தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Friday, January 11, 2019

=================================================================
தஞ்சை ஒப்பந்தத் தொழிலாளர்களின்
திரண்டெழுந்த தர்ணாப் போர் 
வெற்றி! வெற்றி!!
=================================================================
NFTE  &  BSNLEU சங்கங்களின் சார்பாக TMTCLU மற்றும் TNTCWU தொழிலாளர்கள் இணைந்து 11-01-19 இன்று, இணைந்து நடத்திய தர்ணாப் போராட்டம் வெற்றிகரமாக நடந்து  முடிந்தது.

நமது பொது மேலாளருடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் 
கீழ்க்கண்ட முடிவுகள் எட்டப்பட்டது. 

       1. அனைத்து கோட்ட அதிகாரிகளும் பிரதி மாதம் 3ம் தேதிக்குள், 
            ஒப்பந்த ஊழியர்கள் சம்பள பில்  STATEMENT ஐ  மாவட்ட     
            அலுவலகத்திற்கு அனுப்பிட வேண்டும்.

       2. அனைத்து ஒப்பந்ததாரர்களும் பிரதி மாதம் 10ம் தேதிக்குள்ளாக 
           சம்பள பில்களை  மாவட்ட அலுவலகத்திற்கு அனுப்பிட     
           வேண்டும்.

       3. மாவட்ட நிர்வாகம் காண்ட்ராக்டர் பில்களை  சரிபார்த்து 
           பிரதி மாதம் 21ம்தேதிக்குள்  மாநில நிர்வாகத்திற்கு 
           அனுப்பிட வேண்டும்.

       4. போனஸ் நிலுவைத் தொகை அடுத்த வாரத்தில் பட்டுவாடா 
           செய்யப்படும். 

       5. ஸ்ரீ செக்யுயூரிட்டியிடமிருந்து 4 மாத EPF (மார்ச், ஏப்ரல், மே, 
           ஜூன்) தொகை, ஒப்பந்தத் தொழிலாளிக்கு நேரடியாக 
           PAYMENT செய்யப்படும்.

       6. வரப்போகும் புதிய டெண்டரிலிருந்து ஒப்பந்தத் 
           தொழிலாளிக்கு PAY SLIP, ID CARD ஆகியவை வழங்கப்படும். 

       மிகவும் சிக்கலான இத்தருணத்தில், மதியம் 3 மணிக்கு நம்மை அழைத்து தாயுள்ளத்தோடு பரிசீலித்து, நம்மோடு பேச்சு வார்த்தை நடத்தி,  கோரிக்கையை தீர்த்து வைத்த  பொது மேலாளருக்கு நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்!

       பல்வேறு நெருக்கடிகளுக்கிடையில், மாவட்டம்  முழுமையிலுமிருந்தும் வருகை தந்து, 
தளராது போராட்டத்தில் கலந்து கொண்ட 
அனைவருக்கும் நமது நெஞ்சார்ந்த 
நன்றியும் பாராட்டுக்களும்!

புரட்சி வாழ்த்துக்களுடன்,
கே. கிள்ளிவளவன், NFTE மாவட்டச் செயலர்.
டி. கலைச்செல்வன், TMTCLU மாவட்டச் செயலர்.

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR