தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Thursday, July 5, 2018

 மாநிலச் செயலர் 
தோழர்.K. நடராஜன் அவர்களின் 
இனிய பிறந்த நாள் 05-07-2018
=====================

இற்றை நாளில் பிறந்த 
எம் தோழனை, தலைவனை  
வாயார வாழ்த்துகிறோம்!
===================
தொழிற்சங்க வரலாற்றில் 
ஆகப் பெரிய சங்கம் NFTE !
தோல்வியிலும் தோளுயர்த்தும்!
தொய்வின்றி வாள் சுழற்றும்!!

அதன் பெரும் பெருமையே 
வாய்த்திட்ட தலைமைதான்!
ஒரு மாநிலத்தில்
இத்தனை தலைமைகளா! 
அது தமிழகம் மட்டுமே 
கண்ட தாளாப் பெருமை!

அத்தகு படை வரிசையில் 
குறுகத் தரித்த குரலாய் 
நெஞ்சகத்து அஞ்சுகமாய் 
வலம் வரும்   தளபதியே!
உமை யாம் வாழ்த்துகின்றோம்!!

ஒற்றைக் காலில் நிற்காமல் 
இரண்டு காலால் தமிழகத்தை 
இரவு பகல் இருத்தாமல் 
சுற்றிச் சுழன்று வரும் 
மண்ணின் மைந்தன் நடராஜனை 
மனம் நெகிழ்ந்து வாழ்த்துகிறோம்! 

ஜெகன், ஆர்கே, பட்டாபி 
முத்தியாலு, மாலியுடன் 
தமிழ்மணியும் தடம் பதித்த 
தன்னேரில்லாத் தமிழகத்தின் 
தளபதியாம் நம்  நடராஜனை 
தஞ்சையும் வாஞ்சையாய் 
வாழ்த்தி மகிழ்கிறது. 
  

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR