தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Sunday, July 15, 2018

மன்னையில் நடைபெற்ற முப்பெரும் விழா!!
=============================================== 
மன்னை கிளையில் 100க்கு 
மேற்பட்ட தோழர்கள் பங்கேற்ற 
TMTCLU கிளை ஆண்டு விழா, 
NFTE கல்வெட்டு விழா,
பணி நிறைவு பாராட்டு விழா 
13-07-18 அன்று சிறப்பாக  நடைபெற்றது.
=================================================================
TMTCLU கல்வெட்டை  தமிழ் மாநிலச் செயலாளர் 
தோழர். R. செல்வம் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
மாவட்டச் செயலர் கலைச்செல்வன் கொடியேற்றினார்.

மாநிலச் செயலர்.தோழர். R. செல்வம் அவர்களிடம் 
தஞ்சை மாவட்ட TMTCLU கிளைகளின் சார்பாக 
சந்தா தொகை ரூபாய் 6000 வழங்கப்பட்டது. 

புதுப்பிக்கப்பட்ட NFTE கல்வெட்டை 
மாநில மகளிரணிச் செயலர் தோழியர் லைலாபானு 
அவர்கள் திறந்து வைத்தார். 
மாவட்டச் செயலர் தோழர். கே. கிள்ளிவளவன் அவர்கள் 
NFTE கொடியேற்றி வைத்தார்.

TMTCLU புதிய நிர்வாகிகளாக தோழர்கள். 
மன்னை ஜான் பீட்டர், கூத்தாநல்லூர் லோகநாதன், 
திருமக்கோட்டை ராமு ஆகியோர்
முறையே தலைவர், செயலர், பொருளாராக 
தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

இறுதியாக NFTE மாநிலச் செயலர் 
தோழர். நடராஜன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

தோழர். ஜான் கென்னடியின் நன்றியுரையுடன் 
விழா  இனிதே நிறைவுற்றது.
அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாட்டையும் 
நிறைவாகச் செய்திருந்தார்கள்.

  கிளைச் செயலர் தோழர் மோகன் தலைமையில் 
உறுப்பினர்கள் ஒவ்வொருவரின் 750 ரூபாய் 
நன்கொடையால் விழா  ஏற்பாடுகள் சிறப்பாக 
ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

==================================================================== 
















No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR