திருச்சி சிவா MP 
                தலைவர் /தோழர் /சகோதரர் என எப்படி சொல்லி அழைத்தாலும் அத்தனைக்கும் பொருத்தமானவர் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா அவர்கள்.
           30 வருடங்களுக்கு முன்பு திருவாரூர் வடக்குவீதியில் ஒரு தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் அவர் பேசிய செய்தி.
 "இந்த கூட்டத்தில் மேல் சட்டை அணியாமல் நிற்கிற என் அன்பு ஏழை தொழிலாளிக்கும், உச்ச அதிகாரம் படைத்ததாக கருத கூடிய பிரதமர் /ஜனாதிபதி யாராகிலும் ,,யாவருக்கும்  ஒரு வாக்கு (vote )  தான்.  ஆகவே உங்கள் வாக்கின் வலிமையறிந்து வாக்களிக்க வேண்டுகிறேன்  என்றார் .அவர் பேசிய பேச்சு, அந்த கம்பீரம் எனக்கு இன்றைக்கும் நினைவில் உள்ளது.
    சமீபத்தில் காதலர் தின விழா அன்று vijay tv நீயா?  நானா? நிகழ்ச்சியில் தோழர் திருச்சி  சிவா அவர்கள் தனது மனைவிக்கு எழுதிய கடிதத்தை அவரே படித்து காட்டி  6 மாதத்திற்கு முன் நான் இதை படித்து இருந்தால் இப்படி உடையாமல் படித்திருக்க முடியாது என்று கூறி விட்டு இளைஞர்களே மனைவியுடன்  மனம் விட்டு பேசுங்கள், மனைவியை காதலியுங்கள் என்று பேசியபோது எனது கண்ணில் நீர் அரும்பியது. கம்பீரமாய் பார்த்த அவரை இப்படி பார்க்க என் மனம் கலங்கியது.
         இப்பொழுது திருநங்கைகளுக்காக குரல் கொடுத்த தோழர் திருச்சி சிவா அவர்களை எண்ணி மனம் மகிழ்கிறது.    
மாறா இப்பணி மேலும் வளர விழைகிறேன்!
நன்றியுடன்,
K. நடராஜன், தஞ்சை.  
 
 

No comments:
Post a Comment