தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Thursday, January 11, 2018

மறைந்த ஒப்பந்த ஊழியர் பெருமகளூர் 
தோழர் பி. பழனிவேலு 
குடும்பத்தாருக்கு ரூபாய் 80,000
குடும்ப நிவாரண நிதியளிப்புக் கூட்டம்.
=============================10-01-2018 மாலை 4 மணிக்கு பட்டுக்கோட்டையில் துணைக்கோட்ட அதிகாரி V. ஞானசேகர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 
100 க்கும் மேற்பட்ட தோழர்கள், தோழியர்கள் பங்கேற்றனர்.
நமது PGM திரு. C.V. வினோத் ITS அவர்கள் 
மறைந்த தோழர் பி. பழனிவேலு அவர்களின் மனைவியிடம் 
ரூபாய் 80,000  நிதியினை அளித்து உரையாற்றினார்.

PGM அவர்கள் பேசும்போது இது மாதிரி இழப்புக்கள் எதிர்வரும் காலங்களில் ஏற்படாதவாறு ஒப்பந்த ஊழியர்கள், தங்களை தற்காத்துக் கொள்ளவேண்டும் என்றும், மறைந்த பழனிவேலைப் போன்று  சேவை மனப்பான்மையோடு பணியாற்றவேண்டும் என்றும் பேசினார். 
அவரது குடும்பத்தாரிடம், உங்கள்  குழந்தைகளை படிக்க வையுங்கள், அவர்களின் படிப்புச் செலவுக்கு என்னாலானதை தொடர்ந்து செய்வேன் என்றும் உறுதியளித்தார். தோழர்கள் பொறுப்பெடுத்து ஒப்பந்த ஊழியர்களுக்கு, இன்சூரன்ஸ், மருத்துவ செலவு, EPF  போன்ற சலுகைகளை பெற்றுத் தர வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.

கோட்டப் பொறியாளர் திரு. V. பிரகலாதன் அவர்கள் பேசும்போது, 
நமது மாவட்டத்தில் ஒப்பந்த ஊழியர்களின் பணி மகத்தானது என்று புகழ்ந்துரைத்தார். PGM அவர்கள் முதன்முதலில் 2500 ரூபாயை வங்கிக்  கணக்குக்கு  அனுப்பி நிதியை துவக்கி வைத்தது அவருக்கு 80000 ரூபாய் நிதியினைப் பெற வகை செய்துள்ளது என்றார். 

NFTE மாவட்டச் செயலர் தோழர். கே. கிள்ளிவளவன் அவர்கள் பேசும்போது, PGM அவர்களின் பணியைப் பாராட்டி, தாயுள்ளத்தோடு அவர் செய்து கொடுத்த ஒரு சில பணிகளை நினைவு கூர்ந்தார்.  
அடிமட்ட தொழிலாளி மேல் அவருக்கிருந்த அக்கறை நம்மை மேலும் நல்ல முறையில் செயல்பட வைக்கிறது என்றார். 
இறுதியாக, புதிய இணைப்புகள் கொடுத்தல், மேளாக்களை வெற்றிகரமாக நடத்துதல், நிலுவை வசூல், உடனடி பழுது நீக்கம், சேவையில் சுறுசுறுப்பு   ஆகியவையே  PGM  அவர்களுக்கு நாம் செய்யும் கைமாறாக இருக்க முடியும் என்று பேசி முடித்தார்.

திரு. கண்ணன் SDE,  FNTO மாவட்டச் செயலர் AMF. ஜெயசீலன், 
ஒய்வு பெற்ற தோழர். சிவசிதம்பரம், TMTCLU மாவட்டச் செயலர் கலைச்செல்வன், மாவட்டத் தலைவர் நாடிமுத்து, முத்துப்பேட்டை சிவசங்கரன்  மற்றும் கிருஷ்ணமூர்த்தி, செல்வகுமார், பேராவூரணி குமார், ரவிச்சந்திரன், குணசேகர் ஆகியோரும் உரையாற்றினார்கள்.

இறுதியாக இந்த நிதியை வெற்றிகரமாக வசூல் செய்து முடித்த  பொருளாளர் கே. விஜயராகவன் அவர்கள் நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.     


 

  


 


No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR