தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Friday, October 12, 2018


 


தமிழ் மாநில கவுன்சில் கூட்டம் 
==============================
தமிழ் மாநில கவுன்சில் கூட்டம் 09 .10 .2018 அன்று புதிய தலைமை பொது மேலாளர் திரு ராஜு அவர்களின் தலைமையில் நடைபெற்றது. கவுன்சில் கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் GM HR திரு மோகன் அவர்கள் வரவேற்று பேசினார்.கவுன்சில் கூட்டத்தின் துவக்கத்தில் ஊழியர் தரப்பு தலைவர் தோழர் நடராஜன் மாநில நிர்வாகத்தின் முனைப்பான ,சேவை மேம்பாட்டை முன்னெடுக்கும் பல்வேறு செயல்களை சுட்டிக்காட்டி பாராட்டினார். 14 .08 .2018 CGM  நடத்திய கூட்டத்தின் முடிவை சுட்டிக்காட்டி சேவை மேம்பாடு ,வருவாய் பெருக்கம் ஆகியவற்றில் எப்போதும் ஊழியர் தரப்பு முன்னிற்கும் என உறுதி கூறினார்.
ஊழியர் தரப்பு செயலர் தோழர் செல்லப்பா அவர்கள் மாநில நிர்வாகத்தின் சேவை மேம்பாடு குறித்த ஆலோசனைகளை வரவேற்று ,கருணை அடிப்படை பணிநியமனத்தில் நிலவுகிற காலதாமதம் ,மருத்துவ பில் தேக்கம் உள்ளிட்ட பிரச்சனைகளை பட்டியலிட்டார். நிர்வாகத்துடன் கரம் கோர்த்து சேவை மேம்பாட்டில் ஊழியர் தரப்பு முன்னிற்கும்,துணை நிற்கும் என்றுரைத்தார் .
தலைமை பொது மேலாளர் தனது உரையில் பரிவு அடிப்படையில் வேலை நியமனத்தில் உள்ள காலதாமதம் தீர்க்கப்படும். ஊழியர்கள் ,நிர்வாக தரப்பு உறவு வலுப்பட நம்பிக்கை உருவாக்குவது அவசியம் என்றும் பிரச்சனை விரைந்து தீர்க்கப்படும் என்றும் உறுதியளித்தார். இன்றைய நிலையில் நிதி பற்றாக்குறை என்பது மிக பெரிய சவாலாக உள்ளது என்றும், டெல்லியில் நடைபெற்ற மாநில தலைமை பொது மேலாளர்கள் கூட்டத்தில் (HOCC meeting) நிதி பற்றாக்குறையை சமாளிக்க முன்னுரிமை EB bill  கட்டுவதற்கு கொடுப்பது  அதன்பிறகு ஊழியர்கள் சம்பளத்திற்கு கொடுக்கலாம் என்ற யோசனையை, Dir HR  அவர்கள் நிராகரித்தார்கள் என்று பதிவு செய்தார்.
1.BSNL டவர்களில் 3G   விரிவாக்கம் செய்து வருவாய் ஈட்டிட வேண்டுமென கோரினோம் . தமிழ் நாட்டில் 5873  டவர்கள் உள்ளன .இதில் 2973 3G  டவர்கள், மேலும் 1428  3G  ஆகா மாற்றப்பட உள்ளது . 1652 4G டவர்கள் கட்டுமானத்தில் உள்ளன. WIFI HOT SPOT அதிகமாக செயல் படுத்தப்பட்டு வருகிறது என்றுரைத்தார்.
நமது அலுவலகம் மற்றும் குடியிருப்புக்களில் காலியாக உள்ள இடங்களை வாடகைக்கு விட்டு அதன்மூலம் வருவாய் ஈட்டிட கோரப்பட்டது .சிவில் பகுதி நிர்வாகம் 5மாவட்டங்களில் ( கோவை ,குன்னுர், ஈரோடு ,சேலம் ,தர்மபுரி ஆகிய SSA  க்களில்) காலி இடங்களை கண்டறிந்து வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. காலியாகஉள்ள குடியிருப்புகளை ஓய்வூதியர் /ஓய்வூதியர்கள் குடும்பம்  மற்றும் நிரந்தர ஊழியர்களிடம் செக்யூரிட்டி பெற்றுக்கொண்டு CONTRACT  ஊழியர்களுக்கு வழங்கலாம் என வலியுறுத்தப்பட்டது .
 1. மின்சார செலவினங்கள் குறைப்பு சம்மந்தமாக எடுக்ககப்பட்டு வரும் நடவடிக்கைகள் பதிவு செய்யப்பட்டது. 29 கோடி செலவை குறைக்க இலக்கு நிர்ணயக்கப்பட்டிருக்கிறது . 431 தொலைபேசி நிலையங்கள் ஆய்வு செய்யப்பட்டு செலவுகள் குறைக்கப்பட்டுள்ளது . தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது . கார்ப்பரேட் அலுவலகம் இதனை OJAS திட்டத்தின் மூலம் கண்காணித்து வருகிறது ..
 2. பணி ஓய்வு பெற்றவர்களுக்கு வருமான வரி தாக்கல் செய்ய படிவம் 16 , 26 AS , part A  வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது ..
 3. ப்ராஜெக்ட் விஜய் ,udaan பகுதியில் பணியாற்றும் தோழர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படாமல் உள்ளதை சுட்டிக்காட்டினோம் . மாவட்டங்களிலிருந்து விபரங்களை பெற்று ஒரு வார காலத்திற்குள் முடிவு எடுக்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது ..
       6.தமிழ்நாடு முழுவதும் IQ பராமரிப்பு போதுமானதாக இல்லை என்பதை சுட்டிக்காட்டினோம்.                            பராமரிக்கவும், தங்குவதற்கு ஏற்றதாக செய்திடவும் மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்திடவும்                                         ஏற்றுக்கொள்ளப்பட்டது.
 1. CSC பகுதிக்கு போதுமான ஊழியர்கள் நியமனம் செய்திட வலியுறுத்தப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளைவிட CSC க்கு முன்னுரிமை வழங்கிட கேட்டுக்கொள்ளப்பட்டது .
 2. SrTOA (G ) கன்பர்மேஷன் தேர்வில் 2 தோழர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.  SrTOA தேர்வு வருகிற 25/11/2018 அன்று நடைபெறும்.
     9 வங்கி கடனுக்கு இன்சூரன்ஸ் அவசியம் என்பதை வலியுறுத்தி கூறினோம்.மாநில நிர்வாகம் corporate       அலுவலகத்திற்கு DO லெட்டர் அனுப்பியுள்ளது .
 1. டவர்களை தனியாருடன் பகிரும்போது மின் கட்டணம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டினோம் . நிர்வாகம் மின் கட்டணத்தை முழுமையாக வசூலிப்பதாக தெரிவித்தது ..
 2. 20 தொலைப்பேசிக்கு குறைவாக உள்ள 84 தொலைப்பேசி நிலையங்களில் 19 ஐ மூடிவிடவும் அதனை அருகாமையில் உள்ள exchange  உடன் இணைத்திடவும் மற்றவற்றில் வருவாயை பரிசீலித்து முடிவு எடுக்கவும் , ஊழியர் பற்றாக்குறையை கணக்கில் கொண்டு சிறிய exchanges இணைத்திடவும் முயற்சி மேற்கொள்ளப்படும் ..
 3. மருத்துவ பில்கள் தேக்கம் மற்றும் பில்களின் மீது விளக்கம் கேட்டு திரும்ப அனுப்புவது என                 ஊழியர்கள் அலைக்கழிக்கப்படுவதை சுட்டிக்காட்டி தீர்வுக்கு வழி கோரினோம். மருத்துவ கமிட்டி கூட்டம் 3 மாதத்திற்கு ஒரு முறை கூட்ட முடிவு செய்யப்பட்டது ..
 4. கார்ப்பரேட் அலுவலக உத்தரவு அடிப்படையில் வெளி வழக்கு காரணமாக ஓய்வுக்கால சலுகைகளை நிறுத்தக்கூடாது என கோரப்பட்டது .மாவட்டங்களில் இது போன்ற பிரச்சனைகள் இருந்தால் தீர்வுக்கு வழிகாட்டப்படும் .
 5.  லைன்மேன் ஊதியம் பெற்று பின்னர் TM ஆன தோழர்களுக்கு பணி ஓய்வு நேரத்தில் ஊதிய பிடித்தம் செய்வது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது .403  தோழர்களின் ஊதிய பிடித்தம் திரும்ப பட்டுவாடா செய்திட CGM அவர்களிடம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது ..
 6. பரிவு அடிப்படையில் வேலை நியமனம் 2016 -2017 ல் 14 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. 2017 -2018 க்கு 56 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இதில் 20 விண்ணப்பங்கள் போதுமான சான்றிதழ்கள் இணைக்கப்படவில்லை. சான்றிதழ்கள் பெற்றுதர விரைந்து முடித்திட ஊழியர் தரப்பு உறுதி அளித்துள்ளது .
 7. அலுவலகங்களில் படிப்படியாக வெஸ்டர்ன் டாய்லட் அமைக்கப்படும் .
 8. மகளிருக்கு ஓய்வறை வழங்கிடவும் , மேம்படுத்திடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் ..
 9. தமிழகம் முழுவதும் 56 மருத்துவமனைகள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் ஒரு மருத்துவமனை கூட அங்கீகரிக்கப்படவில்லை. தமிழ்நாடு அரசு அங்கீகாரம் பெற்ற மருத்துவமனைகளில் payment basis ல் பயன்படுத்திட பரிசீலிக்கப்படும் ..
பழைய பிரச்சனைகள் :–
 பல மாவட்டங்களில் ஊழியருக்கு BAG வழங்கவில்லை என்பதை சுட்டிக்காட்டினோம் .விரைவாக வழங்கிட வேண்டுமென்பதை நிர்வாகம்  ஏற்றுக்கொண்டது..
ஊழியர் தரப்பு மற்றும் நிர்வாகத்தரப்பு பரஸ்பரம் நன்றி தெரிவித்துக்கொண்டது. நிர்வாகத்தின் நேர்மறையான மற்றும் பிரச்சனை தீர்வில் வெளிப்படையான அணுகுமுறை திருப்திகரமானதாக இருந்ததை ஊழியர் தரப்பு பாராட்டியது.
நிர்வாகத்தின் சார்பில் DGM Admin திரு ரவிக்குமார் அவர்கள் பதில்களை வழங்கினார்கள் .
முடிவில் AGM SR திருமதி கிருஷ்ணப்ரியா அவர்கள் நன்றி கூறி முடித்து வைத்தார்கள் .. 
  கூட்டத்தில் கவுன்சில் உறுப்பினர்களான தோழர்கள் மாநிலத்தலைவரும் அகிலஇந்திய செயலருமாகிய காமராஜ், மாநில உதவிச்செயலர் தோழர் முரளிதரன் மற்றும் பார்வையாளராக கடலூர் மாவட்ட செயலர் தோழர் ஸ்ரீதரன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர் .

Thursday, October 11, 2018

BSNL அனைத்து சங்க போராட்டத் திட்டங்கள்

BSNL அனைத்து சங்க கூட்டமைப்பு நேற்று 08.10.2018 அன்று டெல்லியில் நமது சங்க அலுவலகத்தில் கூடியது. 24.02.2018 அன்றைய தொலைத்தொடர்பு அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அவர் அளித்த வாக்குறுதிகள் இதுவரை கண்டுகொள்ளப்படாதது குறித்து கூட்டமைப்பு தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது. நீண்ட விவாதங்களுக்குப்பிறகு கீழ்க்கண்ட போராட்ட முடிவுகள் ஏக மனதாக எடுக்கப்பட்டன.
அதன்படி;
29.10.2018 அன்று அனைத்துமட்டங்களிலும் நமது கோரிக்கைகளை மையப்படுத்தி பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்த்துவது...

30.10.2018 அன்று அனைத்துமட்டங்களிலும் தர்ணாப் போராட்டம் நடத்துவது...

14.10.2018 அன்று மாநில மாவட்ட மையங்களில் பேரணியாகச் சென்று மாநில முதன்மைப் பொதுமேலாளர் மற்றும் மாவட்ட பொதுமேலாளரிடம் கோரிக்கை மனு அளிப்பது...

கோரிக்கைகள் தீராவிடில் நமது போராட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில் 30.10.2018க்கு பிறகு காலவரையற்ற வேலை நிறுத்தம் மேற்கொள்ள உத்தேசிப்பது...
மேலும்;
Non-BSNL Siteகளின் உட்கட்டமைப்பை பராமரிக்க தனியார் வசம் விடப்பட்டுள்ளது அதற்காக வருடத்திற்கு ரூ.1800/- கோடி வழங்குவதைக் கண்டித்தும்...

மற்றும்;
நமது ஊதிய மாற்றக்கோரிக்கைகளான 15சத நிர்ணயத்துடனான ஊதியமாற்றம் , ஓய்வூதிய மாற்றம் , வாங்கும் ஊதியத்தின் அடிப்படையில் ஓய்வூதியப் பங்களிப்பு மற்றும் நமது நிறுவனத்திற்கு 4G அலைக்கற்றை ஒதுக்கீடு ஆகிய பொதுக்கோரிக்கைகளையும் இணைத்து அனைத்து மட்டங்களிலும் இணைந்த போராட்டங்களை நடத்துவது என கூட்டமைப்பு சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டது.
ஆறாவது பேச்சு வார்த்தை
---------------------------------------------
09.10.2018 அன்று ஆறாவது ஊதிய மாற்றப் 
பேச்சு வார்த்தை நடைபெற்றது.
வீட்டு வாடகைப்படி குறித்து விவாதிக்கப்பட்டது.
வீட்டு வாடகைப்படியை முடக்குவது என்று 
நிர்வாகம் தெரிவித்தது.
இதை ஊழியர் தரப்பு கடுமையாக எதிர்த்தது. 
புதிய சம்பள விகிதத்தில் வீட்டு வாடகைப்படி 
வழங்க வேண்டும் என ஊழியர் தரப்பு வலியுறுத்தியது. 
மீண்டும் பேசலாம் என நிர்வாகத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Tuesday, October 9, 2018

சேகுவேரா நினைவு தினம்: (14-06-1928   --   09-10-1967 )

சே குவேரா எனும் சாகசக்காரன்!

கியூபாவின் புரட்சியை தவிர்த்துவிட்டு, சேகுவேராவை எழுதிவிட முடியாது. எங்கோ அர்ஜென்டினாவில் பிறந்து, கியூப விடுதலைக்காக போராடவேண்டிய அவசியம் அவருக்கு இல்லை. ஆனால் அவர் விலங்கு பூட்டப்பட்ட மக்களின் விடுதலையிலும் ஃபிடல் காஸ்ட்ரோவின் மீதான நட்பிலும் அளவு கடந்த நம்பிக்கை வைத்திருந்தார். மருத்துவம் பயின்ற ஒருவர், ஆஸ்துமா நோயுடன் கைகளில் துப்பாக்கி ஏந்தி படைத் தளபதியாக செயல்பட முடியுமென்றால், அது சேகுவேரா எனும் சாகசக்காரனால்தான் முடியும். சேவும் காஸ்ட்ரோவும் இணைந்து நடத்திய புரட்சியால் அமெரிக்காவின் கைப்பாவையான பாடிஸ்டா ஆட்சியில் இருந்து வீழ்ந்தார். காஸ்ட்ரோவைக் கியூப மக்கள் தலைவராகக் கொண்டாடினார்கள். தலைநகர் ஹவானா உற்சாகக் கோலம் பூண்டது. ' இனி கியூப மக்கள் அமெரிக்காவின் அடிமையாக இருக்கப்போவதில்லை' என்ற மகிழ்ச்சி அனைவரிடத்திலும் ஏற்பட்டது. தங்கள் நாட்டைச் சேர்ந்தவர் போலவே சேகுவேராவை கியூப மக்களும் காஸ்ட்ரோவும் கொண்டாடினார்கள். சேகுவேராவுக்கு அரசு பதவியும் கியூப நாட்டு கரன்சியில் 'சே' எனக் கையெழுத்திடும் கவுரவுமும் வழங்கப்பட்டது. 
ஆடம்பரங்களை உதறித் தள்ளிவிட்டு, 'காங்கோவில் நடக்கும் ஆயுத புரட்சிக்கு உதவ போகிறேன்' என காஸ்ட்ரோவிடமிருந்து விடைபெற்று கொண்டார் ‘சே’. உடனே, “ 'சே’வை காணவில்லை; அவரை ஃபிடல் கொன்றுவிட்டார்” என பேசப்பட்ட போதிலும், “ 'சே’ எங்கு இருக்கிறார்” என்று காஸ்ட்ரோ சொல்லவில்லை. காரணம், 'அமெரிக்க உளவுதுறையிடம் அவர் சிக்கிக் கொள்ளக் கூடாது' என்பதற்காகத்தான். இப்படியான ஒரு தோழனை விட்டுச்  செல்லும் நிலை சேவுக்கு ஏற்பட காரணம், உலக மக்களின் விடுதலை மீது அவருக்க இருந்த பெரு விருப்பம்தான்.che guevara
காங்கோவில் இருந்து பொலிவியா வந்த சேகுவேரா, அங்குள்ள சிறு ஆயுதக் குழுக்களுக்கு கெரில்லா பயிற்சிகளை அளித்தார். புதிய நாடு, வித்தியாசமான தட்பவெட்ப சூழ்நிலை என பொலிவியாவில் சிரமத்தை எதிர்கொண்டார். அதற்கெல்லாம் அவர் அஞ்சவில்லை. ஒருகட்டத்தில், (1967-ம் வருடம் அக்டோபர் மாதம்) அமெரிக்க படைகளால் சுற்றி வளைக்கப்பட்டார் சேகுவேரா. உலக முதலாளித்துவத்துக்கு சிம்ம சொப்பனமாய் விளங்கிய சேகுவேரா பிடிப்பட்டதை அமெரிக்க அதிகாரிகளால் எளிதில் நம்ப முடியவில்லை. பொலிவியாவில் உள்ள பள்ளிக்கூடத்தில் அவர் சிறைவைக்கப்பட்டார். அங்கு அவருக்கு உணவு வழங்க ஒரு பணிப்பெண் நியமிக்கப்பட்டார். அவரிடம், 'இது என்ன இடம்?' என்று கேட்டார் ‘சே’. 'இது ஒரு பள்ளிக்கூடம்' என்றார் பணிப்பெண்.  'இப்படியொரு மோசமான நிலையில் ஒரு பள்ளிக்கூடமா... எங்களின் போராட்டம் வெற்றி பெறட்டும், உங்களுக்கு புதிய பள்ளி ஒன்றைக் கட்டி தருகிறோம்' என்று கூறினார் ‘சே’. அந்த பணிப்பெண் வெடித்து அழுது அங்கிருந்து கிளம்பினார். தான் இறக்கப்போவது தெரிந்த நிலையிலும், போராட்டங்கள் மீதும் மாற்றத்தின் மீதும் மிகப் பெரிய நம்பிக்கை கொண்டிருந்தார். அதனால்தான் அவர் அசாத்தியங்களை விரும்பும் எதார்த்தவாதியாக இருந்தார்.
1967, அக்டோபர் 9, சேகுவேரா சுட்டுக் கொல்லப்பட்டார். 'நீ ஒரு கோழையை சுடவில்லை. ஒரு வீரனைத்தான் சுடுகிறாய்' என தோட்டாக்களை தனது நெஞ்சில் வாங்கி கொண்டார். அவர் மறைந்து 51 வருடங்கள் ஆகப் போகின்றன. ஆனால், இன்றும் ‘சே’ கொண்டாடப்படுகிறார். கியூபாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதிலும். இப்போதும் இளைஞர்களின் சட்டைகளிலோ, போராட்டக் களத்திலோ சேகுவேரா புகைப்படங்கள் அலங்கரிக்கின்றன. உலக மக்களின் விடுதலைக்காக அவர் போராடினார். இந்த உலகுக்கே அவர் பொதுவானவர். அடக்குமுறைகள் இருக்கும் வரையில் போராட்டங்கள் நீடித்துக் கொண்டுதான் இருக்கும். போராட்டங்கள் இருக்கும் வரையில் ‘சே’வும் மக்கள் நினைவுகளில் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார். வரலாறு முக்கியம் தோழர்களே!
ஒப்பந்தத் தொழிலாளிக்கு போனஸ் 
=========================
2005 பிப்ரவரியில் தஞ்சையில் TMTCLU மாவட்டச் சங்கத்தை துவங்கினோம். 
அந்த முதல் ஆண்டைத் தவிர இன்று வரை தொடர்ந்து நமது தோழனுக்கு போனசைப் பெற்றுத் தந்த பேரியக்கம் TMTCLU.
இந்த ஆண்டு 8.33 % போனஸைஉறுதி செய்திருக்கிறோம்.  
அதாவது 7000/- ரூபாய்.

மல்லி ஏஜென்சீஸ், சாமி அய்யா 7000/- தர  ஒப்புக்கொண்டதோடு 
20 TO  25 ம் தேதிக்குள் 
போனஸ் தர உறுதி கூறியுள்ளார்.
பாலாஜி ஏஜென்சீஸ் 2 தவணையில் தருவதாக 
கூறியுள்ளார். தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம். 
முடியாவிட்டால் அது பற்றி பரிசீலிப்போம்!
C  செக்யூரிட்டியிடம் 10 ம் தேதி நமது பொது மேலாளர் 
பேசியத்திற்குப் பின் 
நாம் பேசுவோம்! 

இன்னும் நமது கோரிக்கைகள் 
வெல்ல வேண்டியது நிறைய இருக்கிறது. 
அதை நோக்கி பயணப்படுவோம்.  

சங்கம் சாராத் தொழிலாளி 
முதலாளி கைச் சொக்கட்டான் என்பார்கள். 
இதில் தேர்ந்த, தெளிந்த சங்கத்தில் 
நீங்கள் உறுப்பினர்கள் என்பது பெருமகிழ்வு.

இந்தச் சங்கம் மேலும், வளர்வது 
எந்தளவிற்கு முக்கியம் என்பதை உணர்வோம்!
சந்தா நிலுவையை ஒட்டு மொத்தமாக செலுத்திடுவோம்!

==============================


தோழர்கள் அனைவருக்கும் 
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்! 
தோழமையுடன், 
கே. கிள்ளிவளவன், டி. கலைச்செல்வன்.
மாவட்டச் செயலர்கள்.

Sunday, October 7, 2018

பட்டுக்கோட்டையார் 
நினைவு தினம் 08-10-19
(13-04-1930 to  08-10-1959)

அவரது பாடல்கள் சில நமது சிந்தைக்கு 

    ஒன்றிருந்தால் ஒன்றில்லை
  எல்லோரும் நம்பும்படி
  சொல்லும் திறனிருந்தால்
  சொல்லிலே உண்மை இல்லை
  உள்ளதை உள்ளபடி
  சொல்லும் மனிதனிடம்
  உணர்ந்திடும் திறமையில்லை
  உண்மையும் நம்பவைக்கும்
  திறனும் அமைந்திருந்தால்
  உலகம் அதை ஏற்பதில்லை
  அது இருந்தால் இது இல்லை
  இது இருந்தால் அது இல்லை
  அதுவும் இதுவும் சேர்ந்திருந்தால்
  அவனுக்கிங்கே இடமில்லை (அது-இரு)

  அங்கமதில் மங்கையர்க்கு
  அழகிருந்தால் அறிவில்லை
  ஆராய்ந்து முடிவு செய்யும்
  அறிவிருந்தால் அழகில்லை
  அழகும் அறிவும் அமைந்த பெண்கள்
  அதிசயமாய்ப் பிறந்தாலும்
  குறுகு மனம் கொண்டவர்கள்
  குலைக்காமல் விடுவதில்லை (அது-இரு)

  பள்ளி செல்லும் மாணவர்க்குப்
  படிப்பு வந்தால் பணமில்லை
  பணமிருந்தால் இளைஞருக்குப்
  படிப்பதிலே மனமில்லை;
  மனமிருந்து படிப்பு வந்து
  பரீட்சையிலும் தேறி விட்டால்
  பலபடிகள் ஏறி இறங்கிப்
  பார்த்தாலும் வேலையில்லை (அது-இரு)

  பொதுப்பணியில் செலவழிக்க
  நினைக்கும்போது பொருளில்லை
  பொருளும் புகழும் சேர்ந்தபின்னே
  பொதுப்பணியில் நினைவில்லை
  போதுமான பொருளும் வந்து
  பொதுப்பணியில் நினைவும் வந்தால்
  போட்ட திட்டம் நிறைவேறக்
  கூட்டாளிகள் சரியில்லை (அது-இரு)
  [ நல்ல தீர்ப்பு,1959 ] 
  ======================================================

  கெட்டதை விடுங்கள்
   சொல்லுறதைச் சொல்லிப்புட்டேன்
   செய்யுறதைச் செஞ்சுடுங்க
   நல்லதுன்னா கேட்டுக்குங்க
   கெட்டதுன்னா விட்டுடுங்க

   முன்னாலே வந்தவங்க
   என்னென்னமோ சொன்னாங்க
   மூளையிலே ஏறுமுன்னு
   முயற்சியும் செஞ்சாங்க

   ஒண்ணுமே நடக்காம
   உள்ளம் நொந்து செத்தாங்க
   என்னாலும் ஆகாதுன்னு
   எனக்கும் தெரியுமுங்க ( சொல்லு )

   முடியிருந்தும் மொட்டைகளாய்
   மூச்சிருந்தும் கட்டைகளாய்
   விழியிருந்தும் பொட்டைகளாய்
   விழுந்துகிடக்கப் போறீங்களா?

   முறையைத் தெரிஞ்சு நடந்து
   பழைய நினைப்பை மறந்து
   உலகம் போற பாதையிலே
   உள்ளம் தெரிஞ்சு வாரீங்களா ( சொல்லு )

   சித்தர்களும் யோகிகளும்
   சிந்தனையில் ஞானிகளும்
   புத்தரோடு ஏசுவும்
   உத்தமர் காந்தியும்

   எத்தனையோ உண்மைகளை
   எழுதிஎழுதி வச்சாங்க
   எல்லாந்தான் படிச்சீங்க?
   என்னபண்ணி கிழிச்சீங்க? ( சொல்லு )

   [பாண்டித் தேவன்,1959]

Saturday, October 6, 2018


தோழர் பா.இரஞ்சித் தயாரிப்பில் வந்துள்ள சிறந்த படம். தலித் சமுதாயத்தில் பிறந்த ஒருவர், தனது இழிவுகளில் இருந்து விடுபடக் கல்வியைக் கருவியாக்கிப் போராட முயற்சி எடுக்கிறார். அவர் சந்திக்கும் சமுதாயத் தடைகளுக்குக் கலை வடிவம் கொடுத்துள்ள தோழர் மாரிசெல்வராஜ் அவர்கள், சரியான ஒரு விவாதத்தைத் தொடங்க விரும்புகிறார். உரையாட வேண்டியவர்கள் உரையாட வேண்டியதன் அவசியத்தை இதைவிடச் சிறப்பாகக் கூறமுடியாது.
தலித் மக்களின் இன்றைய வாழ்க்கை முறையை வாழ்ந்து பார்க்காதவர்களுக்கும், தலித் வாழ்வியலை, தலித் உணர்வுகளை இதுவரை உணரமுடியாதவர் களுக்கும் இந்தப்படம் நிச்சயமாகப் புரியாது. பிடிக்காது. மேற்குத்தொடர்ச்சி மலை படத்துக்குத் தோழர் பா.இரஞ்சித் பாராட்டுத் தெரிவிக்கும் போது, “எளிமையைப் படமாக்குவது மிகப்பெரும் சவாலான வேலை” என்றார். அந்தச் சாதனையை மாரி செல்வராஜூம் எட்டியுள்ளார்.
“என்னை நாயாக மதிக்கிற உங்களோட நினைப்பு மாறாதவரை இங்கு எதுவுமே மாறப் போவதில்லை” என்று இறுதிக் காட்சியில் பரியன் பேசும் ஒற்றை வாக்கியம், பல நூறு பக்கங்களில் பேச வேண்டியவற்றை அடக்கியுள்ளது. மிகமிகத் திறமையான வசனம் அது. அதைவிட அந்த இறுதி ஷாட்.....திட்டிக்கொண்டே படம் பார்த்துக் கொண்டிருந்த சிலரையும் கைதட்ட வைத்தது. பல நூற்றாண்டுக் கொடுமைகளை ‘ஒரே ஒரு ஃபோட்டோ’ என்ற அளவில் உள்ள அந்த ஷாட் டில் விளக்கியுள்ள ஆற்றலுக்கு வாழ்த்துக்கள்.
தீண்டாமை ஒழிப்பு என்ற அளவில் ‘பரியன்’ பாராட்டுக்குரியவர். 
புறவாசல் வழியாக கைப்பற்றப்படும் 
BSNL டவர் வர்த்தகம்.


கடந்த 2018 ஆகஸ்டு மாதம் தமிழகம்உத்திரப்பிரதேசம்  (கிழக்குமற்றும் (மேற்கு), உத்தர்கான்ட் மாநிலங்களில் உள்ள 
6945 BSNL Tower களையும் நிர்வகித்து பராமரிக்கும்பொறுப்பை
ITI நிறுவனத்திற்கு 10 ஆண்டுகளுக்கு வழங்கி BSNL நிர்வாகம் 
உத்தரவு வெளியிட்டது. இதற்காக BSNL    Rs 6633.56 கோடி 
ரூபாயை ITI க்கு வழங்கியது.

உடனடியாக அனைத்துச் சங்கம் சார்பாக கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதற்கு நமது நிறுவனத்தின் CMD இந்த நடவடிக்கை மூலம் 1000 கோடி வருமானம் கிடைக்கும் என தெரிவித்தார். இருப்பினும் நமது தலைவர்கள் இந்நடவடிக்கை நமது நிறுவனத்தின் வளர்ச்சியைப் பாதிக்கும் என தங்களது கருத்தை பதிவு செய்தனர்.

தற்போது நமது கடும் ஆட்சேபங்களையும் மீறி இந்தியா முழுவதும் நமது நிறுவனத்திற்கு சொந்தமான டவர்களை பராமரிக்க இந்தியா முழுவதும்  10 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ITI உட்பட மேலும் மூன்று தனியார் நிறுவனங்களுக்கு குத்தகை விடப்பட்டுள்ளன.

அதன்படி

M/s Mahendra Mahendra  நிறுவனத்திற்கு 6329 டவர்களும்,
M/s AST Telecom Solar Pvt Ltd என்ற நிறுவனத்திற்கு 4808 டவர்களும்,

M/s Pace Power SystemPvt Ltd  என்ற நிறுவனத்திற்கு 10405 டவர்களும்,

குத்தகைக்கு விடப்பட்டுள்ளன.

அந்தந்த மாநில CGM கள் உடனடியாக உடன்படிக்கையில் 
கையெழுத்து இட்டு டவர்களை தனியார் வசம் As is Where is Basis  அடிப்படையில் ஒப்படைக்க வேண்டும்.

Tower Corporation எதிர்த்து நாம் போராடி வரும் நிலையில் ஒட்டு மொத்த டவர்களையும் குத்தகைக்கு விடுவதின் மூலம்  
மறைமுகமாக தனது நோக்கத்தை BJP அரசாங்கம்
நிறைவேற்றிவிட்டது.


அரசின் இம்முடிவை நாமும் வன்மையாக கண்டிப்பதும், போராடுவதும் அவசியம்.

Wednesday, September 19, 2018

மத்திய அரசு ஊழியர்களின் 
1968 போராட்டத்தின் பொன்விழா ஆண்டு..
போராட்ட தியாகிகளை நினைவு கூர்வோம்...1968 ஆம் ஆண்டு நடைபெற்ற மத்திய அரசு ஊழியர்களின் நாடு 
தழுவிய வேலை நிறுத்தப்போராட்டம் நாடு சுதந்திரம் அடைந்த 
பிறகு நடைபெற்ற மாபெரும் போராட்டமாகும்.நாடே 
போர்க்களமாக காட்சியளித்ததுபோராட்டத்தின் முக்கிய 
கோரிக்கை என்பதுவாழ்க்கைத்
தேவைக்கான குறைந்தபட்ச ஊதியம் வழங்கு என்பது
இக் கோரிக்கை15 வது இந்திய     தொழிலாளர்    மாநாட்டில்  நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் வடித்தெடுக்கப்
பட்டதுமேலும்  2வது ஊதியக்குழு பரிந்துரைகளை மேம்படுத்துவதுமற்றும் திருத்துவது ஆகியவை முக்கியமான கோரிக்கைகளாக 
இருந்தனஇரண்டாவது ஊதியக்குழுவில் மத்திய அரசு 
ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதிய கோரிக்கை
முற்றிலுமாக புறந்தள்ளப்பட்டிருந்தது.

இக்கால கட்டத்தில்தான் ஊழியர்களின் பிரச்சினைகளை பேசித் 
தீர்ப்பதற்காக முதன்முதலில் தேசிய கூட்டாலோசனைக்குழு 
அமைக்கப்பட்டதுமுதல் கூட்டத்தில் குறைந்தபட்ச ஊதியம்… 
விலைவாசியை ஈடுகட்டுதல்வேலைநீக்கத்தை கைவிடுதல்ஒப்பந்தமுறையை ஒழித்தல்….விலைவாசிப்படியை அடிப்படைச்
சம்பளத்துடன் இணைத்தல்..25 வருட சேவை முடித்தால் ஓய்வு என்ற நிலையைக் கைவிடுதல்… ஆகியவை முக்கிய கோரிக்கையாக 
வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டதுஆனால் தீர்வு ஏதும் 
ஏற்படவில்லைஅதனால் ஊழியர்கள் போராட்டத்திற்கு 
தள்ளப்பட்டனர்போராட்டம் ஆரம்பிக்கும் முன்பாகவே தலைவர்
களும் தொண்டர்களும் அரசின் ஒடுக்குமுறை நடவடிக்கைகளை
எதிர் கொண்டனர்திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் ஆரம்பமானதுவேலை நிறுத்தம் ஆரம்பிக்கப்பட்ட சில மணி          நேரங்களிலேயே  நாடு ஸ்தம்பித்ததுஅரசு போராட்டத்தைஒடுக்க எஸ்மா  சட்டத்தை பிரயோகித்ததுஅரசு இப்போராட்டத்தை உள்நாட்டு கிளர்ச்சி என அறிவித்ததுபோராட்டத்தை ஒடுக்க மத்திய , மாநில காவல் 
படையினர் ஏவி விடப்பட்டனர்.    போராட்டம்    நயவஞ்சமாக    ஒடுக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட 64000 ஊழியர்களுக்கு வேலை நீக்க கடிதம் கொடுக்கப்பட்டது , 12000  ஊழியர்கள்  சிறைவாசம் அனுபவித்தனர், 8000 ஊழியர்கள் மேல் வழக்கு 
பாய்ந்தது…7000 ஊழியர்கள் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டனர்...4000 ஊழியர்கள் கட்டாய வேலைநீக்கம் செய்யப்பட்டனர்.நாடு 
முழுவதும்   17 ஊழியர்கள் துப்பாக்கி சூட்டில் மரணம்அடைந்தனர்மத்திய அரசு ஊழியர்களின் போராட்டம் இந்திய தொழிலாளிகளின் வரலாற்றில் சிவப்பு எழுத்துக்களால் பொறிக்கப்பட்டது.

போராட்டம் நடைபெற்று 50 ஆண்டுகள் கடந்த நிலையிலும்  அன்றைய கோரிக்கையான வாழ்க்கைத் தேவைக்கான குறைந்தபட்ச ஊதியம் கோரிக்கை இன்றும் கனவாகவே உள்ளது.

இத்தகைய பின்னணியில் 1968 போராட்டத்தின் நினைவுகளை , போராட்டத் தியாகிகளை நாம் நினைவு கூர்கிறோம். தியாகிகளின் லட்சியம் நிறைவேற தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுக்க இத்தருணத்தில் உறுதியேற்போம்.

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR