தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Sunday, February 13, 2011

நண்பனும் வம்பனும்!

PART 5

வம்பன்: 
  என்னா நண்பா!   தேர்தலுக்கு முந்தி நீ என்னத் தேடி வந்த.   இப்ப என்னடான்னா நான் ஒன்னத் தேடி வர வேண்டியிருக்குது. தோத்துட்டமேங்கர  கவலையா?
 நண்பன்: 
  அதெல்லாம் ஒன்னும் இல்லேப்பா!   நாம ஒழச்ச, ஒழைப்புல ஒன்னும் கொற கெடையாது. அதே மாதிரி  நம்ம மாவட்டத்துல, மாநிலத்துல நாம,ஜெயிச்சும்புட்டோம் இல்லையா! 

வம்பன்: 
  இருந்தாலும், ஆல் இந்தியாவுல தோத்துட்டமேங்கர கவலை ஒனக்கு இருக்கு .இல்லையா? 

நண்பன்:
  ஆமாமா!    அது இல்லாம இருக்குமா!

வம்பன்: 
  அது இல்லாமத்தான் இருக்கணும்.  வெற்றி - தோல்வின்னா நீ என்னான்னு நெனைக்கிறே!  தேர்தல்ல ஜெயிக்கறது மட்டும்தானா! அது இல்லப்பா!!

நண்பன்:
  அப்புறம் வேற என்ன!  என்னை சாந்தப்படுத்துறதுக்காக நீ சொல்ற.    தோத்த பெறகு  எல்லாரும் சொல்ற வார்த்தைதான் இது.   ஒன்னும் புதுசா சொல்லலியே நீ!

வம்பன்: 
  புதுசுதாம்ப்பா . நானும் ஒன்ன மாதிரித்தான் நெனைச்சிக்கிட்டு இருந்தேன்.  நேத்திக்கி குப்தா கும்பகோணம் வந்தாருல்ல!   அவருப் பேச்சக் கேட்டப்புறம்தான் நாம ஜெயிச்சிருக்கிறது கொஞ்சம் நஞ்சம் இல்லேன்னு புரிஞ்சிது.  

நண்பன்: 
  என்னப்பா! புதுசு, புதுசாப் பேசுற!  அப்படி  என்னாதான் சொன்னாரு குப்தா?

வம்பன்: 
  நாம நடத்தப்போற போராட்டத்துக்கு கோரிக்கையை தெளிவா தேர்ந்தெடுத்து, விவாதத்துக்கு தேவையான பாய்ண்ட்டுகளை தயார் பண்ணி வச்சிக்கிட்டு, போராட்டத்தை அறிவிச்சு,  அதுல தொழிலாளிக்கு சேதாரம் ஏதுமில்லாம ஜெயிக்குரோம்ல அதுதான் வெற்றி அப்புடீன்னார் நம்ம குப்தா!  

நண்பன்: 
  வெரிகுட்!வெரிகுட்!!   நீ  கவனமாத்தான்        கேட்டிருக்கறே! வேற என்னா பேசினார்!


வம்பன்:
   நெறைய பேசினார். முக்கியமான ஒரு சில செய்திகளை மட்டும் சொல்றேன்.  அதாவது, போராட்டமும் நடத்தாம, அப்புடியே நடத்துனாலும் எந்த உடன்பாடும் ஏற்படாம அங்கீகாரப் போட்டியிலே மட்டும் வெற்றி பெற்றால் அது வெற்றி கிடையாது.  காலத்தே, போராடுவதும், கோரிக்கையை வென்றேடுப்பதும்தான் வெற்றி அப்படீன்னார். 


    அது மட்டும் இல்ல.   என் காலத்துல பெற்ற OTBP, BCR, 10 % அதெல்லாம் அப்போ இருந்த நிலைமைக்குத்தான் பொருத்தம்.   இன்னைக்கி இன்னும் மாற்றம் கொண்டு வரணும்.    பென்சன்ல இப்ப ஒரு நெருக்கடிய கொண்டு வந்திருக்காங்க.  அன்னைக்கி நாம 2000 செப்டம்பர் 6, 7, 8 தேதிகள்ல FNTO, BTEF சங்கத்தோட சேர்ந்து நடத்துன போராட்டம் இன்னைக்கி வரைக்கும் பென்சனை பிரச்சினையில்லாமல் கொடுத்துக்கிட்டிருக்கு.   அன்னைக்கி அதுலயும் சேராம நின்னது நம்பூதிரி அணிதான்.   சேராதது மட்டுமல்ல, EL,  GPF,  HBA  எல்லாம் போய்விடும்,  பொதுத் துறையானா எல்லாமே போய்விடும்.  இன்றைக்கு பொதுத் துறையாகி, அதில பெற்று வந்த எல்லாமே இன்னைக்கும் வாங்கிக்கிட்டிருக்கோம்.   இதுதான் வெற்றி.  BSNLEU இதுல தோல்வி அடஞ்சிருச்சி.  (இதுல மட்டுமா?)  அந்த பென்சன் போராட்டம் ஆரம்பிச்சபோது வெளிநாட்டிலிருந்த வாஜ்பாய், அமைச்சர் பாஸ்வானை கூப்பிட்டு, ஒடனே   போய் குப்தாகிட்டே பேச்சு வார்த்தை நடத்தி உடன்பாடு போடுன்னார். அதே மாதிரி அமைச்சர் வந்து பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு போடப்பட்டது.
   2000 அக்டோபரிலிருந்து நாம பெற்று வர்ற IDA பென்சனில் உள்ள விதி 37-8  என்பது புரிந்து கொள்ளப் படவில்லை.   இதுல நாம போராடாம ஜெயிக்க முடியாது.   ஏற்ற, இறக்கம் பற்றி கவலைப்படாது,பென்சனைப்பெற்றாக  வேண்டும்.   
     இதற்கான போராட்டத்தை நான் துவங்கப் போகிறேன்.  மற்றவர்களையும் இதில் அழைத்துச் செல்வேன். 
  இதில் வெற்றி பெறுவதுதான் வெற்றி.   தேர்தல் வெற்றி என்பது முழுமையான  வெற்றி அல்ல, அப்படீன்னு  குப்தா பேசினார். 


நண்பன்: 90 வயசுல நம்ம BSNL தொழிலாளி மேல அவருக்கு இருக்கற அக்கறை மத்தவங்களுக்கும் வந்துட்டா எப்படி இருக்கும்!

வம்பன்: குடந்தையில் அந்த எழுச்சியை நான் கண்ணாரப் பார்த்தேன்!  500 பேருக்கு மேல வந்திருந்தாங்க.   பேசிய தோழர்கள் எல்லாம் நெகிழ்வோடு பேசினாங்க.   குப்தாவைப் பாத்துட்டு தோழர்கள் எல்லாம் ஆனந்தக் கண்ணீர் வடிக்காத குறைதான்.  குப்தாவுக்கு மலர்க் கிரீடம் வைத்து, ஆளுயர ரோஜா மாலைப் போட்டு, பாக்கவே கண்கொள்ளக் காட்சியா   இருந்துது.   எனக்கு வயசாயிருச்சு, உடம்பு சரியாக இருக்காது,  கழுத்து தொங்கிக் கிட்டிருக்கு  அப்படீன்னு நெனைக்காதீங்க, என் மூளை, மனசு  எல்லாமே சரியா , மொறையாதான்  இயங்கிக்கிட்டிருக்கு அப்படீன்னு, சொன்னாரே பார்க்கலாம்.  அந்தச் சதுக்கமே   உணர்வலையில் அப்படியே ஆழ்ந்து விட்டது.

     இந்த அற்புதமான வாய்ப்பை நமக்கு தந்த குடந்தைத் தோழர்களை வாழ்த்தாத தோழர்களே இல்லைப்பா!

நண்பன்:  
  இன்னைக்கி நாம பேசினதுதான்  மனசுக்கு ரொம்ப திருப்தியா இருந்திச்சு.  நாளைக்கு சந்திப்போம் வம்பா!

பேட்டி தொகுப்பு:
உங்கள்
சிவசிதம்பரம்,
பட்டுக்கோட்டை.

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR