தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Friday, January 25, 2013

Tuesday, January 8, 2013


தாத்தா பாட்டு  

குப்தா எங்கள் தாத்தா
குணம் குன்றா தாத்தா.
ஒற்றுமைக்கு விலையாக 
தன்னைத்  தந்த தாத்தா.
என்னைப்  பெற்ற தந்தைக்கு 
ஏற்றம் தந்த தாத்தா.
ஒன்பது  பெரிய சங்கங்களை 
ஒன்றாய் இணைத்த தாத்தாவே!
ஓராயிரம் பேதமிருந்தும்
ஒருங்கிணைத்த தாத்தாவே!!
அழுக்காய் திரிந்து அவதியுற்றோர்
மிடுக்காய் வாழ வழி வகுத்து,
மண்ணில் நீயும் மனிதனென்ற 
மாண்பைத் தந்த தாத்தாவே!

உனது வாழ்க்கை நாங்கள் வாழ 
ஆசி தாரும் தாத்தாவே!
உன்னை பெற்ற இந்த மண்ணு 
உயர்வு பெறுது   தாத்தாவே!

தக்க தக திமி தாளம் போட்டு 
ஆடுகின்றேன் தாத்தாவே!
தாவிக் குதித்து உனது மடியில் 
விழுந்தெழுவேன் தாத்தாவே!

குண்டு கன்ன  தாத்தாவுக்கு
கொடுக்கும் முத்தம் தாராளம்.
கொஞ்சி உந்தன் தோளில் தொங்க 
ஆசை எனக்கு ஏராளம்! 
                               - எஸ். சிவசிதம்பரம், பட்டுக்கோட்டை.
தோழர். குப்தா குடந்தை வந்த போது எனது மகன் பாடியதாக நான் எழுதியது.

Monday, January 7, 2013

உன் வனம் எப்போதுமே பசுமையானதே
-அக்களூர் இரவி


நாடும் வீடும், நம்பி நிற்கும் தோழனும்
நலம் பெறவே உன் பார்வை.
வீறார்ந்த தோற்றம்-விவேகம் நிறை பேச்சு
அயராத உழைப்பு-செயல் முடிக்கும் வரை
தளராத போராளி.
எடுத்து வைக்கும் அடிகளில் நிதானம்
கோரிக்கைகளில் நிச்சயம் வெற்றி என்ற
உறுதி
அரிதாய் எவரும் பெற்றிருக்கும் குணங்கள்
தோழாநீ பெற்றிருந்த வளங்கள்-நாங்கள்
பெற்று வந்த வரங்கள்.
இவற்றால் நீ சாதித்தவை அனைத்தும்
முத்திரை.
வேலை பாதுகாப்பா- நிரந்தரமா
பதவி உயர்வா-உன்
தொலைநோக்கு பார்வை தந்த
வியக்க வைத்த கேடர்சீரமைப்பா
அதிகாரிகள் வரை அனைவரும்
வியந்துபோற்றும் ஓய்வூதிய பாதுகாப்பா?
வெற்றியோ தோல்வியோ-அவமானமோ
அவமதிப்போ
அத்தனையும் பொறுத்து
வித்தகனாய் நீ கட்டியமைத்த
வானவில் சங்கத்தின் போராட்டங்கள்
ஊழியர்தம் பலன்களுக்கு மட்டுமல்ல-அவை தரும்
நிறுவனத்தின் நலன் காக்கவும்.
வழிகாட்டினாய் வாழ்வளித்தாய்
அன்பு காட்டினாய் அரவணைத்தாய்
அருந்தலைவன் உன்வழியில்
ஆசான் ஜெகன் செய்த பெரும்பணியை
தொடர்வோம் நாங்கள் என்றும்.
விஞ்ச யாருமில்லை உன்புகழை-எங்கள்
நெஞ்ச கோவிலிலே நீஎன்றும்.

Sunday, January 6, 2013

இமயம் சரிந்தது!
     தபால் தந்தி இயக்கத்தின் உயிர் நாடியாக, தந்தையாக வாழ்ந்த தலைவர் குப்தாவை இன்று ( 06-01-2013 ) இரவு 8 மணிக்கு இழந்து விட்டோம்!
     94  வயதான தலைவர் குப்தா நமக்காக மட்டுமே  80 ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறார்!   
     அவரால் நாம் அடைந்த பலன்கள் சொல்லி மாளாது.  வாழுகின்ற வாழ்வே அவரால் எனலாம்.
      தொலைத்  தொடர்பு குடும்பத்தில் அவரால் பயனடையாத சங்கமோ, நபரோ இருக்க முடியாது. 
      
     நமது காலத்தில் வாழ்ந்து மறைந்த சந்திரசேகர், ஜெகன் வரிசையில் பேரிழப்பாக இன்றைக்கு தோழர் குப்தாவையும் இழந்திருக்கிறோம்!
     எப்போதாவது பார்த்த, பழகிய நமக்கே பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது.   அவரோடு கலந்த தலைவர்களுக்கு ..... .
     தோழர்களே!
      தலைவருக்காக!
       கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விடுங்கள்!  
       அனைத்துச் சங்கத்தையும் இணைத்து அஞ்சலிக் கூட்டம் நடத்துங்கள்!
       சாதனைகளை  பேசுங்கள்!
       வேதனைகளையும் கொட்டுங்கள்!
       குப்தாவின் சிந்தனையை, எதிர்பார்ப்பை நனவாக்க சபதமெடுங்கள்.      
       வேண்டாம் உறுதியெடுங்கள் போதும். 
       அவரின் ஆன்மா சாந்தியடையும்.  


    
 

Saturday, January 5, 2013

டெல்லியில் நடைபெற்ற 
கொடூரமான பாலியல் வன்முறையைக் கண்டித்து 
ஆர்ப்பாட்டம் மற்றும் இரங்கல் கூட்டம்.

     டெல்லி 23 வயது பாரா மெடிக்கல் மாணவியின் பாலியல் பலாத்காரம், அதனால் ஏற்பட துர்மரணம் மற்றும் பெண்கள் மீதான தொடரும் வன்முறைகள், இறப்புகள் இவற்றைக் கண்டித்து கடந்த 02-01-2013 அன்று தஞ்சை மேரிஸ் கார்னர் இணைப்பகம் முன்பு தஞ்சை மாவட்ட BSNL மகளிர் சார்பிலும், அனைத்து  அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்ட இரங்கல் கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

  பங்கேற்ற அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 
                                                                                                   அன்புடன்,
                                                                                               A. லைலாபானு,  
                                                      NFTE  மாநில மகளிர் ஒருங்கிணைப்பாளர், தஞ்சை.





 






Tuesday, January 1, 2013



ஜனவரி 2013 முதல்
 
IDA 4.2% சதம் உயர்ந்துள்ளது. 
 67.3+4.2=71.5%
 

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR