தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Monday, February 16, 2015

மீத்தேன் எதிர்ப்பியக்கம்  
தர்ணா முழக்கப் போராட்டம்.
குடந்தை  -  17-02-2015.


சோறுடைத்த தஞ்சை மண்ணை 
சுடுகாடாய் மாற்ற எண்ணும் 
மத்திய அரசின் திட்டத்தை 
மீத்தேன் வாயு  திட்டத்தை
கடுமையாக எதிர்த்திடுவோம்!

பசி தீர்க்கும் தஞ்சை மண் 
பாலைவனம் ஆவதா!  
கூடாது! கூடாது!! ஒரு போதும் கூடாது.

பயிரும், உயிரும் செழித்து வளரும் 
தஞ்சை, நாகை, ஆரூரை 
வாழ, வளர, வகையற்ற 
பொட்டல் காடாய் மாற்றிட வைக்கும் 
மீத்தேன் திட்டம் தேவைதானா?

உலகுக்கே உணவளிக்கும் 
வல்லமை பெற்ற தஞ்சையை 
உணவுக்காக கையேந்த வைக்கும் 
மீத்தேன் திட்டம் தடுத்திடுவோம்!

காசுக்காக, கூலிக்காக 
நாட்டு நலனை அடகு வைத்து 
அந்நிய நாட்டு கம்பெனிக்கு 
பட்டுக்கம்பளம் விரிக்கின்ற 
மத்திய அரசைக் கண்டிக்கின்றோம்.

கண்ணை விற்று சித்திரம் வாங்கும் 
மத்திய அரசின் திட்டத்தை 
மீத்தேன் வாயு திட்டத்தை 
அடியோடு தடுத்திட 
உணர்வோடு போராடுவோம்!
உறுதியோடு போராடுவோம்!

எண்ணற்ற சக்திகள் 
எழுச்சியோடு போராடிய  
மீத்தேன் எதிர்ப்புப் போராட்டம் 
வெல்லட்டும்! வெல்லட்டும்!!
தேசமெங்கும் பரவட்டும்.

நஞ்சையும், புஞ்சையும் இணைந்த தஞ்சையின் 
24 லட்சம் ஏக்கர் நிலங்கள் 
உப்பாய் நஞ்சாய்  மாறுவதை 
பார்த்திருப்போமா! பொறுத்திருப்போமா! 

எவனோ எங்கோ கொள்ளையடிக்க 
பாரதம் என்ன திறந்த வீடா!
6 லட்சம் கோடி எடுத்து 
5000 கோடி தருவானாம். 
பஞ்சம் பசி போக்கவல்ல 
தஞ்சையை தாரை வார்ப்போமாம்.
நடப்பது ஆர்ப்பாட்டமல்ல!
ஜீவா மரணப் போராட்டம். 
உணர வேண்டும் மதிய அரசு!


தேசபக்த உணர்வோடு 
நாங்கள் நடத்தும் போராட்டம் 
தர்ணாவோடு  நில்லாது.
ஆர்ப்பாட்டத்தோடும் நில்லாது!

தேசமெங்கும் வேர்பிடித்து 
எரிகின்ற போராட்டமாக 
உக்கிரமான போராட்டமாக 
மாறும் என்று எச்சரிக்கின்றோம்!

இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் 
போராளி மேதாபட்கர் 
சமூக நல ஆர்வலர்கள் 
மாணவர்கள், ஆசிரியர்கள் 
இடதுசாரி சக்திகள் 
இவர்களோடு நாங்களும் 
இணைந்து கரம் கோர்க்கின்றோம்!

மத்திய அரசே! மத்திய அரசே!!
வாழும் மனிதனை அகதியாக்கும் 
மீத்தேன் திட்டத்தைக் கைவிடு!
தேசத்தைக் காத்திடு!

Friday, February 13, 2015

சீர்குலைக்க முயன்ற நபரின் முயற்சி தோல்வி

சீர்குலைக்க முயன்ற நபரின் முயற்சி தோல்வி !
தோழர்களே !
இன்று சென்னையில் நடைபெற்ற மாநில செயற்குழு சிறப்பாகதுவங்கியது.  அதன் பின் , தோழர் பட்டாபி தன் அறிமுக உரையினை ஆற்றமுற்பட்ட போதுசெயற்குழு உறுப்பினர்களில் சிலர் STRமாவட்டச்சங்கத்தினை செயற்குழுவில் பங்கேற்க அனுமதிக்கக்கூடாது எனவாதிட்டனர். STR பகுதி பங்கேற்கும் நான்காவது மாநில செயற்குழு இதுஎன்பதை சுட்டிக்காட்டி  பிரச்சனைகள் இருப்பின் பின்னர் அதைப்பற்றிவிவாதிக்கலாம் என்று கூறிதனது அறிமுக உரையில்,  இம் மாநிலசெயற்குழுவின் நோக்கத்தினை விளக்கினார்.
பணி ஓய்வு மற்றும் உடல்நிலையின் காரணமாக தனதுமாநிலத்தலைவர் பதவியினை ராஜினாமா செய்துள்ள தோழர் நூருல்லாமற்றும் விருப்பப்பணி ஓய்வு பெற்று தனது பதவியை ராஜினாமாசெய்துவிட்ட அமைப்புச்செயலர் தோழர் சங்கர் ஆகியோர்களின் பதவியைநிரப்புதல் மற்றும்  மார்ச்சு 17 வேலை நிறுத்தத்தின் முக்கியத்துவத்தினைவிளக்கிப் பேசினார்.
அப்போது சென்னை தொலைபேசியை சேர்ந்த சுமார் 30 குண்டர்கள்முனை மடிக்கப்படாத  நீண்ட ஆணிகளால் ரீப்பர் கட்டைகளில்அடிக்கப்பட்ட  தினக்காலண்டர் அட்டைகளில் பேருக்கு சிலகோரிக்கைகளை எழுதி கையில் எடுத்துக்கொண்டுஅரங்கினுள் நுழைந்துகோஷமிடத்துவங்கினர்.  சங்கத்தை சீர்குலைவு செய்யாதே (?!) என்றுகோஷமிட்டு செயற்குழுவை சீர்குலைக்கும் வேலையில் ஈடுபட்டனர்.மாநிலச்செயலரும்தலைமைப்பொறுப்பேற்று நடத்திய தோழர் லட்சமும்எத்துணை முறை வேண்டியும்அமைதிகாக்க மறுத்தது மட்டுமின்றிஅரங்கினுள் இருந்த தோழர்களை மிரட்டத்துவங்கினர்.வெளியேறாவிட்டால் நடக்கும் அசம்பாவிதத்திற்கு தாங்கள் பொறுப்பல்லஎன்று கூறி கையில் வைத்திருந்த ரீப்பர் கட்டைகளை காட்டி பின் பகுதியில்அமர்ந்திருந்த தோழர்களை மிரட்டினர்.  
அந்த நேரத்தில்,  செயற்குழுவில் உரையாற்ற நமது தலைமைப்பொதுமேலாளர் அரங்கினுள் நுழைந்தார்எந்த பிரச்சினை இருந்தாலும்அதை தலைமைப் பொதுமேலாளரின் உரைக்குப்பின் பேசலாம் என்றுதலைவர்கள் கூறிய போதும் அதற்கு செவிமடுக்கசென்னைத்தொலைபேசியின் குண்டர்கள் மறுத்துவிட்டனர்கூச்சலும்அச்சுறுத்தலும் தொடர்ந்த வண்ணம் இருக்க பேசும் சூழல் இல்லாததை நம்தலைவர்களிடம் சுட்டிக்காட்டிவிட்டு நமது தலைமைப் பொது மேலாளர்சென்றுவிட்டார்.  அவர் வெளியில் செல்ல முற்பட்டபோது கடலூரில் இருந்துவந்த ஒரு குடிகாரன் அவரை உந்தித்தள்ள முற்பட்ட அநாகரீகமும் நடந்தது.தமிழ் மாநில சங்க பாரம்பரியத்தின் காவலாளிகள் என்று சென்ற மாதம்கூறிக்கொண்ட கும்பலின் வழிவந்தவர்கள் தான் CGM- பேச விடாமல்திருப்பிச்செல்லவைத்த அநாகரிக செயலுக்குச்சொந்தக்காரர்கள் !
செயற்குழு நடந்த அரங்கிற்கு எதிரே இருக்கும் மியூசியத்தின் உள்ளேமறைந்துகொண்டிருந்த ஒரு நபரே இந்த மொத்த அராஜகத்தையும் வழிநடத்தியதாக சென்னைத்தோழர்கள் சிலர் கூறினர்இத்தனைகளேபரத்திற்கும் அஞ்சாமல் தமிழ் மாநில AITUC செயலர் தோழர் மூர்த்திஉரையாற்றினார்அவர் உரையையும் குறுக்கீடு செய்ய தமிழ்மாநிலத்தைச்சேர்ந்த சிலர் முற்பட்டுஅவரிடமே தோற்று அரங்கை விட்டுவெளியேறினர்.
செயற்குழு நடந்த கட்டிடத்தின் மாடியில் ஒரு பள்ளி இயங்கி வருகிறதுஎன்றும் அதில் இன்று கெமிஸ்ட்ரி தேர்வு நடைபெறுகிறது என்பதால்மாணவர்களுக்கு சென்னைத்தொலைபேசி குண்டர்கள் எழுப்பிய கூச்சல்தொல்லையாய் இருக்கிறது என்றும் அப்பள்ளியின் தலைமையாசிரியைகூறியும் கூச்சலை நிறுத்த மறுத்துவிட்டனர் அந்த கற்பூர வாசனைஅறியாதவர்கள்பின்னர்குண்டர்கள் அரங்கின் மின் இணைப்பையும் துண்டித்தனர்.சேர்கள் வீசி உடைக்கப்பட்டனரீப்பர் கட்டைகளால் தாக்கப்பட்டதில்கும்பகோணம் தோழர் விஜய் உட்பட பலருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டன.
செயற்குழு மேடையில் அமர்ந்திருந்த அந்த கும்பலின் ஏஜென்ட்,இத்தனை களேபரத்தையும் வாயில் எப்போதும் எதையோ மென்றபடிவேடிக்கை  பார்த்தது மட்டுமின்றி,  நான் அகில உலக நிர்வாகி என்னால்இந்த கிளை , மாவட்ட பிரச்சினைகளில் எல்லாம் தலையிட முடியாது என்றுமுத்துதிர்த்தது தான் பெரிய வேடிக்கை.
தேர்வெழுதும் மாணவர்களின் மீதுள்ள அக்கறையால்,தீர்மானங்களை அமைதியாக நிறைவேற்றிபுதிய மாநிலத்தலைவராகதோழர் லட்சத்தினையும்துணைத்தலைவராக தூத்துகுடி தோழர்பாலுவையும்அமைப்புச்செயலராக சேலம் தோழர் வெங்கட்ராமனையும்தேர்வு செய்து  முடிந்த உடன் செயற்குழு மதியம் 2 மணியுடன்முடித்துக்கொள்ளப்பட்டது.
சென்னைத்தொலைபேசி  குண்டர்கள் இன்று மாநில செயற்குழுவில்நடத்திய அத்துணை அராஜகங்களையும் வேலூர் மாவட்டச்சங்கம்வன்மையாக கண்டிக்கிறதுஅடுத்த மாநில சங்கத்தின் செயற்குழுவைசீர்குலைக்கும் இந்த அநாகரீக செயலை செய்தவர்களையும் மாவட்டச்சங்கம்வன்மையாக கண்டிக்கிறது.


பின்னர்  தொடர்ந்த கூட்டத்தில்  மாவட்ட  செயலர்கள் , ,மாநில சங்க நிர்வாகிகள், தலைவர்கள்  ஆர்  கே , சேது , ஜெயபால் ,முத்தியாலு ,பட்டாபி  என் அனைவரும் மாலை  6 மணி  வரை  வேலை நிறுத்தம் ,மீத்தேன் எதிர்ப்பு  போராட்டம்,   பிரச்சனைகள்  என அனைத்தும்  விவாதிக்கப்பட்டது.

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR