தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Thursday, July 8, 2021

 

தோழன் கிள்ளி!

தொய்வின்றி உழைத்த அன்புத் 

தோழன் கிள்ளிவளவனுக்கு

இலாகா இன்று ஓய்வு 

கொடுத்து வழியனுப்புகிறது! 

நாற்பதாண்டு கால 

தொலைத் தொடர்பு வாழ்க்கையில் 

இருபத்தைந்து ஆண்டு காலம் 

கிள்ளியோடு சங்கத் தொடர்பு.

அவரோடு பயணித்த காலத்தில் 

மறக்க முடியாத சில நிகழ்வுகளை

உங்களோடு பகிர விரும்புகிறேன்.


TMTCLU மாவட்டச் சங்கத்தை 

தமிழகத்தில், தஞ்சையில்

முதலில் துவக்கிய பெருமை 

நமக்குண்டு.   முதல் மாவட்டச் 

செயலர் தோழர் கிள்ளி.

முதல் மாவட்டத் தலைவர் 

தோழர். பிரின்ஸ்.

பொருளராக நான்.

அன்றைக்கு பகுதி நேரப் 

பணியாளர்களே இல்லையென்ற

நிலைமையை தஞ்சையில் 

உருவாக்கினோம்.  பக்கத்தில் உள்ள 

திருச்சி உள்பட பல மாவட்டங்கள் 

இது எப்படி சாத்தியம் 

என்று வியந்து போனார்கள்.

அவர்களுக்கு தீபாவளி போனஸ், 

ஏன் பொங்கல் போனஸ் கூட 

பெற்றுத் தந்தோம். 


பிறகு அப் பொறுப்புக்கு வந்த 

தோழர் கலைச்செல்வன், 

கிள்ளியோடு இரண்டறக் கலந்து 

சிறப்பாகச் செயல்பட்டார்.


ஒற்றுமையின் சின்னமாக விளங்கிய

தஞ்சையில் CKM அணி என்ற 

பிணியின் பாதிப்பால் TMTCLU

உடைக்கப்பட்டது.  இன்று அது 

காணாமலும் போய் விட்டது.

ஆரூர் மாவட்ட மாநாட்டில் பல்வேறு 

பிரச்சனைகளுக்குப் பின் NFTE

மாவட்டச் செயலரானார் 

தோழர் கிள்ளி.

தோழியர் லைலாபானு அவர்களை 

தலைவராகவோ, பொருளராகவோ 

தேர்வு செய்ய முயற்சித்தார். 

நடைபெறவில்லை.


ஒற்றை ஆளாய் இயக்கத்தை 

கொண்டு சென்ற தோழரின்

தாங்கும் சக்தியை பதம் பார்க்க

குடும்பத்தில் சோக நிகழ்வுகள்

ஒன்றன்பின் ஒன்றாய் வந்து

அவரைக் கலங்கடித்தது.

தாயை இழந்த தோழனுக்கு அடுத்து 

ஒரு பேரிழப்பு. தான் உயிராய்

நேசித்த 18 வயது மகளை 

அநியாயமாய் இழந்தார்.  புத்திர 

சோகத்தில் அந்தக் குடும்பம் பட்ட 

வேதனை சொல்லி மாளாது. 

அனைத்தையும் அடிமனதில் 

பூட்டி வைத்து 

மாவட்டச் சங்கத்தை 

தொய்வின்றி நடத்திச் சென்றார்.

தஞ்சையில் தனியாளாய்  எவராலும்

சங்கம் நடத்திட முடியாது என்ற 

மாயையை உடைத்தவர் 

தோழர் கிள்ளி. 

உடைத்தவர் மட்டுமல்ல, உயர்வான 

இரண்டு வேலைகளை அனைவரும்

பாராட்டும் வண்ணம் செய்து 

காட்டியவர் என்றால் மிகையாகாது.

1. சரிபார்ப்புத் தேர்தலில், தமிழகத்தில்,

தஞ்சையை தலைமைப் பீடத்தில் 

கொண்டு வந்து வைத்தார்.

இவரது செயல் திறனால்

ஈர்க்கப்பட்டவர் தோழர். சுந்தரராஜன்.

இவர் அண்ணா தொழிற்சங்கத்தின் 

மாவட்டச் செயலாளர். 

தானும், தனது உறுப்பினர்கள் என்று 

27 பேரையும் சேர்த்துக் கொண்டு 

நம்மோடு இணைந்தார்.

இன்று வரை கிள்ளியிடமிருந்து 

எந்த எதிர்பார்ப்புமின்றி, அவரது 

வலது கரமாக சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்.

2. அடுத்து தமிழ் மாநிலச் 

செயற்குழுவை நடத்தும் பொறுப்பு தஞ்சைக்கு.

கையில் நிதியில்லை.  

அணியின் ஒத்துழைப்பில்லை.

தோழர்களிடம் நேரடியாக செயலரே 

வேண்டுகோள் வைத்து 

மாநில செயற்குழுவிற்கு உதவிகள் கேட்டார்.

தோழர்கள் நிதியைக் கொட்டிக்

குவித்தார்கள்.  பலர் ஒரு சில 

செலவுகளை முழுமையாகவும் 

ஏற்றுக் கொண்டனர்.

செயற்குழு முடிந்து கையிருப்பும் 

இருந்தது !

இன்று வரை நிதியளிப்பிலும், 

சங்கச் செயல்பாட்டிலும்

பெரிதும் துணை நின்ற தோழியர். லைலாபானு.   

மாநில மகளிரணி கன்வீனராக சிறப்பாகச் 

செயல்பட்டார்.

மாவட்டச் சங்கச் செயல்பாடுகளில்

ஊக்கத்துடன் பங்கேற்ற அவரை 

இந்த நேரத்தில் பாராட்டி 

மகிழ்கிறேன்


20 ஆண்டுக் காலம் சங்கப் பணியில் 

அவரோடு இணைந்து பணியாற்றிய 

தோழர் சின்னப்பா அவர்கள் கிள்ளியின் 

நம்பிக்கை நட்சத்திரம்.

மன்னையிலிருந்து கிள்ளி

தஞ்சைக்கு வந்தவுடன் தவறாது

அவரை அழைத்துச் செல்பவர் 

இவர்தான்.

அதிகாரிகளோடு பேச்சு 

வார்த்தையில் பங்கேற்பது,

ஆர்ப்பாட்டங்களை நடத்துவது 

செய்திகளை அறிவிப்பது போன்ற

பணிகளைத் திறம்படச் செய்வார்.


அதை கொரோனா காலத்தில் 

இன்னும் ஆளுமையோடு, 

உடன் பயணித்து இன்று வரை 

உழைத்து  வருபவர் தோழர் 

பாலமுருகன் அவர்கள். 


கஜாப் புயல் காலத்தில் மாவட்டச்

சங்கத்தின் சார்பில் 

உறுப்பினர்களிடம் நிதி வசூல் 

செய்து  மாவட்டம் முழுமையும்   

ஒப்பந்தத் தொழிலாளிக்கு 

 உதவிய மாவட்டச் செயலரை 

 மறக்க முடியுமா!

அதே போல் ஓய்வூதியர் சங்கத்தின் 

மூலம் ஒரு லட்ச ரூபாய்க்கும் மேலான

பொருட்செலவில் பட்டுக்கோட்டை

பகுதி தோழர்களுக்கு நிவாரணம்

பெற்றுத் தந்தார்.

ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்டச் 

செயலர் தோழர் சாமினாதன் 

அவர்கள் கிள்ளிக்கு பேருதவியாக

இருந்தவர். 

எல்லா சங்கத்துக்கும் உதவியாக 

நிற்கக் கூடிய அவரிடம், உரிமையோடு 

சில தேவைகளை முன் வைத்து 

அதற்கான உதவிகளைக் 

கேட்டுப் பெறுவார். 

அவரும் மனமுவந்து செய்திடுவார்.

கிள்ளிக்கு இவரும் நன்றிக்குரியவர்.


தோழியர் லைலாபானுவின் தாயார் 

மறைந்த போது, உடன் பிறந்த 

சகோதரன் போல் உடனிருந்து

அனைவரையும் அழைத்து 

இறுதிச் சடங்குகளை நிறைவாய் 

செய்து முடித்தவர் தோழர். கிள்ளி. 


இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக் காரராக

அரசியல் நிலைபாடு எடுத்த

தோழர் கிள்ளி, அதிலும் தன் 

செயல் திறத்தை, பங்களிப்பை 

நிறைவாகச்செய்தவர்.   

கட்சி வழிகாட்டுதலும்

அவர்தம் செயல்பாட்டுக்கு 

ஒரு தூண்டுகோலே.


அதேபோல் ஒவ்வொரு அசைவையும் 

தோழர் நடராஜனிடம் தவறாது 

பகிரக் கூடியவர். அவர் விடுக்கும் 

வேலைகளை அச்சு பிசகாமல் 

செய்து முடிப்பார். நம்மோடு மாவட்டச் 

செயலராக இருந்த தோழர் நடராஜன்

இன்றைக்கு மாநிலச் செயலர்

அந்தஸ்தில் இருப்பதையும் அவரது 

அகில இந்திய அளவிளான 

திறமையையும் அடிக்கடி வியந்து 

பேசுவார்.


தோழர் கேசவன் காலம் தொட்டு

கிள்ளி காலம் வரை

வலைதளம், வாட்சப் போன்றவற்றில்

நான் சிறப்பாகச் செயல்பட தோழர்

நடராஜனைப் போன்று

கிள்ளியும் எனக்கு 

மிகப் பெரும்  தூண்டுகோல்.  என்னதான் 

உழைத்தாலும் அதன் அருமை, 

பெருமை உணராமல் கடந்து 

போகிறவர்கள் மத்தியில் எனது 

திறமையை, உழைப்பை இன்றும்

மதிக்கிறவர்கள் வெகு சிலரே!  

அதில் மிக முக்கியமானவர்கள்

தோழர் கிள்ளியும், லைலாபானுவும் 

என்றால் அது மிகையாது. 


தொழிற்சங்க வாழ்க்கையை

பத்தோடு பதினொன்றாகக் கடந்து 

போகாமல், என்னிடமும்  

நினைத்துப் பார்க்கின்ற அளவுக்கு  

செய்திகள் இருக்கிறது எனும் போது 

இதயம் நிறைகிறது. 


தோழன் கிள்ளி பணி ஓய்வில்தான் 

இன்று துறையை விட்டு விடை 

பெறுகிறார் என்பது நன்கு 

தெரிகிறது.   ஆனாலும், நம்மை 

விட்டு வெகு தூரம் ராணுவ 

எல்லைப் பகுதிக்குச் செல்வது போல 

மனம் மயங்குகிறது.  என்ன செய்வது!


அன்புத் தோழனின் துணைவியார்

அவர்கள் தன் கணவர் கிள்ளிக்கு

பக்கபலமாக, ஊக்க மருந்தாக 

இருந்ததால்தான் இன்றைக்கு 

தோழர் கிள்ளி அவர்கள் இலாகாவை 

விட்டு ஓய்வில் வெளி வரும்போது

சாதனை நாயகனாக மிளிர்கிறார். 

அன்புத் தோழன் கிள்ளியை இதயம்

நிறைந்து வாழ்த்துகிறேன்.

என்றும் அவரோடு பயணிக்க 

விரும்புகிறேன்.

அன்புடன்,

எஸ். சிவசிதம்பரம்,

மேனாள் மாநில துணைத் தலைவர்.

பட்டுக்கோட்டை.

=============================================================

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR