தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Thursday, March 22, 2018

அமிர்தசரஸ் அ.இ.மாநாட்டு தீர்மானங்கள்
  • அ.இ.மாநாடு செக் ஆப் முறையை ஏற்கவில்லை.ஆனால் 50 சத நிபந்தனை உறுப்பினர் சரிபார்ப்பில் இருப்பதை நீக்கிட பேச்சுவார்த்தை துவக்கிட வேண்டும்.
  • ஊதிய மாற்றம்;- 8வது சுற்று ஊதிய மாற்ற பேச்சுவார்த்தை DPE வழிகாட்டுதல்படி இரு தரப்பு கமிட்டி அமைத்திட காலதாமதம் செய்வதற்க்கு அதிருப்தியை  தெரிவிக்கிறது. இரு தரப்பு கமிட்டி உடனடியாகஅமைத்திட, பேச்சுவார்த்தை துவக்கிட மாநாடு வலியுறுத்துகிறது. NFTE சங்கம் கடிதத்திற்க்கு பிரதமர் அலுவலகம் DPE ம்முலம் வழிகாட்டிய அடிப்படையில் DOT/BSNL AFFODABILITY நிபந்தனைக்கு விதிவிலக்கு பெற அமைச்சரவையை அணுகி பெற வேண்டும்.
  • ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் CDA 55 (ii) b விதிகள் BSNL க்கு பொருந்தாது. எனவே இந்த பாதக பிரிவை CDA விதிகளில் இருந்து நீக்க வேண்டும்.
  • மத்திய அரசு ஊழியர்கள் பெறும் DCRG 01/01/2016 முதல் ரூ20 லட்சம் BSNL க்கு பொருந்தும் என்ற DOPT உத்திரவில் 6.2 பிரிவின்படி 50சதம் கிராக்கிப்படி உயர்ந்தால் ரூ25 லட்சம் என்ற பிரிவு BSNL பொருந்தும் என உத்திரவு மாற்றப்படவேண்டும்.
டவர் தனி நிறுவனம்
  • தனி டவர் நிறுவனம் 04/01/2018 முதல் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருவதைமாநாடு ஆழமாக பரிசீலித்தது.இது BSNL நிதி ஆதார தன்மையை பாதிக்கும் என்பதால் BSNL/DOTயிடம் கீழ் கண்டவற்றை பரிசீலிக்கக் கோருகிறது.
  • 04/01/2018 வரையில் BSNL நிதியில் உருவாக்கப்பட்ட டவர்களை BSNL கட்டணமின்றி பயன் படுத்த வேண்டும்.
  • புதிய டவர் நிர்மாணத்திற்க்கு BSNL நிதி பயன்படுத்தக்  கூடாது.
  • ANCHOR STATUS குறித்து முழுமையான விளக்கம் அளிக்க வேண்டும்.
  • டவர் நிறுவன சொத்துக்கு டிவிடெண்ட் வழங்குவதை அரசு பொறுப்பு ஏற்க வேண்டும்.
  • தனியார் மயம், பங்கு விற்பனை கூடாது.
  • ஊழியர்களின் ஓய்வூதியம் சேவை நிலைகள் அனைத்தையும் சங்கங்களுடன் விவாதித்து இறுதி செய்ய வேண்டும், ஊழியர்களை நிரந்தரமாக மாற்றம் செய்ய கூடாது.
  • ஓய்வூதிய கொடை19/11/2009 DOP&T உத்திரவு BSNL க்கு பொருந்தும் என கூறப்பட்டுள்ளது.   எனவே ACTUAL BASIC அடிப்படையில் பிடித்தம் செய்யவேண்டும். BSNL–MTNLக்கு இடையில் பாரபட்சம் காட்டக்  கூடாது.
  • NFTE சங்கம் தேசிய குழுவில் விவாதித்து, நிர்வாகம் ஏற்றுக்கொண்ட மல்டி ஸ்கில் கேடர் ஊழியர்களை உருவாக்கிட வேண்டும்.
  • அமைச்சர் உறுதிமொழி அடிப்படையில் ஓய்வூதியம் மாற்றம் உடனடியாக செய்திட வேண்டும்.
  • 2 வது ஊதிய மாற்றத்தில் ஏற்படுத்தப்பட்ட தேக்கநிலை பிரச்சனை முன்னுரிமை வழங்கி, 3 வது ஊதியமாற்றத்திற்கு  முன் தீர்க்க வேண்டும்.

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR