தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Monday, July 9, 2018

பெரிதும் வருந்துகிறோம்
=====================

நம்மோடு பணியாற்றி சமீபத்தில் ஓய்வு பெற்ற திருவாரூர் மோகன் அவர்களின் மகன் விவேக் அவர்கள் நேற்று  08-07-18 அன்று இறந்து விட்டார் என்பதை வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

பெங்களூர் ஐ.டி கம்பெனியில் பணியாற்றிய அவர் கம்பெனி வேலையாக மொரீஷியஸ் நாட்டுக்கு சென்றிருந்த சமயம் அங்கேயே இறந்து விட்டார் என்ற செய்தி தோழர் மோகன் குடும்பத்தாருக்கு மிகப்பெரிய  அதிர்ச்சியாகும்.

31 வயதே நிரம்பிய மகனை இழந்து தவிக்கும் அவருக்கும், அவர்தம் குடும்பத்தாருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மொரீஷியஸுக்கு அவரது தம்பி சென்றிருக்கிறார்.  எப்போது திருவாரூருக்கு கொண்டு வருகிறார்கள் என்பது தெரியவில்லை.
எனவே, உடல் நல்லடக்கம் எப்பொழுது என்பது பின்னர் அறிவிக்கப்படும்.

இவண்,
NFTE BSNL,
தஞ்சை மாவட்டச் சங்கம்.

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR