தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Friday, February 15, 2019

 AUAB சார்பாக வேலை நிறுத்த விளக்க 
தெருமுனைப் பிரச்சாரம்.
===================================
பட்டுக்கோட்டை 
16-02-19 சனி காலை 11 மணி 
இடம்: அறந்தாங்கி முக்கம்,
பட்டுக்கோட்டை.
===================================
மன்னார்குடி
16-02-19 சனி மாலை 3 மணி 
இடம்: மேல ராஜ வீதி, மன்னார்குடி 
(பெரியார் சிலை அருகில்)
===================================
திருவாரூர்
16-02-19 சனி மாலை 4 மணி 
இடம்: ரயிலடி, திருவாரூர். 
===================================
மத்திய அரசின் பிற்போக்கான கொள்கைகளால் நமது BSNL
நிறுவனத்தை நலிவடையச் செய்யும் போக்கை கண்டித்தும்,

3 வது ஊதியக் குழுவின் அடிப்படையில் சம்பள மாற்றத்தை 
இரண்டு ஆண்டுகளாக இழுத்தடிக்கும் போக்கை கண்டித்தும்,

BSNL க்கு 4 ஜி சேவையை உடன் வழங்கிடக் கோரியும்,

நாடு முழுவதும் பிப்ரவரி 18 முதல் நடைபெறவிருக்கின்ற 
3 நாள் வேலை நிறுத்தத்தை பொதுமக்களிடம் விளக்கிடவும் 
தெருமுனைப் பிரச்சாரம் நடைபெறுகிறது.

அனைவரும் பங்கேற்று வேலை நிறுத்தத்தை 
வெற்றியடையச் செய்யுமாறு 
அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

தோழமையுடன்,
கே. கிள்ளிவளவன்,
மாவட்டச் செயலர், தஞ்சை.வெற்றிகரமாக நடைபெற்ற வேலை நிறுத்தப் பேரணி!
======================================================
தஞ்சை ராமனாதன் பேருந்து நிறுத்தத்திலிருந்து புறப்பட்டு
மேரிஸ் கார்னர் இணைப்பகம்  வரை பேரணி சென்றது.
பேரணியில் ஓய்வூதியர்களும் பங்கேற்று முழக்கமிட்டனர்.
அண்ணா தொழிற்சங்க தலைவர்கள் சுந்தரராஜன்சந்திரன்
ஆகியோரோடு தோழர்களும் பங்கேற்றனர்பிப். 18, 19, 20 மூன்று
நாட்களும் அண்ணா தொழிற்சங்கமும் பங்கேற்கும் என்பதைக்
கூறினார்கள்.
100 சதவீத வேலைநிறுத்த பங்களிப்பை உறுதி செய்யும்
வகையில் 200 க்கும் மேற்பட்டதோழர்கள் பங்கேற்றனர்.
இறுதியாக மேரிஸ் கார்னரில் வேலை நிறுத்த முழக்கங்களுடன்
ஆர்ப்பாட்டமும்விளக்கக் கூட்டமும் நடைபெற்றது.
அனைத்துச் சங்கத் தலைவர்களும் பங்கேற்று பேசினார்கள்.

Thursday, February 14, 2019

 AUAB சார்பாக வேலை நிறுத்த விளக்க 
தெருமுனைப் பிரச்சாரம்.
===================================
பட்டுக்கோட்டை 
16-02-19 சனி காலை 11 மணி 
இடம்: அறந்தாங்கி முக்கம்,
பட்டுக்கோட்டை.
===================================
மன்னார்குடி
16-02-19 சனி மாலை 3 மணி 
இடம்: மேல ராஜ வீதி, மன்னார்குடி 
(பெரியார் சிலை அருகில்)
===================================
மத்திய அரசின் பிற்போக்கான கொள்கைகளால் நமது BSNL
நிறுவனத்தை நலிவடையச் செய்யும் போக்கை கண்டித்தும்,

3 வது ஊதியக் குழுவின் அடிப்படையில் சம்பள மாற்றத்தை 
இரண்டு ஆண்டுகளாக இழுத்தடிக்கும் போக்கை கண்டித்தும்,

BSNL க்கு 4 ஜி சேவையை உடன் வழங்கிடக் கோரியும்,

நாடு முழுவதும் பிப்ரவரி 18 முதல் நடைபெறவிருக்கின்ற 
3 நாள் வேலை நிறுத்தத்தை பொதுமக்களிடம் விளக்கிடவும் 
தெருமுனைப் பிரச்சாரம் நடைபெறுகிறது.

அனைவரும் பங்கேற்று வேலை நிறுத்தத்தை 
வெற்றியடையச் செய்யுமாறு 
அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

தோழமையுடன்,
கே. கிள்ளிவளவன்,
மாவட்டச் செயலர், தஞ்சை.

AUAB நடத்தும் கோரிக்கைப் பேரணி 
=============================================

15-02-2019 மாலை 4 மணி 
நாம் கூடும் இடம்: 
தஞ்சை ராமநாதன் பஸ் ஸ்டாப் 
அருகில் உள்ள மணி மண்டபம்.
====================================
  தஞ்சை ராமநாதன் பேருந்து நிறுத்தத்திலிருந்து பேரணி புறப்பட்டு 
மேரிஸ் கார்னர் இணைப்பகம் 
சென்றடையும். 
தோழர்கள் அனைவரும் 
கொடியுடன் வாருங்கள்! 
பேரணியில் பெருந்திரளாய் செல்வோம் 
கொள்கைப் படையாய் 
கோரிக்கை முழக்கமிடுவோம்! 
==========================================
பிப்ரவரி 18 ல்
துவங்கும் நமது வேலை நிறுத்தம்
வெல்லட்டும்! வெல்லட்டும்!!
போராட்டங்கள் இல்லாது

யாராட்டமும் செல்லாதென்பதை
மீண்டும் நாம் நிரூபிப்போம்!

மோடி அரசே! மோடி அரசே!!

இனியும் மோசம் செய்யாதே!

தேசத்தின் நாடித் துடிப்பாம்
BSNL பொதுத் துறைக்கு
துரோகம் என்றும் செய்யாதே!

நஷ்டம், நஷ்டம், என்று சொல்லி
கேந்திரமான பொதுத் துறையை 
பல லட்சம் கோடி ரூபாய் 
சொத்து கொண்ட BSNL ஐ 
என்ன செய்யப் போகிறாய்!
விற்றுத் திண்ணும் எண்ணமா!
விட மாட்டோம்! விடமாட்டோம்!!

மோடி அரசின் துரோகத்தாலே

உருவாக்கப்பட்ட நஷ்டத்தை 
எங்கள் மீது திணிப்பதை 
ஒரு போதும் ஏற்க மாட்டோம்!

பாரம்பரியமிக்க  BSNL 

EB காரன் காலில் விழுந்து 
டீசலுக்கு கும்பிடுபோட்டு 
கெஞ்சித் திரியும் கேவலத்தை 
வரலாறு பார்த்ததுண்டா!
மத்திய அரசே! பதில் சொல்லு.

புதிதாய் ஒரு கருவியும் இல்லை!

புதுமை ஏதும் புகுத்தவும் இல்லை!!
விதியே என்று இருப்பதை வைத்து
எவ்வளவு நாட்கள் பணி செய்வோம்!

இதுதான் மோடியின் சாதனையா!

வெட்கக்கேடு! வெட்கக்கேடு!

யார், யாரோ பிழைப்பதற்காக  

ஏழைகளும் பயன்படுத்தும்
பொதுத் துறை BSNL ஐ
கார்ப்பரேட்டுக்கு காவு கொடுக்கும்
மோடி ஆட்சி தேவைதானா!
வேண்டாம்! வேண்டாம்! வெளியேற்றுவோம்!!

லட்சம், லட்சம் கோடிகளை 
அம்பானியின் 5 G க்கு 
அள்ளித்தரும் மோடியே!
அரசுத்துறை BSNL க்கு 
4 G தர வலிக்குதா!
இதுதானா தேசபக்தி! 
இல்லை, இல்லை, பொறுக்கிப் புத்தி!

15 லட்சம் கோடி ரூபாய்  

கடன் வாங்கிய கார்பரேட்டுக்கு 
ரத்து செய்ய மனமிருக்கு!
8 லட்சம் கோடி கொடுத்து 
அரசுத் துறை BSNL ஐ 
காப்பாற்ற  மனமில்லை! 
தேவைதானா இந்த ஆட்சி! 
தேவையில்லை! தூக்கி எறிவோம்!

மஞ்ச நோட்டிசு அணிலுக்கு  
ரபேல் விமான ஒப்பந்தம்!
பட்டி, தொட்டிக்கு தொலைபேசியை 
கொண்டு சென்ற தொழிலாளிக்கு  
ஆண்டு இரண்டு முடிந்த பின்னும் 
சம்பள மாற்றம் கிடையாதாம்!
காவிவேஷ,  கமிஷன் ஆட்சி 
BJP அரசு தேவைதானா!
தோற்கடிப்போம் தோழர்களே!

Wednesday, February 13, 2019

AUAB தஞ்சை
====================
18, 19, 20-02-19 மூன்று நாள்
 வேலை நிறுத்த விளக்கக் கூட்டம் 
=================================================
13-02-19 இன்று தஞ்சையில் தலைவர்கள் பங்கேற்ற வேலை நிறுத்த விளக்கக் கூட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
200 க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.


தஞ்சையில் தோழர் நடராஜன் உரையாற்றியபோது Tuesday, February 12, 2019

18-02-19 முதல் 
மூன்று நாள் வேலை நிறுத்தம்
==================================
வேலை நிறுத்த விளக்கக் கூட்டம் 
==================================
13-02-2019 மாலை 5 மணி 
தஞ்சை மேரிஸ் கார்னர் தொலைபேசி இணைப்பகம்.

தலைமை:
தோழர். ஆர். ராஜேந்திரன் அவர்கள்,
AUAB தலைவர், தஞ்சை.

வரவேற்புரை:
தோழர். T. பன்னீர்செல்வம் அவர்கள்,
மாவட்டத் தலைவர், NFTE, தஞ்சை.

முன்னிலை:
தோழர். T.K. உதயன் அவர்கள்,
கன்வீனர், AUAB, தஞ்சை.

தோழர். இருதயராஜ் அவர்கள், 
மாவட்டச் செயலர், BSNLEU, தஞ்சை.

விளக்கவுரை:
தோழர்.K. நடராஜன் அவர்கள்.
மாநிலச் செயலர், NFTE, சென்னை. 

தோழர். A. பாபு ராதாகிருஷ்ணன் அவர்கள்,
மாநிலச் செயலர், BSNLEU, சென்னை

தோழர். C. துரையரசன் அவர்கள்,
மாநிலச் செயலர், AIBSNLEA, சென்னை.


தோழர். M. குணசேகரன் அவர்கள்,

மாநில செயற்குழு உறுப்பினர், SNEA, தஞ்சை.

நன்றியுரை:
தோழர். D. சுப்பிரமணியன் அவர்கள்,
மாவட்டத் தலைவர், BSNLEU 


திரண்டு வருக! தோழர்களே!!

விளக்கம் கேட்போம்!
வேலை நிறுத்தத்தை 
வெற்றிகரமாக்குவோம்!!

தோழமையுடன்,
கே. கிள்ளிவளவன்,
தஞ்சை மாவட்டச் செயலர்.Saturday, February 9, 2019

ரூ.3000 ஓய்வூதியம் என அமைப்புசாரா தொழிலாளரை ஏமாற்றும் மத்திய அரசு.
=========================================================
(கொஞ்சம் நீளமாக இருந்தால் பெரும்பாலோர் படிப்பதில்லை. ஆனால் இது முக்கியமான விஷயம்.  இதற்கு மேலும்  சுருக்க வழியில்லை)

அமைப்புசாராத தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.3000 ஓய்வூதியம் கொடுக்கப் போவதாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கட்டுமானத் தொழிலாளர் நலவாரியம், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகங்களில் தொழிற்சங்கங்களை அழைத்துப் பேசினர். இதன்மூலம் அத்திட்டத்தின்சில விபரங்கள் தெரியவந்தன. அவை பின்வருமாறு:

1. இத்திட்டம் மாதம் ரூ.15,000க்குக் குறைவாக வருவாய் உள்ள அமைப்புசாராத தொழிலாளர்களுக்கான திட்டமாகும்.

2. தற்போது 18 முதல் 40 வயது வரையில் உள்ளவர்களுக்கு மட்டுமே பொருந்தும்
18 வயதுள்ள தொழிலாளி மாதம் தோறும் ரூ.55 சந்தா செலுத்த வேண்டும். வயது ஏற ஏற செலுத்த வேண்டிய தொகையும் உயர்கிறது. இப்போது 40 வயது என்றால் மாதம் ரூ. 200 செலுத்தவேண்டும். அதற்கு ஈடான தொகையை மத்திய அரசும் போடும். இப்போது 41 வயதாகியிருந்தால் அவருக்கு திட்டம் பொருந்தாது; ஓய்வூதியமும் கிடையாது.

3. இப்போது சந்தா தொடங்கினால், அவருக்கு 60ஆம் வயதில் ஓய்வூதியம் கிடைக்கும். அதிகபட்சம் 40 வயதானவர்தான் இதில் சேரமுடியும் என்பதால், இத்திட்டப்படியான முதல் ஓய்வூதியம் இன்னும் 20 ஆண்டு கழித்துத்தான் வழங்கப்படுகிறது. 

4. பணம் கட்டும் தொழிலாளி 60 வயதுக்கு முன்பே இறந்து போனால், அவரது மனைவி அல்லது கணவர் உடனே இத்திட்டத்தில் சேர்ந்து,  ஒருமாதம் கூட விட்டுப் போகாமல் தொடர்ந்து பணம் செலுத்தி வர வேண்டும். 

5. தொழிலாளி 60 வயது வரை இருந்தால்தான் ரூ.3000 ஓய்வூதியம். அவரது கணவன் அல்லது மனைவிக்கு என்றால் ரூ.1500 மட்டும்தான் விதவை ஓய்வூதியமாகத் தரப்படும். ஓய்வூதியம் பெறும் முன்பே தொழிலாளியும் அவரது மனைவி (அல்லது) கணவனும் இறந்து விட்டால் அதன்பின்பு கணக்கில் உள்ள கட்டிய தொகை எல்லாம் அரசுக்குப் போய்விடும். எல்.ஐ.சி. மூலம் இத்திட்டம் நிர்வகிக்கப்பட்டாலும், இதில் ஆயுள் காப்பீடு ஏதும் இல்லை.

6. இத் திட்டத்துக்காக இப்போது மத்திய அரசு ரூ. 500 கோடி ஒதுக்கியுள்ளது. அமைப்புசாராத தொழிலாளி எண்ணிக்கை 47 கோடி என்றும் பட்ஜெட் கூறுகிறது. இதன்படி பார்த்தால் ஒரு தொழிலாளிக்கு வெறும் 10 ரூபாய்தான் ஒதுக்கப்பட்டுள்ளது!

தமிழ்நாட்டில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு நலவாரியம் உள்ளது. கட்டிடம் கட்டுபவர்களிடமிருந்து நலநிதி வசூலிக்கப்படுகிறது. இதேபோன்று 80 வகையான அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் நலவாரியங்கள் உள்ளன. இவற்றில் பதிவு செய்து கொண்டவர்களுக்கு, அவர்கள் 59 வயதில் பதிவு செய்திருந்தாலும்கூட, 60 வயது நிறைந்ததும் மாதம் ரூ.1000 ஓய்வூதியமாகக் கொடுக்கப்படுகிறது. ஓய்வூதியத்துக்காக எந்த நிதிப்பங்களிப்பும் அவர்கள் செலுத்த வேண்டியதில்லை.

மத்திய அரசு மூலம் 20 ஆண்டுகள் கழித்து வழங்கப்பட இருக்கும் 3000 ரூபாயின் மதிப்பு, தற்போதைய 1000ரூபாய் அளவுக்காவது இருக்க வாய்ப்பில்லை. நல வாரியங்கள் மாநில தொழிலாளர் துறையின் நிர்வாகத்தில் இயங்குகின்றன. மத்திய அரசு ஓய்வூதிய திட்ட செயலாக்கத்தையும் அதே துறையிடம் விடுவது தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும்.

ஊடகங்களில் செய்யப்பட்ட பெரும் விளம்பரம் மூலமாக, இப்போது 1000 ரூபாய் பெறுபவர்கள், அது 3000 ரூபாய் ஆகப்போகிறது என மகிழ்ந்து போயிருக்கின்றனர். ஆனால் உள்ளதையும் பறிப்பதாகத்  திட்டம் உள்ளது. தமது வாழ்வாதாரம் குறித்தும், பாதுகாப்பற்ற முதுமைக்காலம் பற்றியும் சாமானிய மக்களுக்கு இருக்கும் அச்சத்தையும் ஏக்கத்தையும் களமாகக் கொண்டு பாஜக அரசு விளையாடுகிறது. இந்த மலிவான தேர்தல் உத்தி கண்டனத்துக்குரியதாகும்.

பாரதீய ஜனதா தன்னை மாற்றிக் கொள்ளப்போவதில்லை.  இதைத் தனது தேர்தல் முழக்கமாக வைத்து, ஏமாந்தவர்களிடம் வாக்குகளைப் பறிக்க முயலும். மக்கள் அதற்குப் பதில் தருவார்கள். 

மத்திய அரசுத் திட்டம் விருப்பபூர்வமானது மட்டுமே. தொழிலாளி விரும்பினால் சேரலாம். மாநில நலவாரியங்களுக்கும் அதற்கும் தொடர்பு ஏதும் இல்லை. 

எனவே தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட நலவாரி்யங்கள் வழியாக வழங்கப்படும் ஓய்வூதியம் தொடர வேண்டும் என்றும், ஓய்வூதியத்தை மாதம் ரூ.3000 ஆக உயர்த்த வேண்டும் என்றும் மாநில அரசை ஏஐடியூசி கேட்டுக் கொள்கிறது.

நாம் போராட வேண்டியது சின்னதம்பியை காக்கவா? கார்ப்ரேட்டுகளை விரட்டவா?

‘சின்னதம்பி’ யானை தான் இன்று ஊடகங்களில் அதிகம் இடம்பிடித்த பெயராக இருக்கின்றது. ‘வழக்கமாக ஊருக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்’ என செய்தி வெளியிடும் ஊடகங்கள் இந்த முறை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் சின்னதம்பி யானையைக் காப்பாற்ற ஏற்பட்டிருக்கும் செல்வாக்கைப் பார்த்து, வழக்கத்திற்கு மாறாக சின்னதம்பிக்கு ஏற்பட்ட அவலநிலையை எண்ணி கண்ணீர் விடுகின்றன. எப்போது எந்த செய்திக்கு செல்வாக்கு உள்ளதோ, அப்போது அதைப் பயன்படுத்தி TRP ரேட்டிங்கை ஏற்றிக் கொள்வதுதான் கார்ப்ரேட் ஊடகங்களின் தந்திரம். காட்டுயானை சின்னதம்பி பிரச்சினையானது கார்ப்ரேட் கொள்ளையால் ஏற்பட்டது என்பதில் இருந்து மடை மாற்றி, சின்னதம்பியைக் காப்பாற்ற வேண்டும் என்ற இரக்க உணர்விற்கு கொண்டுவந்து ஊடகங்கள் நிறுத்தி இருக்கின்றன. சின்னதம்பிக்காக கண்ணீர் வடித்த ஊடகங்களில் ஒன்றுகூட யானை வழித்தடத்தை ஆக்கிரமித்த அயோக்கியர்களின் பெயர்களை வெளியிடவில்லை. ஸ்டெர்லைட்டிடம் காசு வாங்கிக் கொண்டு அதற்கு ஆதரவாக பொய்யான செய்தியை வெளியிடும் விபச்சார ஊடகங்களிடம் இருந்து நாம் என்ன கார்ப்ரேட் எதிர்ப்புக் குரலையா கேட்க முடியும்?
நிலம், நீர் , காற்று, காடுகள், மலைகள் என அனைத்தையும் கார்ப்ரேட் லாப வெறி கபாளிகரம் செய்து வருகின்றது. ஆளும் வர்க்கத்தின் துணையில்லாமல் நிச்சயம் ஒரு பிடி மண்ணைக் கூட யாராலும் ஆக்கிரமிக்க முடியாது என்பதுதான் உண்மை. உள்ளூர் அரசு அதிகாரிகளில் இருந்து மேல் மட்ட அரசியல்வாதிகள் வரை அத்தனை கூட்டுக் களவாணிகளும் ஒன்றாக சேர்ந்துதான் இந்த வன அழிப்பை நிகழ்த்திக் கொண்டு இருக்கின்றார்கள். சமவெளிப்பகுதிகளில் ஆற்று மணல் கொள்ளை, கார்பைட் மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை செய்து, நிலத்தையும், நீரையும் நாசம் செய்து நஞ்சாக்கிய கும்பல்கள் தங்களது லாபவெறி அடங்காமல் பல்லுயிர்களின் புகலிடமாக விளங்கும் வனங்களையும் அழித்து ஒட்டுமொத்த உலகத்தையே அழிக்கத் துணிந்திருக்கின்றார்கள்.
இந்தியாவின் மழைவளக் காடுகளாக இருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையில் 2005 ஆண்டில் இருந்து 2017 ஆம் ஆண்டுவரை காடுகளின் பரப்பு பெரிய அளவில் குறைந்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் 35 ஆயிரம் ஹெக்டர் வனப்பகுதியும், கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் 58 ஆயிரம் ஹெக்டர் பரப்பும், வயநாட்டில் 9 ஆயிரத்து 700 ஹெக்டர் பரப்பளவும், கர்நாடகாவில் குடகு மலையில் 10 ஆயிரத்து 600 ஹெக்டர் பரப்பளவும் குறைந்திருக்கின்றது. தொடர்ச்சியாக தேயிலைத் தோட்டங்கள் அமைக்கவும், ரிசார்ட்டுகள், ஓட்டல்கள், குடியிருப்புகள் மற்றும் மரங்களுக்காகவும் கணக்கு வழக்கற்று காடுகள் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நீலகிரி மாவட்டத்தில் யானை வழித்தடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த ரிசார்ட்டுகளை 48 மணிநேரத்தில் இடித்துத் தள்ள உச்சநீதி மன்றம் உத்திரவிட்டது நம் நினைவில் இருக்கலாம். நீலகிரி மாவட்டத்தில் மட்டும் மசினகுடி, மாயார், மாவல்லா, பொக்காபுரம் போன்ற பகுதிகளில் மட்டும் 400க்கும் மேற்பட்ட ஓட்டல்கள், ரிசார்ட்டுகள் போன்றவை யானைகள் வழித்தடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன. அதே போல கோவை பள்ளவாரி நீர்வழித்தடங்கள் போன்ற அரசுக்கு சொந்தமான பகுதிகளில் யானை வழித்த‌டத்தை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன‌. நொய்யல் ஆற்றில் கிளை ஓடைகளை ஆக்கிரமித்து காருண்யா கல்வி நிறுவனமும், ஆர்.எஸ்.எஸ் காவி சாமியார் ஜக்கிவாசுதேவும் தங்களுடைய ராஜ்ஜியத்தை காடுகளை அழித்தும், யானை வழித்தடங்களை ஆக்கிரமித்துமே பெருமளவு விரிவுபடுத்தியுள்ளனர். இது போன்று ஆக்கிரமிப்பாளர்கள் அனைவரும் ஆளும் வர்க்கத்தை கைக்குள் போட்டுக்கொண்டே தங்களது அத்துமீறலை நிகழ்த்தி இருக்கின்றார்கள். ஈசா யோகா மையம் நடத்திய ஆதியோகி சிலை திறப்பு விழாவுக்கு நாட்டின் பிரதமரில் இருந்து மாநிலத்தின் முதலமைச்சர் வரை கலந்துகொண்டு சிறப்பிக்கும்போது நீங்கள் யாரிடம் சென்று சின்னதம்பியைக் காப்பாற்றுங்கள் என்று முறையிட முடியும்? மனித உயிர்களையே மயிரளவுக்குக் கூட மதிக்காமல் அவர்களைக் கொல்லும் இரக்கமற்ற பேர்வழிகள் யானைகள் சாவதைப் பற்றியா கவலைப்படுவார்கள்?
இன்றுதான் ஏதோ யானைகள் மீதான தாக்குதல் நடப்பதுபோல ஊடகங்கள் பரபரப்பூட்டுகின்றன. ஆனால் 2017 ஆம் ஆண்டு நிலவரப்படி கடந்த பத்தாண்டுகளில் 973 யானைகள் இறந்துள்ளன. சராசரியாக ஆண்டு ஒன்றுக்கு 97 யானைகள் இறக்கின்றன. யானைகள் மட்டும் அல்ல, இன்னும் காடுகளில் உள்ள பல விலங்குகள் வேட்டையாடப்படுகின்றன. பெருமளவு காடுகள் அழிக்கப்படுவதால் வனவிலங்குகள் தங்கள் இயல்பான வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு பசி, பட்டினி, பேரிடர் போன்றவற்றால் இறக்கும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றன. இங்கே எல்லா இந்துக்கடவுள்களும் தங்களுடைய வாகனமாக ஏதோ ஒரு விலங்கைக் கொண்டிருக்கின்றன. ஆனால் அதே விலங்குகள் வேட்டையாடப்படும்போது அந்த மதத்திற்காகப் பேசுகின்றோம் என்று சொல்லும் ஒருவனும் குரல் கொடுப்பது கிடையாது. உண்மையிலேயே அப்படி ஓர் எண்ணம் இருந்தால் நாடுமுழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடி கலவரம் மட்டுமே செய்ய கற்றுக்கொடுக்கும் கும்பல்கள், ஈசா யோகா நடத்திய நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்து இருக்கமாட்டார்கள். இவர்களுக்கு அப்பாவி மக்களை ஏமாற்றி பொறுக்கித் தின்பதற்கு மட்டுமே மதம் தேவைப்படுகின்றது.
மனிதர்கள் தான் விலங்குகளைச் சார்ந்து வாழ்கின்றார்களே ஒழிய விலங்குகள் ஒரு போதும் மனிதர்களைச் சார்ந்து வாழ்வது கிடையாது. இயற்கை சமநிலைக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொள்ளும் திறனை அவை இயல்பாகவே பெற்றிருக்கின்றன. யானை வழித்தடங்களை அழித்து அதன் பாதையைத் துண்டாக்காமல் இருந்திருந்தால் ஒருபோதும் சின்னதம்பி, மக்கள் வாழும் பகுதிக்கு வந்து விளை நிலங்களை அழித்திருக்க மாட்டான். உங்களின் வீடுகளும், ரிசார்ட்டுகளும், ஓட்டல்களும், பொறுக்கி சாமியார்களின் ஆன்மீக வியாபாரக் கூடங்களும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக யானைகள் ஆண்டு அனுபவித்துவந்த இடங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதால்தான் அவை உணவுக்காக வர நிர்பந்திக்கப்படுகின்றன.
மனிதன் எல்லாவற்றையும் தன்னுடைய பேராசையால் கபாளிகரம் செய்துகொள்ளத் துடிக்கின்றான். இந்த உலகத்தில் தானும் தன்னுடைய குடும்பமும் மட்டும் சுகபோகமாக வாழ்ந்தால் போதும் என்று முடிவு செய்து அதற்காக அனைத்தையும் அழித்து காசாக்க வழி தேடுகின்றான். சின்னதம்பியைக் காக்க வேண்டும் என இரக்க மனது படைத்தோர் போராடுகின்றார்கள். ஆனால் சின்னதம்பி போன்ற நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான விலங்குகளை அரசியல்வாதிகள், அதிகார வர்க்கத்தினர் துணையுடன் அழித்துக் கொண்டிருக்கும் கார்ப்ரேட் ரவுடிகளுக்கு எதிராக அவர்கள் வாய்திறக்காமல் இருக்கின்றார்கள். கும்கி யானைகளின் துணையுடன் நம்மால் சின்னதம்பியை அடக்கி, அதையும் ஒரு கும்கியாக மாற்ற முடியும். மனிதனால் செய்ய முடியாதது என்ன இருக்கின்றது? கும்கியாக மட்டுமல்ல, கோயிலில் பிச்சை எடுக்கும் யானையாகக் கூட நம்மால் அதை மாற்ற முடியும். நாமே சுயமரியாதையற்றவர்களாய், பேராசை பிடித்தவர்களாய் இருக்கும்போது விலங்குகளின் நலத்தைப் பற்றியோ, சுயமரியாதையைப் பற்றியோ நாம் கவலைப்பட போகின்றோமா என்ன? அப்படி கவலைப்பட்டிருந்தால் இந்நேரம் யானைவழித்தடங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்ட ஈசா யோகா மையக் கட்டிடங்களும், பணக்கார பன்றிகள் கொட்டமடிக்க கட்டப்பட்ட ரிசார்ட்டுகளுக்கும், ஓட்டல்களுக்கும் எதிராக அல்லவா நம்முடைய போராட்டத்தை நாம் கட்டமைத்து இருப்போம்.

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR