் திட்டம்...
மறுவாழ்வு பெற்றால் நமக்கு மகிழ்ச்சி தான்.
மாற்றல் கொள்கையில்... சில திருத்தங்கள்...

staff transfer clipart க்கான பட முடிவு

நமது BSNL நிர்வாகம் ஊழியர்களுக்கான மாற்றல் கொள்கையில்
(விதி 13... உட்பிரிவு 4-ல்...) சில திருத்தங்களை கொண்டு வருவதற்காக...
முன்மொழியப்பட்ட திருத்தங்களில் சில...
  • மாற்றல் கொள்கையில் (Transfer Policy) கிராமப்புற சேவைகளுக்கான மாற்றல் காலம் (Tenure) 3 ஆண்டுகள்.
  • மாற்றல் காலத்தில் அனுமதிக்கப்பட்ட விடுப்புக்கு மேலாக விடுப்பு எடுத்தால் அந்த விடுப்பு மாற்றல் காலத்தில் கழிக்கப்படும்.
  • மாற்றலில் விருப்பம் இல்லாத பெண் ஊழியர்களுக்கு 55 வயது (அந்த வருடத்தில் மார்ச் 31 அன்று) பூர்த்தியானால்  மாற்றலில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
GPF-க்கு நிதி ஒதுக்கீடு...


GPF-க்கு தேவையான (தமிழ் மாநிலத்திற்கு : ரூபாய்.12 கோடி)... 
நிதியை நமது மத்திய நிர்வாகம் 23-10-2015 அன்று ரூபாய். 
12 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்நிலையில்... GPF தொகைக்கு விண்ணப்பித்த தோழர்,
தோழியர்களுக்கு 27-10-2015 அன்று பணப்பட்டுவாடா செய்யப்படும் 
என்று மாநில நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடுமையான நிதி நெருக்கடியை காரணம் காட்டி... GPF இல்லை என்ற... நிர்வாகத்தின் நிலையை மாற்றி... GPF-க்கு தேவையான நிதியை... 
போராடி... பெற்றுதந்த... நமது மத்திய... மாநில... சங்கத்திற்கு...
நமது நன்றியை உரித்தாக்குகிறோம்.

என்ன கொடுத்தும் ஒற்றுமை...
என்னையே (எங்களையே) கொடுத்தும் ஒற்றுமை...
- தோழர்.குப்தா.

என்ற தாரக மந்திரத்தை நெஞ்சில் சுமப்பவர்கள் நாம்... 
மக்கள் விரோத... ஊழியர் விரோத போக்கை மட்டுமே கடைப்பிடிக்கும்
இன்றைய  அரசாங்கத்தையும், நிர்வாகத்தையும் எதிர்த்து 
போராட வேண்டுமென்றால், ஊழியர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற
வேண்டுமென்றால்... நாம் அமைப்பு ரீதியாக வளர்ந்திட வேண்டும்...
அமைப்பு விதிகளில் ஒன்று தான் நம் மாநாடு... 
மாநாடுகள் நடத்தாமல், அமைப்பு ரீதியாக வளராமல்... 
எதையும் சாதிக்க முடியாது... நல்லவர்கள் தொடந்து... 
பதவிக்கு வரவேண்டும்... பதவிக்காக அல்ல... 
ஊழியர்களின் நலன் காக்க... தொடர்ந்து பாடுபட...
NFTE-BSNL

5-வது தமிழ் மாநில மாநாடு 

வரவேற்புக்குழு அமைப்புக்கூட்டம் - வேலூர்






  
  


நமது 5-வது தமிழ் மாநில மாநாட்டிற்க்கான வரவேற்புக்குழு 
அமைப்புக் கூட்டம் 20-10-2015 செவ்வாய்க்கிழமை அன்று 
ஹோட்டல் பார்க் அவென்யூ, வேலூரில் 
மிகச் சிறப்பாக நடைபெற்றது.

வரவேற்புக்குழு தலைவர், செயலர், பொருளர் முறையே...
திரு. M.வெங்கடசுப்பு (தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத் 
தலைவர்), தோழர். P.நெடுமாறன், தோழர். P.மதியழகன் 
ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.




  • தீபாவளி விடுமுறை 10-11-2015க்கு மாற்றப்பட்டுள்ளது.
  • மிலாடி நபி விடுமுறை 23-12-2015க்கு மாற்றப்பட்டுள்ளது..
  • அக்டோபர் 2015 முதல் பணி  நிறைவு பெறும் தோழர்களுக்கு விடுப்புச்சம்பளம் அந்த மாதமே வழங்கப்பட வேண்டும் என CORPORATE  அலுவலகம் உத்திரவிட்டுள்ளது.
  • மனிதவள இயக்குநராகப் பணிபுரியும் திருமதி.சுஜாதாராய் காலியாக உள்ள  DIRECTOR FINANCE  இயக்குநர் நிதிப் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார்.
  • ஒரு மாத போனஸ் உச்சவரம்பான ரூ.3500/-ஐ ரூ.7000/-மாக உயர்த்துவதற்கும், போனஸ் பெறுவதற்கான மாத ஊதியத்தை ரூ.10,000/-லிருந்து ரூ.21,000/-மாக உயர்த்துவதற்கும்  மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது மிக நீண்ட நாள் பிரச்சினையாகும். நமது செப்டம்பர் 2 வேலை நிறுத்தக் கோரிக்கைகளுள் ஒன்றாகும்.
  • 5வது தமிழ் மாநில மாநாட்டிற்கான வரவேற்புக்குழு வேலூர் தோழர்களால் அமைக்கப்பட்டுள்ளது.
  • பத்தாண்டுகளாக JTO பதவியில் தற்காலிகமாகப் பதவி வகிக்கும் TTA தோழர்களுக்கு மீண்டும் பயிற்சி என்பது தேவையற்றது என தமிழ் மாநிலச்சங்கம் மாநில நிர்வாகத்திடம் வலியுறுத்தியுள்ளது.
  • RELIANCE , AIRCEL மற்றும் MTS தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் ஒரே நிறுவனமாக இணைவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவ்வாறு இணைப்பு ஏற்பட்டால் தொலைத்தொடர்பில் மூன்றாவது பெரிய நிறுவனமாக புதிய நிறுவனம் அமையும்.
NJCM தேசியக்குழு கூட்ட முடிவுகள்...

 

NJCM தேசியக்குழு 16-10-2015 அன்று டெல்லியில்
 மனிதவள இயக்குநர் திருமதி.சுஜாதா ராய் அவர்களின்
தலைமையில் நடைபெற்றது.

கீழ்க்கண்ட பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன.

1. மின்விபத்து மற்றும் விபத்துக்களில் சிக்கி உயிரிழந்தவர்களின்   குடும்பங்களுக்கு கருணை அடிப்படை பணிகளில் முன்னுரிமை அளிக்க வலியுறுத்தப்பட்டது. மேலும் தற்போதுள்ள அளவுகோல்களைத் தளர்த்தவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. நிர்வாகம் சாதகமாக பரிசீலிக்க ஒத்துக்கொண்டுள்ளது.

2. 01-01-2007 முதல் 07-05-2010 வரை பணியில் அமர்த்தப்பட்ட ஊழியர்களுக்கு TTA  தோழர்களுக்கு வழங்கப்பட்டது போலவே ஒரு ஆண்டு உயர்வுத்தொகை வழங்கும் முடிவு பரிசீலிக்கப்படும்.

3. அகன்ற அலைவரிசை பழுது நீக்கும் பணி சோதனை அடிப்படையில் சில குறிப்பிட்ட நகரங்களில் தனியாருக்குத்  தாரை வார்க்கப்படும்.

4. 78.2 சத IDA இணைப்பில் 01-01-2007 முதல் நிலுவை வழங்குவது பற்றி மீண்டும் நினைவூட்டல் கடிதம் DOTக்கு  அனுப்பப்படும்.

5. CASUAL ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்குவது  பற்றி 
BSNL வாரியக்கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்.

6. ஊழியர்களின்  வாடகை இல்லா குடியிருப்புத் தொலைபேசியில் இரவுநேர இலவசங்களை  அளிப்பது பற்றி பரிசீலிக்கப்படும்.

7. TTA ஆளெடுப்பு விதிகளில் திருத்தம் பற்றி  ஊழியர் தரப்பு இரண்டு    வாரங்களுக்குள் தங்களது கருத்துக்களை அளிக்க வேண்டும்.

8. DELOITTE குழு அமுலாக்கத்தில்  மாவட்டங்கள் இணைக்கப்படும் போது BUSINESS AREA எனப்படும் வியாபார வட்டத்தில் சம்பளம் மற்றும்  நிர்வாகப் பொறுப்புக்களும், ஊழியர் மாற்றங்கள் SSA அளவிலும் இருக்கும்.

9. MDF மற்றும் பழுது பதியும் தொலைபேசிகளை கட்டணமில்லா தொலைபேசி சேவையாக மாற்றுவது பற்றி பரிசீலிக்கப்படும்.

10.இலாக்காத் தேர்வுகள்  அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. திருத்தங்கள் இருந்தால் மீண்டும் வெளியிடப்படும்.

11.சீருடை சம்பந்தமாக புதிய கொள்கை உருவாக்குவது பற்றி பரிசீலிக்கப்படும்.

12.CORPORATE  அலுவலகப் பணியாளர்களுக்கு தலைமையகப்படி HQ ALLOWANCE வழங்குவது ஏற்கப்படவில்லை.

13. தவறுதலாக  வழங்கப்பட்ட பட்டுவாடாவை மீண்டும் பிடித்தம் செய்யக்கூடாது என்ற உச்ச  நீதிமன்ற உத்திரவின் அடிப்படையில் அத்தகைய பிடித்தங்கள் இருந்தால் நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.

14. பணி நிறைவு பெறும் தோழர்களுக்கு விடுப்புச்சம்பளம் பணி நிறைவு நாளன்றே வழங்குவது, TA மற்றும் மருத்துவ முன்பணம் வழங்குவது பற்றி பரிசீலிக்கப்படும்.

15. விதி 8ன் கீழ் ஊழியர்களுக்கு மாற்றல் வழங்குவதற்கு நிர்வாகத்தால் தடையாணை ஏதும் பிறப்பிக்கப்படவில்லை என்று நிர்வாகத்தரப்பு கூறியுள்ளது.

16. மிகுதி நேரப்படியை உயர்த்துவது பற்றி பரிசீலிக்கப்படும் எனவும்  ஏனைய படிகள் உயர்வு பற்றி பரிசீலிக்க இயலாது எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.

17. JCM நிலைக்குழுவில் விவாதிக்கப்பட்ட  பிரச்சினைகள் அமுலாக்கம் பற்றி 19-10-2015 அன்று கூட்டம் நடைபெறும்.

18. பதவிகளின் பெயர் மாற்றப் பரிந்துரை BSNL நிர்வாகக்குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. விடுபட்ட கேடர்களுக்கும் பெயர் மாற்றுதல் பற்றி பரிசீலிக்கப்படும்.

தோழர்களே... JCM கூட்டத்தில் போனஸ் வழங்குவது,
 JAO ஆளெடுப்பு விதிகளில் திருத்தங்கள்
 மேற்கொள்வது ஆகியவையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. 
பல முடிவுகள் ஆகட்டும் பார்க்கலாம் 
என்ற பாணியிலேயே உள்ளன. 

குறிப்பாக போனஸ் வழங்குவதில் நிர்வாகம் தொடர்ந்து
ஊழியரை ஏமாற்றுவது ஊழியர்கள் மத்தியில் 
அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Monday, October 12, 2015

BSNL  அனைத்து சங்கக் கூட்டமைப்பு 

BSNL ஊழியர்களுக்கு 
தற்காலிகப் போனஸ் 
உடனடியாக வழங்கக்கோரி 
தலைநகர் டெல்லியில்... 
மாநிலத்தலைநகரங்களில்...
மற்றும் மாவட்டத்தலைநகரங்களில்...

19/10/2015 - திங்கள் - நாடு தழுவிய 
பெருந்திரள் தர்ணா

 நட்டம் காணும்  இரயில்வேக்கு போனஸ்....
ஆட்டம் காணும் தபால்துறைக்கு போனஸ்...
வியர்வை சிந்தும் BSNLக்கு ஏனில்லை போனஸ்?

தோழர்களே... அணி திரள்வீர்...
பெருந்திரள் தர்ணாவில்... பெருந்திரளாய் கூடுவீர்...

Sunday, October 11, 2015


மறைந்தார் மனோரமா!

          திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில், 1943ம் ஆண்டு மே, 23 ம் தேதி பிறந்தவர் கோபி சாந்தா. சினிமாவுக்காக மனோரமா என்று பெயர் மாற்றப்பட்டார். ராஜமன்னார்குடியில் 6ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். தனது, 12 வயதில் நாடகத்தில் நடிக்கத் துவங்கினார். பின்னர், 1960ல் 'களத்துார் கண்ணம்மா' என்ற படம் மூலம் தமிழ் சினிமா உலகில் கால்பதித்தார். தமிழ் திரையுலகின் பல முன்னணி நட்சத்திரங்களுடன் சேர்ந்து, 1000 படங்களுக்கும் மேல் நடித்து, கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றவர்.  தமிழக முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோருடன் நாடகத்திலும்,  எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் என்.டி. ராமாராவ் ஆகியோருடன் பல படங்களில் நடித்துள்ளார். கதாநாயகி, வில்லி மற்றும் குணச்சித்திரம் உள்ளிட்ட பல முக்கிய வேடங்களில் நடித்தவர். நடிப்பு மட்டுமின்றி, 300க்கும் மேற்பட்ட பாடல்களும் பாடியிருக்கிறார். டிவி தொடர்களிலும் நடித்துள்ளார்.  'பத்ம ஸ்ரீ' மற்றும் தமிழக அரசின் 'கலைமாமணி' மற்றும் தேசிய விருது உட்பட பல விருதுகள் பெற்றுள்ளார். சினிமா ரசிகர்களால் 'ஆச்சி' என்று அழைக்கப்பட்டவர். கடைசியாக, 'சிங்கம் 2' படத்தில் நடித்திருந்தார். விரைவில் தயாரிக்கப்படும் 'சிங்கம் 3' படத்திலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார்.

Thursday, October 8, 2015

செய்திகள் 

தமிழகத்தில் 02/06/2013 அன்று நடந்த JTO இலாக்காத் தேர்வில் ST காலியிடங்களில்  7 தோழர்கள் வெற்றி பெற்றதாக  தமிழக நிர்வாகம் அறிவித்துள்ளது. வெற்றி பெற்ற தோழர்களுக்கு நமது வாழ்த்துக்கள்.
09/10/2015 முதல்  GPF நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

பதவி பெயர் மாற்றத்தில் அதன் குழுவின் பரிந்துரை  அமுல்படுத்தப்பட வேண்டும் என நமது மத்திய சங்கம் நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளது.
திறந்த நிலைப்பல்கலைக் கழகங்கள் மூலம் பெறப்பட்ட +2 படிப்பை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என நமது மத்திய சங்கம் நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளது.


JTO ஆளெடுப்பு விதிகளில் உரிய திருத்தங்கள் செய்யப்பட்டு விரைவில் உத்திரவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மதுரையில் சாதிச்சான்றிதழ் பிரச்சினையில் பணி நீக்கம் செய்யப்பட்ட தோழர்.அந்தோணிச்சாமி, SS அவர்களை மீண்டும் பணியில் அமர்த்த மத்திய சங்கமும் தமிழ் மாநில சங்கமும்  முயன்று வருகின்றன.

ஓய்வு பெற்ற தோழர்களுக்கு 78.2 சத IDA இணைப்பை அமுல்படுத்துவது சம்பந்தாகவும், தனி  TOWER CORPORATION அமைப்பது சம்பந்தமான பிரச்சினையில் அரசால் அமைக்கப்படும் அமைச்சர்கள் குழுவில் BSNL சார்பாக அதிகாரிகளை சேர்த்திடக் கோரியும்   DOT செயலரை நமது கூட்டமைப்புத்தலைவர்கள் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

TM பதவிகளில் ST  பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு நமது சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அடி மட்ட ஊழியர்களின் STAGNATION - ஆண்டு உயர்வுத்தொகை தேக்க நிலை  பற்றி விரைந்து முடிவெடுக்க நமது சங்கம் நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளது.
அக்டோபர் - 8
பாட்டளிகளின் கவிஞன் 
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் 
நினைவு நாள் 

மீன் வியாபாரி 
முறுக்கு வியாபாரி 
மாம்பழ வியாபாரி 
இட்லி வியாபாரி 
தேங்காய் வியாபாரி 
கீற்று வியாபாரி 
மாட்டு வியாபாரி 

எத்தனையோ வியாபாரம் செய்தான்...
இறுதியில்.. 
கவிதையை வியாபாரம் செய்யும் 
கலைத்துறையில் கால் பதித்தான்..

செய்யும் தொழிலே தெய்வம்... 
அதில் திறமைதான் நமது செல்வம்...
என்று பாடி காலத்தால் அழியாத 
கருத்துக்கள் சொன்னான் ...

பாட்டை ஆண்டவன்... 
பாட்டாளிகளின் ஆண்டவன்... 
பட்டுக்கோட்டை புகழ் பாடுவோம்....

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR