தமிழ் மொழி
தடுக்கி விழுந்தால் மட்டும் அ... ஆ....
சிரிக்கும் பொது மட்டும் இ... ஈ....
சூடு பட்டால் மட்டும் உ... ஊ....
அதட்டும் பொது மட்டும் எ... ஏ....
ஐயத்தின் போது மட்டும் ஐ ....
ஆச்சர்யத்தின் போது மட்டும் ஒ ... ஓ....
வக்கணையின் போது மட்டும் ஔ.....
என்று பேசி,
மற்ற நேரம்
வேற்று மொழி பேசும்
தமிழர்களிடம் மறக்காமல் சொல்!
உன் மொழி தமிழ் மொழி என்று !!!
எஸ். சிவசிதம்பரம்.