தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Sunday, March 11, 2018

வாழ்த்துக்கள் தோழர்களே!

அமிர்தசரஸில் நடைபெறுகின்ற 
ஐந்தாவது மாநாடு 
அகில இந்திய மாநாடு 
வெல்லட்டும்! வெல்லட்டும்!!
வெற்றி நடை போடட்டும்!

தியாகி பூமி தஞ்சையிலிருந்து 
புறப்பட்ட செம்படையே!
உங்கள் வருகையால் பஞ்சாப் மண் 
மேலும் சிவக்க வாழ்த்துகிறேன்! 

பிறந்த மண்ணை விட்டுப் பிரிந்து 
10 நாட்கள் பயணம் செய்யும் 
எங்கள் அருமைத் தோழர்களே!
உங்கள் பயணம் வெற்றியாகும்! 
எல்லோருக்கும் வாழ்வளிக்கும்!

நம்மை நோக்கிய பிரச்சனைகள் 
தீர்வதற்கு வழிகோலும், 
தீர்மானங்கள் உருவாகட்டும்.
உரமாக, செறிவாக 
போராடும் தலைவர்கள் 
புதிதாய் பதவி ஏற்கட்டும்!

உங்களது சுற்றுப் பயணம் 
வெற்றி பயணம் ஆகட்டும்!
என்றும் நமது மாவட்டம்  
ஏற்ற பணியில் சிறக்கட்டும். 

வாழ்த்துக்கள் தோழர்களே!
எஸ். சிவசிதம்பரம், பட்டுக்கோட்டை.
No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR