தினம் ஒரு கருத்து
வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.
Friday, January 25, 2013
Tuesday, January 8, 2013
தாத்தா பாட்டு
குப்தா எங்கள் தாத்தா
குணம் குன்றா தாத்தா.
ஒற்றுமைக்கு விலையாக
தன்னைத் தந்த தாத்தா.
என்னைப் பெற்ற தந்தைக்கு
ஏற்றம் தந்த தாத்தா.
ஒன்பது பெரிய சங்கங்களை
ஒன்றாய் இணைத்த தாத்தாவே!
ஓராயிரம் பேதமிருந்தும்
ஒருங்கிணைத்த தாத்தாவே!!
அழுக்காய் திரிந்து அவதியுற்றோர்
மிடுக்காய் வாழ வழி வகுத்து,
மண்ணில் நீயும் மனிதனென்ற
மாண்பைத் தந்த தாத்தாவே!
உனது வாழ்க்கை நாங்கள் வாழ
ஆசி தாரும் தாத்தாவே!
உன்னை பெற்ற இந்த மண்ணு
உயர்வு பெறுது தாத்தாவே!
தக்க தக திமி தாளம் போட்டு
ஆடுகின்றேன் தாத்தாவே!
தாவிக் குதித்து உனது மடியில்
விழுந்தெழுவேன் தாத்தாவே!
விழுந்தெழுவேன் தாத்தாவே!
குண்டு கன்ன தாத்தாவுக்கு
கொடுக்கும் முத்தம் தாராளம்.
கொஞ்சி உந்தன் தோளில் தொங்க
ஆசை எனக்கு ஏராளம்!
- எஸ். சிவசிதம்பரம், பட்டுக்கோட்டை.
தோழர். குப்தா குடந்தை வந்த போது எனது மகன் பாடியதாக நான் எழுதியது.
தோழர். குப்தா குடந்தை வந்த போது எனது மகன் பாடியதாக நான் எழுதியது.
Monday, January 7, 2013
உன் வனம் எப்போதுமே பசுமையானதே
-அக்களூர் இரவி
நாடும் வீடும், நம்பி நிற்கும் தோழனும்
நலம் பெறவே உன் பார்வை.
வீறார்ந்த தோற்றம்-விவேகம் நிறை பேச்சு
அயராத உழைப்பு-செயல் முடிக்கும் வரை
தளராத போராளி.
எடுத்து வைக்கும் அடிகளில் நிதானம்
கோரிக்கைகளில் நிச்சயம் வெற்றி என்ற
உறுதி
அரிதாய் எவரும் பெற்றிருக்கும் குணங்கள்
தோழாநீ பெற்றிருந்த வளங்கள்-நாங்கள்
பெற்று வந்த வரங்கள்.
இவற்றால் நீ சாதித்தவை அனைத்தும்
முத்திரை.
வேலை பாதுகாப்பா- நிரந்தரமா
பதவி உயர்வா-உன்
தொலைநோக்கு பார்வை தந்த
வியக்க வைத்த கேடர்சீரமைப்பா
அதிகாரிகள் வரை அனைவரும்
வியந்துபோற்றும் ஓய்வூதிய பாதுகாப்பா?
வெற்றியோ தோல்வியோ-அவமானமோ
அவமதிப்போ
அத்தனையும் பொறுத்து
வித்தகனாய் நீ கட்டியமைத்த
வானவில் சங்கத்தின் போராட்டங்கள்
ஊழியர்தம் பலன்களுக்கு மட்டுமல்ல-அவை தரும்
நிறுவனத்தின் நலன் காக்கவும்.
வழிகாட்டினாய் வாழ்வளித்தாய்
அன்பு காட்டினாய் அரவணைத்தாய்
அருந்தலைவன் உன்வழியில்
ஆசான் ஜெகன் செய்த பெரும்பணியை
தொடர்வோம் நாங்கள் என்றும்.
விஞ்ச யாருமில்லை உன்புகழை-எங்கள்
நெஞ்ச கோவிலிலே நீஎன்றும்.
-அக்களூர் இரவி
நாடும் வீடும், நம்பி நிற்கும் தோழனும்
நலம் பெறவே உன் பார்வை.
வீறார்ந்த தோற்றம்-விவேகம் நிறை பேச்சு
அயராத உழைப்பு-செயல் முடிக்கும் வரை
தளராத போராளி.
எடுத்து வைக்கும் அடிகளில் நிதானம்
கோரிக்கைகளில் நிச்சயம் வெற்றி என்ற
உறுதி
அரிதாய் எவரும் பெற்றிருக்கும் குணங்கள்
தோழாநீ பெற்றிருந்த வளங்கள்-நாங்கள்
பெற்று வந்த வரங்கள்.
இவற்றால் நீ சாதித்தவை அனைத்தும்
முத்திரை.
வேலை பாதுகாப்பா- நிரந்தரமா
பதவி உயர்வா-உன்
தொலைநோக்கு பார்வை தந்த
வியக்க வைத்த கேடர்சீரமைப்பா
அதிகாரிகள் வரை அனைவரும்
வியந்துபோற்றும் ஓய்வூதிய பாதுகாப்பா?
வெற்றியோ தோல்வியோ-அவமானமோ
அவமதிப்போ
அத்தனையும் பொறுத்து
வித்தகனாய் நீ கட்டியமைத்த
வானவில் சங்கத்தின் போராட்டங்கள்
ஊழியர்தம் பலன்களுக்கு மட்டுமல்ல-அவை தரும்
நிறுவனத்தின் நலன் காக்கவும்.
வழிகாட்டினாய் வாழ்வளித்தாய்
அன்பு காட்டினாய் அரவணைத்தாய்
அருந்தலைவன் உன்வழியில்
ஆசான் ஜெகன் செய்த பெரும்பணியை
தொடர்வோம் நாங்கள் என்றும்.
விஞ்ச யாருமில்லை உன்புகழை-எங்கள்
நெஞ்ச கோவிலிலே நீஎன்றும்.
Sunday, January 6, 2013

இமயம் சரிந்தது!
தபால் தந்தி இயக்கத்தின் உயிர் நாடியாக, தந்தையாக வாழ்ந்த தலைவர் குப்தாவை இன்று ( 06-01-2013 ) இரவு 8 மணிக்கு இழந்து விட்டோம்!
94 வயதான தலைவர் குப்தா நமக்காக மட்டுமே 80 ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறார்!
அவரால் நாம் அடைந்த பலன்கள் சொல்லி மாளாது. வாழுகின்ற வாழ்வே அவரால் எனலாம்.
தொலைத் தொடர்பு குடும்பத்தில் அவரால் பயனடையாத சங்கமோ, நபரோ இருக்க முடியாது.
நமது காலத்தில் வாழ்ந்து மறைந்த சந்திரசேகர், ஜெகன் வரிசையில் பேரிழப்பாக இன்றைக்கு தோழர் குப்தாவையும் இழந்திருக்கிறோம்!
எப்போதாவது பார்த்த, பழகிய நமக்கே பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது. அவரோடு கலந்த தலைவர்களுக்கு ..... .
தோழர்களே!
தலைவருக்காக!
கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விடுங்கள்!
அனைத்துச் சங்கத்தையும் இணைத்து அஞ்சலிக் கூட்டம் நடத்துங்கள்!
சாதனைகளை பேசுங்கள்!
வேதனைகளையும் கொட்டுங்கள்!
நமது காலத்தில் வாழ்ந்து மறைந்த சந்திரசேகர், ஜெகன் வரிசையில் பேரிழப்பாக இன்றைக்கு தோழர் குப்தாவையும் இழந்திருக்கிறோம்!
எப்போதாவது பார்த்த, பழகிய நமக்கே பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது. அவரோடு கலந்த தலைவர்களுக்கு ..... .
தோழர்களே!
தலைவருக்காக!
கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விடுங்கள்!
அனைத்துச் சங்கத்தையும் இணைத்து அஞ்சலிக் கூட்டம் நடத்துங்கள்!
சாதனைகளை பேசுங்கள்!
வேதனைகளையும் கொட்டுங்கள்!
குப்தாவின் சிந்தனையை, எதிர்பார்ப்பை நனவாக்க சபதமெடுங்கள்.
வேண்டாம் உறுதியெடுங்கள் போதும்.
அவரின் ஆன்மா சாந்தியடையும். Saturday, January 5, 2013
டெல்லியில் நடைபெற்ற
கொடூரமான பாலியல் வன்முறையைக் கண்டித்து
ஆர்ப்பாட்டம் மற்றும் இரங்கல் கூட்டம்.
டெல்லி 23 வயது பாரா மெடிக்கல் மாணவியின் பாலியல் பலாத்காரம், அதனால் ஏற்பட துர்மரணம் மற்றும் பெண்கள் மீதான தொடரும் வன்முறைகள், இறப்புகள் இவற்றைக் கண்டித்து கடந்த 02-01-2013 அன்று தஞ்சை மேரிஸ் கார்னர் இணைப்பகம் முன்பு தஞ்சை மாவட்ட BSNL மகளிர் சார்பிலும், அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்ட இரங்கல் கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பங்கேற்ற அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்புடன்,
A. லைலாபானு,
NFTE மாநில மகளிர் ஒருங்கிணைப்பாளர், தஞ்சை.
Tuesday, January 1, 2013
ஜனவரி 2013 முதல்
IDA 4.2% சதம் உயர்ந்துள்ளது.
67.3+4.2=71.5%
67.3+4.2=71.5%
Monday, December 31, 2012
புத்தாண்டு வாழ்த்துக்கள்!
ஆண்டாண்டு புத்தாண்டு அகன்றிடும் வாய்ப்புகள்
அழகாய்த்தான் வருகிறது. அருகருகே இருந்தும் நமது
நல்லதொரு வாழ்த்தும் அக்கறைக்குறைவாலே
நயமாகக் கிடைக்கிறது. ஆட்கொள்ளமுடியவில்லை.
நடக்கும் நிகழ்வுகளில் செய்யும் தொழிலில் நாம்
நன்மையும் இருக்கிறது. செயல்படும் தன்மையில்
தீமையும் இருக்கிறது. வாழ்வளித்த துறையில்
கொடுமை நிகழ்வுகளும் வளம் தந்த இயக்கத்தில்
தினம் கூடித்தான் போகிறது. அக்கறை கொண்டிடுவோம்!
அறிவு வளர்ச்சியிலும் நமக்கு கொள்கையில், கொடியில்
அணுவளவும் குறையில்லை. ஆழப் பற்று வைப்போம்!
தோழமைப் பயிற்சியிலும் அழகான நம் தேசத்தை,
தொய்வேதும் ஏற்படவில்லை. அசிங்கப்படுத்துவோரை
ஆனாலும் சிக்கல் அழிக்க எண்ணுவோரை
அடிக்கடி ஏன் வருகிறது? அம்பலப்படுத்திடுவோம்!
பூவுலக மாற்றமோ பெரும் எத்தனை காலம்
பீதியைக் கிளப்புகிறது, இப்படி வாழ்ந்தோம்!
இது உலகளாவியதென்றாலும் இனி வருங்காலம்
உள்ளுர நம்மை வதைப்பதேன்? எப்படி வாழ்வோம்!
கேள்விகள் அனைத்துக்கும் இந்தச் சிந்தனையே
பதில்களும் இருக்கிறது.
கற்ற நம்மை இனிதாய் மாற்றும்.
பாடமும் இருக்கிறது. இரண்டாயிரத்து பதிமூன்று
ஆயினும் சிக்கல்கள் இரட்டிப்பு மகிழ்ச்சி தர
அகலாதது எதனால்? இயல்பாய் வாழ்த்துகிறேன்!
அன்புடன்,
எஸ். சிவசிதம்பரம்,
பட்டுக்கோட்டை
கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் அஞ்சலிக் கூட்டம்
நாள்: 02-01-2013 புதன் காலை 11 மணி. இடம்: GM அலுவலகம், தஞ்சை.
பெண்கள் மீதான பாலியல் வன்முறை, தொடர் இறப்பு இவற்றைக் கண்டித்து ஆர்ப்பாட்டமும் , அஞ்சலிக் கூட்டமும் அனைத்து பெண் ஊழியர்களின் சார்பாக நடைபெறும். அனைவரும் கலந்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவண்,
A. லைலாபானு,
தமிழ் மாநில மகளிர் ஒருங்கிணப்பாளர், NFTE,
தஞ்சாவூர்.
Thursday, December 27, 2012
எல்லாமே புதிதாக ................ 2013
நமது அகில இந்திய, மாநிலச் சங்கத் தலைமை மற்றும் அகில இந்திய தொழிற்சங்கத் தலைவர் தோழர் குருதாஸ்தாஸ் குப்தா ஆகியோர்களின் தொடர் முயற்சியால் இன்றைக்கு புதிய அங்கீகார விதிகளில் மாற்றம் வந்துள்ளது. ஒற்றுமைக்கும், உறுதிப்பாட்டிற்கும் கிடைத்த வெற்றியாகவே இதைக் கருதலாம். இந்த வெற்றிக்கு உழைத்த தலைவர்களுக்கு நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்து மகிழ்கிறது தஞ்சை மாவட்டச் சங்கம்.
தோழமையுடன்,
T. பன்னீர்செல்வம், மாவட்டச் செயலர், தஞ்சை
புதிய அங்கீகாரவிதிகள்-அறிவிப்பு
புதிய அங்கீகார விதிகள் 26/12/2012 அன்று
வெளியிடப்பட்டுள்ளது. நமது சங்கம் மற்ற சங்கங்களுடன் இணைந்து முன் வைத்த ஆலோசனைகள்
ஏற்கப்பட்டுள்ளன.
சில முக்கிய அம்சங்கள்-
1
ரகசிய வாக்கடுப்பு
2
50% வாக்கு
பெற்றவர்கள் முழுமையான அங்கீகரிக்கப்பட்ட சங்கம்.
3
35% வாக்கு
பெற்றவர்கள் முதன்மையான அங்கீகரிக்கப்பட்ட
சங்கம்
4
15% வாக்கு
பெற்றவர்கள் இராண்டாவது அங்கீகரிக்கப்பட்ட சங்கம்
அனைத்து
பேச்சுவார்த்தை,ஒப்பந்தம் - முதல் மற்றும் இரண்டாவது சங்கங்களுடன்
நடத்தப்படும். இரு சங்கமும் இணையாக கருதப்படுவார்கள்.
2% வாக்கு பெற்ற சங்கங்களுக்கு
குறைந்த பட்ச சலுகைகள் வழங்கப்படும்.
மாநிலத்தில் 50% வாக்கு
பெற்றவர்கள் மாநிலத்தில் அங்கீகாரம் வழங்கப்படும்.
அங்கீகார காலம் 3
வருடமாக இருக்கும்.
தேசியகுழு/மாநிலக்குழு/தலமட்டக்குழு
உறுப்பினர்கள் 14 மட்டுமே. முதன்மையான அங்கீகரிக்கப்பட்ட சங்கம் செயலர்
பதவியையும், இராண்டாவது அங்கீகரிக்கப்பட்ட சங்கம் தலைவர் பதவியையும் வைத்துக்கொள்ளலாம்.
47% வாக்கு பெற்றவர்களுக்கு
7 தேசியகுழு/மாநிலக்குழு/தலமட்டக்குழு உறுப்பினர்கள்
35% வாக்கு பெற்றவர்களுக்கு
6 தேசியகுழு/மாநிலக்குழு/தலமட்டக்குழு உறுப்பினர்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Monday, December 24, 2012
பிறர் முதுகுக்குப் பின்னால்
நாம் செய்ய வேண்டிய வேலை
தட்டிக் கொடுப்பது மட்டும் தான்.
புகழை மறந்தாலும் நீ பட்ட அவமானங்களை மறக்காதே! அது
இன்னொருமுறை உன்னை அவமானப்படாமல் காப்பாற்றும்.
புகழை மறந்தாலும் நீ பட்ட அவமானங்களை மறக்காதே! அது
இன்னொருமுறை உன்னை அவமானப்படாமல் காப்பாற்றும்.
அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்
Subscribe to:
Posts (Atom)


