தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Tuesday, November 30, 2010

திட்டமிட்டபடி போராட்டத்தைத் துவக்கிடுவீர்!

     இன்று 30-11-2010 மாலை நடைபெற்ற பேச்சு வார்த்தையில் யாதொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை.   எனவே வேலை நிறுத்தத்தை  திட்டமிட்டபடி நடத்திடுவோம்.  டிசம்பர்  1, 2, 3 மூன்று நாட்களும்  போராட்டத்தை நாம் எழுச்சியோடு நடத்தினால் பழிவாங்கல் ஏதும் இருக்க வாய்ப்பில்லை. 

     நமது முழுமையான போர்க்குணம்தான் நிர்வாகத்தை புரிய வைக்கும். 
அன்புடன், S . சிவசிதம்பரம், மாநில துணைத் தலைவர், பட்டுக்கோட்டை.

ஒய்வு பெரும் தலைவர்களை வாழ்த்துகிறோம்!

     நமது மாநிலத் தலைவர் தோழர் S. தமிழ்மணி அவர்களும், மாநிலத் துணைத் தலைவர்  தோழர்  குடந்தை  ஜெயபால்  அவர்களும்  இன்று  ( 30-11-2010 ) அலுவலகப் பணியிலிருந்து ஒய்வு பெறுகிறார்கள்.   

     அலுவலகத்திலும், தொழிற்சங்கத்திலும்  நிறைவான பணியாற்றி ஒய்வு பெரும் தலைவர்களே உங்களை NFTE தஞ்சை மாவட்டச் சங்கம் வாழ்த்திப் பெருமை கொள்கிறது. 
 
     நெருக்கடியான காலகட்டங்களில் நம்மோடு இயைந்து வாழ்ந்தவர்கள்.   உழைத்துக் களைத்தவர்கள்.   வியக்கத்தக்க முன்னேற்றங்களை நமக்குப் பெற்றுத் தந்தவர்கள்.  பணி நிறைவுக்  காலம் அவர்களுக்கு ஓய்வைத் தரட்டும்.     

     நல்ல ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் அளவின்றி பெற்று சிறப்புடன்  வாழ  வாழ்த்துகிறோம்.  

                           அன்புடன், S. பிரின்ஸ், மாவட்டத் தலைவர், தஞ்சை. 

Sunday, November 28, 2010

செயற்குழுவில் செயலரின் உரையில் தெறித்தவை!

     பிப்ரவரி 1 ஆம் தேதி  தொழிற்சங்க அங்கீகாரத்திற்கான தேர்தல்.   
     இதில் NFTE ஏன் ஜெயிக்க வேண்டும்?   
     இது ஒரு தேடல்.  தேடல் நடைமுறை சார்ந்ததாக இருக்க வேண்டும்.
     தமிழ்நாட்டில் 98% வாக்குகள் கிடைத்திருக்கிறது.    ஒவ்வொரு தேர்தலிலும் 17000 வாக்காளர்கள் குறைகின்றனர்.     
நம்மை,  பொதுத்துறைக்கான விறுவிறுப்பும், அழுக்கும் இறுக்குகிறது!   15 சங்கங்கள் களத்தில்!    ரயிலின் எஞ்சின் ஆக யார் இருப்பது?   டிரைவர் ஆக யார் இருப்பது?  இணைக்கப்பட்டிருக்கும் வேகன் ஆக யார் தொடர்வது?   Post Poll Alliance ல் குப்தா அதைச் செய்தார். 
     BSNLEU தொடர்ந்து இருந்தால் தொழிற்சங்கங்களின் மீதே  அவ நம்பிக்கை உண்டாகும். 
     தொழிலாளிக்கு நம்பிக்கையைக் கொடுக்க வேண்டாமா?  டிசம்பருக்குள் NEPP Arrears வந்துவிடும்.   இதனால் போனஸ் வேதனையைத் தணித்துக் கொள்வார்கள்.
     Anamoly என்பதை அனைத்து கேடருக்கும் பொதுவாக்கி அலவன்ஸ் ஆக மாற்றியது EU.
     78.2 % DA  என்பதுக்குப்  பதில் 68.8 % வாங்கியதால் மாதா மாதம் ரூபாய் 1000 இழக்கிறோமே யாரால் தோழர்களே? 
     குருப் இன்சுரன்ஸ் திட்டத்தை மாற்றியமைத்ததால் ஊழியருக்கு   எவ்வளவு நஷ்டம்?
     Leave Encashment  தொகை ரூபாய் 4385  கோடியை Outsourcing க்கு விட்டது EU என்பதை எத்தனை பேர் நினைவில் வைத்துள்ளனர்?  இதனால் LIC க்கு வியாபாரம் கூடி விட்டதுதான் மிச்சம்.  

     BSNL நஷ்டமடையக் கூடிய துறையா!  அது செயற்கையாக  உருவாக்கப்பட்டிருக்கிறது! 
     75000 கோடி வரவு செலவு செய்யும் ரயில்வேக்கு 7000 கோடி தேய்மானம் என்று கணக்கு போடுகிறார்கள்.   ஆனால் 30000 கோடி வரவு செலவு செய்யும் BSNL க்கு 9000 கோடி தேய்மானம் என்று கணக்கு காண்பிக்கப்படுகிறது.     
     நிர்வாகச் செலவை விட ஊழியர்க்கான செலவு கூடுதல் என்றும்  சொல்லப்படுகிறது. 
     Rural Telephone Service ஆல் ஏற்படும் நஷ்டத்திற்கு ஊழியரா காரணம்?   

     PENSION க் காத்திடவும், துறையின் நிதியாதாரத்தைக் காத்திடவும், ஊழியர் நலனைக் காத்திடவும்  NFTE  ஜெயிக்க வேண்டும்?   

     ( 24-11-2010 அன்று ஈரோட்டில் நடைபெற்ற தமிழ் மாநில செயற்குழுவில் மாநிலச் செயலர் பட்டாபி ஆற்றிய உரையிலிருந்து சில).
                                தொகுப்பு: S . சிவசிதம்பரம், பட்டுக்கோட்டை.
    
    

மாலி துவக்கி வைத்த மாநிலச் செயற்குழு!

     ( 24-11-2010  அன்று ஈரோட்டில் நடைபெற்ற மாநிலச் செயற்குழுவில் தோழர் மாலி ஆற்றிய துவக்க உரையின்  ஒரு பகுதி. )

ஒற்றுமையும், போர்க்குணமும் மிக்க நமது NFPTE க்கு இன்று பிறந்த நாள்.  அனைவருக்கும் சம்மேளன தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.  கிளைச் சங்கங்கள்  ஒவ்வொரு தொழிலாளியையும் சந்திக்க வேண்டும்.   TTA க்கள் அனைவரையும் சந்திக்க வேண்டும்.  அவர்கள்தான் கடும் பாதிப்புக்கு உள்ளானவர்கள்.
நமது மாநிலச் சங்கக் கட்டிடம் ' ஜெகன் நினைவகம் ' பட்டாபி காலத்தில் திறக்கப்படவுள்ளது மகிழ்ச்சியைத் தருகிறது.   எமது ஈரோடு பகுதி தந்தை பெரியார் பிறந்த மண்.   மத, இன, சாதீய உணர்வு மேலோங்காத பகுதி.  இங்குள்ள கருங்கல்பாளையத்தில்தான்  மகா கவியின் கடைசிச் சொற்பொழிவு நடைபெற்றது.  முதல் நாள் ' மனிதனுக்கு மரணமில்லை ' என்ற தலைப்பில்.   இரண்டாம் நாள் இந்தியாவின் எதிர்காலம் என்ற தலைப்பில்.   அதைப்போல் நமது எதிர்காலம், துறையின் எதிர்காலம் குறித்த திட்டமிடலுக்காக கூடியிருக்கும் உங்களை நான் வாழ்த்துகிறேன்.  இந்த மண்ணில் நடைபெறும் மாநிலச் செயற்குழு இம் முறை மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.  ஏனெனில் ஏற்கெனவே தேர்தலில் வென்று வெற்றி விழாவினை இங்குதான் நடத்தியிருக்கிறோம். 
     அங்கீகாரத்தை வென்றெடுக்க, வாக்குகளைச் சேகரிக்க நீங்கள் என்ன திட்டம் வைத்திருகிறீர்கள்?    மாநிலச் சங்கத்திடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?  வாருங்கள்! எல்லாவற்றையும் வெளிப்படையாகப் பேசுவோம்!  
     ஒவ்வொரு      SC, ST தோழர்களையும்  சந்தித்து அவர்களுக்கு சமீபத்தில் இழைக்கப்பட்ட அநீதிகளை எடுத்துச் சொல்லி மாற்றத்துக்கு உதவுங்கள் என்று கேட்க வேண்டும். 
     முயல் ஜெயித்துவிடும்.  சில நேரங்களில் ஆமையும் ஜெயித்து விடும்.  ஆனால் முயலாமை ஒருபோதும் ஜெயிக்காது.  
     நம்பிக்கையும், கூட்டு  முயற்சியும்தான் வெற்றியைத்  தரும் என்று கூடி உங்களை வாழ்த்தி முடிக்கிறேன்.  
                                                                           தொகுப்பு: S. சிவசிதம்பரம், பட்டுக்கோட்டை.

Tuesday, November 23, 2010

ஒன்பது சங்கங்கள் ஒன்றுபட்ட நாள் - 24-11-1954


சம்மேளன  தினம் 
        NFPTE சம்மேளனம் நவம்பர் 24, 1954 அன்று  கூடிய   பெடரல் கவுன்சிலில் பாபு ஜெகஜீவன்ராம் அவர்களால் துவங்கப்பட்டது. 25 ஆம் தேதியும் Fedaral Council தொடர்ந்தது.   கடுமையான விவாதம்.   தோழர் K. ராமமூர்த்தி - தாதாகோஷ் போட்டி. 45  வாக்குகள் வித்தியாசத்தில் தாதாகோஷ் வெற்றி பெற்றார்.  S.A. டாங்கே அவர்கள் தலையீட்டில் S.V.G. டால்வி அவர்கள் போட்டியின்றி   தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  
     சக்திமிக்க ஒற்றுமைச் சின்னமாக NFPTE பிறந்தது. அன்றைக்கு தோழர் குப்தா AITEEU CLASS III மற்றும் AIRMSEU CLASS III சங்கத்துக்கு அகில இந்திய செயலர்.   
     தொழிலாளர் இயக்க வரலாற்றில் இது ஒற்றுமைச் சின்னமாகப் பார்க்கப்பட்டது.  அப்போதைய காங்கிரஸ் அரசாங்கம் இதை உடைத்திட முயலவில்லை என்பதோடு எந்த ஒரு புதிய சங்கத்திற்கும் அங்கீகாரம் வழங்கிடாமல் இருந்தது.    

     9 சங்கங்களை ஒன்றிணைத்து சம்மேளனத்தை உருவாக்கி மிகப் பெரிய சக்தியாக விளங்கியது NFPTE.   அடைந்த  சாதனைகளை அளவிட முடியாது. 
   அப்பேர்ப்பட்ட சங்கத்தை உடைத்து வெளியேறிய சங்கம் BSNLEU இன்று கையறு நிலையில் உள்ளது.  
     தொலைத் தொடர்புத் துறையில் இது மாதிரி ஒரு சங்கம் அங்கீகாரத்தில் இருந்து கொண்டு அனைவரையும் அலைக்கழித்தது போதும்.  
     இயலாதவர்கள் வெளியேற வேண்டும்.  இன்றேல் வெளியேற்றப்பட வேண்டும். 
  சம்மேளன தினத்தை கொடியேற்றி கொண்டாடுங்கள்.   NFPTE ன் தியாகத்தை,  செயல்திறத்தை எடுத்துச் சொல்லுங்கள். 
                            S. சிவசிதம்பரம். பட்டுக்கோட்டை.

Saturday, November 20, 2010

தமிழ் மாநில செயற்குழு

     ஈரோட்டில் நவம்பர் 24 அன்று நமது தமிழ் மாநில செயற்குழு கூடுகிறது.
                                    பொருளாய்வு
ஜலந்தர் முடிவுகள்    -   தொழிற்சங்க தேர்தல்   - 
கோர் கமிட்டி வழிகாட்டல்   -   கட்டிட நிதி -- திறப்பு விழா
தலைவர்கள் பணி ஒய்வு விழா  -  தல மட்ட நிலைமைகள்
இதர ஊழியர் பிரச்சினைகள்

தோழர் தமிழ்மணி தலைமை தாங்குகிறார்
அகில இந்திய பொறுப்பாளர்கள் G. ஜெயராமன் மற்றும்
S.S. கோபாலகிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரை
ஆற்றுகிறார்கள்.
மாநிலச் செயலர் பட்டாபி அவர்கள் தொகுத்து செயலாக்கம் தருகிறார். 




Friday, November 19, 2010

Monday, November 15, 2010

மாவட்டத்தின் தலைமை இன்று மறைந்தது!


     தஞ்சை மாவட்டத்தின் தன்னேரில்லா தலைவனாக மிளிர்ந்த நமது மாவட்டச் செயலர்  தோழர் கேசவன் இன்று 15-11-2010 மாலை 6 மணிக்கு நம்மை விட்டுப் பிரிந்து விட்டார்.   அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்துக்கு எப்படி ஆறுதல் சொல்லப் போகிறோம்.   புரியவில்லை. நம்மாலேயே தாங்க முடியவில்லையே, அவர் குடும்பம் இந்த இழப்பைத் தாங்கிக் கொள்ள முடியுமா.  யாராலும் ஈடு செய்ய முடியா இழப்பு.  

     மாவட்டச் செயலராய் கடந்த   19-06-2010 ஆம் தேதிதான் பொறுப்பேற்றார்.    5 மாதங்கள் கூட இன்னும் நிறைவடையவில்லை.    பொறுப்பேற்ற  இந்த குறுகிய காலத்திலேயே வியக்கத்தக்க சாதனைகளைப் புரிந்தார்.  தீர்க்கப்பெற்ற பிரச்சினைகள் ஏராளம். கட்டிய இயக்கங்கள் ஏராளம்.  பொது மேலாளரை சந்திக்காத நாளில்லை எனலாம்.   இந்த இணையதளம் கூறும் அவரின் செயலாற்றலை. 

     தோழனே ஏன் பிரிந்தாய்  எங்களை விட்டு.   எங்களுக்கு என்ன செய்தியை விட்டுச் செல்கிறாய்!  எங்களின் ஊனோடும், உயிரோடும் கலந்த உன்னைப் பிரிந்து எப்படி வாழப் போகிறோம்? 

     எப்படியோ என் தலைவன் இறந்த செய்தியைச் சொல்லிவிட்டேன்!

                                                 சிவசிதம்பரம். பட்டுக்கோட்டை.
     

Friday, November 12, 2010

R.K. கோஹ்லி, அகில இந்திய அமைப்பு செயலர் விலகல்.

     நமது அகில இந்திய அமைப்புச் செயலர் தோழர் R.K. கோஹ்லி, NFTE -ல் இருந்து விலகி தனியாக ஒரு சங்கத்தைத் துவங்கி BSNLEU வுடன் கூட்டு வைத்துள்ளார்.

     இந் நடவடிக்கையைத் தொடர்ந்து பொதுச் செயலர் G. சிங், அவர்கள் அவரை சங்கத்திலிருந்து நீக்கி விட்டார். 

     இது மாதிரி சில வெற்றுப் புரட்சிகள் தோன்றத்தான் செய்யும்.  இதைக் கொண்டு சாதிக்கத் தெரியாதவர்கள், தோல்வியைத் தோழனுக்கு விட்டுச் சென்றவர்கள் வேண்டுமானால் மகிழ்ந்து கொள்ளலாம்.    நாம் அதைக் கவனத்தில் கொள்ள வேண்டியதில்லை.  துறைக்காக, தொழிலாளிக்காக கடமையாற்றுவதில் கவனமாய் இருப்போம். 
     
இதுவும் கடந்து போகும். 

- S. சிவசிதம்பரம், பட்டுக்கோட்டை. 

Thursday, November 11, 2010

தேர்தல் நடைமுறைகள் அறிவிப்பு....

அதிகாரப் பூர்வ சங்க அங்கீகாரத் தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளது.   15  தொழிற்சங்கங்கள் களத்தில் உள்ளது.   
     * 15-11-2010 க்குள் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் அனைத்து மட்டத்திற்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. 
     * 22-11-2010 க்குள் திருத்தங்கள் அல்லது மாற்றங்கள் அளித்திட வேண்டும்.
     * 29-11-2010 க்குள் திருத்தப்பட்ட  வாக்காளர் பட்டியல் நிர்வாகத்தால்    அறிவிக்கப்படும். 
     * 06-12-2010 க்குள் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் அறிவிக்கப்பட்ட  பட்டியலில் மறுப்பு இருந்தால் தெரிவித்திட வேண்டும். 
     * 13-12-2010 க்குள் அதிகாரப் பூர்வ இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.

எந்த  முறையில் தேர்தல் வரினும் எதிர்கொள்வோம். 
                         அன்புடன், 
G. கேசவன், மாவட்டச் செயலர், தஞ்சாவூர். 


    

Monday, November 8, 2010

BSNLEU படுத்தும் பாடு......

      S.சிவசிதம்பரம், பட்டுக்கோட்டை.
     BSNLEU சங்கம்  நமது துறையை, அதில் பணிபுரியும் ஊழியர்களை அங்கீகாரம் என்ற ஒரு கருவியை வைத்துக்கொண்டு  படுத்தும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல.   அதை நாம் நல்வழிப்படுத்த முடியுமா, அக்கறைப்படுத்தவியலுமா அல்லது குறைந்த பட்ச ஒற்றுமையையாவது   கட்ட முடியுமா  என்று சிந்தித்துப் பார்க்கும்போது, அது எவ்வளவு சிரமம் என்பது அதனுடைய சமீபகால நடவடிக்கைகளிலிருந்து  நமக்குப் புரிகிறது. ஆனாலும்  அதை   சிரமம் என்று நாம்  ஒதுக்கிவிட  முடியாது.   
     நம்பிக்கையோடு சென்ற பல தோழர்கள் இன்னும் அங்கே இருக்கிறார்கள். அவர்களின் நம்பிக்கை சிதைந்து போயிருந்த போதிலும் கூட, நம்முடன் மீண்டும் அவர்கள் இணைவதற்கு எது தடையாகவிருக்கிறது என்பதை யோசிக்கும்போது BSNLEU சங்கம் செய்திருக்கும் காரியங்களில் தவறானவையாக உள்ளவை என்று நான் கருதுவதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.  அது சரியா தவறா என்று எடைபோட்டுப் பார்ப்பதும் முடிவெடுப்பதும் உங்கள் பொறுப்பு.     
1. ஆண்டு ஒன்றுக்கு 10000 கோடிக்கு மேலே லாபம் ஈட்டிய நமது துறை இன்றைக்கு லாபம் அறவே இல்லை என்ற நிலை மாறி நஷ்டம் என்றாகிவிட்டது. 
2. பல ஆண்டுகள் கையிருப்பில் வங்கியில் வைத்திருந்த தொகை ருபாய் 40000 கோடி இன்றைக்கு கொஞ்சம், கொஞ்சமாக கரைந்து முடிவில் இல்லை என்றாகிவிட்டது.  
3.  அரசாங்கத்தின் தனியார் மோகம் காரணமாக தனியார் செல் நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கில் தள்ளுபடி ஒரு புறம்.   BSNL  -க்கு கூடுதல் வருவாய் வந்து கொண்டிருந்த ADC கட்டணம் போன்றவற்றை அரசே ரத்து செய்தது மறுபுறம். 
4.நாடு முழுதும் சம்பள மாற்றம் நடந்து முடிந்து, நமது பகுதியில் அதிகாரிகளும் பெற்று இறுதியில் நாம் கொடுத்ததைப் பெற்றுக்கொண்ட நிலை வந்ததற்கும், கோரிப் பெறாததற்கும் யார் காரணம்.?
5. அதிகாரிகள் பெற்ற மாதிரி நான்கு கட்ட பதவி உயர்வினை  ஏன் நம்மால் பெற முடியவில்லை? 
6. லட்ச ரூபாய்க்கு மேலே செலவானாலும் அத் தொகையினை MRS திட்டம் மூலம் வெகு சுலபமாகப் பெற்று வந்தோமே அது இப்போது பெற முடியாமல் தவிப்பது ஏன்? 
7. 15 நாள் சம்பளத்தை போனசாக பெறத் துவங்கி 75 நாள் சம்பளம் வரை முன்னேறிச் சென்றோமே,  அது இன்றைக்கு எட்டாக்கனியாய்  மாறியிருப்பது ஏன்? 
8. 2G ஏல முறைகேட்டில்  லட்சம் கோடிக்கு மேல் ஊழல்  நடைபெற்றிருப்பது தெரிந்தும் நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லையே ஏன்? BSNL  -ன் நிதிச் சுமையை கருத்தில் கொள்ளாமல் 3G ஏலத் தொகையை 18500 கோடிக்கு மேல் நிர்வாகம் BSNL மீது  சுமத்தியதே அதையும்  ஏன் நம்மால் தடுக்க முடியவில்லை?  
9.    BSNLEU சங்கம் அன்று தொடங்கி இன்று வரை ஒரே காரியத்தில் மட்டுமே கவனமாக உள்ளது. அது உறுப்பினர் சேர்க்கை என்ற ஒற்றை வேலைதான். 
     இதற்காக அது என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்க தயாராக இருக்கிறது.  
  1. சங்கங்களை ஒன்றுபடுத்த மறுப்பது.
  2. சங்கங்களுடன் இணைந்து இயக்கம் கட்ட                மறுப்பது.     
  3. மேலாண்மைத் தன்மையில் மிதப்பது. 
  4. உறுப்பினர் என்ன தவறு செய்தாலும் அதை  
      மன்னிப்பது.  
  5. சட்ட நுணுக்கங்களை கற்றுத் தெளிவது 
      இல்லை.    
  6. வாதாடிப் போராடும் வல்லமையை வளர்த்துக்        கொள்வதில்லை.  
  7. குறிப்பாக ஆர்ப்பாட்ட அறிவிப்பைத் தவிர   
      வேறு போராட்டங்களை அறிவிப்பதில்லை. 
  8. காலப்போக்கில் ஏற்படும் மாற்றங்களுக்கேற்ப  
      தம்மை தகவமைத்துக் கொள்வதுமில்லை. 

     இப்படிச்  சொல்லிக் கொண்டே போகலாம்.
  ஊழியர்களை மடை மாற்றம் 
செய்தாக வேண்டும்.  
புதிதாய்ச் சிந்திக்க வைக்க வேண்டும். 

சிந்தித்ததைச் சொல்வது  மட்டுமல்ல கல்வி 
சிந்திக்க வைப்பதுதான் சிறந்த கல்வி.
       

நீயா?  நானா?     விரிசல் வளர்க்கும்.
நீயும் - நானும்    பிரியம் வளர்க்கும்.


Sunday, November 7, 2010

மஸ்தூர் தோழர்களுக்கு போனஸ்!

     நமது தஞ்சை மாவட்டத்தில் Cable Contract ல் பணியாற்றும் தோழர்களுக்கு ரூபாய் 2000/- போனசாக பெற்றுத் தந்திருக்கிறோம்.   House Keeping ல் பணியாற்றும் தோழர்களுக்கு ரூபாய் 1500/- ஐ  போனசாக பெற்றுத் தந்திருக்கிறோம். இவையெல்லாமே தீபாவளிக்கு முன்பாகவே பெற்றுத் தரப்பட்டது.     போனஸ் பேச்சு வார்த்தையில் பெரிதும் ஒத்துழைத்த நமது தஞ்சை போது மேலாளர் Raja reddy அவர்களுக்கும், ஒப்பந்ததாரருக்கும், தமிழ் மாநில துணைச் செயலர் நடராஜன் அவர்களுக்கும், மாவட்டச் செயலர் தோழர் கிள்ளி, மாவட்டத் தலைவர் கலைச்செல்வன்,  மாவட்டப் பொருளாளர் சிவசிதம்பரம், NFTE மாவட்டத் தலைவர் பிரின்ஸ்,  மற்றும் DGM அய்யர் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்! 

    மறைந்த மாமனிதன் ஜெகனை நினைவில் நிறுத்தி செயலாற்றும் தோழர்களே! உங்களின் பாதம் தொட்டு வணங்குகிறேன்!  இதுதான்  வர்க்கக்கடமை!  இருப்பதையும் இழந்தால் அது வர்க்கக் கொடுமை.  

   லட்சக்கணக்கான மஸ்தூர் தோழர்களுக்கு RM என்ற புது பெயரிட்டு இலாக்காவில் உள் நுழைத்தாயே தலைவா!  மடியும் வரை மறப்போமா உம்மை!   உமது ஆசி எமக்கு இருக்கும் வரை எமது மாவட்டத்துக்கு  எக்   குறையும் இல்லை!   
   
  எழுச்சியோடு தொடர்வோம் பயணத்தை! 

அன்புடன்,
G . கேசவன், மாவட்டச் செயலர், தஞ்சை. 

Friday, November 5, 2010

நெஞ்சுரத்தை அளித்த தீபாவளி!

போனஸ் என்ற ஒன்று  - இன்று 
இல்லை என்று இருந்த துறைக்கு 

இருக்குடா உனக்கு போனஸ் 
என்று சொல்லி வாங்கித் தந்தான்.


துவங்கும்போது குறைவுதான் - அது
தூண்டத் தூண்ட வளரும் என்றான். 

என்னத்தைக் கிழிச்சீங்க! - ஏறித் 
தாவிப் பாய வேணாம்!! - சீறினான் ஓர்  தலைவன்.

பேரியக்கப் பங்காளியே   - சிறுபிள்ளைத்தனம்   கூடாது.  
நிதானமாய் இருப்பாயப்பா! நிறைய உனக்குப் பெற்றுத்  தருவேன்!


யாரைப்பார்த்து என்ன வார்த்தை! உலகுக்கே தத்துவத்தை 
உணர்த்தும் வல்லமை படைத்தவர்கள்  நாங்கள். 

நாங்கள் உம்மை நகற்றி வைத்து -நகர்வலம் 
வரப்போகின்றோம் - நாளும் குறித்தாயிற்று என்றான். 

கற்றுத் தெளிவது நல்லது தோழா!  - சிலநேரம் 
அனுபவத் தெளிவு  அழிவையும் கொடுக்கும் !

எங்களின் வேகத்தின் முன் நில்லாது உங்கள் விவேகம் - சற்றே 
ஒதுங்கி நில்லும், இன்றேல் சாமர்த்தியத்தால் உமை வெல்வோம். 

காலமும்  கடந்து, கையில் இருந்ததும்  கரைந்து,
வளர்ந்த நிறுவனம் இன்று விழி பிதுங்கி!


அன்று வளர்ந்ததும், இன்று வீழ்ந்ததும்  யாராலே?
தாத்தன் கேட்கிறான்? பதில் சொல்ல  முடியுமா!

அவ்வளவு சீக்கிரம் அடங்குபவர்களா இவர்கள்!
காவு கொடுக்க இன்னும் எவ்வளவோ இருக்கையில்!  


பெங்களூரில் 207 இணைப்பு, வெள்ளூரில் FNTO கலைப்பு
என்ற பழைய உத்திகள் இன்று செல்லாது. 

உமது புரட்சி வேஷம் அம்பலமாகிறது..  -  துறையைக் 
கொள்ளையடித்தவரோடு  தொடர்ந்து

எந்த வரலாற்றிலும் புரட்சிக்காரன் பூச்சான்டியோடு 
சேர்ந்து புரட்சி செய்ததாய் வரலாறில்லை !


அங்கீகார போதை அவர்களை அலைக்கழிக்கிறது! 
புதிய பயிற்சியை கையிலெடுப்போம். 


புதிய சகாப்தம் படைப்போம். 

வரும் ஆண்டு வளமாய் மாறும் !   போனசில் மட்டுமல்ல!!!


யாவற்றிலும் முன்னேறுவோம் தோழர்களே!

தீபாவளியை ஜாலியாய்  கொண்டாடுங்க! நாளை சந்திப்போம்!
                                         அன்புடன், S . சிவசிதம்பரம், பட்டுக்கோட்டை.

Thursday, November 4, 2010

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR