தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Monday, February 5, 2018

 NFTE  -  தஞ்சை மாவட்டம்.
BSNL ன் நிலமும் சொத்துக்களும்
நமது CMD உயர்திரு. அனுபம் ஸ்ரீவத்சவா 
அவர்கள் 29-01-2018 அன்று  DOT செகரட்டரி திருஅருணா சுந்தரராஜன் IAS 
அவர்களுக்கு எழுதிய கடிதத்தின் சாராம்சம்.

தமிழில்: 
 தோழியர். A. லைலாபானு அவர்கள்,தஞ்சை. 

DOT யின் அனைத்து நிலங்களும் சொத்துக்களும் DOT  &   DOP க்கு (கடித எண் 2-30/2000-Restg. dtd. 30-09-2000 ) மாற்றப்பட்டது.  ஆனால் BSNL தனது நிலங்கள் (பயன்படாத நிலங்கள்) லீசுக்கு விடுவதற்கோ அல்லது விற்பதற்கோ தனி அதிகாரம் இல்லை என்று Article 144 ( 3 ) a  of  AOA of  BSNL ல் கூறியுள்ளது. இதே போல் நிதியமைச்சக கடிதம் dtd. 28-03-2011 ன்படி அரசின் நிலங்கள் குத்தகைக்கு விடுதல் அல்லது நீண்ட கால குத்தகை, விற்பனை போன்றவற்றிற்கு ஒவ்வொரு முறையும் கேபினெட் அப்ரூவல் பெறவேண்டும் என்கிறது.   
BSNL புனரமைப்பில் இதுவும் ஒரு அங்கம்.
CAG யும் BSNL ன் நிதிக்கு நிலங்களை வணிக வளாகத்திற்கு வாடகைக்கு விட்டு, அதிகப்படியான  நிதி பெறுதல் கூடாது என்று வலியுறுத்துகிறது.

1. முதலில் நமது ஆலோசனையாக PILOT PROJECT என்ற பெயரில் 10 நிலங்களில் 7 நிலங்களை வணிக வளாக செயல்பாடுகளுக்கு அனுமதிப்பதன் மூலம் நமக்கு வருவாய் 1057 கோடி மற்றும் மார்க்கெட் வேல்யூ ரூ. 2863 கோடிகள் கிடைக்கும் என்று கேட்டு DOT க்கு 2013,14,15,16 ம் ஆண்டு வரை கடிதம் எழுதியுள்ளோம்.   இன்று வரை DOT யின் முடிவு நமக்கு கிடைக்கவில்லை.


2. நிறைய எண்ணெய் கம்பெனிகள், அகில இந்திய அளவில் நமக்கு பயன்படாத நிலங்களில்  10 வருட குத்தகைக்கு கேட்டு கடிதம் எழுதியுள்ளனர். இதன் மூலம் நமக்கு ஒரு வருட வருவாய் ரூ. 70 லட்சம் கிடைக்க வாய்ப்புள்ளது.  கடித எண் Dtd. 12-09-2016.   கடைசியாக மறு நினைவூட்டல் கடிதம் DOT க்கு 2017ல் கொடுத்துள்ளோம். 


3. பல்வேறு பொதுத் துறை நிறுவனங்கள் OIL COMPANIES, HPCL, BPCL AND IOCL மற்றும் அரசு நிறுவனங்களான சென்னை மெட்ரோ, உதய் ஆகியவைகளின் அனுமதி கோரும் விண்ணப்பங்கள் நமக்கு வந்தவண்ணம் உள்ளன.  இதனால் நமக்கு ஆண்டு வருமானம் ரூ.50 கோடி கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால் முதல் கடிதத்திற்கே நமக்கு பதில் வராத காரணத்தால் - இவைகளை நாம் அனுப்பவில்லை.


எனவே, முதற்கடமையாக உபரி நிலங்களை குறைந்த வருடங்களுக்கு அல்லது 10 வருட குத்தகைக்கு விடுவதற்கு அனுமதி கோருகிறேன்.  இதுபோல் STAFF QUARTERS,  DOT யிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு வாடகைக்கு விடப்படுகிறது.   ஆனால், இதன் HRA, DOT யால் BSNL க்கு வழங்கப்படுவதில்லை.  இதே, STAFF QUARTERS  BSNL ஊழியர்களுக்குக்கு வாடகைக்கு விட்டால் HRA சேமிக்கப்படும்.  இதன் மீதும் கவனம் செலுத்த வேண்டுகிறேன்.

எனவே, உபரி நிலங்களை குறைந்த வருடம் அல்லது நீண்ட கால குத்தகைக்கு விட்டு அதிகப்படி வருமானம் BSNL க்குக் கிடைக்க ஆவன செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR