தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Tuesday, September 11, 2018


ஊதியமாற்ற கூட்டுக்குழுவின்
 
4வது கூட்டம்.

=============================================================
ஊதியமாற்ற கூட்டுக்குழு நான்காவது முறையாக இன்று 10.09.2018 அன்று கூடியது. இன்றைய கூட்டத்தில் நிர்வாகம் தேக்க நிலையை தவிர்ப்பதற்காக ஊதிய நிலையில் உட்சபட்ச இறுதி ஊதிய அளவைக் கூட்டுவது என்ற ஊழியர் தரப்பு கோரிக்கையை அதிகப்படியான ஓய்வூதியப் பங்களிப்பை செலுத்துவதை தவிர்க்கும் பொருட்டு உட்சபட்ச ஊதிய அளவைக் கூட்ட போதிய  ஆர்வம் காட்டவில்லை. ஊழியர் தரப்பு ஊதிய நிலையில் தேக்கம் ஏற்படுவதை ஒருகாலும் ஏற்க முடியாது என்றும், 15% சதத்திற்கு குறைவான ஊதிய நிர்ணயத்தை ஏற்பதில்லை என்றும் தனது  நிலைப்பாட்டை  உறுதிப்பட எடுத்துரைத்தது. நிர்வாக தரப்பில் ஊதிய நிலைகள் குறித்த முன்மொழிவு இன்று சமர்ப்பிக்கப்பட்டது.நிர்வாகத்தின் முன்மொழிவை ஊழியர்தரப்பு சார்பாக நாளை 11.09.2018 அன்று கூடி விவாதிக்கவும் , அடுத்த கூட்டத்தை 14.09.2018 அன்று மீண்டும் கூட்டுவது எனவும் முடிவெடுக்கப்பட்டது.

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR