தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Wednesday, December 8, 2010

சிறந்த தொழிற்சங்கத்தை எவ்வாறு தேர்வு செய்வது?

     01-02-2011 அன்று 5 -வது சங்க அங்கீகாரத்  தேர்தல் நடைபெறவிருக்கிறது.    அறிவிப்பு வெளியாகி விட்டது.  
     15 சங்கங்கள் களத்தில் நிற்கின்றன.   
     விலக விரும்பும் சங்கங்கள் 13-12-2010 க்குள் தங்கள் ஒப்புதலை தெரிவிக்க வேண்டும்.
 
    எனவே தொழிற்சங்க அங்கீகாரத்திற்கான  தேர்தல் வெற்றிக்கு திட்டமிடவேண்டும்.   அது பற்றி நமது ஆய்வைத் துவங்குவோம்! 

     தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும்!    யாரால் நல்லது நடக்கும்?

     இக் கேள்வியை ஒவ்வொரு சங்கமும் உங்களிடம் கேட்டு சில பாராக்களை, பட்டியலை வெளியிடப் போகிறது.    அதை சிலர் படிப்பார்கள், சிலர் படிக்க நினைப்பார்கள், இன்னும் சிலர் படிக்கவே மாட்டார்கள்.    

     நமது நினைவாற்றலுக்கு, பகுத்தறியும் பாங்குக்கு, தேர்வுத் திறமைக்கு இது ஒரு சோதனை.    இச் சோதனையில் நாம் பங்கு பெறுகிறோமோ, இல்லையோ 4-02-2011 அன்று அங்கீகாரம் பெற்ற சங்கம் எது என்பது அனைவருக்கும் தெள்ளத் தெளிவு. 

     ஒரு நல்ல தொழிற்சங்கத்துக்கு குறைந்த பட்ச 
இலக்கணம் என்னவாக இருக்க வேண்டும்?
    
       * தொழிலாளியை, தொழிற்சங்கங்களை ஒன்றுபடுத்துதல்!
       * அங்கம் வகிக்கும் துறையின் வளர்ச்சிக்கு உதவிகரமாக இருத்தல்!
       * காலத்தே போராடுதல், கருத்தோடு போராடுதல்!
       * சக தொழிற்சங்க உள் விவகாரங்களில் தலையிடாது இருத்தல்!
       * தொழிலாளி பெற்று வரும் உரிமைகள், பலன்களை எந்தச் சங்கம்
          பெற்றுத்  தந்திருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளுதல். 
      * கட்சி சாராது இருத்தல்.  
      * கர்வம் கொள்ளாது இருத்தல்.   சகிப்புத் தன்மை வளர்த்தல். 
      * தெளிவான கொள்கை இருக்க வேண்டும். கொண்ட கொள்கைக்கு 
        அதிகபட்சம் முரண்படுபவர்களுடன் கூட்டு சேராதிருக்க வேண்டும்.
     * அரசியலில் வாக்குறுதிகளை அள்ளித் தெளித்துவிட்டு வென்ற பின் 
        தொகுதிப் பக்கமே தலை காட்டாத தலைவர்களைப் போல் 
        தொழிற்சங்கம் இருக்கக் கூடாது. 
     * வாக்குறுதிகள் அள்ளித் தெளித்த கோலம் போல் இருக்கக் கூடாது.       
        தொழிலாளிக்கு வீணான ஆசைகளைக் கிளப்பி விட்டு 
        நிறைவேறாதபோது அதற்கான காரணத்தை நேர்மையுடன் 
        விளக்க வேண்டும், அல்லது தவறை  ஒப்புக்கொள்ள வேண்டும். 
     * தொழிற்சங்க அரசியலை ஊழியர்களிடம் வளர்க்க வேண்டும்.   
     * விமர்சனத்தைத் தாங்கிக் கொள்ளுதலும், நேர்மையோடு விளக்கம் 
         அளிப்பதும் பண்பாக இருக்க வேண்டும். 

     மேற்கண்ட குணாம்சத்தோடு இருப்பவைதான் ஒரு நல்ல தொழிற்சங்கத்துக்கு அடையாளம் என்றும், நல்ல தொழிற்சங்கம் எது என்று அடையாளம் காட்டுவதற்காக நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் வாய்ப்புதான்  தொழிற்சங்க தேர்தல் என்றும் கருதுகிறேன். 

     கிடைத்த வாய்ப்பை முறையாகப் பயன்படுத்துவோம்.  நாமெல்லாம் விபரமறிந்தவர்கள் மட்டுமல்ல, உழைத்துக் களைத்து முன்னேறியவர்கள்.   நமக்காக தியாகம் செய்த, செய்யும் தலைவர்களைப் பெற்றவர்கள்.   விழிப்புடன் இருப்போம்!
கொஞ்சம் அயர்ந்தாலும் மீண்டும் சைத்தானின் ஆட்சிதான்!   


     தொழிற்சங்கம், துறை  அன்று இருந்த நிலைமைக்கும், இன்று இருக்கும் நிலைமைக்கும் வித்தியாசம் புரிகிறதா? 
     புரிந்தவர்கள் -  புரிந்தும் புரியாமல் இருப்பவர்களை சந்தித்து விளக்கினால் வெற்றி நிச்சயம்.

உங்களின் அழுத்தம் திருத்தமான விமர்சனத்தை எதிர்பார்க்கிறேன்!


தோழமையுடன், 
எஸ். சிவசிதம்பரம்,
மாநில துணைத் தலைவர், 
பட்டுக்கோட்டை.

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR