தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Wednesday, July 13, 2016

பொது வேலை நிறுத்தம் - 02-09-2016

மக்கள் விரோத கோரிக்கைகளை 
கடைபிடிக்கும் மத்திய அரசை 
எதிர்த்து நடக்கும் போராட்டம் 
பொது வேலை நிறுத்தத்தினை
வெற்றிபெறச்செய்திடுவோம்.

நம்மையும், நிறுவனத்தையும் 
மக்களையும் காக்கின்ற 
மாபெரும் போராட்டம் 
வேலை நிறுத்தப் போராட்டம்  
வெல்லட்டும்! வெல்லட்டும்!!

மத்திய அரசே! BJP அரசே!!
தேசம் முழுதும் இணைந்து நிற்கும் 
கோடிக்கணக்கான ஊழியர்களின் 
மத்திய, மாநில அரசு ஊழியர் 
பொதுத்துறை, வங்கி ஊழியர்  
அரசு ஊழியர், தொழிலாளர்கள்
நியாயத்தைப் புரிந்துகொள்!
மக்கள் விரோத கொள்கைகளை 
உடனடியாகக் கைவிடு!

100 சதவீத முதலீடு 
அந்நிய நேரடி முதலீடு 
தேவைதானா! தேவைதானா!!
ராணுவத்தில், ரயில்வேயில்,
சில்லறை வணிகம், மருத்துவத் துறையில் 
அனுமதிப்பது முறைதானா!
மத்திய அரசே பதில் சொல்லு.

100 ஆண்டு காலமாக 
போராடிப் பெற்ற சட்டங்கள் 
தொழிலாளர் நலச் சட்டங்கள் 
வெட்டிக், குறுக்கி ஒழிக்கப்படுவதை 
அனுமதியோம்! அனுமதியோம்!!
ஒருபோதும் அனுமதியோம்!

70 லட்சம் மக்கள் இங்கே 
வறுமைக்கோட்டுக்கு கீழாக.
விவசாயத்தால் நஷ்டப்பட்ட 
விவசாயிகள் தற்கொலை 
தொடர்வது உனக்குத் தெரியாதா!

5 லட்சம் கோடி சலுகை 
கார்ப்பரேட் முதலாளிக்கு  
சாதாரண மக்களுக்கு
மானியத்தில் வெட்டு இங்கே! 

எட்டரை லட்சம் கோடி ரூபாய் 
வங்கிக்கடன்  கட்டாதவனை 
பத்திரமாக வெளிநாட்டுக்கு 
அனுப்புகின்ற கேவலம் 
வேறெந்த நாட்டிலுமுண்டா!

லாபமீட்டும் பொதுத்துறையின் 
25 சதவீத  பங்குகளை 
அடிமாட்டு விலையிலே 
தனியாருக்கு விற்றுவிட்டு 
நிர்வாகத்தைக் கெடுக்கின்ற 
மத்திய அரசு, BJP அரசு 
தேவைதானா! தேவைதானா!

கான்டராக்ட் ஊழியர்களுக்கு 
குறைந்தபட்ச ஊதியமாக 
10000 ரூபாயினை 
அறிவித்த பின்னரும் 
முதலாளிகளின் வலியுறுத்தலாலே 
அமுலாக்கம் செய்யவில்லை.
இதுதானா மோடி அரசு!
இல்லை! இல்லை! மோசடி அரசு!

தேசம் முழுதும் நாம் நடத்தும்
மாபெரும் வேலை நிறுத்தம் 
அநீதி எதிர்க்கும் தர்ம யுத்தம்.

தேசத்தின் சக்கரங்களை 
நிறுத்தி வைக்கும் நமது இயக்கம் 
ஓய்வுக்காக அல்ல! அல்ல!!
சீரான சுழற்சியாலே 
பாதையை செப்பனிட்டு 
உழைக்கும் மக்களின் நலன்களை 
பாதுகாத்து தந்திடவே! 

20 கோடித் தொழிலார்கள்
இணைந்து நடத்தும் போராட்டம் 
சாதாரணப் போராட்டம் அல்ல.
நாடு  காக்கும் போராட்டம்.

எங்களது போராட்டத்தை 
வேலை நிறுத்தப் போராட்டத்தை 
அலட்சியபடுத்திட  எண்ண வேண்டாம்!
தேசம் முழுதும் வேர்பிடித்து 
எரிகின்ற போராட்டமாக 
ஆட்சிமாற்றம் ஏற்படுத்தும் 
உக்கிரமான போராட்டமாக 
மாறும் என்று எச்சரிக்கின்றோம்.


  





























BSNL அறிவோம்!

நமது BSNL செல்போன் சேவையை முழுமையாய் பயன்படுத்த 
பெரிதும் உதவும் வழிமுறைகள் 
*************
123 சேவைகள் 
123 க்கு SMS செய்யும் முறை 


பயன்படுத்துகிற பூஸ்டர்கள் அறிய.          : STVENQ
கடைசி 5 அழைப்புகள் அறிய.                   : LAST5
பதிவு செய்துள்ள F & F எண்கள் அறிய.   : FNFLIST 
F & F பதிவு செய்ய.                                    : FFE போன்நம்பர் 
(ஒவ்வொரு எண்ணுக்கும் தனித்தனியே  SMS செய்க).
F & F மாற்றம் செய்ய.                                : FFM பழையஎண் புதியஎண்
அன்பு ஜோடியில் லேண்ட்லைன் பதிவு 
   செய்ய.                                                     : FFL 4373222222
பூஸ்டர் - DATA CARD - SMS பூஸ்டர் 
    போட்டுக்கொள்ள.                             
      Eg. பூஸ்டர்: STV VOICE69
                                               டேட்டா: STV DATA198 
          SMS     :  STV SMS54

    இவ்வாறு SMS  மூலம் செய்து கொள்ளும் 
ஆக்டிவேஷனால் நமக்கு 
12% க்கு மேல் கமிஷன்  உண்டு.
****************************************
                                                                     

53733 சேவைகள் 
53733 க்கு SMS செய்யும் முறை 


இன்றைய " OFFER " களை அறிய.        : OFFER 
          ISD வசதி பெற.                                : ACT ISD 
புதிய மொபைல் எண் தேர்வு செய்ய.    : NLIST 
************************

நம்பரை டயல் செய்து 
அறிந்து கொள்ளும் சேவைகள். 

பிளான் பெயர் - வேலிடிட்டி - பேலன்ஸ் 
    அறிய.                                                    : *123#
பயன்படுத்துகிற அனைத்து பூஸ்டர்கள் 
    பற்றி அறிய.                                          : *124*2#
மொபைல் எண் அறிய.                             : *888#
IMEI தெரிந்துகொள்ள                              : *#06# 
IMSI தெரிந்துகொள்ள                              : *999#
BSNL SELF CARE செல்ல.                          : *124# 
  self care மூலம் பின் வரும் விபரங்களை அறியலாம்.
        1. A/C பேலன்ஸ் -  2. ரீ சார்ஜ்,  
        3. பூஸ்டர்  விசாரணை/ஆக்ட்டிவேஷன், 
        4. F & F பட்டியல்/புது சேர்க்கை/மாற்றம்,
        5. பிளான் மாற்றம்.  
**********************************


                          *   DATA வசதி பெற : Start என டைப் செய்து 
1925 க்கு SMS அனுப்பவும்.


                         *        ரோமிங்கில் இருக்கும் போது 
வாய்ஸ்/SMS /COMBO/ISD
வவுச்சர்கள் வேலை செய்யாது.

                        *              ப்ளாக் அவுட் நாட்களில் 
                                  பூஸ்டர்கள் வேலை செய்யாது.

                        *    பூஸ்டர்கள் உபயோகித்து மீதமிருக்கும் 
 டேட்டா/வாய்ஸ்/SMS ஆகியவற்றை 
இழப்பின்றி உபயோகிக்க மீண்டும் 
அதே விலை உள்ள பூஸ்டரை 
வேலிடிட்டி காலம் முடியும் முன்பே 
ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும். 

                       *     VAS சேவைகளை தடை செய்ய 155223 
என்ற எண்ணை அழைக்கவும்.

                       *      தேவையில்லாத SMS -களை தவிர்க்க 
START 1 என டைப் செய்து 1909 க்கு SMS 
அனுப்பவும்.   பின் பதில் வந்த பின் YES 
என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பவும், 

                       *       இன்னும் BSNL பற்றிய அனைத்து 
விபரங்களையும் அறிந்து கொள்ள 
வெப்சைட் முகவரி:
www .Tamilnadu bsnl.co.in 

                       *             கால் சென்டர் எண்: 1503

                       *      வாடிக்கையாளர்கள்ஒரே நேரத்தில் 
ஒவ்வொரு குரூப்பிலிருந்தும் 
ஒரு பூஸ்டர் உபயோகிக்கலாம்.
( அதிகபட்சம் - 7 ) 

வேறெந்த நெட்ஒர்க்கையும் விட 
பாதிக் கட்டணத்தில் 
பேச BSNL -ல் PLAN உண்டு.

BSNL மொபைல் பற்றிய மேலதிக விபரங்களை 
என்னிடம் கேட்டுப் பெறலாம்.
S. சிவசிதம்பரம், பட்டுக்கோட்டை.
94861 09185 / 94894 16602

BSNL மேளா நடத்திட எம்மிடம் ஆடியோ பதிவு இருக்கிறது.  தேவைப்படுவோர் கேட்டுப்  பெறுக!

Monday, July 11, 2016

nfte க்கான பட முடிவு

வேலூரில்  5 வது தமிழ் மாநில மாநாடு july 21,22,,,
வேலூரில்  சங்கமிப்போம் ,,   
6-7-16 வேலூரில் ஜூலை5 அன்று செயற்குழு- வரவேற்புக்குழு கூடி வேலைகளை- நிதிநிலையை பரிசீலித்தது.பொதுசெயலர் தோழர் நெடுமாறன் விரிவான அறிக்கையை முன்வைத்து உரையாற்றினார்.மேலும் 12 லட்சம் தேவைப்படுகிறது. மாவட்டங்கள் தங்கள் இலக்கை உடன் கொடுத்திட வேண்டுகிறோம். பொறுப்பு மாநில செயலர் முரளி, தலைவர் லட்சம், நடராஜன் துணைச்செயலர், பட்டாபி உரையாற்றி வரவேற்புகுழுவிற்கு/ வேலூர் தோழர்களுக்கு பாராட்டையும் நம்பிக்கையையும் தந்தனர். தோழர்கள் சென்னகேசவன், காமராஜ், அசோகராஜ், சுப்பராயன், ஸ்ரீதர், குமார்,பழனியப்பன்,விஜய் பங்கேற்று மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்கான ஆலோசனைகளை பகிர்ந்துகொண்டனர். திரளான, ஒன்றுபட்ட சிறப்பான மாநாடு நோக்கி பயணிப்போம்!

Wednesday, June 8, 2016


மாவட்ட மாநாடுகள் 

மாவட்ட மாநாடுகளை நடத்தாத மாவட்டச்சங்கங்கள்  
31/07/2016க்குள் உடனடியாக தங்களது மாவட்ட மாநாடுகளை 
நடத்தி முடிக்க மத்திய சங்கம் அறிவுறுத்தியுள்ளது. 

மாவட்டச்சங்கங்கள் மாநாடுகளை நடத்தாத நிலையில் 
மாநிலச்சங்கமே மாநாட்டு அறிவிப்புச் செய்திட வேண்டுமெனவும் 
மத்திய சங்கம் அறிவித்துள்ளது.

ஜூன் -7 

தோழர்.ஜெகன் நினைவு நாள் 


இங்கு... இவனை...

 யாம் பெறவே.
என்ன தவம் செய்து விட்டோம்?

Tuesday, May 31, 2016

படைத் தலைவன் பட்டாபிக்கு இன்று பணி நிறைவு.


மா நிலத்தை நேசித்த மனித நேயர் 
சோதனைகளை சுவாசித்த சொல்வேந்தன்.
தோழர்களே! வாழ்த்த வயதில்லை என்று
வணங்கிப் போக வேண்டாம்.
வாயார வாழ்த்தலாம் வாங்க.
சிறியவர் முதல் பெரியவர் வரை 
விரும்பி வாழ்த்த  அவர் என்ன நிஜாம் பாக்கா!
இல்லை! தோழனே! அவரின் நிஜமான போக்கு.
வரலாறு படைத்த தலைவர்களின் 
வரிசையில் வந்த தோழன் அவன். 
திரும்பிய திசையெல்லாம் விரும்பிய வண்ணம் 
தோற்றமளித்த திருவாரூர் ஜெகனே!
ஜெகன், முத்தியாலு, ஆர்.கே, தமிழ்மணி,
வீரபாண்டியோடு 
மாலியின் வரிசையில் வந்த மாயனே!
உனக்குப் பிறகு உருவானவர் யார்?
ஒன்றா! இரண்டா!! ஒரு நூறு சொல்லலாம்!
இப்படி ஒரு வளர்ச்சி வேறெங்கு காண?
நீ ஓய்வு பெறும் காலம் 
சங்கம்  பேறு பெற்ற காலம்.
பல்வேறு இன்னல்களைக் கடந்து 
மாநிலத்தை முதன்மையாய் நிலைநிறுத்திய காலம்.
சந்தித்த சோதனைகள், வென்றிட்ட சாதனைகள் 
கொஞ்சமா, நஞ்சமா! 
உனக்கு அணுக்கத் துணையாக லட்சமும், முரளியும்.
உன்னை நுணுக்கப் பகையாக மிச்சம் அரளியும், புரளியும்! 
அண்ட முடியுமா! மிஞ்ச முடியுமா!
நல்ல மனைவி, நல்ல தோழன் 
நல்ல சங்கம் தெய்வீகம்!
அமைந்த என் தலைவனை
 ஆரத் தழுவி மகிழ்கிறேன்!

என்றும் உங்கள் நிழலாய்.......
S. சிவசிதம்பரம், பட்டுக்கோட்டை.

Saturday, May 14, 2016


JCM இடங்கள் 

நடந்து முடிந்த சங்க சரிபார்ப்புத் தேர்தல் 
முடிவின் அடிப்படையில்
மொத்தமுள்ள 14 JCM இடங்களில் 
நமது NFTE சங்கத்திற்கு 5 இடங்களும்
BSNLEU சங்கத்திற்கு 9 இடங்களும்  கிடைக்கும்.
மற்றெந்த சங்கமும் 7 சதம் வாக்குகள் பெறாததால்
 JCMல் பங்கேற்க இயலாது.

JCM இடங்கள் கணக்கீட்டு முறை 

NFTE பெற்ற வாக்கு சதவீதம் -           31.97

BSNLEU  பெற்ற வாக்கு சதவீதம் -     49.56

மொத்த சதவீதம்                               -    81.53 

மேற்கண்ட 81.53 சதத்தில்...
INTER-SE RATIO OF VOTE 

NFTE யின் வாக்கு சதவீதம் - 39.21

BSNLEU வின் வாக்கு சதவீதம் - 60.79

7 சத அடிப்படையில்...கிடைக்கும் இடங்கள் 
NUMBER OF CLEAR SEATS

NFTEக்கு கிடைக்கும் இடங்கள் = 5 (5 x 7 = 35)
மீதி -  BALANCE PERCENTAGE OF VOTES = 4.21 ( 39.21 - 35)

7 சத அடிப்படையில்...
BSNLEU விற்கு கிடைக்கும் இடங்கள் = 8 (8 x 7 = 56)
மீதி - BALANCE PERCENTAGE OF VOTES = 4.79 (60.79 - 56)

மீதியில் கூடுதலாகப் பெற்றது BSNLEU  (4.79 > 4.21)
எனவே மீதியுள்ள ஒரு இடமும் BSNLEUவிற்கு அளிக்கப்படும்.


மேற்கண்ட கணக்கீட்டின் அடிப்படையில்...
NFTEக்கு 5 இடங்களும்...
BSNLEUவிற்கு 9 இடங்களும் 
JCMல் ஒதுக்கப்படும்.

முடிந்தது... விடிந்தது.. 

தேர்தல் அதிகாரப்பூர்வ முடிவுகள் 

நடந்து முடிந்த சங்க அங்கீகாரத்தேர்தலின் 
அதிகாரப்பூர்வ முடிவுகள் இன்று 
13/05/2016 வெளியிடப்பட்டுள்ளன. 

31/03/2016 அன்று...
மொத்த வாக்காளர்கள் 164244 ஆகும்.
BSNLEU சங்கம்  31/03/2016க்குப்பின்  
JTO பதவியில் நியமனம் செய்யப்பட்டவர்கள்...
ஓய்வு பெற்ற ஊழியர்கள்..
ஓய்வெடுக்கச்சென்ற ஊழியர்கள்...
இறந்து போன ஊழியர்கள்...
வெளிநாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றவர்கள் 
மற்றும் காசியாத்திரை சென்றவர்கள்..
ஆகியோரை மொத்த வாக்காளர்கள் 
கணக்கில் இருந்து கழிக்க வேண்டும் 
என கோரிக்கை வைத்தது.  
காரணம் மொத்த வாக்காளர்கள்  கணக்கில் 
50 சதம் வாக்குகளைப் பெற்று விட்டால் 
தான்.. ஒரு சங்கம் மட்டுமே BSNLலில் 
காலத்தைக் கழித்து விடலாம் என்று 
BSNLEU  மனப்பால் குடித்தது. 
மனப்பால் BSNLEUவின்  மகத்தான கோரிக்கை 
நிர்வாகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு  
424 வாக்காளர்கள் கழிக்கப்பட்டு  
மொத்த வாக்காளர்கள் 163820 என்று கணக்கிடப்பட்டு 
அதன் அடிப்படையில்  அதிகாரப்பூர்வ முடிவுகள்
இன்று  வெளியிடப்பட்டுள்ளன.

சில துளிகள்:

மொத்த வாக்காளர்கள்  : 163820

வாக்களித்தவர்கள் - 153840

வாக்களிக்காதவர்கள் - 9980 - 6.1 சதம்

செல்லாத வாக்குகள்  - 1395

செல்லுபடியான வாக்குகள் - 152445

NFTE - 52637 - 31.97 சதம் 

BSNLEU - 81195 - 49.56

FNTO - 8697 - 5.31 சதம் 

BTEU BSNL - 4846 - 2.96 சதம் 

எந்த சங்கமும் 50 சதத்திற்கும் மேல் வாக்குகள் பெறாததால்...
15 சதத்திற்கும் அதிகமாக வாக்குகள் பெற்ற 
NFTE மற்றும் BSNLEU சங்கங்கள் 
அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

பாவம் FNTO...
7 சத வாக்குகளைப் பெற முடியாமல்
5.31 சதமே வாக்குப்பெற்றதால் 
JCMல் ஒரு இடத்திற்கு கூட வழியில்லாமல் போனது.

FNTO சங்கம் பெற்ற வாக்குகளை விட 
வாக்களிக்காதவர்களின் எண்ணிக்கை அதிகம் 
என்பது வருத்தத்துடன் குறிப்பிடத்தக்கது.

தோழர்களே...
மயிரிழையில்...
715 வாக்குகள் குறைவால் 
BSNLEU  சங்கத்திற்கு...
50 சதப் பெரும்பான்மை  கிடைக்காமல்... 
BSNLEU வின்  ஒரே சங்க கனவு கலைந்து விட்டது...


இத்தோடு....

முடிந்தது.. 

BSNLEUவின் ஒரே சங்கக்கனவு..

விடிந்தது... 

BSNL ஊழியர் வாழ்வு...

BSNLEUவிற்கு வாக்களிக்காத...

அந்த...715 தோழர்களுக்கும் 

கோடான கோடி நன்றிகள்...


காரைக்குடி வலைதளத்திலிருந்து ..........

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR