தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Saturday, January 13, 2018

போக்கி (போகி) பண்டிகை 
13-01-2018
பண்டிகை என்றாலே கொண்டாடத்தானே!
அப்போ, போகிப் பண்டிகையும் கொண்டாட வேண்டும்தானே! அப்படிப்  புரிந்து கொண்டதால்தான் 
இந்தப் பதிவு தோழர்களே!

தமிழர் திருநாளை சிறப்பாகக் கொண்டாடுவதற்காக தை  பிறப்பதற்கு முதல் நாள் செய்யப்படும் முன் ஏற்பாடுதான் போகிப் பண்டிகை.

கடந்த ஆண்டுக்கு நன்றி சொல்லும் விதமாக கொண்டாடப்படுவதுதான்  போகிப் பண்டிகையாகும்.

பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற கருத்து எவ்வளவு பொருத்தப்பாடான ஒன்றாக இருக்கிறது. ஆனால் சிலர் பழையன அழிதலும் என்று புரிந்து கொண்டு பலவற்றை அழித்தே விட்டார்கள். முற் காலங்களில் பழைய சுவடிகளை எல்லாம் சிலர் அழித்து விட்டார்களாம். 

பழமையான துயரமான நினைவுகளை அழித்துப் போக்கும் இப்பண்டிகை "போக்கி' எனப்பட்டது. அந்தச் சொல் நாளடைவில் மருவி "போகி' என்றாகிவிட்டது. 

இந்த நாள் 'பழையனவற்றை  கழித்து, புதியன புகவிடும்' நாளாகக் கருதப்படுகிறது. பழையவற்றையும், தேவையற்றவற்றையும் தூக்கி எறியும் நாளாகக் கருதப்படுகிறது.

பொங்கலுக்கு வீட்டை சுத்தம் செய்து, வர்ணம் தீட்டுவது தமிழர்களின் வழக்கம்.  அவ்வாறு சுத்தம் செய்யும்போது தேவையற்ற பழைய  
பொருட்களை எடுத்து போகி அன்று எரிப்பார்கள், தூக்கி எறிவார்கள். வீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும் நீக்கப்படவேண்டும் என்பதுதான்  இதில் உள்ள தத்துவம்.   சுத்தத்தை வலியுறுத்தும் இத் திரு நாளை போற்றுவோம் நண்பர்களே!

 அனைவருக்கும் இனிய 
போகித் திருநாள் வாழ்த்துக்கள்!

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR