தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Sunday, February 3, 2013

"ஊழியர் பிரச்னையை விவாதிக்கச் சென்ற ஒரு மாநிலச் செயலரிடம், ஒரு CGM, " Stop this Junk, don"t waste my time" என்று   ஆணவமாகப் பேசி உள்ளார். அந்த மாநிலச் செயலரோ எதுவும் நடக்காதது போல மௌனமாக வெளியேறி விட்டார்.
அந்த CGMன் ஆணவப் பேச்சை 
     வன்மையாகக் கண்டிக்கிறோம் !"

 இப்படி ஒரு செய்தியை கோவை வெப் சைட் தலையும் இல்லாமல் வாலும்  இல்லாமல் முண்டமாக  வெளியிட்டிருக்கிறது.   
அது என்ன ஒரு மாநிலச் செயலர்.
யார் அவர் என்பது  நமது கேள்வி?
அடுத்து  அந்த மாநிலச் செயலரோ எதுவும் நடக்காதது போல வெளியேறி விட்டார் என்று எழுதி இருக்கிறார்கள் 
எந்த மாநிலச் செயலர் என்பதும் நமது கேள்வி?

அடுத்து ஆத்திரத்தின் உச்சியில் CGM,
அமைதியாகிப்போன மாநிலச் செயலர் என்றும் எழுதப்பட்டிருக்கிறது.
CGM ஐச் சந்திக்க பல மாநிலச் செயலர்கள் செல்வார்கள்.  நீங்கள்  எந்த மாநிலச் செயலரைச் சொல்கிறீர்கள் என்பதும் எமது கேள்வியாக இருக்கிறது. 

தெளிவா சொல்லாம CGM க்கு வன்மையான கண்டிப்பு வேறு!

இம்மாதிரி செய்தி போட்டால் தேவையில்லாத குழப்பம்தான் மிஞ்சும் என்பதை சொல்லிக் கொள்கிறோம்.
இது நாள் வரை தமிழகம் வெளிப்படையாகப் பேசவே நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது. இங்கே கிசு கிசுக்களுக்கு வேலை இல்லை.
டீக்கடைப் பெஞ்சு பேச்சை நாம் பேச வேண்டாம்.


No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR