தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Thursday, May 3, 2018

டெலிகாம் டெக்னீஷியன் - 
OVER  PAY  RECOVERY 

இன்று TT ஆக பணி புரியும் நமது தோழர்கள் , கேடர் சீரமைப்பு வந்த போது,  போன் மெக்கானிக் பயிற்சி முடித்தவுடன், போன் மெக்கானிக் ஆக பணியமர்த்தப்படவில்லை.   அத்தகைய தோழர்களுக்கு 31-12-1998 முதல் ஓர் LM SCALE 2750-50-3800-75-4400,  மீண்டும் அதே 31-12-1998 முதல் உயர்த்தப்பட்ட LM SCALE 3050-75-3950-80-4590  என்ற நிலையில் PAY FIXATION  வழங்கப்பட்டது.  பிறகு ரெகுலர் TM  ஆனா தேதி முதல் 3200-85-4900 என்ற PAY SCALE ல் PAY FIXATION செய்யப்பட்டது.

தற்சமயம் பணி நிறைவு செய்யும் மற்றும் இறந்து போன தோழர்களின் 
SERVICE BOOK, DOT CELL/சென்னைக்கு அனுப்பும்போது, TM ஆவதற்கு முன்பு வழங்கப்பட்ட LM SCALE  ஐ அடிப்படையாக வைத்து TM PAY FIXATION செய்யக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது.
இதனால், இன்று TT ஆக பணி புரியும் தோழர்களுக்கு PAY RIVISION மற்றும் OVERPAY என்பது கணக்கிடப்படுகிறது.  ஓர் TT க்கு  ரூ. 1 லட்சம் என்று OP எடுத்து ரெகவரி என்ற பாதகமான பிரச்சினையும் எழுகிறது.  இதன் தீவிரம் உணர்ந்து நமது NFTE தமிழ் மாநிலச் சங்கம், கடுமையாக விவாதித்து இந்த ரெகவரி செய்யக் கூடாது என்று வலியுறுத்தியது.

இதன்  பயனாக, CGMT, BSNL  சென்னை Lr. No. TAC/PENSION & SPECIAL CELL/67/226/2017-18/25, Dated 01-05-2018 உத்தரவின்படி தோழர்களுக்கு, பணி நிறைவு செய்யும் நேரத்தில் லட்சக்கணக்கான ரூபாய் ரெகவரி என்பது இப்போது நிறுத்தப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

உரிய நேரத்தில், இந்த உத்தரவு பெற பாடுபட்ட அனைத்து மாநிலச் சங்க, மாவட்டச் சங்க, கிளை சங்க நிர்வாகிகள் அனைவருக்கும், நமது நெஞ்சு நிறை நன்றியும், பாராட்டும்.

தோழமையுடன்,
A. லைலாபானு,
பொறுப்பு மாவட்டச் செயலர்,
NFTE-BSNL, தஞ்சாவூர்.
03-05-2018 

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR