தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Thursday, September 19, 2013

nfte -bsnl சங்க அலுவலக திறப்பு விழா

nfte -bsnl சங்க அலுவலக திறப்பு விழா 17-9-2013கோலாகலமாக 
நடைபெற்றது .நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் பிரின்ஸ் தலைமை 
ஏற்றார்,மாவட்ட செயலர் பன்னீர் வரவேற்புரை நிகழ்த்தினர் ,
TMTCLU  மாவட்ட தலைவர் கலை , தஞ்சை இளங்கோவன் முன்னிலை, 
வகித்தனர் ,மாநில துணை செயலர் நடராசன் துவக்க உரை ஆற்றினார் 
மாநில செயலர் பட்டாபி ,மாநில பொருளர் அசோக்ராஜ் ,aibsnl 
மாநில செயலர் வீரபாண்டியன் ,பொறுப்பாளர்கள் துரையரசன்,உதயன் ,
கோபாலகிருஷ்ணன் ,aibsnloa மாவட்ட செயலர் கிருஷ்ணராவ் ,
ஜெயராமன் ,snea மாவட்ட செயலர் பழனியப்பன் ,குணசேகரன் ,
அதிகாரிகள் DGM (ADMIN),DGM (FIN ),DGM (CM ),AGM (admin ),
சகோதர சங்க பொறுப்பாளர்கள் தோழர் கஜா மாவட்ட செயலர்
அண்ணா தொழிற்சங்கம் ,அதன் பொறுப்பாளர்கள் சுந்தர்ராஜன் ,
ராஜேஷ்கன்னா ,SNATTA மாவட்ட செயலர் ராஜேஷ்வரன் ,பிரபாகரன் ,
AIBCTES மவட்டசெயலர் ஜெயராஜ்,SEWA மாவட்ட செயலர் 
சுந்தரமுர்த்தி,குணசேகரன் ,FNTOBEA மாவட்ட செயலர் சிவகுமார் ,
FNTO மாவட்ட செயலர் ஜெயசீலன்,மகளிர் ஒருங்கிணைப்பு குழு 
லைலாபானு ,மல்லிகா சுகுமாரன் , TMTCLU மாவட்ட செயலர் 
கிள்ளிவளவன் மற்றும் மாவட்ட சங்க /கிளை சங்க பொறுப்பாளர்கள் 
தோழர்கள்/தோழியர்கள் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தோழர் பக்கிரிசாமி நன்றி கூறி முடித்து வைத்தார் ,outdoor கிளை 
தோழர்கள் மற்றும்தோழர் மேகநாதன் விழா சிறக்க உதவினார்கள் .  
































கே.நடராஜன் MA /TTA ,PSM   
ACS -NFTE -BSNL 
தஞ்சாவூர் .






Tuesday, September 17, 2013

செப் -17 திருவிக நினைவு தினம்

காஞ்சிபுரம் மாவட்டத்துச் சைதாப்பேட்டை வட்டத்துத் துள்ளம் என்னும் சிற்றூரில் விருத்தாசல முதலியார் - சின்னம்மா தம்பதிகளுக்கு ஆறாவது மகனாகப் பிறந்தார். இவரின் முன்னோர்கள் சோழ நாட்டில் திருவாரூர் என்ற ஊரைச் சேர்ந்தவர்கள்.கல்யாணசுந்தரனாரின் தந்தை இலக்கியப் பயிற்சியும் இசைப்பயிற்சியும் உடையவர். ஆசிரியத் தொழிலுடன்வணிகமும் புரிந்தவர். இவர் பச்சையம்மாள் என்பவரை மணந்து மூன்று ஆண்களையும் ஒரு பெண் குழந்தையையும் பெற்றார். இவ்வம்மையார் இறந்த பின்னர் சின்னம்மாள் என்பாரை மணந்து நான்கு ஆண் மக்களையும் நான்கு பெண் மக்களையும் பெற்றார்.இவர்களுள்ஒருவரேகல்யாணசுந்தரனார்.தொடக்கத்தில்தம்தந்தையிடம் கல்வி பயின்றார். பின்னர் சென்னையில் இராயப்பேட்டையில் தங்கி ஆரியன் தொடக்கப் பள்ளியில் சேர்ந்தார். அதன் பின்னர், 1894 இல் வெஸ்லி பள்ளியீல் நான்காம் வகுப்பில் சேர்ந்தார். அங்கு அவருக்கு ஒரு காலும் ஒரு கையும் மூடங்கின. இதனால் பள்ளிப் படிப்பு சிறிது காலம் தடைப்பட்டது. படிப்பில் நல்ல திறமையுடையவராக விளங்கினார். 1904 ஆம் ஆண்டில் ஆறாம் படிவத் தேர்வு எழுத முடியாமல் போனது. அத்தோடு அவரது பள்ளிப் படிப்பும் முடிந்தது.
தொழிற்சங்கத்தைத் தோற்றுவித்துத் தொழிலாளர்களின் உரிமைக்கும் முன்னேற்றத்திற்கும் பாடுபட்டார். சிறந்த மேடைப் பேச்சாளரான இவர் அரசியல், சமுதாயம், சமயம் எனப் பல துறைகளிலும் ஈடுபாடுகொண்டு பல நூல்களை எழுதினார்,மொழிக் காவலராகவும் விளங்கிய அவர், 'தாய்மொழியின் வாழ்விழந்தால் தரைமோதி மாய்தல் நலம், போய்க் கடலில் விழுதல் நலம், பொலிதருமோ உடலுயிரே' என்று பொங்கி முழங்கிய அவர், தாய்மொழி வழிக் கல்வியையும், தமிழர்கள் பல மொழிகளைப் பயில வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தி வந்திருக்கின்றார். உலகில் பல மொழிகளில் இருக்கின்ற அறிவியல் மற்றும் கலைச்சொற்களைத் தமிழில் மொழிபெயர்த்தாலே அது தமிழுக்குச் செய்கின்ற பெரும் தொண்டாக இருக்கும் என்றும் அவர் கருதினார். தமிழ் மொழி மற்றும் தமிழ்க் கலை, இலக்கியங்களை உலகம் முழுவதும் பரப்புதல் வேண்டும் என்பது அவரின் அவாவாக இருந்தது. சென்ற நூற்றாண்டில், தமிழ் மொழி வாழ, வளம் பெற உழைத்தவர்களில் திரு.வி.க-விற்கு என்று ஒரு தனியிடம் எப்போதும் உண்டு
வாழ்க்கை வரலாறு, உரை நூல்கள், அரசியல் நூல்கள், சமய நூல்கள்,சமயப் பாடல்கள் என்று 56 நூல்களை நம் திரு.வி.க படைத்துள்ளார.அந்நியரின் பிடியிலிருந்து தன் தாய் நாட்டையும், அந்நியமொழிகளின் ஆதிக்கத்திலிருந்து தன் தாய்மொழியையும் விடுவிக்கத் தொடர்ந்து போராடிய இப்பெருந்தகையின் ஊனுடம்பு 1953-ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 17-ஆம் நாள் மண்ணுலகைவிட்டு மறைந்தது. அவர் சுவாசித்தக் காற்று அன்று நின்றது. ஆனாலும், அவரிடமிருந்துப் பிறந்து, சுகமாக வீசிவந்த தென்றல் நின்றுவிடவில்லை. தொடர்ந்து இன்றும் வீசிவருகிறது - மற்ற காற்றலைகளுக்கு எப்படி வீசுவது, எப்படி வருடுவது, எப்படித் தீண்டுவது என்று நாளும் கற்றுத் தந்தபடியே!
இந்த நினைவு ததினத்தை தொடர்ந்து 15
ஆண்டுகளுக்கும் மேலாக திருவாரூர் தோழர்கள் வங்கி /தொலைபேசி /TTUC /அஞ்சல் /சேவை அமைப்புகள் சேர்ந்து கொண்டாடி வருகின்றனர் .துவக்கி வைத்தவர் நமது மாநில செயலர் பட்டாபி.துணை நின்று உதவியவர்கள் AITUC  வேதையன் ,RMS தர்மதாஸ் ,வங்கி மறைத்த நித்தியானந்தம் ,வங்கி ரகு ,மகாலிங்கம் ,தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாவட்ட தலைவரை இருந்த அ .ப .பாலையன் ,அஞ்சல் மாரியப்பன் ,ராமலிங்கம் ,AITUC அழகிரி ,சாமிநாதன் ,nfte திருவாரூர் கிளை தோழர்கள் /மற்றும் வி.ச /வி.தொ .ச /......
இன்றைக்கு தோழர் பாலதண்டாயுதம் பொறுப்பேற்று நடத்துகிறார் ,,,.,நன்றி,,,வாழ்த்துக்கள்   
                                                          

                                                



Sunday, September 15, 2013

சங்கஅலுவலக திறப்பு விழா


 

சங்கஅலுவலக  திறப்பு விழா 17-9-2013 மாலை 3.00 மணியளவில் CTO
TNJ  ல் நடைபெறவுள்ளது .2002 -2004 கால  இடைவெளிக்குப்பிறகு சங்க அங்கீகார 
தேர்தலில் மகத்தான வெற்றியை தந்திட்ட தஞ்சை தோழர்கள் அனைவரும் மகிழ்வுடன் பங்கேற்கும் வெற்றி திருவிழாவாக /சகோதர சங்க தலைவர்கள் பங்கேற்கும் மகத்தான விழாவாக ஆக்கிடுவோம் .
மாநிலச்செயலர் தோழர் பட்டாபி ,மாநில பொருளர் தோழர் அசோக்ராஜ் ,அதிகாரிகள் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர் .கிளை செயலர்கள் /மாவட்ட சங்க பொறுப்பாளர்கள் பெரும் திரளாய் பங்கேற்க வேண்டுமென தோழமையுடன் அழைக்கும் 
                             
                  S.பிரின்ஸ    / T.பன்னீர்செல்வம்  /   T.பக்கிரிசாமி  

மாவட்டத்தலைவர்  /  மாவட்டச்செயலர் / மாவட்டப்பொருளர் 

                                                                 

                                                            


கே.நடராஜன் MA ,TTA -PSM ,
ACS ,NFTE -BSNL ,
தஞ்சாவூர் .

                                                                

திருவாரூர் கிளை மாநாடு

திருவாரூர் கிளை மாநாடு 13-9-2013 மாலை திருவாரூர் தொலைபேசி நிலையத்தில் தோழர் V .நடராஜன் தலைமையில் நடைபெற்றது .கிளை 
செயலர் தோழர் A .சேகர் ஆண்டறிக்கையை சமர்பித்தார் .வரவு ,செலவு 
கணக்கு மற்றும் ஆண்டறிக்கை விவாதித்து முழு மனதோடு ஏற்றுகொள்ளப்பட்டது .

ஆண்டுவிழாவை தோழர் அய்யனார் மா .து .தலைவர் துவங்கி வைத்தார்
தோழர்கள் தர்மதாஸ் ,பக்கிரிசாமி மா .பொருளாளர் ,பன்னீர்செல்வம்
 மாவட்டச்செயலர் ,மற்றும் நடராஜன் மா.து.செயலர்ஆகியோர்வாழ்த்தி 
நிறைவுரை ஆற்றினர்.தோழர் வெற்றிவேந்தன் 
நனறிகூறி முடித்துவைத்தார்.கீழ் கண்ட தோழர்கள் ஒருமனதாக 
பொறுப்பாளர்களாகதேர்வு செய்யப்பட்டனர் .


திருவாரூர்   SDOP  கிளை   

தலைவர் .தோழர் N .கார்த்திகேயன் TM / CSC /TVN 

செயலர் .தோழர் K .தங்கமணி TTA /TVN 

பொருளர் .தோழர் A .சேகர் TM /indoor /TVN 

திருவாரூர் SDOT  கிளை 

தலைவர் .தோழர் R .குணசேகரன் TM  /SAM  

செயலர் .தோழர் G .குணசேகரன் TM /sales /SAM 

பொருளர் .தோழர் D.சேகர் TM /AMM 

விழா முடிவில் மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் NNL ராஜாஜி, தங்கமணி ,V .நடராஜன் ,சீதாராமன் ஆகியோர் ஷால் அணிவித்து 
கௌரவிக்கப்பட்டனர் .கிளை செயலர் A .சேகர் அவர்களை  மாநில 
துணைச்செயலர் நடராஜன் ஷால் அணிவித்து கௌரவித்தார் .விழாவை 
சிறந்தமுறையில் ஏற்பாடு செய்து நடத்திட்ட கிளை பொறுப்பாளர்கள் 
மற்றும் தோழர்களுக்கும் நெஞ்சுநிறை நன்றி ...



கே.நடராஜன் MA ,TTA -PSM ,
ACS ,NFTE -BSNL ,
தஞ்சாவூர் .


மந்திரிகள் குழு முடிவுகள்

மந்திரிகள் குழு முடிவுகள் 

12/09/2013 அன்று BSNL/MTNL மறுசீரமைப்புக்காக கூடிய 
மந்திரிகள் குழு எடுத்துள்ள  முடிவுகள் .
 
விருப்ப ஓய்வு, BSNL/MTNL வளர்ச்சிக்கான கருவிகள் வாங்குதல், அரசுத்துறைகள்  BSNL/MTNL சேவையை பயன்படுத்துதல், 
DOT சொத்துக்களை BSNLக்கு மாற்றுதல் 
போன்ற  முக்கிய பிரச்சினைகள் விவாதிக்கப்படவில்லை. 

BWA (Broadband Wireless Access) அலைக்கற்றை கட்டணமாக  BSNL/MTNL  நிறுவனங்கள் செலுத்திய 11,000 கோடி தொகையைத்திருப்பி அளிப்பது.
இதில் BSNLன் பங்கு 6725 கோடியாகும். 
MTNL செலுத்தியது 5700 கோடியாகும்.

MTNL ஊழியர்களுக்கு ஒய்வூதியம் அளிப்பது. 
  இதற்கான ஆண்டு ஓய்வூதியச்செலவு  570 கோடியாகும். இதில் 170 கோடியை MTNL செலுத்தும். மீதியை அரசே ஏற்றுக்கொள்ளும். 

மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெற்ற பின்பு மேற்கண்டவை நடைமுறைப்படுத்தப்படும் என்றும்,  மேலே கண்ட முடிவுகள் மூலம் BSNL/MTNL நிறுவனங்கள் லாபம் நோக்கி செல்ல முடியும் எனவும்  இலாக்கா அமைச்சர் கூறியுள்ளார். 


கே.நடராஜன் MA ,TTA -PSM ,
ACS ,NFTE -BSNL ,
தஞ்சாவூர் .




Wednesday, September 11, 2013

தோழர் சீனாதானா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

தோழர் சீனாதானா இருதய அறுவை சிகிச்சைக்காக  சென்னை 

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .bye pass அறுவை சிகிச்சை

நல்லமுறையில் நடைபெற்று நலமுடன் வீடு திரும்ப நமது தோழர்கள் 

அனைவரின் சார்பாகவும் வாழ்த்துக்கள் ..

கே.நடராஜன் MA /TTA ,PSM   
ACS -NFTE -BSNL 
தஞ்சாவூர் 





JCM  NATIONAL COUNCIL
தேசிய கூட்டாலோசனைக்குழு 

JCM தேசிய கூட்டாலோசனைக்குழு உருவாக்கத்திற்கான உத்திரவை 
BSNL நிர்வாகம் 09/09/2013 அன்று வெளியிட்டுள்ளது.
கீழ்க்கண்ட தோழர்கள் உறுப்பினர்களாக செயல்படுவார்கள்.

நேர்மைக்கும் திறமைக்கும் உதாரணமான நமது மாநிலச்செயலர்  
தோழர். பட்டாபி அவர்கள் NATIONAL JCMல் உறுப்பினராகஅறிவிக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்வுக்கும் பெருமைக்கும் உரியது.

ஊழியர் பிரச்சினை தீர்வில், BSNL வளர்ச்சியில் 
தோழர். ஜெகன் வழியில் 
தமிழகப்பங்கை  பாங்கை உரிய முறையில் 
தோழர். பட்டாபி செலுத்திட மனமார வாழ்த்துகின்றோம்.

NATIONAL COUNCIL உறுப்பினர்கள் 

NFTE BSNL 
1. தோழர். இஸ்லாம் அகமது - அகில இந்திய தலைவர் - LEADER JCM 
2. தோழர். சந்தேஸ்வர்சிங் - பொதுச்செயலர் 
3. தோழர். பட்டாபிராமன் - தமிழ் மாநிலச்செயலர் 

BSNLEU 
1. தோழர்.அபிமன்யு - JCM SECRETARY
2. தோழர். நம்பூதிரி 
3. தோழர். அனிமேஷ் சந்திர மித்ரா - கல்கத்தா 
4. தோழர். ஸ்வபன் சக்கரவர்த்தி - திரிபுரா 
5. தோழர். குண்டன்னா - கர்நாடகா 


14 உறுப்பினர்களைக் கொண்ட JCMல் 
தற்போது 8 உறுப்பினர்களே நியமிக்கபட்டுள்ளனர்.

ஊழியர் வாழ்வு மேம்பட BSNL தழைத்திட  
JCM தன் பங்கினைச்செலுத்தி
செயல்பாட்டில் சிறந்திட நமது வாழ்த்துக்கள்..


கே.நடராஜன் MA /TTA ,PSM   
ACS -NFTE -BSNL 
தஞ்சாவூர் 

Tuesday, September 3, 2013

மீண்டும் உனது அணிகளிடம் பழகும் அந்த நாட்கள் வராதிருக்கு கடவது. {இது ராம்கியின் உணர்வு} 



இதுதான் உங்கள் அணிகளின் நோக்கமும் கூட.

தோழமையுடன் பழகியதாக கூறும் தாங்களால் 

எப்படி வக்கீல் நோட்டீஸ் அனுப்பமுடிந்தது 

என்று எனக்குமட்டும்மல்ல யாருக்குமே புரியாதபுதிர் 

அன்றைக்கும் எனக்கு தெரியும் தாங்கள்  அனுப்பிய நோட்டீஸ் 

உங்கள் மீது திணிக்கப்பட்ட நிர்பந்தம் .எங்கிருந்தோ வரும் 

கட்டளைகளுக்கு தலைமட்ட யதார்த்தமும் ,தோழமையும் 

புரியாது .நாமும் சில நேரங்களில் யதார்த்தத்திற்கு எதிராக 

போவதால் ,எங்கிருந்தோ வரும் கட்டளைக்கு செவி மடுப்பதால் 

நம்மை சுற்றி இருப்பவர்களை நாய் என நினைக்க தோன்றுகிறது 

எப்போதும் துன்பத்தில் தோள் சாய்ந்து அமைதி கொள்ள 

எங்கிருந்தோ வரும் உத்திரவுகள் /கட்டளைகள் உதவுவதில்லை 

என்பதற்கு சாட்சியம் தோழர் பொள்ளாச்சி அலெக்ஸ் 


ஓடி வந்தான் என் அருமை நண்பன் தோழன் அலெக்ஸ், பொள்ளாச்சி கிளைசெயலர், நான் நின்று செய்ய வேண்டிய அனைத்து வேலைகளையும், சிட்டென செய்து முடித்தான்.


யாரையும் புண்படுத்துவதோ  /திருப்தி  படுத்துவதோ நமது வேலையில்லை 

எப்போதும் எல்லோரும் எல்லோருக்கும் நண்பர்கள்தான் தோழர்கள்தான் 

நாம் பிறர்  மனதை புண்படுத்தாதவரையில் ,



                                                                                        தோழமையுடன்  
                                                                              K .  நடராஜன் MA , TTA /PSM 
                                                                                       ACS /  NFTE -BSNL -TNJ 


  போகிற போக்கை பார்த்தால், கடைசியில் நடராஜன் போன்றோர் தன் தாய் தந்தை யார் என்ற உள் ஆராய்ச்சியில்கூட  இறங்கினாலும் இறங்குவார்கள் போல் உள்ளது.


மேலே உள்ளது  கோவை கோமாளியின் எழுத்துக்கள் ,


நண்பர் கோவை ராமகிருஷ்ணன் அவர்களே 





பூமின் தோற்றம் குறித்து ஆராய்ந்தான் மனிதன் விடை கிடைத்தது 
நிலவை ஆராய்ந்து புதிரை உடைத்தது விஞ்ஞானம் 
கடலை சுற்றி வந்து நாடுகளை அடையாளப்படுத்தினான் கொலம்பஸ் 
மற்றும் வாஸ்கோடகாமா ,புவிஈர்ப்பு விசையை கண்டுரைத்தான் நியூட்டன் 
இது போன்று ஏராளமாய் கண்டுபிடிப்புகள் நம்மை வாழ்வித்துக்கொண்டு உள்ளது .
 என் தாய் ,தந்தை யார் என்ற ஆராய்ச்சியில் நான் இறங்கி விடுவேனோ என்று நீங்கள் கவலை பட்டுள்ளதை எண்ணி மகிழ்கிறேன் .
நான் எந்த மாதிரி ஆராச்சியில் இறங்குவேன் என்று ஆருடம் கணித்த 
உமக்கு உம்மை பற்றி ஊர் என்ன நினைக்கிறது என்று தெரியாமல் 
போனது வியப்பாக உள்ளது .
அப்பழுக்கற்றது தாய்,தந்தை உறவு .
அதற்கு கொஞ்சமும் சம்மந்தமில்லாத ,தோழமைஇல்லாத தாங்கள்தான் 
தாயின் கருவறையை ஆராயும் மூடன் .எதை வேண்டுமானாலும் ,எப்படி 
வேண்டுமானாலும் எழுதலாம் என்பது உமது நடைமுறை .எனது நதி மூலம் ,ரிஷி மூலம் ஆராயும் தாங்கள் தங்களின் நதி,ரிஷி மூலத்தை அறிந்து 
கொள்ளவும் .கொச்சை வார்த்தை பேசுதல் எளிது .வக்கிரமாய் எழுதுதல் 
எளிது .நானும் உம்மை போல் எழுதுவதற்கு வெகுநேரம் பிடிக்காது,
நிதானமாய் யோசித்து எழுதுக .பதட்டமும் ,ஆத்திரமும் நிதானம் 
இழக்கச்செய்கிறது ,தேவை உமக்கு நாவடக்கம் . 
தங்களின் தகுதி இதுவென வெளி படுத்தி உள்ளமைக்கு நன்றி .

    

K .நடராஜன் MA ,TTA /PSM 
ACS /NFTE -BSNL 


தஞ்சாவூர். 






Sunday, September 1, 2013

தோழர்களின் கவனத்திற்கு

தன் வினை தன்னை சுடும் என்பார்கள் ...

அது போல ஒரு நிகழ்வு இன்று ...........

சில மாதங்களுக்குமுன் எனக்கும் ........

தோழர் சீனாதானாவுக்கும் .................

வக்கீல் நோட்டீஸ் அனுப்பி .............

மானநட்ட வழக்கு தொடுத்தவர்கள் .....

தொழில் ரீதியில் வந்த பிரச்சனையால் 

இன்று anticipation bail பெற்றார் எனில் ,,,,,,,,,,,

பல மாதங்களுக்கு முன் நாம் சொன்னது ?

இன்று சரியென ஊர்ஜிதமாகி  உள்ளது,,,,,,

அதுவும் எந்த தோழர்களோடு உறவே இல்லை ,,,

என்றாரோ அந்த தோழர்களின் உதவியை பெற்று ,,,,

வாழ்க சுயநலக்கொள்கை பற்று ,,,,,,,,,,,,,,,,,,,,,,,

   




K .நடராஜன் MA ,TTA /PSM 
ACS /NFTE -BSNL 

தஞ்சாவூர். 

காரைக்குடியை காய்வது ஏன்

                                                      
ஓய்வூதிய பிடித்தம்  கூடாது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு 

ஓய்வூதியம், பணிக்கொடை மற்றும் விடுப்புப்பணம் ஆகியவற்றில் பிடித்தம் செய்ய ஓய்வூதிய விதிகளுக்கு அதிகாரம் இல்லை என 
உச்ச நீதிமன்றம் ஜார்க்கண்ட் மாநிலஅரசு தொடர்ந்த SLPக்கு எதிராக 
தனது 14/08/2013 தீர்ப்பில் கூறியுள்ளது.  

அரசு ஊழியர்களுக்கு இது மகிழ்வான தீர்ப்பாகும்.
தற்போது ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆட்பட்ட ஒய்வு பெற்ற 
ஊழியர்களுக்கு பணிக்கொடை நிறுத்தப்படுகின்றது. ஆனால் தற்காலிக ஓய்வூதியம் - PROVISIONAL PENSION தொடர்ந்து வழங்கப்படுகின்றது.  மேற்கண்ட தீர்ப்பின்  மூலம் பணிக்கொடையையும் ஒய்வு பெற்றவர்கள் பெற முடியும். 
இதன் மூலம் தியாகிகள் எண்ணிக்கையையும் 
உச்ச நீதிமன்றம் குறைத்துள்ளது.                    

இதுதான்   காரைக்குடி வெளிட்ட செய்தி .இதற்கு பதில் என்ற 
பெயரில் காஞ்சி வலை தளம் வெளிட்ட நாகரீகமற்ற   தகவலை தமிழகதோழர்கள் ஒட்டுமொத்தமாய் வன்மையையாய் கண்டிக்கின்றார்கள் .எமது மாநில மாநாடு மதுரையில் சிறப்பாய் நடந்திட கூடாதென சதி செய்து ஏமாந்தவர்களின் வயிற்றெரிச்சலின் 
அடையாளமிது ,பொது கழிப்பிடங்களில் வக்கிரமாய் கரி துண்டால் கிறுக்கி வைப்பதற்கு சமம்.பிதற்றலின் உச்சக்கட்டமிது .நிச்சயமாய் இதனை தோழர் ஏகாம்பரம் எழுதியிருக்கமாட்டார் என்று எல்லோருக்கும் தெரியும்.பிறகு யார் எழுதியிருப்பார் ?

""நடராஜனே நாவை அடக்கு 
இல்லையேல் அடக்குவோம்""
     
 என எழுதிய நபரேதான் இதையும் எழுதிருக்கிறார் என்பதை தமிழகம் அறியும் .இப்படி தனது சொந்த வெப்சைட்டில் அநாகரிகமாக எழுதுவதை தவிர்த்து பினாமியாக எழுதும் மாவீரர்களை நாம் அறிவோம் ,,

 எவன்  ஒருவன் கிறுக்கனோ 
    எவன் ஒருவன் பெட்டையோ 
 எவன் ஒருவன் பட்சோந்தியோ 
  அப்படிப்பட்ட மனிதனின் சாத்தான் மூளையே இதுபோன்று சிந்திக்கும் ,எழுதும் ,மாரியை மட்டுமல்ல தமிழக தோழர்களை எவரையும் இப்படி விமர்சிப்பது கண்டனத்துக்குரியது ,,


       AVOID STRESS
Add caption
                






K .நடராஜன் MA ,TTA /PSM 
ACS /NFTE -BSNL 
தஞ்சாவூர். 

                                                                                                                                                                                                                                                                                                                                                         

                         



     


  

   
           










செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR