தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Saturday, November 3, 2018

NFTE -BSNL மற்றும் TMTCLU
தஞ்சை மாவட்டம்.
 வாழ்த்து, பாராட்டு, மகிழ்ச்சி!
============================
அன்புத் தோழர்களே! தோழியர்களே!!
          அனைவருக்கும் வணக்கம்!  தோழர்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த தீபாவளி வாழ்த்துக்களை இரு சங்கங்களின் சார்பாக  தெரிவித்துக்  கொள்கிறோம்.  
         இந்த ஆண்டு தீபாவளியை, ஒப்பந்தத் தொழிலாளியும் நல்ல முறையில் கொண்டாடுவார் என்பது நமக்கு கூடுதல் மகிழ்ச்சி.  இந்த மகிழ்ச்சிக்குக் காரணம் ஒப்பந்தத் தொழிலாளிக்கு 8.33 சதவீதம் போனஸ் கிடைத்ததுதான். தஞ்சை மாவட்டத்தில் 95 சதவீத தோழர்களுக்கு போனஸ் பட்டுவாடா செய்யப்பட்டதும் நம்மை மகிழ்ச்சியடைய வைக்கிறது.  
இது கிடைக்க உதவியவர்களை, இதற்காக போராடியவர்களை, உடல் உழைப்பு, பொருட்செலவைப் பொருட்படுத்தாது அலைந்தவர்களை, இட்ட கட்டளையை ஏற்று இயக்கம் கண்டவர்களை நெஞ்சார வாழ்த்துகிறோம்! பாராட்டுகிறோம்!!

அனைத்து ஒப்பந்ததாரரையும் வரவழைத்து,  சளைக்காமல், களைக்காமல் நமக்காக பேசி,
கோரிக்கை நிறைவு பெற பெரிதும் ஒத்துழைத்த நமது முதன்மைப் பொது மேலாளர் திரு. C.V. வினோத் ITS  அவர்களை வணங்குகிறோம்! பாராட்டி மகிழ்கிறோம்!

மாநிலத்திலேயே முதலாவதாக 7000 ரூபாயை ஒரே தவணையாக அளித்து தஞ்சை - குடந்தை மாவட்டத்திற்கு பெருமை தேடித் தந்த ஒப்பந்ததாரர் திரு. சாமிஅய்யா அவர்களுக்கு நமது பாராட்டுக்கள்.

பட்டுக்கோட்டை  ஒப்பந்ததாரர் ஸ்ரீ செக்யூரிட்டி ராமச்சந்திரன் அவர்களை சந்திக்க திருச்சிக்கு சென்று அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தி 9  மாத போனஸைப் பெற்று  வெற்றியுடன் திரும்பி வந்தோம். இந்த முயற்சியில் ஈடுபட்ட NFTE மாவட்டச் செயலர் தோழர். கிள்ளிவளவன், TMTCLU செயலர் கலைச்செல்வன், பட்டுக்கோட்டை கிளைச் செயலர் தோழர். செல்வகுமார், மன்னை கிளைச்செயலர் தோழர். மோகன், ஸ்ரீ செக்யூரிட்டி சூப்பர்வைசர் பாண்டியன்  ஆகியோரையும் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறோம்.

காசாங்காடு இறுதிச் சடங்குக்குக்காக ரூபாய் 3,500 ஐ திருச்சியில் சந்தித்தபோது ஒப்பந்ததாரர் ராமச்சந்திரன் அவர்கள் தந்தார். அவர் சார்பாக முருகேசன் இறந்தபோது கொடுத்த,  தோழர். செல்வகுமார் அதை பெற்றுக் கொண்டார். அவருக்கு நமது நன்றியும், பாராட்டும்.
=============================================
கிளைப் பொறுப்பாளர்கள் கவனத்திற்கு:
இந்தாண்டு கடும் முயற்சிகள் மேற்கொண்டுதான் போனஸ் பெற்றிருக்கிறோம். ஒப்பந்தத் தொழிலாளியிடம் சங்கத்திற்கு சந்தாவும், போனஸ் நன்கொடையும் பெற்றுத் தர வேண்டுகிறோம்.
=============================================
நன்றி தோழர்களே!  
மீண்டும் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
கே. கிள்ளிவளவன்  -   டி. கலைச்செல்வன். 
=============================================
  உன் வலி உணரா உழைக்கும் தோழா!
ஓரணி சேர்ந்தால் உலகம் நமதே!!

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR