தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Sunday, October 31, 2010

ஒன்றுக்கு மேல் ஏன்? இழி நிலை மாற, ஏற்றம் காண................


     ஒன்று பெற்றால் ஒளிமயம் - அதிகம் பெற்றால் அல்லல்மயம் என்பது குடும்பக் கட்டுப்பாட்டிற்கு சரியானதுதான் .
     ஆனால் 3 லட்சம்  ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்த 1 லட்சம் வாக்குகளை பெற்ற மைனாரிட்டி சங்கம் EU மட்டும் போதுமா?
     இதர இரண்டு லட்சம் பேர்களை பிரதிநிதிதுவப்படுத்த என்ன ஏற்பாடு?
     எல்லாம் சரி!  ஒன்றுக்குமேல் வேண்டாமென தோழர் O.P. குப்தாதானே கூறினார்!   இது BSNLEU சங்கம் சொல்லும் பதில்.   நம்மில் பலர் பேசும்  வாதமாகவும் உள்ளது.   
     தோழர் OPG ஏன் அப்படி கூறியிருந்திருக்க வேண்டும்?   ஏனென்றால் ஒன்று எனில் NFTE வந்துவிடும்.   ஒன்றுக்குமேல் எனில் இரண்டாவதாக EU வரலாம்.   இரண்டாவதாக வந்துவிட்டால் அது என்ன செய்யும்? 
     ஒப்பந்தங்களில் கையெழுத்திடவும், சம்பள மாற்றம், பதவி உயர்வு, போனஸ் என்று யாவற்றிலும் அது தாமதம் செய்யும் என்பதால் அது இரண்டாவதாகக் கூட வரக்கூடாது.      வந்தால் BSNL க்கும் ஆபத்து!  தொழிலாளிக்கும் ஆபத்து எனக் கருதித்தான் குப்தா வேண்டாமென்று கூறியிருக்க வேண்டும் .    
     முதலாவது சங்க அங்கீகாரத் தேர்தலுக்குப் பின்னல்   JCM ல் FNTO வையும் இணைத்துச் சென்றார் OPG.   EU சங்கம் நீதிமன்றம் சென்று நம்மை செயல்பட விடவில்லை.  தம்மை விட ஒட்டு குறைவாக பெற்ற  FNTO வை  NJCM -ல் வைக்கக் கூடாதென்றனர். 

   2 ஆவது சங்க அங்கீகாரத் தேர்தலில் FNTO வின் CELL சின்னத்தை 
வாங்கிக்கொண்டு, ( EU வின் சின்னம் ஆன்டனா! )   FNTO வாக்குகளைப் பெற்று  அங்கீகாரம் பெற்றது EU சங்கம். 

     இதன் மூலம் எது நடந்து விடக் கூடாது என்று OPG பயந்தாரோ அது நடந்தே விட்டது!  இரண்டாவதாகக் கூட EU சங்கம் வரக்கூடாதென நினைத்ததற்கு எதிராக முதல் சங்கம் அதுவும் ஒரே சங்கம் என்றாகி  -  இன்று     பல்வேறு  சீரழிவுகளைக்  கண்டு  வருகிறது BSNL நிறுவனமும் - ஊழியர்களும்.   

     இந்த இழிநிலையை  மாற்றிட, இதர பொதுத்துறை நிறுவனத்தில் உள்ளது போல் ஒன்றுக்கு மேற்பட்ட சங்கங்களுக்கு  அங்கீகாரம்  தேவை என்பது நமது NFTE உள்ளிட்ட ஒன்பது சங்கங்களின் நிலை!   
    
       அன்புடன், கே. நடராஜன், மாநில துணைச் செயலர், தஞ்சாவூர்.
 

Thursday, October 28, 2010

2010 – உலகின் தலை சிறந்த ஹீரோ ஒரு தமிழன்



இவர் உலகப்புகழ் பெற்ற CNN இணையதளத்தில் உலகின் தலை சிறந்த ரியல் ஹீரோக்களில் முதல் பத்தில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார் இதில் தேர்ந்தெடுக்கப்படும் ஹீரோக்கள் அமெரிக்காவில் நவம்பர் மாதம் 25 ஆம் தேதி Shrine ஆடிடோரியம், Los Angeles இல் நடக்கும் ஒரு பெரும் விழாவில் கௌரவிக்கப்பட இருக்கிறார்கள்.   இது CNN தொலைக்காட்சியில் இந்திய நேரம் காலை எட்டு மணிக்கு  ( நமக்கு நவம்பர் 26 ஆம் தேதி ) உலகம் முழுக்க நேரலை ஒளிபரப்பில் காட்டப்பட இருக்கிறது. .   ஆஸ்கார் சாதனையை விட இது தான் மகத்தான சாதனை.
பெயர் : நாராயணன் கிருஷ்ணன்
வயது : 29 
இருப்பு : மதுரை
அப்படி என்ன செய்து விட்டார் அவர்?  
தான் யார் என்றே அறியாத சித்த சுவாதீனம் கொண்ட மனிதர்களை நாம் சிறு கருணையுடனும் அல்லது கொஞ்சம் அருவருப்புடனும் கடந்து செல்வோம். சில சமயம் காசு போடுவோம். அதற்கு மேல் என்ன செய்வோம்? அதை மறக்க முயற்சிப்போம். ஆனால் இவர் அவர்களை தேடி சென்று தினமும் மூன்று வேளை உணவு தருகிறார். அருவருப்பில்லாமல் ஊட்டி விடுகிறார்கடந்த எட்டு வருடங்களாக ஒரு நாள் தவறாமல் இந்த சேவையை இவர் தொடர்ந்து செய்து வருகிறார். மழை, புயல்,தேர்தல்,கலவரம், பந்த் என்று எதுவும் பாராமல் வருடம் முழுக்க இந்த சேவையை செய்து வருகிறார்.    தினமும் 400 பேருக்கு மூன்று வேளை உணவு என்பது சாதாரணம் இல்லை.    இது வரை ஒரு கோடியே இருபது லட்சம் உணவு பொட்டலங்கள் விநியோகிக்கபட்டுள்ளது.
ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வேலை பார்த்தவிருதுகள் வென்ற செப் சமையல் கலை வல்லுநர் இவர்.   சுவிட்சர்லாந்தில் ஒரு பெரிய ஹோட்டல் நிறுவனத்தில் வேலை கிடைத்தவுடன் அதை பெற்றோர்களிடம் சொல்லிவிட்டு போவதற்காக மதுரைக்கு வந்தவர்.  அங்கே ஒரு வயது முதிர்ந்த ஒரு கிழவர் மலத்தை உணவாக உண்ணும் அவலத்தை கண்டு பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி தனது வெளிநாட்டு வேலையை துறந்து மதுரையிலேயே தங்கி வீட்டில் சமைத்து அதை இது போன்ற மனிதர்களை தேடி சென்று உணவு கொடுக்க ஆரம்பிக்கிறார்.   இது நடந்தது ௨௦௦௨ ல்.    இன்றும் இவரது சேவை தொடர்கிறது.  மதுரையை சுற்றி நூறு கிலோமீட்டர் பரப்பளவில் கண்ணில் படும் இதுபோன்ற மனிதர்களை தேடிபிடித்து உணவு தருகிறார்.   இதற்காக இவர் தன்னுடைய வாழ்க்கையை  முழுமையாக அர்ப்பணித்துள்ளார். இவரது அன்னை இவர் குறித்து கவலை பட்டு அழுதபோது, “அம்மா ஒரு நாள் என்னோடு வாங்க,  நான் என்ன செய்கிறேன் என்று பாருங்கள்.  அப்புறம் நீங்கள் சொல்வதை கேட்கிறேன்என்று சொல்லி அழைத்து போயிருக்கிறார்.   இவரது சேவையை கண்டு மனம் உருகிய அந்த தாய் நீ இவர்களை பார்த்துக்கொள், நான் உள்ளவரை உன்னை பார்த்துகொள்கிறேன் என்று சொல்லியி ருக்கிறார்.   இதை படித்த போது என் கண்களில் நீர் முட்டிக்கொண்டு வந்ததை அடக்க முடியாமல் தவித்தேன். எழுதும் இந்த கணமும் கூட.
 இவர் தான் உண்மையான ஹீரோ. சாகசம் செய்வது சாதனை அல்ல. இல்லாதவர்க்கு தேடிச்சென்று ஈவதே சாதனை.


அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப்ழி. (Kural)

ஏதும் இல்லாதவரின் கடும்பசியைத் தீர்த்து வையுங்கள். பொருளைப் பெற்றவன் சேமித்து வைக்கும் இடம் அதுவே.
ஆதலால் நீங்கள் சேர்த்து வைக்க தேர்ந்த  இடம்:
http://www.akshayatrust.org/contact.php
Akshaya’s Helping in H.E.L.P. Trust
9, West 1st Main Street,
Doak Nagar Extension,
Madurai – 625 010. India

Ph: +91(0)452 4353439/2587104
Cell:+91 98433 19933
E mail : ramdost@sancharnet.in 


 நீங்கள் வோட்டு போடவேண்டிய இடம்
 http://heroes.cnn.com/vote.aspx

Sunday, October 24, 2010

தேர்வின்றி..................

     தேர்வின்றி அனைவரையும் மேல்நிலைப்படுதுவோம் என்றது BSNLEU.  தேர்தல் நேர வாக்குறுதி இன்று காணாமலேயே போய்விட்டது. 
     31-10-2010 அன்று நடைபெறவுள்ளது  TM தேர்வு 
           10 th Pass ஆகியிருக்க வேண்டும் என்பது விதி
           10 th Pass ஆகாத தோழர்களுக்கு அனுமதி மறுப்பு   என்ற  நிலை. 

BSNLEU சங்கம்.RM/Gr. D தோழர்களுக்கு இரட்டை துரோகம் செய்துள்ளது 
     1   தேர்வின்றி TM ஆக்குவோம் என்ற வாக்குறுதியை  நிறைவேற்றவில்லை. 
     2   தகுதியும்/திறமையும்/ விருப்பமும் /ஆர்வமும் உள்ள RM தோழர்களை தேர்வு  
          எழுத அனுமதிக்கவில்லை.   
   அப்படியெனில் இவர்கள் TM ஆகவே முடியாதா?முடியும்.   அது நம்மால் முடியும்.

     குறைவான கல்வித் தகுதி உள்ள 10 th (PASS ஆகாத) தோழர்களும் தேர்வு எழுத முடியும், PASS ஆக முடியும், TM ஆக முடியும்.   
    
    இதனை கோரிக்கையாக நமது அகில இந்திய பொதுச் செயலர் C சிங் அவர்கள் நிர்வாகத்திடம்  கொடுத்துள்ளார். 

     கவர்ச்சிகரமான/பொய்யான கோரிக்கையால் வாக்கைப்  பெற்று அங்கீகாரம் பெற்ற சங்கத்திற்கு அதனை நிறைவேற்றும் பொறுப்பும், கடமையும் துளியுமில்லை என்பதற்கான சான்று இது.  

     " There is no Moral Commitment "                That is BSNLEU.
                                                                         Open    SC    ST   PH
     நமது  மாவட்டத்தில் TM  காலியிடங்கள் -44 . 33       7       3     1  
நமது மாவட்டத்தில் RM & Gr.D தோழர்கள்  
மொத்தம் 49
             TNJ  
1. S. Rajeswari, 2. P. Krishnaveni, 3. S. Thamilarasan, 4. P. Premalatha, 
5. G. விஜயா, 6. P. Murali, 7. R. Meenachi, 8. D. Anuradha, 9. R. Chinnasamy, 
10. L. Rajeswari , 11. G. Susila, 12. J. Amarnath rao, 13. S. Pitchaiyammal, 
14. R. Shanthi, 15. A. Nadiammal, 16. V. Parvathi. 17. R. Geetha, 
18. P. Arokiyamary,  19. L. Kalaiyarasan, 20. D. Jayalakshmi. 
             TVN
21. K. Bosekumar, 22. R. Mani, 23. R. Neela, 24. G. Sambath, 25. V. Srinivasan
26. N. Swaminathan, 27. R. Malathy, 28. P. Rajakumari
        TTP
29. V. Subramanian, 30. S. Thamilselvi, 31.M. Thangaiyan, 
32. M. Anbalagan   NNL, 33. Gnanasundari, NNL, 34. R. Asokan, NNL.
35. K. Kalpana  MNG, 36. V. Sivachandran MNG, 37. S. Sivarajan MNG, 
38. S. Vimalaraja MNG.
39. R. Mallika PTK, 40. D. Sellammal    PTK, 41. V. Elangovan PTK, 
42. T. Jagadeesan, PTK, 43. I. Mariyaselvam PTK.
44. V. Santhi KTN, 45. R. Valarmathi AYP, 46. M. Geetha  PSM, 
47. P. Shanmugam AME. 48. R. Ponnusamy, 49. S. Kalaiventhan AYP      

     இவர்களில் தேர்வு எழுதப் போவது அய்யம்பேட்டை தோழர் கலைவேந்தன் மட்டுமே.   அவருக்கு நமது வாழ்த்துக்கள். 

  கோரிக்கைகள் கடைச் சரக்கல்ல.      
தொழிற்சங்கம் கோரிக்கை விற்கும் அங்காடியுமில்லை.   
     கோரிக்கை என்பது, வாழ்க்கை சூழலில்,
தேவையின் அடிப்படையில் எழுவது.

இம்முறை நமது கோரிக்கை 
                                   
                               அது, இது, எதுவுமில்லை!

                                              அனைவரையும் ஒன்றிணைத்து, 

பிரச்சனையைத் தீர்க்க வல்ல தொழிற்சங்கம்தான். 

அதற்காக உழைப்போம்! அனைவரையும் காப்போம்!!
                                     தோழமையுடன், 
                    கே. நடராஜன், மாநில துணைச் செயலர், தஞ்சாவூர்.
                                                                                           
                  

Saturday, October 23, 2010

கேரள காம்ரேட்களின் கம்யூனிகேஷன் பார்ட்னர்.

     கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாளிதழ் " தேசாபிமானி ".   கேரள மாநிலம் முழுவதும் இப் பத்திரிக்கைக்கான தொலைத் தொடர்புச் சேவையை வழங்கி வந்தது BSNL.  இப்பொழுது எந்தவித முன்னறிவிப்புமில்லாமல் BSNL சேவைகளை துண்டித்துக்கொண்டது தேசாபிமானி  பத்திரிகை.
     ஏன்? BSNL சேவை திருப்தியாக  இல்லையா? 
     இப்போது  மார்க்சிஸ்ட் "தேசாபிமானி" தனக்கு சேவை தர புதிய கம்யூனிகேஷன் பார்ட்னர் ஒருவரை ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. 
     யார்? அந்த புதிய பார்ட்னர்!      ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்.
ஆச்சரியமாக இருக்கிறதா!
     ISD கால்களை லோக்கல் கால்களாக தில்லு முல்லு செய்து பல ஆயிரம் கோடிகள்  BSNL வருமானத்தை கொள்ளை கொண்டதே  அதே ரிலையன்ஸ்தான்.
     தகிடுதத்தம் செய்வதையே வணிக தர்மமாகக் கொண்ட அந்த ரிலையன்ஸ்தான்.
  இடதுசாரிகள்  மட்டுமல்ல!   நாடு முழுவதும் உள்ள நடுநிலையாளர்களின்  கண்டனங்களை பெற்று வரும் ரிலையன்ஸ்!
     அந்த ரிலையன்ஸ்தான் இப்போது கேரள காம்ரேடுகளின் புதிய கம்யூனிகேஷன் பார்ட்னர்.   
   மாற்றுச் சங்கங்களே இல்லையென்ற நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், அதிகாரபூர்வ சங்கமான BSNLEU சங்கத்தின் முழு செல்வாக்கு பெற்றுள்ள கேரளத்தில்தான் இந்த உடன்பாடு போடப்பட்டுள்ளது. 

     அதிகாரமும், அங்கீகாரமும் உள்ள BSNLEU பொதுச் செயலர் தோழர் நம்பூதிரி அவர்களின் கையொப்பத்துடன் வெளிவந்த JAC தீர்மானம் தற்போது  நமது நினைவுக்கு வந்து தொலைக்கிறது. 
     " அனைத்து மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் BSNL சேவைகளையே பயன்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் ".       இது தீர்மானம்.      
      
      கேரள காம்ரேடுகளின் தொலைத் தொடர்புச் சேவை பார்ட்னர் ரிலையன்ஸ்.      இது நடைமுறை!

     என்ன தோழர்களே!   எங்கேயோ இடிக்கிறதா?

    " அவர்கள் " போடும் கோஷங்களை அதன் முன்னணித் தோழர்கள் நன்றாகவே புரிந்து கொண்டிருக்கிறார்கள்.  

" புரட்சி செய்  -  வேலை செய்யாதே " 

படிப்பது வேறு -  இடிப்பது வேறு 

என்று இவர்கள் போடும் வேஷங்களை, இதுவரை புரிந்து கொள்ளாதவர்கள் இப்பொழுது புரிந்து கொண்டுவிட்டார்கள்.  இன்னும் புரிய வைப்போம்!!

அன்புடன்,
  S. சிவசிதம்பரம், பட்டுக்கோட்டை. 








 

Thursday, October 21, 2010

மரம் சும்மா இருந்தாலும்.................. சிவசிதம்பரம், பட்டுக்கோட்டை.

     மரம் சும்மா இருந்தாலும் காற்று அதை இருக்க விடுவதில்லை என்ற பழமொழிக்கு ஏற்ப BSNLEU நமது அமைதித் தன்மையை பெரிதும் குலைத்து விடுகிறது.  நமது துறை மற்றும் தொழிலாளியின் முன்னேற்றத்திற்கு தடைக்கல்லாய் இருப்பது அரசின் கொள்கைகள் மட்டுமல்ல!   BSNLEU  வும் தான் என்பதை நாம் நன்கறிவோம்.  
     வாதாடவும் தெரியாது, போராடவும் தெரியாது.  ஆனால் வாய் மட்டும் நீளம் என்பதை அதனுடைய வெப் சைட்டைப் பார்த்தீர்களானால் தெரியும். 
     பெங்களூரில் 201 NFTE  தோழர்கள் BSNLEU விலே சேர்ந்து விட்டார்களாம். திடீரென்று  இப்போ அவர்கள் சேர்ந்ததற்கு என்ன காரணமாக இருக்கும்?  என்று எனக்கு ஒரே குழப்பம்! இரவு முழுதும் தூக்கமே இல்லை!   ஒரு வேளை, 
 இவர்கள் புதிய தோழர்களாக இருக்கக் கூடுமோ!  
இதுவரை வாங்காததை  விட இம்முறை அதிகமான போனசை வாங்கிவிடுவார்கள் என்ற நம்பிக்கையாக இருக்குமோ?  என்றெல்லாம் சந்தேகம் வந்தது.  சேச்சே, அந்த அளவுக்கா ஞாபக மறதி இருக்கும்.     இருக்காது! 
இந்தமுறையும் நாங்களே ஜெயித்து விட்டால் முதல் அங்கீகாரத்  தேர்தலிலே சொன்னோமே, பரீட்சையில்லாமல் அனைவருக்கும் பதவி உயர்வு, அதை இம்முறை கண்டிப்பாகப் பெற்றுத் தருவோம் என்று எவராவது சொல்லியிருப்பர்களா! 
என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை? தயவு செய்து உங்களுக்குத் தெரிந்தால் சொல்லி விடுங்கள்!  
   முப்பது ஆண்டுகால தொழிற்சங்க  வரலாற்றில் இந்த பூஜாவுக்கு போனசே  இல்லை என்று ஆக்கிய சாதனைக்காகத்தான் 201 NFTE உறுப்பினர்கள் விலகி இருப்பார்களோ!
    அல்லது நம்மால்தான் முடியவில்லை, புதிய அங்கீகார விதிகள் பேச்சு வார்த்தையைப் பயன்படுத்தி அதன் மூலமாவது ஒற்றுமையைக் கட்டி எதிர்காலத்தில் எல்லா சிக்கல்களையும் போக்கி விடுவார்  என்ற நம்பிக்கையை துண்டுத் துகளாய் உடைத்தெறிந்தரே! அந்தக்  காரியத்தை இனி செய்ய மாட்டேன் என்ற முடிவை எடுத்திருப்பாரோ! வேறு என்னவாக இருக்கும்?
  எழுதிக்கொண்டேயிருக்கலாம் என்கின்ற அளவுக்கு BSNLEU வின் சாதனைப் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது.   எப்படியும் அந்த 201 NFTE  உறுப்பினர்களை கண்டுபிடித்து விடுவோம்!
      ஸ்பெக்ட்ரம் புகழ் ராசாவின் ஆதரவு பெற்ற tepu சங்கத்தின்   துணையோடு,  புரட்சிகரமான  மாற்றத்தை, மார்க்சீய பார்வை கொண்டு   சாதிக்கலாம் என்ற BSNLEU சங்கம் இன்றைக்கு, நிர்வாகத்தின் ஆதரவோடு  பிப்ரவரி 2 ஆம் தேதி  என்று தேர்தலுக்கு நாள் குறித்து  விட்டது.    
அன்றைக்குத் தெரியும் அந்த உண்மை. 

வருகின்ற சரிபார்ப்பு தேர்தல் அனைவருக்குமே எச்சரிக்கை என்பதை உணர்வோம்.  









      


 
            

Wednesday, October 20, 2010

நமது வலைதள முகப்பில் ( WEBSITE BLOG) மாற்றம்!

   நமது மாநிலச்  செயலர் தோழர் பட்டாபி அவர்களின் புகைப்படத்தை நமது வெப்சைட் முகப்புப் பகுதியில் வெளியிட்டிருந்தோம்.   பட்டாபி அவர்கள் துவக்கத்திலேயே அதை எடுத்துவிடக் கோரினார்.    நாமும் எடுத்துவிடுகிறோம் என்று அவரிடம் சம்மதம் கொடுத்தோம்.   ஆனால்  முன்னணித் தோழர்களிடம் இது பற்றி கலக்கும் போது கொஞ்ச நாள் இருக்கட்டுமே என்ற கருத்து வந்தது.  .  அதோடு,  பல் தோழர்களிடமிருந்து தஞ்சை வலைதள ப்ளாக் மிகவும் நன்றாக இருக்கிறது என்ற  comments -ம், தொலைபேசி மூலம் வாழ்த்தும் வந்தது.  இதனால் அதை எடுக்க மனம் வரவில்லை. ஆதலால் blog தொடர்ந்தது.   ஆனால் தோழர் பட்டாபி அவர்கள்  எடுக்கச் சொல்லி வலியுறுத்தியதோடு சைட்டில்   comments பகுதியில் எடுத்துவிட  வேண்டி எழுத்துபூர்வமாகவும்  வெளியிட்டுவிட்டார்.   
     இதன் காரணமாகத்தான்  அவரது புகைப்படம் ப்ளாக்கிலிருந்து  எடுக்கப்படுகிறது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.   இந்தளவுக்கு வலியுறுத்திய பிறகுதானே  அதை எடுத்திருக்கிறார்கள்  என்று பட்டாபி அவர்கள் தவறாக எங்களைப் புரிந்து கொள்ளக்கூடாது என்பதற்காகவும், இவ்வளவு நாள் இருந்ததை ஏன் எடுத்துவிட்டார்கள் என்று மற்றவர்கள் அறிந்து கொள்ளவும்தான் இந்த விளக்கம். 
                அன்புடன், G. கேசவன், மாவட்டச் செயலர், தஞ்சாவூர்.

Saturday, October 16, 2010

போனஸ் பெறாத பூஜா!!

     போனஸ் பெறப்பட்ட காலத்திலிருந்து கடந்த ஆண்டு வரை ஆயுத பூஜைக்கு முன்னர் போனஸ் பெற்று வந்தோம்.  அதற்கும்   சோதனை துவங்கி விட்டது கடந்த ஆண்டே.    நம்மிலிருந்து பிரிந்த அஞ்சல் பிரிவு GROUP D  தோழர்கள் பெற்ற ரூபாய் 7000/- போனசில் பாதியை அதாவது ரூபாய் 3500/- ஐ  கடந்த ஆண்டு பெற்றோம்.  இந்த ஆண்டு அதற்கும் ஆப்பு.   BSNLEU தன் வெப் சைட்டில் இந்த ஆண்டு நமக்கு போனஸ் கிடைக்காது என்றே எழுதி விட்டது.   திடீரென்று  இன்றைக்கு BSNLEU வுக்கு இணைந்து போராட எப்படி மனசு வந்ததோ!  தெரியவில்லை! சரி!  ஆராய்ச்சி வேண்டாம்!  இணைந்து போராட்டமும் நடத்தியாகி விட்டது .   என்னாயிற்று! சீனியர் டைரெக்டர் அகர்வால் (PLANNING ) அவர்கள் தலைவர்களைச் சந்தித்து போனஸ் கிடைக்கும் என்ற உறுதியை அளித்திருக்கிறார்.      ஆக, நிச்சயமற்ற நிலை என்பது மாறத் துவங்கியுள்ளது.
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்ற தத்துவம் நமது அங்கீகரிக்கப்பட்ட EU தலையில் ஏன் ஏற மறுக்கிறது, என்பதை நாம் இனியாவது  யோசிப்போமா! மாட்டோமா!! யோசித்தாக வேண்டும்.  நாம் அங்கீகாரத்தில் இருந்திருந்தால் அவர்கள் இப்படித்தான்  ஆராய்சிக் கட்டுரை  எழுதிக் கொண்டிருப்பார்களா!   இந்நேரம் புரட்சி வெடித்து அகிலத்தையே புரட்டிப் போட்டிருப்பார்கள் தோழர்களே!   அந்த அளவுக்கு விமர்சனத்தை நாம் கடந்த காலத்தில் கண்கூடாய்ப்  பார்த்திருக்கிறோம்.   உண்மையா! இல்லையா?
     இந்த ஆண்டு கிடைத்திருக்கும் இந்த சரிவை நமது எதிர்கால வாழ்வுக்கும், வளர்ச்சிக்கும் விடப்பட்ட எச்சரிக்கையாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.   அப்போதுதான் முன்னேற முடியும்!   நன்றி!  தோழர்களே! மீண்டும் சந்திப்போம்!
அன்புடன்,  
S. சிவசிதம்பரம், மாநில துணைத் தலைவர், பட்டுக்கோட்டை.

Friday, October 15, 2010

போனஸ்: உண்ணாவிரதம் வெற்றி.


    அடுத்த போர்டு கூட்டத்தில் போனஸ் குறித்து கண்டிப்பாக முடிவு எடுக்கப்படும் என்று  சீனியர் டைரக்டர் R.K. அகர்வால் அவர்கள் உண்ணாவிரதம் இருந்த தலைவர்களிடம் உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் முடிவுக்கு வந்தது. வெளிநாடு சென்றிருக்கும் CMD அக்டோபர் 25 ம் தேதி திரும்புவதால் SSA மட்ட பெருந்திரள் தர்ணா போராட்டம் அக்டோபர் 28 க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.  உடல் வருத்திப் போராடிய தலைவர்களை வணங்குகிறோம். 
            G. கேசவன், மாவட்டச் செயலர், தஞ்சை.

Tuesday, October 12, 2010

JAC அறைகூவல்:     
போனஸ் உடன் அறிவிக்கக்கோரி அகில இந்திய செயலாளர்கள்  அக்டோபர் 15 அன்று ஒரு நாள்  உண்ணாவிரதம்.   அக்டோபர் 19 ல் SSA அளவில் பெருந்திரள் தர்ணா.   வாருங்கள் தோழர்களே! போராட்டத்தை  வெற்றிகரமாக்குவோம்!!  
                      G. கேசவன், மாவட்டச் செயலர், தஞ்சை.

Wednesday, October 6, 2010

 

கல்லீரலைப் பாதிக்கும் குடியும், கொழுப்பும்


நமது உடலில் நடைபெறும் இரசாயன மாற்றங்கள் அனைத்திற்கும் அடிப்படையாகத் திகழ்கிறது கல்லீரல். கல்லீரல் பாதிக்கப்படும் போதுதான் மஞ்சள் காமாலையில் இருந்து, நமது உடலை பெரிதும் பாதிக்கும் பல வியாதிகள் ஏற்படுகின்றன. எனவே கல்லீரலை முறையான உணவு மற்றும் ‘இதர’ பழக்கங்களில் மூலம் பாதிக்காமல் காப்பது உடல் நலத்தை காப்பதற்கு ஒப்பானதாகும்.

நமது நாட்டைப் பொறுத்தவரை கல்லீரல் தொடர்பான நோய்கள் ஏற்படுவதற்கு இரண்டு காரணிகளே முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒன்று, குடிப் பழக்கம். இரண்டாவதாக, கொழுப்பு நிறைந்த உணவுகள்.

அளவிற்கு அதிகமாக குடிப்பதனால் (மருத்துவரை கலந்தாலோசித்து மது அளவை நிர்ணயித்துக் கொள்ளவும்) கல்லீரலிற்கு ஏற்படும் பாதிப்பே சாதாரண மஞ்சள் காமாலை நோயிலிருந்து ஹெப்பாடிடிஸ் பி ஆகியனவும், நீரிழிவு உள்ளிட்ட நோய்களும் ஏற்படுகின்றன. இவற்றை ஆல்கஹால் தொடர்பான கல்லீரல் நோய்கள் என்று மருத்துவம் கூறுகிறது.

மற்றொரு வகையான பாதிப்பு கல்லீரலில் கொழுப்பு அதிகமாகச் சேர்வதால் உண்டாகிறது. இதனை ஆல்கஹால் அல்லாத கல்லீரல் கொழுப்பு வியாதிகள் (Non-alcoholics fatty liver disease - NAFLD) என்று மருத்துவம் வகைப்படுத்துகிறது.

இந்த இரண்டாவது வகை - அதாவது கொழுப்பு சேகரிப்பால் கல்லீரல் கெடுவது - ஒருவருக்கு 35 வயதில் ஏற்படுகிறது என்று வைத்துக் கொண்டால், அவர் 55 வயதை அடையும்போது, கல்லீரல் வீக்கம் ஏற்பட்டு, அதனை மாற்றுக் கல்லீரல் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியத்தை ஏற்படுத்துகிறது. கல்லீரல் வீங்கி சிகிச்சையால் குண்பபடுத்த முடியாத நிலையைத்தான் லிவர் சிர்ரோசிஸ் என்றழைக்கின்றனர்.

நமது நாட்டைப் பொறுத்தவரை பலரும் மதுவினாலும், கொழுப்பு உணவுகளாலும் கல்லீரல் பாதிப்பிற்குள்ளானவர்களாக உள்ளனர். மது குடிப்பவர்கள் குடிக்கும் போது சாப்பிடும் உணவு வகைகள் பொதுவாக எண்ணெய் கலந்து தயாரிக்கப்படும் உடனடி உணவுகளாகவும் (fast foods), கொழுப்புச் சத்து அதிகம் கொண்ட உணவுகளாகவும் இருப்பதால் கல்லீரலிற்கு பாதிப்பு அதிகமாகிறது. இதுவே கல்லீரலை பலவீனப்படுத்தி, அது தொடர்பான எல்லா நோய்களுக்கும் வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கிறது.

அளவான குடிப்பழக்கம், முறையான உணவுப் பழக்கம், காலையில் உடற்பயிற்சி ஆகியன கல்லீரலை பாதுகாக்கும் மிகச் சாதாரண வழிகளாகும். பாதிக்கப்பட்டாலும் மருத்துவத்தின் உதவியால் மீண்டும் பழைய நிலைக்கு வந்து செயல்படும் திறன் பெற்ற உடலின் ஒரே உறுப்பு கல்லீரல் என்பதும் நினைவில் கொள்ளத்தக்கதாகும். எனவே, அதிகமாகக் குடித்தல், கொழுப்பு உணவுகளை அதிகம் சாப்பிடுதல் ஆகியவற்றை தவிர்த்தால் போதும். நல்ல கல்லீரலுடன் வாழ்நாள் முழுவதும் நன்றாக வாழலாம்.

“நமது உடலில் கல்லீரல் தான் நமக்கு மிகவும் உதவும் உறுப்பு. நமது உடலில் ஏற்படும் பல இரசாயன மாற்றங்களுக்கு அதுவே அடிப்படையாக உள்ளது. காயப்பட்டாலும் மீண்டும் பழைய நிலைக்கு வரும் திறன் கொண்டது. ஆனால் குடிப்பழக்கம், கொழுப்புணவுகள் மூலம் அதனை அதிகமாக கெடுத்துவிட்டீர்களானால், அது செயலற்றுப் போய்விடும். அதன் விளைவாக மற்ற உறுப்புகளும் பாதிக்கப்படும்” என்று எச்சரிக்கிறார் மருத்துவர் கோமதி நரசிம்மன். இவர் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் சென்னையிலுள்ள குறிப்பிடத்தக்க நிபுணர்களில் ஒருவர்.

குடிப்பழக்கத்தால் கல்லீரல் பாதிக்கப்பட்டவர்களிடம் களைப்பு, மலச் சிக்கல், மஞ்சள் காமாலைக்கான லேசான அறிகுறி ஆகியன இருக்கும். இதனைக் கண்டவுடன் உடனடியாக மருத்துவரை அணுகி, இரத்தச் சோதனை உள்ளிட்ட உடல் சோதனைகளைச் செய்து, நிலையை அறிந்து உரிய சிகிச்சை பெற வேண்டும். அதனைச் செய்யத் தவறினால் அது கல்லீரல் வீக்கத்தில் (லிவர் சிர்ரோசிஸ்) சென்று முடியும். அந்த நிலையில் கல்லீரல் மாற்றுச் சிகிச்சை தவிர வேறு வழி இல்லை.

எனவே, வெளியில் உணவு அருந்தும் போதும், நண்பர்களுடன் வாழ்வின் ஆனந்தமான அந்தப் பொழுதை மதுபானத்துடன் கழிக்கும்போதும் நினைவில் நிறுத்துக:   கல்லீரல் நலம்.                                 S. சிவசிதம்பரம்

Tuesday, October 5, 2010

அக்டோபர் 12 - போனஸ் கோரி ஆர்ப்பாட்டம்

     நமது பொதுச் செயலாளர் ஏற்கெனவே போனஸ் கோரி நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். அதை விபரமாக இதே வலைதளத்தில் முன்பே எழுதி இருக்கிறோம்.  இன்று ஜலந்தரில் நடைபெறுகின்ற CWC கூட்டத்தில் போனசுக்காக  நிர்வாகத்தை வலியுறுத்தி வருகிற அக்டோபர் 12  அன்று அனைத்து கிளைகளிலும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.     
     இதற்கிடையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 
      மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ்   ருபாய்      3454 
       ரயில்வே தொழிலாளருக்கு போனஸ்       ருபாய்      8860 
      அஞ்சல் துறை ஊழியர்களுக்கு போனஸ்  ரூபாய்      7000 
என்று அறிவிப்பு வந்து விட்டது.    

அங்கீகரிக்கப்பட்ட சங்கம் என்ன செய்கிறது?

     அங்கீகரிக்கப்பட்ட சங்கம் இன்னமும் போனஸ் பற்றி தேடுதல் நிலையிலேயே உள்ளது.   ஏனென்றால் அது செயல்திறனுடன் கூடிய போனஸ் திட்டத்தில் கையெழுத்து இட்டதால்  எந்த முகத்தை வைத்துக்கொண்டு போனஸ் கோரிக்கையை வைப்பது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறது.
     ஆனால் பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர் வர்க்க போராட்டம் குறித்து ரொம்ப மும்முரமாக எழுதிக் கொண்டிருக்கிறது அங்கீகரிக்கப்பட்ட சங்கம்.  
இது எப்படி இருக்கு? 

     ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக்குவீர்  தோழர்களே!

                                                                      அன்புடன்,
                     S. சிவசிதம்பரம், மாநில துணைத் தலைவர், பட்டுக்கோட்டை. .

Sunday, October 3, 2010

REAL INCIDENT.... 

VERY IMPORTANT... ....

This is a real incident that happened in a local
hospital in Bangalore , India . A 4 year old girl was admitted due to leg fracture. As it was an open fracture, she had to undergo an operation
to stitch the protruding bone back in place.
Though it was quite a minor operation, she was hooked on to life support system, as a part of the process.
The doctors had to input some data prior to the operation to suit different conditions. Thereafter, the operation proceeded. Half way through the process, the life support system suddenly went dead.

The culprit : -
Some one was using his/her hand-phone outside the operation theatre. And the frequency had affected the system.. They tried to track the person, but to no avail. The little girl, young and innocent as she was, died soon after.

Be compassionate! Do not use your hand phone / mobiles
especially at any hospitals or within the Aircraft or any places where you are told not to use it... You might not be caught in the act, but you might have killed someone without knowledge.

Please pass this to as many, since most of us are just not aware of the seriousness of this issue.


 
Last Word :
Please avoid using your mobile phones in hospitals / petrol pumps / aircraft etc ... wherever it is mentioned no use of mobiles, go by the rules, it's a matter of life & death.

தேச தந்தைக்கு பிறந்தநாள்

காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்

1.புத்திலிபாய்
போர்பந்தர் சமஸ்தானத்தில் திவான் பதவி வகித்தவர் உத்திமசந்திர காந்தி. அவருடைய ஐந்தாம் மகனாகப் பிறந்தவர் பிறந்தவர் கரம்சந்திர காந்தி என்று அவரை அழைப்பது வழக்கம். காபா காந்தி ராஜ்காட்டில் திவானாக இருந்தார். புத்திலிபாயை மணந்துகொண்டார்.

புத்திலிபாய்க்கு ஒரு பெண்ணும் மூன்று பிள்ளைகளும் பிறந்தார்கள். 1869-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ம நாளன்று காபா காந்தி–புத்திலிபாயின் கடைசி மகனாகத் தோன்றியவர் மோகன்தாஸ் கரம்சந்திர காந்தி. காபா காந்தி நாணயமும் நேர்மையும் மிகுந்த திவானாக இருந்தார். புத்திலிபாய் தவஒழுக்கத்தில் சிறந்த பெண்மணியாக விளங்கினார்.

தினசரி பிரார்த்தனை செய்தபிறகே உணவு உட்கொள்வதை புத்லிபாய் வழக்கமாகக் கொண்டிருந்தார். தினந்தோறும்  விஷ்ணு கோவிலுக்குச் சென்று வருவார். ஆண்டுதோறும் சாதுர்மாஸ்ய விரதத்தை தவறாமல் கைக்கொள்வார். மிகக் கடுமையான விரதங்களை மேற்கொண்டு, அதை நிறைவேற்றி வருவார். உபவாசம் இருப்பார். சாதுர்மாஸத்தில் புத்லிபாய் ஒருநாளைக்கு ஒரு வருடங்களில் ஒருநாள் விட்டு ஒருநாள் பூரண உபவாசம் இருப்பார்.

ஒரு வருடத்தில் சாதுர்மாஸ்ய விரதத்தின்போது, புத்திலிபாய் தினம் சூரிய தரிசனம் செய்தபிறகே சாப்பிடுவேன் என்று உறுதி எடுத்துக்கொண்டார். அவ்விதமே செய்து வந்தார். தினமும், மோகனதாஸூம் அவருடைய உடன்பிறப்புகளும் காலை வேளையில் சூரியன் எப்போது மேகக் கூட்டங்களிலிருந்து வெளிவரப் போகிறான் என்று பார்த்துக் கொண்டிருப்பார்கள். மழைக்காலமானதால், சூரியனின் தரிசனம் கிடைத்ததும், குழந்தைகள் ஓடிச்சென்று தாயிடம் தெரிவிப்பார்கள். புத்லிபாய் வெளியில் வந்து பார்ப்பதற்குள் சூரியன் மறைந்திருப்பான். ‘அதனாலென்ன மோசம்! இன்று நான் சாப்பிடுவது பகவானுக்கு விருப்பமில்லை’ என்று கூறியபடி, மலர்ந்த  முகத்தடன் மீண்டும் வீட்டு வேலைகளைக் கவனிக்கத் தொடங்கிவிடுவார்.

புத்லிபாய் கல்விஞானம் பெற்றிராவிடினும், அனுபவ ஞானம் அதிகம் பெற்றிருந்தார். ராஜ்காட் சமஸ்தானத்தில் இருந்த ராஜ குடும்பத்துப் பெண்மணிகள் எல்லோரும் புத்லிபாயின் அனுபவஞானம் மிகுந்த பேச்சைக் கேட்பதில் மிகவும் விருப்பம் உடையவர்கள். புத்திலிபாய் அடிக்கடி சமஸ்தானத்துக்குச் சென்று அங்குள்ள பெண்களோடு உற்சாகமாகப் பேசுவார்.

2. அரம்பை சொன்ன வழி
மோகன்தாஸ் காந்தி, சிறு பிள்ளையாக, இருந்தபோதே கோவிலுக்குச் செல்வார். தாயுடன்  விஷ்ணு கோவில்களுக்குப் போவார். புத்லிபாயின் பக்தியும்,  தெய்வ நம்பிக்கையும் கண்டு மோகனதாஸூக்கு வியப்பு ஏற்பட்டது. ஆனால், மோகனதாஸின் இளம் உள்ளத்தில் பக்திப் பயிரை விளைவித்தவள், அவரது வீட்டில் வேலை செய்து வந்த அரம்பை என்ற பெண்மணியே ஆவார்.

காந்திஜியை எடுத்து வளர்த்த செவிலித்தாயாகவும் இருந்தவள் அரம்பை. காந்திஜிக்குப் பயம் அதிகம். பாம்பு பயமும் திருடர் பயமும் அதிகம். அத்துடன் இருட்டைக் கண்டால் காந்திஜி நடுநடுங்கிப் போவார். இருட்டில், கண்ணை மூடினால் பிசாசுகள் நிறைய வருவதாகவும் எண்ணி நடுங்குவார்.

காந்திஜிக்கு இருந்த இந்த பயங்களைப் போக்க வேண்டும் என்று அரம்பை மிகவும் பாடுபட்டாள்.

ஒருநாள் காந்திஜி, இருட்டறையில் தனியாகச் செல்வதற்குப் பயந்தார்.

“ஒன்றும் பயமில்லை, போ” என்றார்கள் அவருடைய சகோதரர்கள். ஆனால் காந்திஜி போகவில்லை. பயத்தோடு நின்றிருந்தார்.

அரம்பை இதனைக் கண்டாள். காந்திஜியின் பயத்தைப் போக்க வேண்டும் என்று எண்ணினாள்.

“மோகன்தாஸ், உனக்கு பயம் தோன்றும் போதெல்லாம் ‘ராம், ராம்’ என்று சொல். அந்த ராம நாமம் உன் பயத்தைப் போக்கிவிடும்”.

அவள் சொன்னதும், மோகன்தாஸ் காந்திஜிக்கு நம்பிக்கை ஏற்பட்டது. ‘ராம், ராம், ராம்’ ராம்’ என்று கூறிக்கொண்டே இருட்டறைக்குள் சென்றார். பயம் மெல்ல மெல்ல அவரை விட்டு அகன்றது.

அது முதல் மோகன்தாஸ் காந்தி ராம நாம ஜெபம் செய்யத் துவங்கினார். அவர் இறக்கும் தருணத்திலும் ‘ஹே ராம்’ என்று ராம நாமத்தைக் கூறிக்கொண்டேதான் இறந்தார்.

 3. மனத்தில் நிலைத்த நாடகம்
இராஜ்காட்டில் மோகன்தாஸ் பள்ளிப் படிப்பைத் தொடந்தார். மத்தியதர மாணாக்கனாகவே அவர் விளங்கினார். வெட்கம் நிறைந்த மாணவனாகவே அவர் விளங்கினார். வெட்கம் நிறைந்த மாணவனாக, யாருடனும் அதிகம் பேசாமல் இருப்பார். ஒருமுறை அவர் படித்த பள்ளிக்கு மிஸ்டர் கைல்ஸ் என்பவர் இன்ஸ்பெக்டராக வந்தார்.

மோகன்தாஸ் படிக்கும் வகுப்புக்கு இன்ஸ்பெக்டர் வந்து, ஜந்து வார்த்தைகளைச் சொல்லி மாணாக்கர்களை எழுதுமாறு கூறினார். அந்த வார்த்தைகளில் ஒன்று ‘கெட்டில்’ என்பதாகும். அதனை மோகன்தாஸ் தவறாக எழுதினார். அப்போது, அங்கே வந்த வகுப்பு ஆசிரியர், மோகன்தாஸ் தவறாக எழுதியிருப்பதைச் சுட்டிக்காட்டி, அவரது கால்களை அழுத்தினார்.

அருகில் இருக்கும் மாணவனைப் பார்த்து, சரியாக எழுதச் சொல்லவே அவர் அழுத்தினார். ஆனால் அவ்விஷயம் மோகன்தாஸூக்குப் புரியவில்லை.

‘காப்பி’ அடித்து எழுதுவது தவறு என்று மோகன்தாஸ் எண்ணினார். ‘கெட்டில்’ என்ற வார்த்தையை மோகன்தாஸைத் தவிர மற்ற எல்லா மாணவர்களும் சரியாக எழுதியிருந்தார்கள்.  மோகன்தாஸ் தமது ஆசிரியரிடம் பெருமதிப்பு வைத்திருந்தார். பள்ளியில் நடந்த இந்த நிகழ்ச்சியை வாழ்நாள் முழுவதும் அவர் நினைவில் வைத்திருந்தார்.

மோகன்தாஸின் பள்ளிப் பருவத்தில் நடந்த மற்ற இரு நிகழ்ச்சிகள், அவருடைய பிற்கால வாழ்வின் அடித்தளங்களாக அமைந்தன எனலாம்.

காபா காந்தியின் ‘சிரவணபித்ரு பக்தி நாடகம்’ என்னும் புத்தகம் இருந்தது. அப்புத்தகம் மோகன்தாஸை மிகவும் கவர்ந்தது. புத்தகத்தை அவர் பலமுறை படித்தார். அச்சமயத்தில் படக்காட்சி நடத்துபவர் சிலர் ராஜ்காட்டிற்கு வந்தார்கள். சிரவணன் பித்ரு பக்தி நாடகக் காட்சிகளைப் படமாக காட்டியதை மோகன்தாஸ் பார்த்தார். கண்ணிழந்த தாய் தந்தையரை சிரவணன் காவடியில் வைத்துக்கொண்டு தூக்கிச் செல்வதை மோகன்தாஸ் படக்காட்சியில் பார்த்தார். அக்காட்சியானது அவரது மனத்தை விட்டு அகலவே இல்லை. சிரவணன் இறந்ததும் அவனது பெற்றோர்கள் துன்பக் கடலில் ஆழ்ந்து புலம்பினார்கள். அப்போது சோகரசம் ததும்பும் பாடல் ஒன்றைப் பாடுவதாக படக் காட்சியில் காட்டப்பட்டது. அந்தப் பாட்டும் அதன் மெட்டும் மோகன்தாஸின் உள்ளத்தை உருக்கியது. தந்தை வாங்கித் தந்த வாத்தியக் கருவியில் மோகனதாஸ் அந்த சோகப்பாட்டை அடிக்கடி வாசிப்பார்.

சிரவணனின் கதை, மோகன்தாஸூக்கு ஒரு முன்னுதாரணமாக அமைந்தது.

இச்சமயத்தில், ஒரு நாடகக் கம்பெனி, அரிச்சந்திர நாடகத்தை நடத்தியது. மோகன்தாஸ், இந்த நாடகத்தைக் காணத் தந்தையிடம் அனுமதி பெற்றிருந்தார். நாடகத்தைக் காணச் சென்றார். அரிச்சந்திரனின் சத்தியம் தவறாத வாழ்வும் அதனால் அவர் அடைந்த துன்பங்களையும் கண்டு மோகன்தாஸ் மனம் உருகினார். அந்த நாடகம் அவரது நெஞ்சில் நீங்கா  இடம் பெற்றது.

பலமுறை அந்நாடகத்தைக் காணச் சென்றார். வீட்டிற்கு வந்தபிறகும் அதே நினைவாக, அரிச்சந்திரனாக தன்னை கற்பனை செய்துகொண்டு நடித்து மகிழ்ந்திருப்பார்.

‘அரிச்சந்திரனைப் போன்று ஏன் எல்லோரும் சத்தியவந்தர்களாக இருக்கக்கூடாது?’ என்று தனக்குத்தானே கேட்டுக்கொள்வார்.

சத்தியத்தைக் கடைப்பிடிப்பது நின்று அரிச்சந்திரன் பட்ட துன்பங்களை எல்லாம் அனுபவிக்க வேண்டும் என்ற இலட்சியம் அவருடைய உள்ளத்தில் குடி கொண்டது.

மோகன்தாஸின் வாழ்வு மகத்தான வாழ்வாக மலர, இளம் உள்ளத்தில் விழுந்த இந்த விதைகளே, பெரும் மரங்களாகி உயர்ந்த லக்ஷியங்களாயின என்பதைக் கூறவும் வேண்டுமோ?

 4.சைவ உணவின் பெருமை

மோகன்தாஸூக்கு பதின்மூன்று வயது இருக்கும் பொழுது, ஒரு நண்பர் அவரோடு நட்பு பாராட்டினார். அந்த நண்பர் அவரோடு நட்பு பாராட்டினார். அந்த நண்பர் நல்ல பலசாலியாகவும் பராக்கிரமச் செயல்கள் செய்பவராகவும் விளங்கினார். அவருடைய தேக பலத்தைப் பார்க்க மோகன்தாஸூக்கு வியப்பு ஏற்படும்.

“நாம் பலவீனர்களாக இருப்பதற்குக்  காரணமே புலால் உண்ணாததுதான். ஆங்கிலேயர்களைப் பார். நம்மை அவர்கள் அடிமைப்படுத்தி ஆட்சி செய்வதற்கு என்ன காரணம்? அவர்கள் புலால் உண்கிறார்கள். பலசாலியாக விளங்குகிறார்கள்” என்று நண்பர் அடிக்கடி கூறுவதை மோகன்தாஸ் கேட்டார்.

மோகன்தாஸ் இயல்பாகவே மிகுந்த பயந்த சுபாவம் உடையவர். உடல் மெலிந்தவர். நண்பர் கூறுவதைக் கேட்டு, புலால் உண்ணுவதால்தான் பலம் பெற முடியும் என்று தீர்மானித்தார். புலால் உண்டு, பலம் பெற்று, இந்தியர்களை, ஆங்கிலேயரை நாட்டை விட்டே விரட்டி விடலாம் என்றும் எண்ணினார்.

மோகன்தாஸின் குடும்பத்தார் சைவ உணவே உண்பவர்கள். எனவே புலால் உண்பதை வீட்டில் இருப்போர் அறியாமல் உண்ண வேண்டும். இதை எண்ணி மோகன்தாஸ் கலங்கினார். ஆனால் நண்பர், அவரது கலக்கத்தைப் போக்கினார். வீட்டிலுள்ளோர் அறியாதவாறு உண்ணலாம் என்றார்

முடிவாக, ஒருநாள் குறிக்கப்பட்டது. நண்பர் ஆற்றங்கரைக்கு மோகன்தாஸை அழைத்துச் சென்றார். தனியான இடத்தில் நண்பர், தாம் கொண்டுவந்திருந்த உணவுப் பொட்டலத்தைப் பிரித்தார். இருவரும் சாப்பிடத் துவங்கினார்கள். மோகன்தாஸூக்கு, புலால் உணவும் பிடிக்கவில்லை. யாரும் அறியாமல் இச்செயலைச் செய்வதும் பிடிக்கவில்லை. ஒரு வாய்கூட அவரால் சாப்பிட முடியவில்லை. எழுந்துவிட்டார்.

நண்பரும் அதிகம் வற்புறுத்தவில்லை. முதல்நாள் தானே, இனி போகப் போக, மோகன்தாஸூக்கு புலால் உண்ணும் பழக்கம் ஏற்பட்டுவிடும் என்று நினைத்தார்.

மோகன்தாஸ், வீடு வந்து சேர்ந்தார். அவருக்கு, தாம் ஏதோ குற்றம் செய்துவிட்டோம் என்ற குறுகறுப்பு இருந்தது.

பெற்றோர்களுக்குத் தெரியாமல் செய்ததை மோகன்தாஸ் பெரும் குற்றமாகவே எண்ணினார். இரவு முழுவதும் இதைப்பற்றி எண்ணி வருந்தினார். தூங்கினால், வயிற்றுக்குள் உயிருள்ள ஆடு கத்துவது போலக் கனவு கண்டு திடுக்கிட்டு விழித்துக்கொண்டார்.

உடல் பலம் பெறுவதற்காக புலால் உண்பதும் அதை மறைத்துச் செய்வதும் மோகன்தாஸூக்குப் பிடிக்கவில்லை.

பொய் சொல்வது என்பது மோகன்தாஸூக்கு பிடிக்காத குணம். எனவே, தாய் தந்தையரை ஏமாற்றி அவர்களிடம் பொய் சொல்லி புலால் உண்டு, பலம் பெற வேண்டாம் என்று தீர்மானித்தார்.

எனவே மறுநாள் முதல், நண்பரிடம் தன்னுடைய தீர்மானத்தைக் கூறிவிட்டார். நண்பர் பலமுறை வற்புறுத்தியும், மோகன்தாஸ், தமது தீர்மானத்தைக் கைவிடவில்லை.

மோகன்தாஸின் இந்தக் கொள்கை பிற்காலத்தில் அவருக்கு மிகவும் பயனளித்தது. புலால் உண்பதைவிட சைவ உணவு உண்பவரே தேகபலத்தில் விஞ்சியவராக இருக்கிறார் என்று மகாத்மா காந்தி கூறினார். மகாத்மா காந்தி இங்கிலாந்தில் படித்த காலத்திலும், தென்னாப்ரிக்காவில் வாழ்ந்த காலத்திலும் சைவ உணவையே உண்டு வந்தார். அதுவே சாத்வீகமான–ஆரோக்கியமான உணவு என்பது காந்திஜியின் கொள்கை.

 5. தந்தை காட்டிய பாதை
காந்திஜியின் இளம் வயதில் ஒருவரோடு நட்பு கொண்டுருந்தார். அந்த நண்வர் சுருட்டு குடிக்கும் வழக்கமுடையவர். அவருடன் சேர்ந்ததால் காந்திஜிக்கும் இந்தக் கொடிய பழக்கம் தொற்றிக்கொண்டது. சுருட்டு குடிக்கும் பழக்கத்தை நாகரீகம் உள்ளவர் என்பதைக் காட்டிக் கொள்ள காந்திஜியும் நண்பருடன் சேர்ந்து புகை பிடிக்கத் துவங்கினார்.

இப்பழக்கத்தின் காரணமாக செலவுக்குப் பணம் தேவைப்பட்டது. சுருட்டு வாங்குவதற்கு பணம் வேண்டுமே. சில காலம் கடைகளிலும் நண்பர்களிடமும் பணம் கடனாகப் பெற்று சுருட்டு வாங்கினார். கடனை அடைப்பதற்குப் பணம் தேவைப்பட்டதும் என்ன செய்வது என்று யோசித்தார்.

தமது மூத்த சகோதரரின் தங்கக் காப்பிலிருந்து ஒரு பகுதியை காந்தி வெட்டி எடுத்தார். இவ்வாறு செய்யும் போது அவர்மீது அவருக்கே வெறுப்பும் வேதனையும் ஏற்பட்டது. தாம் செய்யும் செயல் எத்தகையது என்று எண்ணிப் பார்த்து தாங்கொணாத துயரம் அடைந்தார்.

கடைசியாக, தாம் செய்த தவறுகள் எல்லாவற்றையும் தந்தையிடம் கூறி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று விரும்பினார். ஆனால் அவர் செய்தவற்றை, நேரில் சொல்வதற்கு நடுக்கமாக இருந்தது. எனவே காகிதத்தை எடுத்தார். தாம் செய்த குற்றங்களுக்குத் தகுந்த தண்டனை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

காந்திஜியின் தந்தை காபா காந்தி உடல்நலம் சரியில்லாத்தால் படுத்த படுக்கையாக இருந்தார்.

தந்தையிடம் சென்று தாம் எழுதிய கடிதத்தைக் கொடுத்தார். அவர் படித்துவிட்டு தரும் தண்டனையை எதிர்நோக்கி அருகில் நின்றிருந்தார்.

காந்திஜி தந்த கடித்த்தை வாங்கிக்கொண்ட காபாகாந்தி, எழுந்து உட்கார்த்துகொண்டார். கடித்த்தைப் படித்தார். படிக்கும்போது அவருடைய கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.

கடிதத்தைப் படித்து முடித்தும் கண்களை மூடிக் கொண்டார். பிறகு கடிதத்தைக் கிழித்துப் போட்டார். பிறகு படுத்துக்கொண்டார்.

தான் செய்த தவறுகளுக்கு தந்தையிடம் தண்டனையை எதிர்பார்த்து நின்ற காந்திஜி அழுதார். கோபம் கொண்டு திட்டுவார் அல்லது அடிப்பார் என்றி காந்திஜி எண்ணினார்.

தந்தையிடம் காந்திஜி மறைக்காமல், தமது தவறுகளைக் கூறி மன்னிப்புக் கேட்டாரல்லவா? குற்றம் செய்வதை ஒப்புக்கொள்பர்களை மன்னிக்க வேண்டும் என்பதே காபா காந்தியின் எண்ணமாக இருந்தது.

இதை காந்திஜிஅஹிம்சை என்று உணர்ந்தார். அன்பால் எதையும் வெல்லாம் என்பதே அஹிம்சையின் ஆணிவேர். இந்த தத்துவம், இளம் பிள்ளையாக இருக்கும் போதே காந்திஜியின் மனத்தில் ஆழ வேரூன்றச் செய்தது இந்தச் சம்பவமே!

பெரும் சாதனைகளை பிற்காலத்தில் செய்ய அஹிம்சையும் சத்தியமுமே காந்திஜிக்குத் துணையாக நின்றன.

தந்தையிடம் குற்றத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்பையும் பெற்றபிறகு காந்திஜி, தேவையற்ற பழக்கங்கள் அனைத்தையும் விட்டுவிட்டார்.

 6. சத்தியம் காத்தார்
மோகன்தாஸ் காந்திஜியின் தந்தை உடல்நலம் குன்றி படுத்த படுக்கையானார். அவருக்கு வேண்டிய பணிவிடைகளை மோகன்தாஸ் செய்து வந்தார். அவருக்கு ஏற்பட்டிருந்த புண்ணைத் துடைத்துக் கட்டுவது, மருந்து கொடுப்பது, அவருடைய கால்களைப் பிடித்துவிடுவது போன்றவற்றைச் செய்தார். மருத்துவம் பார்த்தும், கவனமுடன் இருந்தபோதிலும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. அவர் காலமானார்.

தந்தை இறந்தபோது மோகன்தாஸூக்கு வயது பதினாறு. பள்ளியில் படித்துக்கொண்டிருந்தார். இரண்டு வருஷங்களில் மெட்ரிகுலேஷன் தேர்வில் தேறினார்.

பின்பு பவநகரில் இருந்த ஸமால்காஸ் கல்லூரியில் சேர்ந்தார். கல்லூரி வாழ்வு மோகன்தாஸூக்குப் பிடிக்கவில்லை. தந்தையின் நண்பரும் குடும்ப ஆலோசகருமான மாவ்ஜி தவே என்பவர் ராஜ்காட் வந்திருந்தார். அவர், மோகன்தாஸின் கல்வியைப் பற்றி கேட்டார்.

கல்லூரியில் படிப்பது பற்றிக் குடும்பத்தார் கூறினார்கள்.

ஆனால் மாவ்ஜி தவே, பி.ஏ. படித்து, பின்பு சட்டம் படிக்க இன்னும் ஆறு வருஷம் ஆகும். அப்படிப்படித்தாலும் சம்பளம் அதிகம் கிடைக்குமா என்பது சந்தேகமே. அதைவிட இங்கிலாந்து சென்று பாரிஸ்டர் பட்டம் பெற்று வந்தால் வக்கீலாகவும் இருக்கலாம். இல்லையென்றால் சமஸ்தானங்களில் திவான் பதவியில் இருக்கலாம். பாரிஸ்டர் படிப்பு மூன்று வருஷத்தில் முடிந்துவிடும் என்றார்.

அவர் கூறியது நல்ல யோசனையாகவே இருந்தது. ஆனால் மோகன்தாஸ் குடும்பத்தார்  அதற்கு ஒப்பவில்லை. அக்காலத்தில் கடல் கடந்து செல்வது என்பது பெரும் குற்றமாகக் கருதப்பட்டது.

சிறிய தந்தையைப் பார்த்துப் பேச மோகன்தாஸ் ராஜ்காட்டிலிருந்து போர்பந்தருக்குச் சென்றார்.

இங்கிலாந்து சென்று மேற்படிப்பு படிப்பதைப் பற்றிய அவரது எண்ணத்தைக் கேட்டார்.

எல்லாவற்றையும் விபரமாகக் கேட்ட மோகன்தாஸின் சிறிய தந்தை, ‘என்னுடைய ஆசி உனக்கு என்றும் உண்டு. உன் தாய் சம்மதம் தந்தால் நீ இங்கிலாந்துக்குப் போ’ என்று கூறி அனுப்பினார்.

மோகன்தாஸ் ராஜ்காட் வந்ததும் நேராக அன்னை புத்லிபாயிடம் வந்தார். சிறிய தந்தை அனுமதியளித்துவிட்டார் என்று கூறி அன்னையின் அனுமதியை வேண்டினார்.

புத்லிபாய் எளிதில் இணங்க மறுத்தார்.

‘அம்மா, நான் வெளிநாடு சென்று படிப்பதில் உனக்கு விருப்பமில்லையா? ஏன் என்னைத் தடுக்கிறாய்?’

‘மோகன்தாஸ் என் மனத்தில் இதைப்பற்றி சில எண்ணங்கள் இருக்கிறது. வெளிநாட்டுக்குச் செல்பவர்கள் ஒழுக்கம் தவறி நடப்பதாக நான் கேள்விப்படுகிறேன். அதனால்தான் நான் உன்னை அனுப்பத் தயங்குகிறேன்’.

‘என்னை நம்புங்கள் அம்மா. நீங்கள் செய்ய வேண்டாம் என்று சொல்வதைச் செய்யமாட்டேன். இது உண்மை’ என்றார்.

‘தூரதேசம் செல்லும்போது நீ உறுதியாக இருந்தாலும் அவ்வாறு இருக்க முடியுமா? மோகன்தாஸ் எனக்கு கலக்கமாக இருக்கிறது’.

அன்னையின் கலக்கத்தை மோகன்தாஸ் காந்தி உடனே போக்கினார்.

‘மதுபானம் செய்யமாட்டேன்; மாமிசம் உண்ண மாட்டேன். மங்கையரைத் தொடமாட்டேன்’ என்று உறுதியோடு கூறி சத்தியம் செய்து கொடுத்தபிறகு புத்லிபாயின் கலக்கம் நீங்கியது.

மோகன்தாஸ் காந்தி இங்கிலாந்து செல்ல அனுமதி அளித்தார்.

1887-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4-ம நாளன்று பம்பாயிலிருத்து இங்கிலாந்துற்குக் கப்பலில் பயணமானார்.

7. மமிபாய்க்காக வாதிட்டார்

மூன்றாண்டு காலம் லண்டனில் வசித்து மேற்படிப்பை முடித்தார், மோகன்தாஸ் காந்தி. 1891-ம் ஜூன் மாதம் 10-ம் நாளன்று பாரிஸ்டர் ஆனார். மறுநாள், வக்கீல் தொழில் நடத்தும் உரிமையைப் பெற்றார். உடனே ஜூன் 12-ம் நாளன்று இந்தியாவுக்குப் பயணமானார்.

எஸ்.எஸ். அஸ்ஸாம் என்ற கப்பலில் தாய்நாடு நோக்கி பயணப்பட்ட மோகன்தாஸ் காந்தியின் மனம் கவலையில் ஆழ்ந்தது.

இங்கிலாந்தில் படித்த பாரிஸ்டர் படிப்பில், இந்தியச் சட்டங்கள் பற்றி எதுவும் இல்லை. இது தெரியாமல் இந்தியக் கோர்ட்டுகளில் எவ்விதம் வாதாட முடியும் என்று கவலை கொண்டார்.

பிங்கட் என்ற ஆங்கிலேய நண்பர் கூறியதை நினைவில் கொண்டு மனத்தைத் தேற்றிக்கொண்டார். “வக்கீல் தொழில் செய்வதற்கு முயற்சியும் நேர்மையும் இருந்தால் போதும்” என்றார் அந்த நண்பர்.

மோகன்தாஸ் காந்தி தாயகம் வந்தடைந்தார். வந்ததும் அவர், தாய் காலமான செய்தியறிந்து கண்ணீர் விட்டார். தாயிடம் அளித்த வாக்கை இந்த மூன்றாண்டு காலமும் மீறவில்லை என்று கூற எண்ணியிருந்தார். அவருடைய விருப்பம் நிறைவேறவில்லை.

‘பாரிஸ்டர்’ என்ற பட்டத்துடன் வந்த மோகன்தாஸ்காந்தி, தமது வக்கீல் தொழிலைத் துவங்கினார்.

முதல்முதலாக, பம்பாய் ஸ்மால்காஸ் கோர்ட்டில், காந்திஜி ஒரு வழக்கை எடுத்து நடத்தினார். மமிபாய் என்னும் பெண்ணின் சார்பில் வழக்கறிஞராக ஆஜரானார். மமிபாய் பிரதிவாதி. வாதியின் தரப்பில் இருந்த சாட்சிகளை காந்திஜி விசாரணை செய்ய வேண்டும்.

முதல் சாட்சி, கூண்டுக்கு அழைத்து வரப்பட்டார். விசாரனை செய்ய காந்திஜி எழுந்து நின்றார். ஆனால், அவருக்கு முன்னே, நீதிமன்றமும் நீதிபதியும் எல்லோரும் சுழல்வதுபோல இருந்தது.

ஆம் காந்திஜியின் தலை சுற்றியது. என்ன பேசுவது என்று தெரியாமல் திகைத்தார். பயமும் கலக்கமும் தோன்றின.

எதுவும் கேட்காமலேயே, தம்முடைய இருக்கையில் அமர்ந்துகொண்டார். பிறகு, தமது கட்சிக்காரரான மமிபாயிடம், “என்னால் இந்த வழக்கை ஏற்று நடத்த முடியவில்லை. வேறொருவரை ஏற்பாடு செய்து கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டு, நீதிமன்றத்தை விட்டு வெளியேறினார்.

திகைப்பும் தயக்கமும், சபை கூச்சமும் காந்திஜியை இவ்வாறு செய்ய வைத்தன. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, பாரிஸ்டர் காந்திஜி மன்றத்திற்குப் போகவில்லை. விண்ணப்பங்கள் எழுதிக் கொடுத்து ஓரளவு வருவாய் பெற்றார்.

முதல் வழக்கில் பேச இயலாமல் தயங்கி வெளிவந்த காந்திஜி பின்னாளில் லட்சக்கணக்கானவர்கள் கூடியிருந்த கூட்டங்களில் பேசினார்; பல நீதிமன்றங்களில், ஆங்கில அரசுக்கு எதிராக, பலரும் போற்றும்படியாக வாதம் புரிந்திருக்கிறார். பல அரசியல் தலைவர்கள் பாராட்டும். வண்ணம் பேசினார் என்பதை அறிய வியப்பாக இருக்கிறதல்லவா?

 8. கம்பவுண்டர் வேலை
வக்கீல் தொழிலிலும் குடும்ப வாழ்விலும் காந்திஜிக்கு நிறைய பொறுப்பும் பணிகளும் இருந்தன. அத்துடன் பொதுச்சேவை செய்வதிலும் காந்திஜிக்கு அதிக நாட்டம் இருந்தது. தொண்டு செய்யும்போது, மனம் அமைதியடைவதாக காந்திஜி நினைத்தார்.

ஒருநாள், காந்திஜியின் வீட்டு வாசலில் குஷ்டநோய் உள்ள ஒருவன் வந்து பிச்சை கேட்டான்.

அவனைக் கண்டு இரங்கிய காந்திஜி, ஊர் பெயர் எல்லாம் விசாரித்தார். அவன் ஒரு ஒப்பந்தத் தொழிலாளியாக இருந்தவன். வேலையின் கடுமை, சரியான வசதியில்லாததால் நோய்வாய்ப்ப்ட்டான். குஷ்ட நோய் பற்றியதால், அவனை கூலியாக ஒப்பந்தம் செய்யதவர்கள், வேலையை விட்டு விலக்கினார்கள். அதுமுதல் பிச்சை எடுத்து வாழ்வதாக அவன் சொன்னான்.

அந்தப் பிச்சைக்காரனுக்கு ஒருவேளை சோறு போட்டு அனுப்பி வைத்துவிட காந்திஜி விரும்பவில்லை.

தன்னுடைய வீட்டில் தங்கச் சொன்னார். அப்போது, அவனுடைய உடம்பிலிருந்து புண்களைத் தாமே துடைத்து மருந்திட்டார். இவ்வாறு சில நாட்கள், காந்திஜி அந்த பிச்சைக்காரனுக்கு தொண்டு செய்தார்.

அவனுக்கு சற்று உடல்நிலம் தேறியதும்,ஒப்பந்தக் கூலிகளுக்காக ஏற்பட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

அதுமுதல் நோயாளிகளுக்குப் பணிவிடை செய்ய வேண்டும் என்ற எண்ணம் காந்திஜியின் உள்ளத்தில் அதிகமாகியது.

ரஸ்டம்ஜி, தர்மப்பணிக்காக என்று அளித்த பணத்தில், காந்திஜி ஏழைகளுக்காக ஒரு இலவச மருத்துவமனையை நிறுவினார். டாக்டர் பூத் என்பவரை நியமித்தார்.

இந்த இலவச மருத்துவமனையில் தினமும் ஒரு சில மணி நேரங்கள் பணியாற்றினார்.

டாக்டர் பூத் நோயாளிகளைக் கவனித்து, அவர்களுக்கு என்னென்ன மருந்துகள் கொடுக்க வேண்டும் என்று எழுதிக் கொடுப்பார். காந்திஜி, அதன்படி மருந்துகளைக் கலக்கித் தந்து, ‘கம்பவுண்டர்’ வேலை செய்தார்.

எளியவர்களுக்குத் தொண்டு செய்வதுடன், எதையும் தானே செய்ய வேண்டும் என்பதில் ஆர்வமுள்ளவர் காந்திஜி. தன்னுடைய துணிகளைத் தானே துவைத்துக் கொள்வார். அவ்வளவு ஏன், தலைமுடி வெட்டிக்கொள்வதையும் கூட அவரே செய்துகொள்வார்.

 9. சிநேகிதமும் சொந்தமும்
பம்பாயை விட்டு மீண்டும் ராஜ்காட் வந்து சேர்ந்தார் காந்திஜி. காந்திஜியின் மூத்த சகோதரர் போர்பந்தர் ராஜாவின் செயலாளராக இருந்தார். அப்போது, அவர் பேரில் ராஜா, தவறாக யோசனை சொன்னார் என்ற காரணம் காட்டி, காந்திஜியின் சகோதரர்மீது குற்றம் சாட்டினார். அக்குற்றத்தை விசாரிக்கும் பொறுப்பு, ஆங்கிலேய அரசின் பிரதிநிதியாக இருக்கும் ‘பொலிடிகல் ஏஜெண்டிடம்’ ஒப்படைக்கப்பட்டது.

தமது சகோதரர் கூறியதை காந்திஜி ஒப்புக்கொள்ளவில்லை.

“தாங்கள் குற்றமற்றவர் என்றால் எதற்காக அவருடைய தயவை நாட வேண்டும்…… பொறுத்திருந்து பார்க்கலாம்” என்றார்.

“தம்பி, உனக்கு இந்த ஊரைப்பற்றித் தெரிய நியாயமில்லை.  உனக்குத் தெரிந்தவர் அந்த பொலிடிகல் ஏஜெண்ட். உனக்கு சகோதரனின் பேரில் சிறிதாவது பாசம் இருக்குமானால் இதைச் செய்வாய்”.

மூத்த தமையனாரிடம் அன்பும் பாசமும் நன்றியும் கொண்டிருந்தார் காந்திஜி . எனவே அவருக்காக, பொலிடிகல் ஏஜெண்டைக் காணச் சென்றார்.

அந்த ஆங்கிலேய அதிகாரியைச் சந்தித்ததும், பழைய நட்பை நினைவூட்டினார். ஆனால் அந்த ஆங்கிலேயரோ, இந்தியர் ஒருவருடன் நட்புப் பாராட்டவும் விரும்வில்லை. நேரடியாக விஷயத்தைக் கூறினார்.

“உங்களுடைய சகோதரர்  செய்த செயல்களைப் பற்றி எனக்குத் தெரியும். அவருக்காக நீங்கள் என்னிடம் எதுவும் பேச வேண்டியதில்லை. ஏதேனும் சொல்ல விரும்பினால் அதை அவரே முறைப்படி எழுத்துமூலம் தெரிவிக்கட்டும்” என்றார்.

அவர் இவ்வாறு கூறிய பிறகும் காந்திஜி ” தயவுசெய்து என் வார்த்தையைக் கேளுங்கள்” என்றார்.

அந்த ஆங்கிலேயருக்கு மிகுந்த கோபம் வந்தது.

”நீங்கள் வெளியே போகலாம்” என்றார் கடுமையாக.

அதன்பிறகும் காந்திஜி வெளியேறாமல் நின்றிருந்தார். உடனே ஆங்கிலேயர், தமது பணியாளை அழைத்தார்.

அந்தப் பணியாள், காந்திஜியின் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினான்.

கோபம் கொண்ட காந்திஜி, அந்த ஆங்கிலேய அதிகாரியின்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க விரும்பினார். ஆனால் வக்கீல் தொழிலில் உயர் அனுபவம் பெற்றவர்கள், அவரை அவ்வாறு செய்ய வேண்டாம் என்று தடுத்தார்கள்.

இந்நிகழ்ச்சி காந்திஜிக்கு ஒரு படிப்பினையைக் கற்றுக் கொடுத்தது.

”இனிமேல் எக்காரணம் கொண்டும், சொந்தப் பணிகளுக்கு சிநேகிதத்தை–நட்பை–பயன்படுத்திக் கொள்ளமாட்டேன்” என்று தமக்குத்தாமே உறுதி எடுத்துக்கொண்டார்.

10. வாழ்வில் திருப்பம் தந்த பயணம்

போர்பந்தரிலிருந்த ஒரு வியாபாரக் கம்பெனியின் அழைப்பை ஏற்று காந்திஜி தென்னாப்ரிக்காவுக்குப் பயணமானார். தாதா அப்துல்லா கம்பெனியில் வேலை பார்ப்பவராக வருஷத்திற்கு 105 பவுன் சம்பளத்துடன் சேர்ந்தார். 1893-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் காந்திஜி தென்னாப்ரிக்காவுக்குப் புறப்பட்டார்.

கப்பலின் மேல்தளத்தில் பயணம் செய்யுமாறு, கப்பல் தலைவர் காந்திஜியிடம் கேட்டுக்கொண்டார். முதல் வகுப்பு வேண்டும் என்று காந்திஜி கேட்டதற்கு ‘இடமில்லை’ என்றார் தலைவர்.

”எப்படியாவது ஒரு இடம் தர உங்களால் முடியாதா?” என்று காந்திஜி பணிவுடன் கேட்டார்.

காந்திஜியை தலைமுதல் கால்வரை உற்றுப் பார்த்த அந்தக் கப்பல் தலைவர், ”என்னுடைய சொந்த அறையில் என்னோடு சேர்ந்து இருங்கள்” என்றார். அவருக்கு காந்திஜி நன்றி கூறினார்.

அந்தத் தலைவருக்கு சதுரங்கம் விளையாடுவதில் விருப்பம் அதிகம். ஆனால் காந்திஜிக்கோ சதுரங்கம் பற்றி எதுவும் தெரியாது. கப்பல் தலைவர், காந்திஜிக்கு சதுரங்கம் விளையாடக் கற்றுத் தந்து, தன்னுடன் விளையாட வைத்தார்.

பதின்மூன்று நாட்கள் தொடர்ந்து பயணம் செய்து, லாமு துறைமுகத்தை அடைந்தது. கரையில் இறங்கி ஊரைச் சுற்றிப் பார்க்க எல்லோரும் விரும்பினார்கள். காந்திஜியும் இறங்கினார்.

”இந்தத் துறைமுகத்தில் கடல் கொந்தளிப்பு அதிகம். எச்சரிக்கையுடன் போய், விரைவில் வாருங்கள்” என்று கூறி அனுப்பினார் கப்பல் தலைவர்.

காந்திஜி லாமு நகரைச் சுற்றிப் பார்த்தார். மூன்று மணி வரை கரையில் இருந்துவிட்டு, பிறகு கப்பலை நோக்கிச் சென்றார்கள். படகிலே அதிகமாக மனிதர்கள் ஏறியதால் படகு தள்ளாடியாது. மேலும் கடல் கொந்தளித்துக் கொண்டிருந்தது. காந்திஜிக்கு படகில் நிற்கவும் இடமில்லை.

கப்பலின் அருகில் படகு வரும். ஆனால் வேகமான அலைகளால் அடித்துக்கொண்டு போகும். இதனால் கப்பலில் இருந்த ஏணியைப் பற்றி ஏற முடியாமல் போயிற்று.

கப்பல் கிளம்புவதற்கான சங்கொலி கேட்டதும் காந்திஜி விரைவாகச் செயல்பட்டார். தம்முடைய படகின் அருகில் வந்த மற்றொரு படகில் ஏறிக்கொண்டார். அதில் அதிகமானவர்கள் இல்லை. எனவே எளிதாக அப்படகை, கப்பலின் ஏணியருகே செலுத்த முடிந்தது.

காந்திஜி அவசர அவசரமக ஏணியைப் பற்றி ஏறி, மேல்தலத்தைஅடைந்ததும், கப்பலும் புறப்பட்டது. பயணம் தொடர்ந்தது.

தென்னாப்ரிக்கா பயணம், காந்திஜியின் வாழ்வில், மகத்தான திருப்பங்களை ஏற்படுத்தியது.

Friday, October 1, 2010

உலக ரத்த தான தினம்

     BSNL  நிறுவன நாளை  ஒட்டி இன்று  தஞ்சையில் பொது மேலாளர் தலைமையில் GM அலுவலக வளாகத்தில்   மரக்கன்று நடும் விழாவும், ரத்த தானம் வழங்கும் விழாவும்  சிறப்பாக  நடைபெற்றது.   500 மரக்கன்றுகள் நடப்பட்டன.  26 ஊழியர்கள் ரத்த தானம்   வழங்கினர்.  
      உலக ரத்த தான தினத்தில் நமது துறையிலும் தோழர்கள் ரத்த தானம் செய்தது பொருத்தப்பாடாக அமைந்திருந்தது சிறப்புக்குரியது.  
     வரும் ஆண்டில் மேலும் சிறப்பாக்குவோம் தோழர்களே! பங்கேற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள், நன்றிகள்!!
                                        அன்புடன்,  G. கேசவன், மாவட்டச் செயலர், தஞ்சை.                                                     

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR