தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Wednesday, January 31, 2018

மூன்றாம் நாளில் மேலும்

முனைப்புக் காட்டுவோம்!
==========================

மகாத்மா காந்தியடிகள்

மதவாதிகளின் தூண்டுதலால்
மாபாவி கோட்சேவால்
படுகொலை செய்யப்பட்ட நாள் 30-01-18.
அண்ணலைக் கொன்றது நாதுராம் கோட்சேவின் குண்டுகள் இல்லை. எங்கிருந்தோ பாய்ந்த நான்காவது குண்டுதான் என்று இன்றும் நீதிமன்றத்தில் வாதாடும் பேர்வழிகள் நடமாடும் காலமிது.
அப்படிப்பட்டவர்களின் ஆட்சியில்தான் நியாயம் கேட்டு போராட்டத்தை துவங்கியிருக்கிறோம்.
சத்தியாகிரகம் சாதிக்கும் என்ற நம்பிக்கையில் களம் காண்கிறோம்.
நமது மனவலிமையும், செயல் வலிமையும் நிச்சயம் வெற்றியைத் தரும்.
சத்தியாகிரகம்,
விதிப்படிவேலை
என்னும் இரு கருவிகளுடன் களம் காண்போம். காரியங்கள் பல செய்வோம்.
களத்தில் வெற்றி காண்போம்!
வாழ்த்துக்கள் தோழர்களே!
கே. கிள்ளிவளவன்.

31-01-2018 தினமணி செய்தி:

பிஎஸ்என்எல் அலுவலர்கள் போராட்டம்

அகில இந்திய பிஎஸ்என்எல் ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் சங்கங்கள் சார்பில் 3-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை சத்தியாகிரக போராட்டம் நடைபெற்றது.
பிப். 3-ஆம் தேதி வரை 5 நாள்களுக்கு நடைபெறும் இப்போராட்டத்துக்கு தஞ்சாவூர் மாவட்ட அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் டி.கே. உதையன் தலைமை வகித்தார். இதில், 3 ஆவது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும். 2-ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளில் உள்ள குறைபாடுகளை களைய வேண்டும். பிஎஸ்என்எல் டவர்களை தனியார்மயமாக்குவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில் காலையில் அலுவலகத்திற்கு வரும் ஊழியர்களும், அலுவலர்களும் கையெழுத்திட்டப் பிறகு பணிகள் ஏதும் செய்யாமல் போராட்டத்தில் ஈடுபட்டு, தங்களது கோரிக்கைகளை அரசு தெரியப்படுத்துவர் என ஒருங்கிணைப்பாளர் டி.கே. உதையன் தெரிவித்தார். 
இதேபோல,  ஒரத்தநாடு,  பட்டுக்கோட்டை, பாபநாசம், கும்பகோணம் ஆகிய இடங்களிலும் பிஎஸ்என்எல் அலுவலர்கள், ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பட்டுக்கோட்டையில்... பிஎஸ்என்எல் அலுவலக வாயிலில் அனைத்துத் தொழிற்சங்கக் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற போராட்டத்துக்கு எம்.ஷேக்தாவுத் தலைமை வகித்தார்.
தொலைத்தொடர்புத் துறையின் பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த எஸ். கிருஷ்ணமூர்த்தி, கே.பன்னீர்செல்வம்,  எம்.கலைச்செல்வன்,  ஆர்.செல்வக்குமார், கே.விஜயராகவன், டி.திலகவதி, எஸ்.சிவசிதம்பரம், எஸ்.சுந்தர்ராஜ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.


பிஎஸ்என்எல் 
பிப்.1 முதல் இலவச அழைப்புகளை நிறுத்துகிறது!


கொல்கத்தா: பிஎஸ்என்எல் ஞாயிற்றுக்கிழமைகளில் அளித்து வந்த இலவச அழைப்புகள் சலுகையை வரும் பிப்ரவரி 1 முதல் முடிவுக்கு கொண்டுவருகிறது.
அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் நிறுவனம் (பிஎஸ்என்எல்) கடந்த 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இரவு 9 மணிக்கு மேலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இலவச அழைப்புகள் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த மாத மத்தியில் இரவு நேர இலவச அழைப்புகளுக்கான நேரம் 9 மணியில் இருந்து 10.30 மணியாக மாற்றப்பட்டது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமைக்கான இலவச அழைப்புகளை திரும்பப் பெற பிஎஸ்என்எல் முடிவு செய்துள்ளது. புதிய திட்டம் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. 
புதிய திட்டங்கள் பிஎஸ்என்எல் தலைமையகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. விரைவில் நல்ல திட்டங்களுக்கான அறிவிப்பு வெளியாகும் என நம்புகிறோம். நாடு முழுவதும் புதிய மாறுதல்கள் பொருந்தும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், இதனால் தங்கள் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படாத வகையில் புதிய திட்டங்களை ஆலோசித்து வருவதாக கொல்கத்தா பிஎஸ்என்எல் தலைவர் பொது மேலாளர் எஸ்.பி. திரிபாதி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் தற்போது 6 லட்சம் நிலையான லேண்ட்லைன் இணைப்புகளுடன் சுமார் 12 மில்லியன் இணைப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
========================
தலைநகர் தஞ்சையில்  
2 ம் நாள் சத்தியாகிரக போராட்டம்.
31-01-2018 காலை 10 மணி முதல்.
====================================
70 க்கும் மேற்பட்ட 
தோழர்கள் பங்கேற்றனர்.






















========================
முத்துப்பேட்டையில் 
2 ம் நாள் சத்தியாகிரக போராட்டம்.
31-01-2018 காலை 10 மணி முதல்.
====================================
10 க்கும் மேற்பட்ட 
தோழர்கள் பங்கேற்றனர்.

========================
பட்டுக்கோட்டையில் 
2 ம் நாள் சத்தியாகிரக போராட்டம்.
31-01-2018 காலை 10 மணி முதல்.
====================================
30 க்கும் மேற்பட்ட 
தோழர்கள் பங்கேற்றனர்.









========================
மன்னார்குடியில் 
2 ம் நாள் சத்தியாகிரக போராட்டம்.
31-01-2018 காலை 10 மணி முதல்.
====================================
40 க்கும் மேற்பட்ட 
தோழர்கள் பங்கேற்றனர்.
மாவட்டச் செயலர் தோழர். கிள்ளிவளவன் மற்றும் கலைச்செல்வன் ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார்கள்.





'


Tuesday, January 30, 2018


தொடரும் நமது போராட்டம்!

நாடு முழுவதும் நமது தலையாய  கோரிக்கைக்காக தோழர்கள் விதிப்படி வேலை மற்றும் சத்தியாகிரக போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறார்கள். 
நமது மாவட்டமும் இதில் விதிவிலக்கல்ல! 
இன்னும் 4 நாட்கள் போராட்டம் இருக்கிறது. 
இந்தப் போராட்டம் மூலம் நமது ஒற்றுமை மேலும் பலப்பட நிறைய வாய்ப்பு இருக்கிறது. 

முதல் நாள் போராட்டத்தில் விடுபட்ட அம்சங்கள் ஏதேனும் இருந்தால் அதை வரும் நான்கு நாட்களில்  சரி செய்து கொள்வதற்காக 
ஒரு சில செய்திகளை நினைவூட்ட விரும்புகிறேன்!

மகாத்மா படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செய்யுங்கள், உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள்! 
காவல் துறைக்கு போராட்டம் குறித்து தகவல் கொடுங்கள்!
பத்திரிகைக்கும் செய்தி கொடுங்கள்!
போராட்ட நோக்கங்களை அனைவரும் அறியும் வண்ணம் எடுத்துரையுங்கள்! 
கோரிக்கையை பொது மக்கள் அறியும் வண்ணம் பிளெக்ஸ் அல்லது தட்டி வையுங்கள்!
கோரிக்கை முழக்கமிடுங்கள்!
சகோதரச் சங்கங்களுடன் நல்லிணைப்பு வைத்திருங்கள்.
பணியாற்றுபவர்கள் விதிப்படி வேலை செய்தால் போதும். 
மேளாக்கள் நடத்திட வேண்டாம்.  
பணி நேரம் தாண்டி ஒரு நிமிடம் கூட வேலை செய்ய வேண்டாம்.
ஒய்வு நேரத்திலும், சொந்த விடுப்பிலும் 
சத்தியாகிரகத்தில் பங்கு கொள்ளுங்கள்.

சத்தியாகிரக போராட்டம்  என்பது போர் ஆயுதங்களை விட வலிமை வாய்ந்தது.
எப்படியெனில்,
அனைவரும் யாதொரு வேறுபாடின்றி ஒன்றுபடுகிறோம்!
கோரிக்கையின் முழு அம்சங்களையும் அறிந்து கொள்கிறோம்!
அரசின் நோக்கம், கொள்கை ஆகியவைகளை விவாதித்து அறிந்து கொள்ள முடிகிறது.
தலைமைக்கு கட்டுப்படுதல் என்பதோடு, விபரங்களை  தெளிவாக  தெரிந்து          
கட்டுப்படுகிறோம் என்பதுதான் வெற்றியின் அம்சம்.
ஆதிக்க சக்திகளின் பிரித்தாளும் முயற்சிகள்  தோல்வியடையும்.

என்றுமே  நமது போர் வெற்றியை நோக்கியே!
வாழ்த்துக்கள் தோழர்களே!

அன்புடன்,
கே. கிள்ளிவளவன்.





========================
பாபநாசத்தில் 
சத்தியாகிரக போராட்டம்.
30-01-2018 காலை 10 மணி முதல்.
====================================
30 க்கும் மேற்பட்ட 
தோழர்கள் பங்கேற்றனர்.



========================
தலைநகர் தஞ்சையில் 
CTMX வாயிலில் நடைபெற்ற 
சத்தியாகிரக போராட்டம்.
30-01-2018 காலை 10 மணி முதல்.
====================================
80 க்கும் மேற்பட்ட 
தோழர்கள் பங்கேற்றனர்.









செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR