தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Thursday, September 1, 2011

இளமை ததும்பிய மாநாடு.

இளமை ததும்பிய இளைஞர் மாநாடு.
     காரைக்குடியிலே 20 - 08 - 2011 அன்று மிகச் சிறப்பாக இளைஞர் மாநாடு நடைபெற்றது. 
     மாநிலச் செயலர் பட்டாபியின் சிந்தனையை, காரைக்குடி மாவட்டத் தோழர்கள்,  மாவட்டச் செயலர் தோழர் மாரியின் தலைமையில்  செயலாக்கம் செய்து தந்தனர்.    இந்த காலத்தில், இந்தத் துறையில், இப்போதிருக்கும் நிலைமையில்,  இப்படி ஒரு இளைஞர் மாநாடா!!    வியக்கத்தான் வைத்தது. 
     இளைஞிகள் தேசியக் கொடியையும், சங்கக் கொடியையும் ஏற்றி வைக்கும்பொழுது, இளைய தோழர் ஒருவர் அற்புதமாக கோஷமிட்டார்.        நல்ல கவிதையும், பாரதி பாடலும் துவக்கத்தில் கிடைத்தது.  
     மாநிலச் செயலரின் துவக்க உரை கருத்தாழத்துடன் அமைந்திருந்தது. 
தமது உரையிலே .........
     பாரதி,  பகத்சிங், விவேகானந்தர் பிறந்த நாள் விழாக்களில் இளைஞர்களின் பங்கேற்பு அவசியம்.  அதோடு  தாரபாதா சிந்தனைகளை, தொழிற்சங்க வரலாற்றை  இளைஞர்கள் முறையாக உள்வாங்கிக் கொள்ளவேண்டும்.            
  இளைஞர்களைப்  புனரமைக்கும் "மறுசீரமைப்பை" கொண்டு வந்தவர் தோழர் குப்தா. அதேபோல் மஸ்தூர் - RTP க்கள் நிரந்தரம் என்ற விடுதலைப் போருக்கு ஆதாரமாக நின்றதோடு, பயனுறவும் வாழ்ந்தவர்  தோழர் ஜெகன்.  
     ஜெகனைத் தொடர்ந்து வந்த தலைவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாணியைக் கைக்கொண்டிருந்தனர்.   முத்தியாலு என்றால் கவித்துவ பாணி,  RK என்றால்  எழுச்சி, நியாய ஆவேசம், போர்க்குணம். அதேபோல் தமிழ்மணி என்றால் ஒரு ஓரத்திலிருந்து மையத்திற்கு ( Main Stream ) வர முடியும் என்று நிரூபித்தவர்.  
      தோழர் CKM புதிய பாய்ச்சலை உருவாக்கியவர், அரசியல்வாதிகளின் பிடரியைப் பிடித்து உலுக்கியவராக வந்திருக்கிறார்.  அதேபோல் தொழிற்சங்கத்தில் இலக்கியத் தமிழை இணைத்து வழங்குகிறார் தோழர் ஜெயராமன். தோழர் சேது அவர்களோ  தலைவன் என்ற பந்தா இல்லாமல், இயக்கத்தை சுமந்து செல்லக் கூடியவர். 
     தோழர்கள் ஜெயபால், KSK ஆகியோர் என்னைக் கை  பிடித்து அழைத்துச் சென்றவர்கள். தோழர் மாரி அப்துல் கலாமின் கோபத்திற்கு இணையான அன்பு கொண்டவர். 
     அதேபோல் கோவை SSG , சுப்பராயன் போன்று அறுந்து போகாத மரபுத் தொடர்ச்சியாக இன்னும் தோழர்கள் வந்து கொண்டேயிருக்கிறார்கள். 

     LPG காரணமாக இந்தியாவில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது.    வரப்போகும் 20 ஆண்டுகளில் BSNL அரசிடம் இருக்குமா!   தனியாரிடம் இருக்குமா!!  
     அடுத்த பத்து ஆண்டுகளில் பங்கு விற்பனை, VRS நடக்கும். 
     இந்த இரு சவால்களை நாம் சந்திக்க வேண்டியிருக்கிறது என்று கூறி அதற்கான காரண காரியங்களையும் கூறி துவக்க உரையினை நிறைவு செய்தார். 

.      குன்றக்குடி அடிகளார் அவர்களின் உரை தேச விடுதலைக்காக போராடிய தலைவர்களின் தியாகத்தை பாங்கை எடுத்துரைத்து பதிய வைத்தார். அனைவரையும் தமது  சொல்லாக்கத்தால் நெகிழ வைத்தார். 

     சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் அவர்கள் அரசியலில் நேர்மை பற்றியும், நமது சங்கத் தோழர்களிடமிருந்துதான் தாம் பலவற்றை கற்றுக் கொண்டதாகவும், எதிர்காலத்தில் நீங்கள் BSNL எதிர்கொள்ளும் சவால்களை வெற்றிகரமாகச் சந்திப்பீர்கள் என்றும்  பேசினார். 

     இளைய தோழர்கள் விவாதத்தில் சிறப்பாய் பங்கேற்றனர். 

     அகில இந்தியச் செயலர் தோழர் ஜெயராமன், தலைவர் ஜெயபால் ஆகியோர் இளைஞர்களுக்கு   வழிவிட்டு குறைந்த நேரமே உரையாற்றினாலும், கருத்தாழமிக்க செய்திகளைத் தந்தனர். 

      முன்னாள் தலைவர் காரைக்குடி வெங்கடேசன் அவர்களும் நிகழ்வில் பங்கெடுத்துக் கொண்டார்.  தோழர்   RK அவர்கள் தமது வாழ்த்துச் செய்தியை அனுப்பியிருந்தார். 

     250 பேர் பங்கேற்கும் மாநாடாக நடத்த திட்டமிட்டு,  600    பேருக்கு மேல் திரண்ட கூட்டத்தை திறம்பட சமாளித்தார்கள்.  காலை, மதியம் இரு வேளையும் சுவைமிகு உணவு  சின்னக் குறையுமின்றி பரிமாறப்பட்டது. 


      தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, ACS தோழர் நடராஜன் அவர்களின் நன்றி உரையோடு மாநாடு நிறைவு பெற்றது.  


     நேர்த்தியாக நடத்தித் தந்த காரைக்குடி தோழர்களை மீண்டும் வாழ்த்துகிறோம். 


எஸ். சிவசிதம்பரம்,
பட்டுக்கோட்டை.

1 comment:

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR