தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Friday, March 2, 2018



                  NFTE  -  BSNL 
  தஞ்சை மாவட்டம் 



நம்பிக்கையின் சின்னமாக நமது BSNL 

ஏர்செல் கம்பெனி திவால் ஆகிவிட்டது 
என்ற செய்திக்குப் பிறகு நமது BSNL  அலுவலகத்திற்கு 
MNP கேட்டு பொதுமக்கள் குவியத் தொடங்கிவிட்டார்கள்.   
நமது அலுவலங்களிலும் இதற்கான 
சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளார்கள்.
இருப்பினும் இந்த வாய்ப்பை நாம் முன்னிலும்  
முனைப்பாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

ஏர்செல் வரும் ஏப்ரல் 15 வரை இணைப்பில் இருக்கும் 
என்று TRAI  கூறியிருக்கிறது.  
போர்ட்டிங் கோடு இப்போது இரண்டு நாளிலேயே 
வர ஆரம்பித்துவிட்டது. 

MNP க்கு SMS அனுப்பும் முறையில்  
ஏற்கனவே உள்ள முறையே  மிகச் சிறந்தது. 
அடுத்து ஒரு முறையை கூறியிருக்கிறார்கள். 
அதாவது PORT No. எடுப்பதற்கு 
9842012345 க்கு கால் செய்து சிம் நம்பரில் 
கடைசி 5 எண்ணை டயல் செய்து PORT No. பெறலாம்.
இதுவே, சென்னையில் வாங்கிய சிம் என்றால்
 9841012345 என்ற எண்ணுக்கு டயல் செய்ய வேண்டும்.

இப்போது வோடாபோனும் நிதி நெருக்கடியில் சிக்க வாய்ப்பு 
உள்ளதாக தொலைக்காட்சி செய்திகள் கூறுகின்றன.
அதேபோல்,  ஜியோவும் ரிலையன்ஸுடன் 
இணைவதற்காக 4 நாட்கள் தனது 
சேவையை நிறுத்தப் போவதாக 
செய்திகள் கசிகின்றன. 

சூழ்நிலையை சரியாகப் பயன்படுத்திக் கொள்வதென்பது, 
BSNL ன் வளர்ச்சி என்பதோடு மட்டுமல்லாது, 
அரசுத் துறை மீதான நம்பிக்கையையும் வலுப்படுத்தும்.

தோழர்களே! 
பொதுமக்களில் பலருக்கும் MNP க்கு 
SMS கொடுக்கத் தெரியவில்லை. 
இதற்கு உதவி செய்தாலே பேருதவியாக இருக்கும். 

விபரம் தெரிந்த ஓய்வு பெற்ற தோழர்கள்
பங்களிப்பு செய்தால் நெரிசலைக் குறைக்கலாம்.
இந்தத் தருணத்தில் தோழர்கள் தங்களது 
விடுப்பை முடிந்தவரை தவிர்க்கவும்.

இப்போது airtel லிலிருந்து கூட 
MNP கேட்டு வருகிறார்கள். 
அரசுத் துறைதான் எதற்கும் அசராத துறை 
என்ற நம்பிக்கை நம் மக்களுக்கு 
வர ஆரம்பித்துவிட்டது. 
அந்த நம்பிக்கையை மேலும் வளர்த்தெடுக்க 
கடுமையாய் உழைப்போம்.

வாழ்த்துக்கள் தோழர்களே!
கே. கிள்ளிவளவன், 
மாவட்டச் செயலர், தஞ்சை.

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR