தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Monday, April 30, 2018

மாவட்டச் செயலர் மடல்:

உலக மே தின தியாகிகளுக்கு 
வீர வணக்கம் செலுத்துவோம்!
=======================================
அருமைத் தோழர்களே!
                       அனைவருக்கும் வணக்கம்! உங்களுக்கு எனது புரட்சிகரமான மே தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நாளைய தினம் உலகமெங்கும் 128 வைத்து  மே தினத்தை தொழிலாளி வர்க்கம் கொண்டாடுகிறது.  நீங்களும் எல்லா இணைப்பகங்களிலும், கிளைகள்தோறும் செங்கொடி ஏற்றி, தியாகிகளுக்கு அஞ்சலியையும், வீர வணக்கத்தையும் செலுத்துங்கள்.   மே தின வரலாறை, தியாகத்தை எடுத்துச் சொல்லுங்கள்.
                    எட்டு மணி நேர வேலை என்பதும், தொழிலாளருக்கான சலுகை என்பதும் அரசுப் பணிகளிலும், ஒரு சில நிறுவனங்களிலும் தான் இருக்கிறது. மற்றபடி தனியார் கடைகள், கார்ப்பரேட் நிறுவனங்கள் போன்றவற்றில் 10 மணி நேரத்திற்கு மேல் வேலை என்பது இன்னும் மாறவில்லை.    வார ஓய்வு, விடுமுறை நாள், லீவு, அட்வான்ஸ், கடன் போன்றவை இல்லாமல்தான் பல தொழிலாளர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 
           மத்திய, மாநில அரசாங்கங்களும், நமது  மக்களை, தொழிலாளர்களை, விவசாயத் தொழிலாளர்களை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. மக்களின்  கோரிக்கைகள் எல்லாம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. 
      நமது துறையில் சம்பளக் கமிஷன், BSNL ஐப் பாதிக்கும் துணை டவர் நிறுவனம் அமைப்பு போன்ற கோரிக்கைகள் எவ்வளவோ போராட்டங்கள் நடத்தியும் இன்னும் தீராமல் இருக்கிறது. 
  அவைகளை தீர்க்க வேண்டுமானால் முன்னிலும் துடிப்பாக நமது செயல்பாட்டை முடுக்கி விட வேண்டும்.  அத்தகைய செயலுக்கான முனைப்பை, உற்சாகத்தை, செயலூக்கங்களை உருவாக்கும் முயற்சியை ஏற்படுத்த இந்த நன்னாளில் சபதமெடுங்கள்.

மே தின தியாகிகள் நாமம் வாழ்க!
NFTE ஜிந்தாபாத்!!

தோழமையுடன்,
கே. கிள்ளிவளவன்,
மாவட்ட செயலர்.       

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR