தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Wednesday, January 31, 2018

31-01-2018 தினமணி செய்தி:

பிஎஸ்என்எல் அலுவலர்கள் போராட்டம்

அகில இந்திய பிஎஸ்என்எல் ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் சங்கங்கள் சார்பில் 3-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை சத்தியாகிரக போராட்டம் நடைபெற்றது.
பிப். 3-ஆம் தேதி வரை 5 நாள்களுக்கு நடைபெறும் இப்போராட்டத்துக்கு தஞ்சாவூர் மாவட்ட அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் டி.கே. உதையன் தலைமை வகித்தார். இதில், 3 ஆவது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும். 2-ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளில் உள்ள குறைபாடுகளை களைய வேண்டும். பிஎஸ்என்எல் டவர்களை தனியார்மயமாக்குவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில் காலையில் அலுவலகத்திற்கு வரும் ஊழியர்களும், அலுவலர்களும் கையெழுத்திட்டப் பிறகு பணிகள் ஏதும் செய்யாமல் போராட்டத்தில் ஈடுபட்டு, தங்களது கோரிக்கைகளை அரசு தெரியப்படுத்துவர் என ஒருங்கிணைப்பாளர் டி.கே. உதையன் தெரிவித்தார். 
இதேபோல,  ஒரத்தநாடு,  பட்டுக்கோட்டை, பாபநாசம், கும்பகோணம் ஆகிய இடங்களிலும் பிஎஸ்என்எல் அலுவலர்கள், ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பட்டுக்கோட்டையில்... பிஎஸ்என்எல் அலுவலக வாயிலில் அனைத்துத் தொழிற்சங்கக் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற போராட்டத்துக்கு எம்.ஷேக்தாவுத் தலைமை வகித்தார்.
தொலைத்தொடர்புத் துறையின் பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த எஸ். கிருஷ்ணமூர்த்தி, கே.பன்னீர்செல்வம்,  எம்.கலைச்செல்வன்,  ஆர்.செல்வக்குமார், கே.விஜயராகவன், டி.திலகவதி, எஸ்.சிவசிதம்பரம், எஸ்.சுந்தர்ராஜ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.


No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR