வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம் !
பொருளாதார விடுதலைப் போராக செப் . 7 போராட்டத்தை மாற்றிக் காட்டுவோம் தோழர்களே! தேசத்தின் சொத்துக்கள் கொள்ளை போவது ஒரு புறம் நடந்து கொண்டிருக்கும் போதே, மறுபுறம் நாட்டில் புதிய புதிய வளங்களும் கண்டுபிடிக்கப்பட்டு கொண்டுதான் இருக்கின்றன. பல மாநில மலைப்பகுதிகள் எல்லாம் இன்று கனிம வளச் சுரங்கங்களாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுல்ளது. ராஜஸ்தான் பாலைவனம் பெட்ரோல் ஊற்றாய் இன்று மாறி இருக்கிறது அடித்த கொள்ளை போதும் என்ற மனம் ஆட்சியாளர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் , தேசவிரோத சக்திகளுக்கும் வரப் போவதில்லை. அதை வரவழைக்க நம்மால் ஒலிக்கப்படவிருக்கும் எச்சரிக்கை மணிதான் செப் .7 ல் நடைபெறவிருக்கும் வேலைநிறுத்தம்.
திரட்டுவோம்! திரள்வோம்!! வெல்வோம்!!! தோழர்களே.
G . கேசவன், மாவட்ட செயலர்.