தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Tuesday, March 20, 2018அண்ணன் LCP க்கு 
தம்பிகளின் கவிதாஞ்சலி!


அன்று நம் NFTE இயக்கத்தின்
ஆற்றல் மிகு மாவட்டச் செயலர்.
தமிழகத்தில் தஞ்சையில் 
முதன்முதல் மஸ்தூருக்கு 
சங்கம் அமைத்த பெருந்தலைவன்.

இன்று ஓய்வூதியர் சங்கத்தின்

இணைப் பொதுச் செயலர்.

சிறப்பாக தன் பணியில்
தடம் பதித்த அவரை
அணி என்ற பிணி
இன்று வரை அண்டியதேயில்லை!

கண்ணில் ஒற்றிக் கொள்ளும் எழுத்து
அண்ணனின் கையெழுத்து!
பலருக்காகவும் அவர் எழுதிய வரிகள்
இன்றும் நம் கோப்புகளில்.
அஞ்சாத முழக்கம்! அவரது கோஷம்!

சங்கம் துவங்கியபின் 
தலைவர் சாமிநாதனிடம் 
சரணேயடைந்துவிட்டார்.
சலிப்பில்லாமல் உழைப்பார்.
அவரால் ஈர்க்கப்பட்ட 
அறுவரில் இவரும் ஒருவர்.
நோய்க்குப் பின் அவரில்லாமல்
நடந்த கூட்டம் இரண்டுதான்.

அவரின் இரும்பு இதயம்

அறுவை சிகிச்சைக்குப் பின்

உருக்காய் மாறியது.

இருவர் இணைந்து சம்பாதித்தும்
ஆடம்பரங்கள் அவரிடம் இல்லை.


மீண்டும் அவருக்கு, நோயின் அழைப்பு!
ஏண்டா தம்பி! இந்த நோய்
இப்படி என்னை வறுக்குது!
சோர்ந்து பேசிய அண்ணனின் வார்த்தை 
இன்றும் நெஞ்சை நனைக்கிறது.

வாழ ஆசைப் பட்டவருக்கு
வாழ்க்கை ஏனோ வசப்படவில்லை.

18-3-18 ல் 
நம்மை விட்டு மறைந்து விட்டார்.
அவரைப் பார்க்க வந்தக் கூட்டம் 
தானாய் வந்து சேர்ந்த கூட்டம் 
ஓயவூதியர் சங்க முயற்சி 
ஓராயிரம் பேரை திரள வைத்தது. 

கொடி தாழ்த்தி அஞ்சலி செய்தோம்!
கொள்கைத் தங்கம் அண்ணனுக்கு.
எல்லோருக்கும் நல்ல பிள்ளை 
LCP யைப் போற்றுவோம்!
அவரின் அன்பு நினைவுகளால் 
ஆன்மாவுக்கு அஞ்சலி செய்வோம்!

எஸ்.  சிவசிதம்பரம், 
பட்டுக்கோட்டை.

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR