தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Friday, December 7, 2018

காலவரையற்ற வேலை நிறுத்தம் 
காலம் கொடுத்து ஒத்திவைப்பு.
====================
நினைத்துப் பார்க்கிறோம்!

இப்போதுள்ள நிலைமையில் எடுத்த நல்ல முடிவு இது. இதை தஞ்சை மாவட்டச் சங்கம் பெரிதும் வரவேற்கிறது.  எங்கள் பகுதியில் வேலை நிறுத்தம் கஜாவால் 15-11-18 லேயே துவக்கப்பட்டுவிட்டது.   அதை AUAB யாலும் நிறுத்த முடியாது என்ற நிலைக்கு இன்றும் தொடர்கிறது. 

சம்பள மாற்றத்திற்காக இது வரை நாம் நடத்திய போராட்டங்கள்  நிலைமையை சரியாக கணித்து நடத்தப்பட்டதாகவே நாங்கள் கருதுகிறோம். இதற்காக AUAB நிர்வாகிகளுக்கு தஞ்சை மாவட்டம் பாராட்டுக்களைத்  தெரிவித்துக் கொள்கிறது. 

1. நமது துறையின் நஷ்டத்திற்கு முழுமுதற் காரணம் BSNL ல் 4 G இல்லாதது. இந்த ஒரு காரணத்திலாயே நமது வாடிக்கையாளர் எண்ணிக்கையை உயர்த்தவும் முடியவில்லை, தக்க வைக்கவும் முடியவில்லை.  எனவே, இதனை முன்னிறுத்தி போராட்ட திட்டத்தில் BSNL க்கு 4G கொடு என்ற கோரிக்கையை வைத்தோம். இதில் சேவை முன்னிறுத்தப் பட்டிருக்கிறது.
2. சமூக அக்கறையோடு ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியப் பங்களிப்பில் மாற்றம் என்ற கோரிக்கையையும்  முன்வைத்திருக்கின்றோம்.
3. மூன்றாவதாகத்தான் ஊதிய மாற்றக் கோரிக்கை.  

இப்படிப் பொறுப்பு வாய்ந்த கோரிக்கையை நிறைவேற்ற அனைத்துப் போராட்டத்தையும் வெற்றிகரமாக நடத்தினோம்.

11-7-18 கண்டன ஆர்ப்பாட்டம்.
24 முதல் 26-7-18 வரை 3 நாள் உண்ணாவிரதம்.
2 நாள் வேலை நிறுத்தம்.
29-10-18  பத்திரிகையாளர்கள்  சந்திப்பு.
30-10-18  தர்ணா போராட்டம்.
14-11-18 உரிமைப் பேரணி.
03-12-18 காலவரையற்ற வேலை நிறுத்தம். 

நமது போராட்ட முறைதான்  02-12-18 ஞாயிற்றுக்கிழமையில்  DOT செகரட்டரியை நம்மை அழைக்க வைத்தது. அடுத்த நாள் அமைச்சருடன் பேச்சு வார்த்தை. அப்பொழுதும் 10 ம் தேதிவரை கெடு கொடுத்துவிட்டுத்தான் பேச்சு வார்த்தைக்கு நமது தலைவர்கள் சென்றார்கள். 
இன்றைக்கு அதிலும் பல முன்னேற்றங்கள் வந்திருக்கிறது.

1. 4 Gக்கு அமைச்சரவை ஒப்புதல் பெறப்படும்.
2. ஓய்வூதிய மாற்றம் விரைவில். அது ஊதியமாற்றத்தோடு      
    இணைக்கப்படாது.
3. DOT யும் BSNL ம் ஒரு மாதத்திற்குள் பேசி முடிக்க வேண்டும் என்று    
     அமைச்சர் DOT செகரட்டரியிடம் கூறியிருக்கிறார்.

இதையும் நாம் நம்பவில்லை. சொன்னதைச் செய்ய அவகாசம் கொடுத்துதான் 10 ம் தேதி வரை ஒத்திவைத்த போராட்டத்தை மறு அறிவிப்பு வரும் வரை என்று AUAB முடிவு செய்துள்ளது. 

இந்தத் தன்மையை,  நியாயத்தை சரியாக புரிந்து கொள்வதுதான் நம்மை வெற்றிக்கு இட்டுச் செல்லும்.


போராட்டத்தில் இணையாத ஒன்றிரண்டு சங்கங்களும் 
உடனே இணைந்தாக வேண்டும்.
வேலை நிறுத்தத்தை வாபஸ் வாங்கியது தவறு 
என்ற சொத்தை வாதங்களைத் தவிர்க்க வேண்டும்.
இவ்வளவுக்குப் பின்னும் லீவு போடலாம், 
MC கொடுக்கலாம் என்ற புத்திசாலிச் 
சிந்தனைகளையும் விட்டொழிக்க வேண்டும்.

ஒன்று தெரிந்து கொள்ளுங்கள் தோழர்களே!
நாம் வேலை நிறுத்தம் செய்தால் 
எந்தத் தொழிலும் பாதிக்காது. 
நமக்காக எவரும் கவலைப்படமாட்டார்கள்.
நமது சம்பளம்தான் பறி போகும்.

ஒன்றுபட்ட தன்மைதான் 
நமது துயரோட்டும்.
அது இன்று நமக்கு வாய்த்திருக்கிறது.
வாராது வந்த மாமணியை தோற்போமோ!
காத்து நிற்போம்.

வாழ்த்துக்களுடன்,
கே. கிள்ளிவளவன்,
மாவட்டச் செயலர்.

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR