தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Sunday, September 25, 2011

ஆர்ப்பாட்டம்

     நமது அகில இந்திய சங்கம் வருகிற 27 - ௦09 - 11 அன்று அனைத்து மட்டங்களிலும் கருப்பு பேட்ஜ் அணிந்து  ஆர்ப்பாட்டம் செய்ய அறைகூவல் விடுத்துள்ளது. 

கோரிக்கைகள் 

     VRS கூடாது.

     MRS நிறுத்தப்படக்கூடாது.

     LTC க்கான லீவ் என்கேஷ்மென்ட் மீண்டும் வழங்கப்பட வேண்டும்.

     நிறுத்தப்பட்ட LTC மீண்டும் தொடர வேண்டும். 

      குறைந்தபட்ச போனஸ் வழங்கப்பட வேண்டும்.  

     கிளைச் செயலர்கள் ஆர்ப்பாட்டத்தினை வெற்றிகமாக்கிட அன்புடன் வேண்டுகிறேன். 

தோழமையுடன்,
T . பன்னீர்செல்வம்,
தஞ்சை மாவட்டச் செயலர்.                       
 25 - 09 - 11 .

Friday, September 23, 2011

அஞ்சலி!

      நமது அகில இந்திய துணைப் பொதுச் செயலாளர் தோழர் C.K.மதிவாணன் அவர்களின் தந்தையாரும் சுதந்திரப் போராட்ட தியாகியுமான திரு. C. H . கிருஷ்ணன் அவர்கள் 22 - 09 - 2011  அன்று இறந்து விட்டார்கள் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.  

      தமது அஞ்சலியினை தஞ்சை மாவட்டச் சங்கம் உரித்தாக்குகிறது.

Monday, September 19, 2011

மன்னார்குடி கிளை மாநாடு

      மன்னார்குடி  கிளை மாநாடு  நாளை 20 - 09 - 2011 மாலை 3  மணிக்கு நடைபெறவிருக்கிறது.      

மாநிலச் செயலர் பட்டாபி பங்கேற்கிறார்.     

     VRS குறித்த வளமையான செய்திகள்,

     துறை குறித்த புதிய தகவல்கள்,  

    கோவை மத்திய செயற்குழுவைப் பற்றிய செய்திகள்,    நமது எதிர்பார்ப்புகள், கவலைகள், பொறுப்புகள், கடமைகள் குறித்து மாநிலத் தலைமையுடன் முறையாக, தெளிவாக விவாதிக்க,  கருத்துரை  கேட்டிட திரளாய் வாருங்கள் தோழர்களே!

Sunday, September 18, 2011

செப்-19 தியாகிகள் தினம்

தியாகத்தை நினைவு கூர்வோம்.....
  ( S. சிவசிதம்பரம் )
யாகிகள் தினம்   -    செப்டம்பர் 19
     தபால் தந்தி, ரயில்வே, பாதுகாப்பு பிரிவு ஊழியர்கள் இணைந்து 1968, SEP  19  அன்று நடத்திய ஒரு நாள் வேலை நிறுத்தம்தான் தியாகிகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.  
வரலாற்றுச் சிறப்புமிக்க இவ் வேலை நிறுத்தத்தின் கோரிக்கைகள்: 
   * தேவைக்கேற்ற குறைந்தபட்ச ஊதியம்  அளித்திட வேண்டும்.
   * கிராக்கிப்படியை சம்பளத்துடன் இணைத்திட வேண்டும்.
   * DA FORMULA வினை மாற்றி அமைக்க வேண்டும்.
     இதை அறிவித்து வேலை நிறுத்தம் துவங்குவதற்கு முன்னமேயே தலைவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையை மத்திய அரசு துவக்கி விட்டது.   பாண்டிச்சேரியில் செப் 17 அன்று கைது துவங்கியது.    பொதுச் செயலர் D. ஞானையா செப் 18 காலையில் கைது செய்யப்பட்டார்.      ஞானையா
கைது செய்தி கேள்விப்பட்டவுடன் டெல்லியில் உள்ள அனைத்து P & T  அலுவலக  ஊழியர்கள் WALKED OUT  செய்தனர்.   டெல்லியில் உள்ள அனைத்து P & T நிர்வாக பகுதிகளில் 18 ம தேதி காலை 11  மணிக்கே வேலை நிறுத்தம் துவங்கி விட்டது. 
     டெல்லியில் மட்டும் 1650  P & T ஊழியர்களும் 350 மற்ற பிரிவு ஊழியர்களும் கைது ஆனார்கள். P & T தோழர்கள் 4000 பேர் உள்ளிட்ட   10000 பேர் கைது செய்யப்பட்டனர். 
     வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற 280000  பேரில் பாதி தோழர்கள் நாம்தான்.   140000 ஊழியர்கள்.   கைதானதிலும் 40 %  நாம்தான். 
     8700 பேர் சஸ்பென்ட் செய்யப்பட்டனர். இதில் P & T தோழர்கள் 3756 பேர்.   44000 தற்காலிக ஊழியர்களை Termination  செய்ய நோட்டிஸ் கொடுக்கப்பட்டது. 
   எந்த ஒரு ஜனநாயக நாட்டிலும் இது போன்ற கடுமையான பழிவாங்கல் நடவடிக்கை ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் நடைபெற்றதில்லை. 
     மேற்கு வங்கம், அஸ்ஸாம், கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான், பீகார் ஆந்திரா, டெல்லி ஆகிய இடங்களில் வேலைநிறுத்தம் தீவிரப்பட்டது. 
     மத்திய பிரதேசம், ஒரிசா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய பகுதிகளில் பரவலாக நடைபெற்றது. 
     கர்நாடகா, குஜராத், ஜம்மு காஷ்மீர் போன்ற மாநிலங்களில் மட்டும் அவ்வளவான பங்களிப்பு இல்லை. 
     பிகானிர், பதான்கோட், மரியாணி, பொங்கைகான் ஆகியவிடங்களில் காவல் துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு 9  ரயில்வே தொழிலாளிகள் பலியானார்கள்.   பல இடங்களில் கண்ணீர்ப் புகைக் குண்டுகளும் வீசப்பட்டன.       கூட்டு நடவடிக்கைக் குழு அரசிடம் பழிவாங்கலைக் கைவிடக்கோரியும் அசையாததால் விதிப் படி வேலை போராட்டத்தை துவங்கியது. 
     விதிப்படி வேலை ( work to rule ) போராட்டத்தை நாடுமுழுதும் பெரிய அளவில் செய்திட வேண்டி திகார் ஜெயிலிலிருந்து பொதுச் செயலாளர் ஞானையா கடிதம் எழுதினார்.  இக் கடிதம்   ஜெயிலிலிருந்து கடத்தப்பட்டு அனைத்துக் கிளைகளுக்கும் பரப்பப்பட்டது.   கடிதத்தில்,  
    அரசின் பாசிச போக்கிற்கு, பழிவாங்கலுக்கு எதிரான போராட்டத்தை மன உறுதியுடன் நாம் எடுத்துச் செல்வோம்.   அரசு ஊழியர்க்கெதிரான நடவடிக்கைகளை வாபஸ் பெரும் வரை விதிப்படி வேலை போராட்டத்தோடு மட்டுமல்லாது மற்ற மற்ற உபாயங்களையும் மன உறுதியோடு, போர்க்குணத்தோடு செயல்படுத்துங்கள் தோழர்களே. தபால் தந்தி சேவையின்  இயல்பு வாழ்க்கையை நிலைகுலைய வையுங்கள். நம்மை யாரும் அச்சுறுத்தி பணிய வைக்க முடியாது.  நமது வெற்றியை நோக்கி முன்னேற கடுமையான போராட்டத்திற்கு தயாராகுங்கள். 
     பாதிக்கப்பட்ட தோழர்களுக்கு நிவாரண நிதி திரட்டுங்கள்.  எல்லா வழிகளிலும் முயற்சி செய்து பெருமளவிலான  நிதி திரட்டுவதற்கு ஆயத்தமாகுங்கள்  தோழர்களே.  O T  WORK பார்க்கவிடாதீர்கள்.   உள்ளே, வெளியே மற்றும் வாய்ப்பு உள்ள இடங்களில் எல்லாம் ஆர்ப்பாட்டம் செய்யுங்கள் என்று 21 ம தேதி கடிதம் எழுதினார்.
     
     இந்த எழுச்சிமிக்க போராட்டம் தொழிற்சங்கங்களை எல்லாம் ஒன்று படுத்த உதவியது.  தொழிலாளர் சக்தியை அரசும் உணரத் துவங்கியது.
எதிர்காலப் போராட்டங்களுக்கு உந்து சக்தியாக விளங்கிய செப் 19 போராட்ட தியாகிகளுக்கு நமது வீர வணக்கத்தை உரித்தாக்குவோம்.

                                     நன்றி: D. GNANAIYA s  GLIMPSES OF A UNIQUE UNION

Thursday, September 8, 2011

என்ன கொடுமைடா சாமி !

     என்ன  கொடுமைடா  சாமி !

         நாம 30 வருஷத்துக்கு முன்னாடி போராடிப் பெற்ற போனசு போன வருஷம் நின்னு போச்சு. 

         நம்ம குப்தாவால கெடச்ச MRS , அதுவும் 8 வருஷமா வாங்கிக்கிட்டிருந்த MRS நிறுத்தியாச்சு.

         LTC போகும்போது நம்ம லீவ வித்து அத காசாக்கிப் பாத்தோமே, அட ஒரு வருஷம்தான் ஆச்சு. அதையும்   எல்லோரும் ஒரு தடவதானையா வாங்கினோம்! அதுக்கும் ஆப்பா!

         நம்ம காலத்துல, இது மாதிரி ஒரு அறிவிப்பு , சங்கத்தைக் கலக்காம வந்திருக்குமா!    வந்திருந்தா இப்படி வேடிக்கை பார்த்திருப்போமா!  பங்காளிதான் உட்ருப்பானா!

     என்ன கால கெரகம்டா!   அப்புறம் எதுக்குய்யா ரெக்ககனைஷன் சங்கம் வேணும்னு கொண்டு வர்றாங்க!    

     அவுங்கள கொற சொல்லக்கூடாது.  நம்மளத்தான் நொந்துக்கனும்!  NFTE ய விட சூப்பரா ஒரு சங்கம் கெடச்சா நல்லாருக்குமேன்னு நெனச்சு, இருக்குறத விட்டுட்டு பறக்கறதுக்கு ஆசைப்பட்டோம்.   சூப்பரு போய் டூப்பரு கெடச்சதுதான் மிச்சம்.    

     மூணு மாசத்துக்கு முந்தியே BSNLEU வோட JCM ல நம்ம CMD சொன்னாராம், செல வெட்டுக்கள்லாம் வரும்னு.   நம்மாளு மூணு மாசமா வாடிக்கையாளரை மகிழ்விக்கிற வேலையில ரொம்ப பிசியா இருந்ததுனால இதுல கவனம் செலுத்த முடியல போலருக்கு.  

     பாவம், அதுவும்தான் என்ன செய்யும்.   ஆனா ஒன்னு செஞ்சிருச்சு.  வழக்கம்போல ஆர்ப்பாட்ட சடங்க இன்னைக்கி நடத்திருச்சி. 

   என்ன? செய்யனும்னு நாம நெனைக்கிறோம்!   

     எல்லா சங்கத்தையும் அழைச்சுப் பேசணும், கூச்சநாச்சம் பாக்காம, கவுரவம் பாக்காம எல்லாரோட கருத்துக்களையும் கேக்கணும்.  குறிப்பா தொழிலாளி நெருக்கடி வந்தா ஒன்னாயிருவாங்கரதை நிர்வாகத்துக்கு ஒனர்த்தணும்.   

     ஆர்ப்பாட்டத்துல கூட JAC யை இணைக்க முடியாதவங்களா இதச் செய்யப் போறாங்கன்னு நீங்க நெனைக்கிறது எனக்குப் புரியுது.  

     ஆனாலும் வேறு வழியில்லை.    

       நின்னுபோச்சு, நிறுத்தியாச்சு, போச்சுங்கிற நெலைமை போயி,

     போயே! போச்சுங்கற  நெலமை  வரக்கூடாதுல்ல!  

தோழமையுடன்,
எஸ். சிவசிதம்பரம்,
மாநில துணைத் தலைவர்,
பட்டுக்கோட்டை. 

Thursday, September 1, 2011

இளமை ததும்பிய மாநாடு.

இளமை ததும்பிய இளைஞர் மாநாடு.
     காரைக்குடியிலே 20 - 08 - 2011 அன்று மிகச் சிறப்பாக இளைஞர் மாநாடு நடைபெற்றது. 
     மாநிலச் செயலர் பட்டாபியின் சிந்தனையை, காரைக்குடி மாவட்டத் தோழர்கள்,  மாவட்டச் செயலர் தோழர் மாரியின் தலைமையில்  செயலாக்கம் செய்து தந்தனர்.    இந்த காலத்தில், இந்தத் துறையில், இப்போதிருக்கும் நிலைமையில்,  இப்படி ஒரு இளைஞர் மாநாடா!!    வியக்கத்தான் வைத்தது. 
     இளைஞிகள் தேசியக் கொடியையும், சங்கக் கொடியையும் ஏற்றி வைக்கும்பொழுது, இளைய தோழர் ஒருவர் அற்புதமாக கோஷமிட்டார்.        நல்ல கவிதையும், பாரதி பாடலும் துவக்கத்தில் கிடைத்தது.  
     மாநிலச் செயலரின் துவக்க உரை கருத்தாழத்துடன் அமைந்திருந்தது. 
தமது உரையிலே .........
     பாரதி,  பகத்சிங், விவேகானந்தர் பிறந்த நாள் விழாக்களில் இளைஞர்களின் பங்கேற்பு அவசியம்.  அதோடு  தாரபாதா சிந்தனைகளை, தொழிற்சங்க வரலாற்றை  இளைஞர்கள் முறையாக உள்வாங்கிக் கொள்ளவேண்டும்.            
  இளைஞர்களைப்  புனரமைக்கும் "மறுசீரமைப்பை" கொண்டு வந்தவர் தோழர் குப்தா. அதேபோல் மஸ்தூர் - RTP க்கள் நிரந்தரம் என்ற விடுதலைப் போருக்கு ஆதாரமாக நின்றதோடு, பயனுறவும் வாழ்ந்தவர்  தோழர் ஜெகன்.  
     ஜெகனைத் தொடர்ந்து வந்த தலைவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாணியைக் கைக்கொண்டிருந்தனர்.   முத்தியாலு என்றால் கவித்துவ பாணி,  RK என்றால்  எழுச்சி, நியாய ஆவேசம், போர்க்குணம். அதேபோல் தமிழ்மணி என்றால் ஒரு ஓரத்திலிருந்து மையத்திற்கு ( Main Stream ) வர முடியும் என்று நிரூபித்தவர்.  
      தோழர் CKM புதிய பாய்ச்சலை உருவாக்கியவர், அரசியல்வாதிகளின் பிடரியைப் பிடித்து உலுக்கியவராக வந்திருக்கிறார்.  அதேபோல் தொழிற்சங்கத்தில் இலக்கியத் தமிழை இணைத்து வழங்குகிறார் தோழர் ஜெயராமன். தோழர் சேது அவர்களோ  தலைவன் என்ற பந்தா இல்லாமல், இயக்கத்தை சுமந்து செல்லக் கூடியவர். 
     தோழர்கள் ஜெயபால், KSK ஆகியோர் என்னைக் கை  பிடித்து அழைத்துச் சென்றவர்கள். தோழர் மாரி அப்துல் கலாமின் கோபத்திற்கு இணையான அன்பு கொண்டவர். 
     அதேபோல் கோவை SSG , சுப்பராயன் போன்று அறுந்து போகாத மரபுத் தொடர்ச்சியாக இன்னும் தோழர்கள் வந்து கொண்டேயிருக்கிறார்கள். 

     LPG காரணமாக இந்தியாவில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது.    வரப்போகும் 20 ஆண்டுகளில் BSNL அரசிடம் இருக்குமா!   தனியாரிடம் இருக்குமா!!  
     அடுத்த பத்து ஆண்டுகளில் பங்கு விற்பனை, VRS நடக்கும். 
     இந்த இரு சவால்களை நாம் சந்திக்க வேண்டியிருக்கிறது என்று கூறி அதற்கான காரண காரியங்களையும் கூறி துவக்க உரையினை நிறைவு செய்தார். 

.      குன்றக்குடி அடிகளார் அவர்களின் உரை தேச விடுதலைக்காக போராடிய தலைவர்களின் தியாகத்தை பாங்கை எடுத்துரைத்து பதிய வைத்தார். அனைவரையும் தமது  சொல்லாக்கத்தால் நெகிழ வைத்தார். 

     சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் அவர்கள் அரசியலில் நேர்மை பற்றியும், நமது சங்கத் தோழர்களிடமிருந்துதான் தாம் பலவற்றை கற்றுக் கொண்டதாகவும், எதிர்காலத்தில் நீங்கள் BSNL எதிர்கொள்ளும் சவால்களை வெற்றிகரமாகச் சந்திப்பீர்கள் என்றும்  பேசினார். 

     இளைய தோழர்கள் விவாதத்தில் சிறப்பாய் பங்கேற்றனர். 

     அகில இந்தியச் செயலர் தோழர் ஜெயராமன், தலைவர் ஜெயபால் ஆகியோர் இளைஞர்களுக்கு   வழிவிட்டு குறைந்த நேரமே உரையாற்றினாலும், கருத்தாழமிக்க செய்திகளைத் தந்தனர். 

      முன்னாள் தலைவர் காரைக்குடி வெங்கடேசன் அவர்களும் நிகழ்வில் பங்கெடுத்துக் கொண்டார்.  தோழர்   RK அவர்கள் தமது வாழ்த்துச் செய்தியை அனுப்பியிருந்தார். 

     250 பேர் பங்கேற்கும் மாநாடாக நடத்த திட்டமிட்டு,  600    பேருக்கு மேல் திரண்ட கூட்டத்தை திறம்பட சமாளித்தார்கள்.  காலை, மதியம் இரு வேளையும் சுவைமிகு உணவு  சின்னக் குறையுமின்றி பரிமாறப்பட்டது. 


      தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, ACS தோழர் நடராஜன் அவர்களின் நன்றி உரையோடு மாநாடு நிறைவு பெற்றது.  


     நேர்த்தியாக நடத்தித் தந்த காரைக்குடி தோழர்களை மீண்டும் வாழ்த்துகிறோம். 


எஸ். சிவசிதம்பரம்,
பட்டுக்கோட்டை.

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR