தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Saturday, December 31, 2011

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


தோழர்கள் தோழியர்கள் அனைவருக்கும் 
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.  
மேலும்,  
குறைவான ஊதியத்தில் 
நிறைவான சேவையைத் தந்து 
நம்மோடு பணியாற்றுகின்ற 
ஒப்பந்த தொழிலாளர்களுக்கும், 
செக்யூரிட்டி தோழர்களுக்கும் 
இப் புத்தாண்டு தினத்தில் 
இதய பூர்வ வாழ்த்துக்கள். 

அன்புடன்,
தஞ்சை மாவட்டச் சங்கம்.  

Thursday, December 15, 2011நன்றி தோழர்களே! நன்றி!! 

அகில இந்திய சங்கத்தின் அறைகூவலை ஏற்று டிசம்பர் 15, 2011                                                   ஒரு நாள்  வேலை  நிறுத்தத்தில் 
இதயசுத்தியோடு பங்கேற்ற உங்களை 
வாழ்த்தி வணங்குகிறோம்!

இழப்பு வரினும் தயங்காது ஏற்று 
இயக்கத்திற்காக போராடிய தோழர்களே! 
இனி நாம் இழப்பதற்கு 
அடிமைச் சங்கிலியைத் தவிர 
 வேறேதும் இல்லை!!
                                             
இனி நமது தலையாய பணி
   இக் கண்ணியில் 
எல்லோரையும் இணைப்பது ஒன்றே! 


நன்றியுடன்,
தஞ்சை மாவட்டச் சங்கம். 
         

Wednesday, December 14, 2011

வாராது வந்த மாமணியை தோற்போமோ!

NFTE   BSNL
வாராது வந்த மாமணியை  தோற்போமோ! 

      நாளை  15 - 12 - 2011 அன்று அகில இந்திய அளவில் நடத்தப்படுகின்ற ஒரு நாள் வேலை நிறுத்தத்தைச் சந்திக்கப் போகிறோம்!   எப்படி சந்திக்கப் போகிறோம்?         அதிகாரிகள் முதல் அடிமட்ட ஊழியன் வரை அனைவரும் ஒன்றிணைந்து!   இந்த வாய்ப்புக்க்காகத்தானே  காத்திருந்தோம்.    வந்த வாய்ப்பை நழுவ விடலாமா!
     20 நாள் போராட்டத்தை நடத்தினோமே!   அதற்கு நாம் லீவு கொடுத்தோமா - இல்லை சம்பளத்தைத்தான் இழந்தோமா!  அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பல போராட்டங்களின் பேச்சு வார்த்தைகளில் முதல்  கோரிக்கையே பழி வாங்குதல் ( No Victimization ) கூடாது என்பதுதானே.   அந்தத் தன்மை இன்றைக்கு மாறி விட்டதே ஏன்?    வலுவுள்ள தொழிற்சங்கம் அங்கீகாரத்தில் இல்லை என்பது சொல்லாமலேயே உங்களுக்குப் புரியும்.    அரசாங்கத்தின் No Work, No Pay என்ற மிரட்டும் போக்குக்கு நாம் அடிபணியலாமா?  இது,  நமது வளர்ச்சிக்கான, துறை மேம்பாட்டுக்கான   போராட்டம் என்பதை உணர்வோம்!  எனவே, எந்த வகையிலும் நாம் இப் போராட்டத்திலிருந்து விடுபட்டு, விடுப்பில் செல்லக் கூடாது என்பதை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
     நாளைய   வேலை நிறுத்தம் நமக்கு ரூபாய் 1000,  1500, 2000   என்று ஒரு நாள் ஊதிய இழப்பைத் தரத்தான் செய்யும்.   இது இழப்புதான்  என்பதை நாம் ஒப்புக் கொள்கின்ற அதே நேரத்தில் இந்த இழப்பைத் தாங்கிக் கொள்ள முடியாத ஊழியர்களும், தாங்கிக்கொள்ள  முடிந்த ஊழியர்களும் நம்மிடையேதான்  இருக்கிறார்கள் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.
  78.2% கிராக்கிப்படி இணைப்பை இலாக்கா கைக்கொள்ளாததால் நமது தோழர்கள் குறைந்த பட்சம் மாதா மாதம் ரூபாய் இரண்டாயிரத்தை இழந்து வருகிறோம்.   எல்லாத் துறையையும் விட அதிக அளவிலான போனசைப் பெற்று வந்த நாம் கடந்த இரண்டு ஆண்டுகளாக அதையும் முற்றாக இழந்து விட்டோம்.   ஆண்டுக்கு 10 நாள் LTC  யில் லீவு சரண்டர் செய்து தொகையைப் பெற்றோமே - இன்றைக்கு அதையும் தானே இழந்து விட்டோம்.   மூன்று மாதத்திற்கு ஒரு முறை பெற்று வந்த MRS தொகைக்கும் இன்றைக்கு ஆப்பு அடித்தாகி விட்டது.  இப்படி நம்மால் போராடி பெறப்பட்டவைகள்  எல்லாம்  பறிபோய்விட்ட நிலை.   
     அதுபோல் அங்கீகரிக்கப்பட்ட சங்கம் பெற்றவை ஏதாவது பறிபோயிருக்கிறதா!  (பெற்றிருந்தால் தானே பறிபோவதற்கு).    
     ஆண்டுக்கு 10000 கோடிக்கு மேலே நிகர லாபம், கையிருப்பில் பல ஆண்டுகளாக வைத்திருந்த 40000 கோடி ரூபாய்  ஆகிய இரண்டையும் நமது இலாக்கா இழந்திருக்கிறதே இவை யாராலே?  திட்டமிட்ட அரசாங்கத்தின் தனியார் ஆதரவுக் கொள்கையால்தானே!  அது  மட்டுமல்ல, 2G, 3G, S பாண்டு என்று கோடி கோடி கொள்ளைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.   இப்படி இழந்ததையும் , இழக்கப் போவதையும் நாம் எண்ணிப் பார்த்தோமேயானால் ஒரு நாள் சம்பள இழப்பு என்பது பெரிதாகத் தோன்றாது.
   ஆக, இந்த படுபாதகங்களை  எதிர்கொள்ள எவ்வளவோ போராட்டங்களை நாம் நடத்தி வெற்றி கொள்ள முடியாத சூழலில், இன்றைக்கு  தெரிந்தோ, தெரியாமலோ இந்த ஒரு நாள் வேலைநிறுத்தம் வாராது வந்த மாமணியாக வந்திருக்கிறது.  இதில் நாம் கண்டிப்பாக வெற்றி பெற்றாக வேண்டும் என்பதை உணர்ந்து கொள்வோம்.
     இப் போராட்டம் வெற்றி பெற்றால், அந்த வெற்றி இதுவரை நாம் இழந்ததைப் பெறுவதோடு, BSNL ஐயும் மேம்படுத்தி, தொழிற்சங்கங்களிடையே ஒற்றுமையையும், தொழிலாளர்களிடையே  இணக்கத்தையும் ஏற்படுத்தும் பேராயுதமாக  மாறும்.  
 வாழ்த்துக்கள் தோழர்களே !
தோழமையுடன், 
எஸ். சிவசிதம்பரம்,
மாநில துணைத் தலைவர், 
பட்டுக்கோட்டை.     

Wednesday, November 30, 2011

முல்லை பெரியாறு அணை பிரச்சினையும் தீர்வும் என்ற இக் குறும்படம் பற்றிய கருத்துக்களை எழுத வேண்டுகிறேன்.    
எஸ். சிவசிதம்பரம், பட்டுக்கோட்டை. 

Thursday, November 17, 2011

தமிழ் மொழி 

தடுக்கி விழுந்தால் மட்டும்      அ...   ஆ....

சிரிக்கும் பொது மட்டும்             இ...   ஈ....

சூடு பட்டால் மட்டும்                   உ...   ஊ....

அதட்டும் பொது மட்டும்             எ...   ஏ....

ஐயத்தின் போது மட்டும்             ஐ ....

ஆச்சர்யத்தின் போது மட்டும்  ஒ ...   ஓ....

வக்கணையின் போது மட்டும் ஔ.....

என்று பேசி, 
     மற்ற நேரம் 
          வேற்று மொழி பேசும் 
                     தமிழர்களிடம்  மறக்காமல் சொல்!

உன் மொழி தமிழ் மொழி என்று !!!           

எஸ். சிவசிதம்பரம்.     

Thursday, October 27, 2011

நவம்பர் 8 ஆர்ப்பாட்டம்       

        AITUC , CITU , INTUC , HMS , BMS உள்ளிட்ட  11 மத்திய தொழிற்சங்கங்களுடன் நாமும்  இணைந்து நவம்பர் 8 அன்று  கிளைகள் உள்ளிட்ட அனைத்து மட்டங்களிலும்   ஆர்ப்பாட்டம்    நடத்தவிருக்கிறோம். 

     * பங்கு விற்பனையை தடுத்தி நிறுத்தி பொதுத்  
             துறையை காத்திடவும்,

     * ஏறி வரும் விலைவாசி உயர்வுக்கு எதிராகவும் 

     ஒன்றுபட்டு குரல் கொடுப்போம்.    நமது கண்டனத்தை மத்திய அரசுக்கு எழுச்சியோடு வெளிப்படுத்துவோம். 

      கிளைகள் தோறும் ஆர்ப்பாட்டத்தினை வெற்றிகரமாக்கிட வேண்டுகிறேன்.

தோழமையுடன்,
T . பன்னீர்செல்வம், மாவட்டச் செயலர், தஞ்சை.           

Tuesday, October 25, 2011

Wednesday, October 19, 2011

ஒப்பந்த ஊழியர்களுக்கு போனஸ், மற்றும் DA நிலுவை.

ஒப்பந்த ஊழியர்களுக்கு போனஸ், 
மற்றும் DA  நிலுவை.
    
     ஒப்பந்த ஊழியர்களுக்கு இவ்வாண்டு போனஸ்,  DA நிலுவைத் தொகை மற்றும்  சம்பளம் இம்மாதம் தாமதமாக கிடைத்துள்ளது.  இதைத் தீபாவளிக்குள் தோழர்களுக்கு கிடைத்திட  நமது தோழர்கள் எடுத்த முயற்சி, அதற்கு நிர்வாகம் அளித்த ஒத்துழைப்பு அளவிடற்கரியது.

     கேபிள் காண்ட்ராக்ட் தோழர்களுக்கு முன்னதாகவே சம்பளம், போனஸ் ரூபாய் 2000 மற்றும் DA நிலுவைத்தொகை ரூபாய் 828 ஆகியவை சேர்த்து 7228 பட்டுவாடா செய்யப்பட்டுவிட்டது.  

     ஹவுஸ்கீப்பிங் தோழர்களுக்கு புதிய காண்ட்ராக்டர், சம்பளம், DAநிலுவைத் தொகை மற்றும் போனசைப்   போடாமல் தாமதித்தார்.    உடன் வழங்கிட வேண்டி, நிர்வாகத்தை கடந்த 17 ம் தேதி நமது பிரின்ஸ் அவர்களும், பன்னீர்செல்வம் அவர்களும் வலியுறுத்தியதைத் தொடர்ந்து நேற்று அவர்கள் அனைவருக்கும் நிர்வாகமே பணப் பட்டுவாடா செய்தது.  

     போனசையும், நிலுவைத் தொகையையும், பேசிப் பெற்றுத் தந்த தலைவர்களுக்கும், தாமதத்தைப் பொறுக்காது நிர்வாகத்தையே பணப் பட்டுவாடாச்  செய்ய வைத்த மாவட்டச் சங்கத் தலைவர்களுக்கும்,  பொறுப்புணர்வோடு நடந்து கொண்ட நமது GM மற்றும் DGM ஆகியோருக்கும் நமது நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்கிக்கொள்கிறோம்.   

      இந்த நேரத்தில் அங்கீகரிக்கப்பட்ட சங்கம் என்ன செய்கிறது என்று நீங்கள் கேட்கக் கூடாது.   வழக்கம்போல அது அதன் கடமையை செய்து கொண்டுதான் இருக்கிறது. 
 நன்றியுடன், 
K . கிள்ளிவளவன், 
மாவட்டச் செயலர்,
TMTCLU , மன்னார்குடி.    

Sunday, September 25, 2011

ஆர்ப்பாட்டம்

     நமது அகில இந்திய சங்கம் வருகிற 27 - ௦09 - 11 அன்று அனைத்து மட்டங்களிலும் கருப்பு பேட்ஜ் அணிந்து  ஆர்ப்பாட்டம் செய்ய அறைகூவல் விடுத்துள்ளது. 

கோரிக்கைகள் 

     VRS கூடாது.

     MRS நிறுத்தப்படக்கூடாது.

     LTC க்கான லீவ் என்கேஷ்மென்ட் மீண்டும் வழங்கப்பட வேண்டும்.

     நிறுத்தப்பட்ட LTC மீண்டும் தொடர வேண்டும். 

      குறைந்தபட்ச போனஸ் வழங்கப்பட வேண்டும்.  

     கிளைச் செயலர்கள் ஆர்ப்பாட்டத்தினை வெற்றிகமாக்கிட அன்புடன் வேண்டுகிறேன். 

தோழமையுடன்,
T . பன்னீர்செல்வம்,
தஞ்சை மாவட்டச் செயலர்.                       
 25 - 09 - 11 .

Friday, September 23, 2011

அஞ்சலி!

      நமது அகில இந்திய துணைப் பொதுச் செயலாளர் தோழர் C.K.மதிவாணன் அவர்களின் தந்தையாரும் சுதந்திரப் போராட்ட தியாகியுமான திரு. C. H . கிருஷ்ணன் அவர்கள் 22 - 09 - 2011  அன்று இறந்து விட்டார்கள் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.  

      தமது அஞ்சலியினை தஞ்சை மாவட்டச் சங்கம் உரித்தாக்குகிறது.

Monday, September 19, 2011

மன்னார்குடி கிளை மாநாடு

      மன்னார்குடி  கிளை மாநாடு  நாளை 20 - 09 - 2011 மாலை 3  மணிக்கு நடைபெறவிருக்கிறது.      

மாநிலச் செயலர் பட்டாபி பங்கேற்கிறார்.     

     VRS குறித்த வளமையான செய்திகள்,

     துறை குறித்த புதிய தகவல்கள்,  

    கோவை மத்திய செயற்குழுவைப் பற்றிய செய்திகள்,    நமது எதிர்பார்ப்புகள், கவலைகள், பொறுப்புகள், கடமைகள் குறித்து மாநிலத் தலைமையுடன் முறையாக, தெளிவாக விவாதிக்க,  கருத்துரை  கேட்டிட திரளாய் வாருங்கள் தோழர்களே!

Sunday, September 18, 2011

செப்-19 தியாகிகள் தினம்

தியாகத்தை நினைவு கூர்வோம்.....
  ( S. சிவசிதம்பரம் )
யாகிகள் தினம்   -    செப்டம்பர் 19
     தபால் தந்தி, ரயில்வே, பாதுகாப்பு பிரிவு ஊழியர்கள் இணைந்து 1968, SEP  19  அன்று நடத்திய ஒரு நாள் வேலை நிறுத்தம்தான் தியாகிகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.  
வரலாற்றுச் சிறப்புமிக்க இவ் வேலை நிறுத்தத்தின் கோரிக்கைகள்: 
   * தேவைக்கேற்ற குறைந்தபட்ச ஊதியம்  அளித்திட வேண்டும்.
   * கிராக்கிப்படியை சம்பளத்துடன் இணைத்திட வேண்டும்.
   * DA FORMULA வினை மாற்றி அமைக்க வேண்டும்.
     இதை அறிவித்து வேலை நிறுத்தம் துவங்குவதற்கு முன்னமேயே தலைவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையை மத்திய அரசு துவக்கி விட்டது.   பாண்டிச்சேரியில் செப் 17 அன்று கைது துவங்கியது.    பொதுச் செயலர் D. ஞானையா செப் 18 காலையில் கைது செய்யப்பட்டார்.      ஞானையா
கைது செய்தி கேள்விப்பட்டவுடன் டெல்லியில் உள்ள அனைத்து P & T  அலுவலக  ஊழியர்கள் WALKED OUT  செய்தனர்.   டெல்லியில் உள்ள அனைத்து P & T நிர்வாக பகுதிகளில் 18 ம தேதி காலை 11  மணிக்கே வேலை நிறுத்தம் துவங்கி விட்டது. 
     டெல்லியில் மட்டும் 1650  P & T ஊழியர்களும் 350 மற்ற பிரிவு ஊழியர்களும் கைது ஆனார்கள். P & T தோழர்கள் 4000 பேர் உள்ளிட்ட   10000 பேர் கைது செய்யப்பட்டனர். 
     வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற 280000  பேரில் பாதி தோழர்கள் நாம்தான்.   140000 ஊழியர்கள்.   கைதானதிலும் 40 %  நாம்தான். 
     8700 பேர் சஸ்பென்ட் செய்யப்பட்டனர். இதில் P & T தோழர்கள் 3756 பேர்.   44000 தற்காலிக ஊழியர்களை Termination  செய்ய நோட்டிஸ் கொடுக்கப்பட்டது. 
   எந்த ஒரு ஜனநாயக நாட்டிலும் இது போன்ற கடுமையான பழிவாங்கல் நடவடிக்கை ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் நடைபெற்றதில்லை. 
     மேற்கு வங்கம், அஸ்ஸாம், கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான், பீகார் ஆந்திரா, டெல்லி ஆகிய இடங்களில் வேலைநிறுத்தம் தீவிரப்பட்டது. 
     மத்திய பிரதேசம், ஒரிசா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய பகுதிகளில் பரவலாக நடைபெற்றது. 
     கர்நாடகா, குஜராத், ஜம்மு காஷ்மீர் போன்ற மாநிலங்களில் மட்டும் அவ்வளவான பங்களிப்பு இல்லை. 
     பிகானிர், பதான்கோட், மரியாணி, பொங்கைகான் ஆகியவிடங்களில் காவல் துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு 9  ரயில்வே தொழிலாளிகள் பலியானார்கள்.   பல இடங்களில் கண்ணீர்ப் புகைக் குண்டுகளும் வீசப்பட்டன.       கூட்டு நடவடிக்கைக் குழு அரசிடம் பழிவாங்கலைக் கைவிடக்கோரியும் அசையாததால் விதிப் படி வேலை போராட்டத்தை துவங்கியது. 
     விதிப்படி வேலை ( work to rule ) போராட்டத்தை நாடுமுழுதும் பெரிய அளவில் செய்திட வேண்டி திகார் ஜெயிலிலிருந்து பொதுச் செயலாளர் ஞானையா கடிதம் எழுதினார்.  இக் கடிதம்   ஜெயிலிலிருந்து கடத்தப்பட்டு அனைத்துக் கிளைகளுக்கும் பரப்பப்பட்டது.   கடிதத்தில்,  
    அரசின் பாசிச போக்கிற்கு, பழிவாங்கலுக்கு எதிரான போராட்டத்தை மன உறுதியுடன் நாம் எடுத்துச் செல்வோம்.   அரசு ஊழியர்க்கெதிரான நடவடிக்கைகளை வாபஸ் பெரும் வரை விதிப்படி வேலை போராட்டத்தோடு மட்டுமல்லாது மற்ற மற்ற உபாயங்களையும் மன உறுதியோடு, போர்க்குணத்தோடு செயல்படுத்துங்கள் தோழர்களே. தபால் தந்தி சேவையின்  இயல்பு வாழ்க்கையை நிலைகுலைய வையுங்கள். நம்மை யாரும் அச்சுறுத்தி பணிய வைக்க முடியாது.  நமது வெற்றியை நோக்கி முன்னேற கடுமையான போராட்டத்திற்கு தயாராகுங்கள். 
     பாதிக்கப்பட்ட தோழர்களுக்கு நிவாரண நிதி திரட்டுங்கள்.  எல்லா வழிகளிலும் முயற்சி செய்து பெருமளவிலான  நிதி திரட்டுவதற்கு ஆயத்தமாகுங்கள்  தோழர்களே.  O T  WORK பார்க்கவிடாதீர்கள்.   உள்ளே, வெளியே மற்றும் வாய்ப்பு உள்ள இடங்களில் எல்லாம் ஆர்ப்பாட்டம் செய்யுங்கள் என்று 21 ம தேதி கடிதம் எழுதினார்.
     
     இந்த எழுச்சிமிக்க போராட்டம் தொழிற்சங்கங்களை எல்லாம் ஒன்று படுத்த உதவியது.  தொழிலாளர் சக்தியை அரசும் உணரத் துவங்கியது.
எதிர்காலப் போராட்டங்களுக்கு உந்து சக்தியாக விளங்கிய செப் 19 போராட்ட தியாகிகளுக்கு நமது வீர வணக்கத்தை உரித்தாக்குவோம்.

                                     நன்றி: D. GNANAIYA s  GLIMPSES OF A UNIQUE UNION

Thursday, September 8, 2011

என்ன கொடுமைடா சாமி !

     என்ன  கொடுமைடா  சாமி !

         நாம 30 வருஷத்துக்கு முன்னாடி போராடிப் பெற்ற போனசு போன வருஷம் நின்னு போச்சு. 

         நம்ம குப்தாவால கெடச்ச MRS , அதுவும் 8 வருஷமா வாங்கிக்கிட்டிருந்த MRS நிறுத்தியாச்சு.

         LTC போகும்போது நம்ம லீவ வித்து அத காசாக்கிப் பாத்தோமே, அட ஒரு வருஷம்தான் ஆச்சு. அதையும்   எல்லோரும் ஒரு தடவதானையா வாங்கினோம்! அதுக்கும் ஆப்பா!

         நம்ம காலத்துல, இது மாதிரி ஒரு அறிவிப்பு , சங்கத்தைக் கலக்காம வந்திருக்குமா!    வந்திருந்தா இப்படி வேடிக்கை பார்த்திருப்போமா!  பங்காளிதான் உட்ருப்பானா!

     என்ன கால கெரகம்டா!   அப்புறம் எதுக்குய்யா ரெக்ககனைஷன் சங்கம் வேணும்னு கொண்டு வர்றாங்க!    

     அவுங்கள கொற சொல்லக்கூடாது.  நம்மளத்தான் நொந்துக்கனும்!  NFTE ய விட சூப்பரா ஒரு சங்கம் கெடச்சா நல்லாருக்குமேன்னு நெனச்சு, இருக்குறத விட்டுட்டு பறக்கறதுக்கு ஆசைப்பட்டோம்.   சூப்பரு போய் டூப்பரு கெடச்சதுதான் மிச்சம்.    

     மூணு மாசத்துக்கு முந்தியே BSNLEU வோட JCM ல நம்ம CMD சொன்னாராம், செல வெட்டுக்கள்லாம் வரும்னு.   நம்மாளு மூணு மாசமா வாடிக்கையாளரை மகிழ்விக்கிற வேலையில ரொம்ப பிசியா இருந்ததுனால இதுல கவனம் செலுத்த முடியல போலருக்கு.  

     பாவம், அதுவும்தான் என்ன செய்யும்.   ஆனா ஒன்னு செஞ்சிருச்சு.  வழக்கம்போல ஆர்ப்பாட்ட சடங்க இன்னைக்கி நடத்திருச்சி. 

   என்ன? செய்யனும்னு நாம நெனைக்கிறோம்!   

     எல்லா சங்கத்தையும் அழைச்சுப் பேசணும், கூச்சநாச்சம் பாக்காம, கவுரவம் பாக்காம எல்லாரோட கருத்துக்களையும் கேக்கணும்.  குறிப்பா தொழிலாளி நெருக்கடி வந்தா ஒன்னாயிருவாங்கரதை நிர்வாகத்துக்கு ஒனர்த்தணும்.   

     ஆர்ப்பாட்டத்துல கூட JAC யை இணைக்க முடியாதவங்களா இதச் செய்யப் போறாங்கன்னு நீங்க நெனைக்கிறது எனக்குப் புரியுது.  

     ஆனாலும் வேறு வழியில்லை.    

       நின்னுபோச்சு, நிறுத்தியாச்சு, போச்சுங்கிற நெலைமை போயி,

     போயே! போச்சுங்கற  நெலமை  வரக்கூடாதுல்ல!  

தோழமையுடன்,
எஸ். சிவசிதம்பரம்,
மாநில துணைத் தலைவர்,
பட்டுக்கோட்டை. 

Thursday, September 1, 2011

இளமை ததும்பிய மாநாடு.

இளமை ததும்பிய இளைஞர் மாநாடு.
     காரைக்குடியிலே 20 - 08 - 2011 அன்று மிகச் சிறப்பாக இளைஞர் மாநாடு நடைபெற்றது. 
     மாநிலச் செயலர் பட்டாபியின் சிந்தனையை, காரைக்குடி மாவட்டத் தோழர்கள்,  மாவட்டச் செயலர் தோழர் மாரியின் தலைமையில்  செயலாக்கம் செய்து தந்தனர்.    இந்த காலத்தில், இந்தத் துறையில், இப்போதிருக்கும் நிலைமையில்,  இப்படி ஒரு இளைஞர் மாநாடா!!    வியக்கத்தான் வைத்தது. 
     இளைஞிகள் தேசியக் கொடியையும், சங்கக் கொடியையும் ஏற்றி வைக்கும்பொழுது, இளைய தோழர் ஒருவர் அற்புதமாக கோஷமிட்டார்.        நல்ல கவிதையும், பாரதி பாடலும் துவக்கத்தில் கிடைத்தது.  
     மாநிலச் செயலரின் துவக்க உரை கருத்தாழத்துடன் அமைந்திருந்தது. 
தமது உரையிலே .........
     பாரதி,  பகத்சிங், விவேகானந்தர் பிறந்த நாள் விழாக்களில் இளைஞர்களின் பங்கேற்பு அவசியம்.  அதோடு  தாரபாதா சிந்தனைகளை, தொழிற்சங்க வரலாற்றை  இளைஞர்கள் முறையாக உள்வாங்கிக் கொள்ளவேண்டும்.            
  இளைஞர்களைப்  புனரமைக்கும் "மறுசீரமைப்பை" கொண்டு வந்தவர் தோழர் குப்தா. அதேபோல் மஸ்தூர் - RTP க்கள் நிரந்தரம் என்ற விடுதலைப் போருக்கு ஆதாரமாக நின்றதோடு, பயனுறவும் வாழ்ந்தவர்  தோழர் ஜெகன்.  
     ஜெகனைத் தொடர்ந்து வந்த தலைவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாணியைக் கைக்கொண்டிருந்தனர்.   முத்தியாலு என்றால் கவித்துவ பாணி,  RK என்றால்  எழுச்சி, நியாய ஆவேசம், போர்க்குணம். அதேபோல் தமிழ்மணி என்றால் ஒரு ஓரத்திலிருந்து மையத்திற்கு ( Main Stream ) வர முடியும் என்று நிரூபித்தவர்.  
      தோழர் CKM புதிய பாய்ச்சலை உருவாக்கியவர், அரசியல்வாதிகளின் பிடரியைப் பிடித்து உலுக்கியவராக வந்திருக்கிறார்.  அதேபோல் தொழிற்சங்கத்தில் இலக்கியத் தமிழை இணைத்து வழங்குகிறார் தோழர் ஜெயராமன். தோழர் சேது அவர்களோ  தலைவன் என்ற பந்தா இல்லாமல், இயக்கத்தை சுமந்து செல்லக் கூடியவர். 
     தோழர்கள் ஜெயபால், KSK ஆகியோர் என்னைக் கை  பிடித்து அழைத்துச் சென்றவர்கள். தோழர் மாரி அப்துல் கலாமின் கோபத்திற்கு இணையான அன்பு கொண்டவர். 
     அதேபோல் கோவை SSG , சுப்பராயன் போன்று அறுந்து போகாத மரபுத் தொடர்ச்சியாக இன்னும் தோழர்கள் வந்து கொண்டேயிருக்கிறார்கள். 

     LPG காரணமாக இந்தியாவில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது.    வரப்போகும் 20 ஆண்டுகளில் BSNL அரசிடம் இருக்குமா!   தனியாரிடம் இருக்குமா!!  
     அடுத்த பத்து ஆண்டுகளில் பங்கு விற்பனை, VRS நடக்கும். 
     இந்த இரு சவால்களை நாம் சந்திக்க வேண்டியிருக்கிறது என்று கூறி அதற்கான காரண காரியங்களையும் கூறி துவக்க உரையினை நிறைவு செய்தார். 

.      குன்றக்குடி அடிகளார் அவர்களின் உரை தேச விடுதலைக்காக போராடிய தலைவர்களின் தியாகத்தை பாங்கை எடுத்துரைத்து பதிய வைத்தார். அனைவரையும் தமது  சொல்லாக்கத்தால் நெகிழ வைத்தார். 

     சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் அவர்கள் அரசியலில் நேர்மை பற்றியும், நமது சங்கத் தோழர்களிடமிருந்துதான் தாம் பலவற்றை கற்றுக் கொண்டதாகவும், எதிர்காலத்தில் நீங்கள் BSNL எதிர்கொள்ளும் சவால்களை வெற்றிகரமாகச் சந்திப்பீர்கள் என்றும்  பேசினார். 

     இளைய தோழர்கள் விவாதத்தில் சிறப்பாய் பங்கேற்றனர். 

     அகில இந்தியச் செயலர் தோழர் ஜெயராமன், தலைவர் ஜெயபால் ஆகியோர் இளைஞர்களுக்கு   வழிவிட்டு குறைந்த நேரமே உரையாற்றினாலும், கருத்தாழமிக்க செய்திகளைத் தந்தனர். 

      முன்னாள் தலைவர் காரைக்குடி வெங்கடேசன் அவர்களும் நிகழ்வில் பங்கெடுத்துக் கொண்டார்.  தோழர்   RK அவர்கள் தமது வாழ்த்துச் செய்தியை அனுப்பியிருந்தார். 

     250 பேர் பங்கேற்கும் மாநாடாக நடத்த திட்டமிட்டு,  600    பேருக்கு மேல் திரண்ட கூட்டத்தை திறம்பட சமாளித்தார்கள்.  காலை, மதியம் இரு வேளையும் சுவைமிகு உணவு  சின்னக் குறையுமின்றி பரிமாறப்பட்டது. 


      தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, ACS தோழர் நடராஜன் அவர்களின் நன்றி உரையோடு மாநாடு நிறைவு பெற்றது.  


     நேர்த்தியாக நடத்தித் தந்த காரைக்குடி தோழர்களை மீண்டும் வாழ்த்துகிறோம். 


எஸ். சிவசிதம்பரம்,
பட்டுக்கோட்டை.

Thursday, August 18, 2011

ஊழல் பொசுங்கட்டும்! லஞ்சம் நசுங்கட்டும்!


இதோ இங்கு புதிய விடியல் பிறக்கும் அறிகுறியாய் வெப்பம் தெரியத் தொடங்கிவிட்டது!

குமுறிய மக்களின் கூக்குரல் கேளாமல் தவறிய சட்டத்தை தந்திட நினைத்தனர்! குடிமக்களை குரங்குகள் என்று நினைத்தனரோ? அரும்மக்களின் அடிவயிறு பற்றி எரியவா அரியாசனத்தில் அமர்ந்தாய்?
மக்கள் வயிற்றில் பற்றவைக்க நினைத்த நெருப்பு, இதோ அவர்களின் சட்டத்தையே இப்போது பற்றி எரிக்கிறது! மக்கள் மடையர்களென்றெண்ணி மந்தமாய் மந்தகாசம் செய்தோர் மண்டையில் நறுக்கென உறைத்தது; கருத்தில்லாத ஒரு சட்டத்தை கருக்கியது.
ஊழ்வினை ஊர்ந்து வந்து ஊட்டியது போதும் என்று, ஊழலின் வினையை விதைத்த நொடியே கொடுக்க முய‌லும் அற்புதமான ஜன் லோக்பால் சட்டததை, தடுக்க நினைத்த தற்குறிகளுக்கு சவுக்கடியை தந்து விட்டது, மக்களின் ஒற்றுமை.
மூவண்ணம் உயரப் பற‌க்க; கை வண்ணம் பொய்யை கருக்க; தீ வண்ணம் கண்ணில் பதித்து, வந்தே மாதரம் உறைத்த வண்ணம் மக்கள் கொடி பிடித்தது கண்கொள்ளா காட்சி.
அன்று வெள்ளையனை விரட்டிய இரு சுதந்திரப் போராட்டத் தியாகிகள் ஐயா கல்யாணமும், ஐயா லஷ்மிகாந்பாரதியும் இன்று கொள்ளையனை விரட்ட‌ குரல் கொடுத்தது முடவரையும் எழுத்து நிற்கச் செய்யும்.
காலம் மாறினாலும் கோலம் மாறாதவராய் இருக்கும் ஊழல் பேய்களை, கோலம் மாறினாலும் கொள்கை மாறாத இளைஞர் கூட்டம் உலுக்கி எடுக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.
ஆன்று ஜன் லோக்பால் நிறுவப்படும், ஊழல் ஒழிக்கப் படும், லஞ்சம் அழிக்கப் படும், குறைகள் களையப்படும், பொய்மை பொசுக்கப் படும், நம் தேசியக் கொடி மட்டும் உயர்த்திப் பிடிக்கப்படும்!
வந்த்தே மாதரம்! வாழ்க பாரதம்!

Tuesday, August 16, 2011

தோழர் R K கைது.

லோக்பால் மசோதாவுக்கு ஆதரவான போராட்டத்தில் ஈடுபட்டதற்காக  
தோழர் R K கைது.    
     நமது முன்னாள் சம்மேளனச் செயலர் தோழர் R . K அவர்கள் அன்னா ஹசாரே அவர்களின் உண்ணாவிரதத்துக்கு ஆதரவாக போராடியதால் இன்று கைது செய்யப்பட்டார்.  ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவில் பிரதமரையும் இணைத்திட வேண்டும் என்று எழுச்சியோடு நடைபெற்ற  தர்மயுத்தத்தில் பங்கேற்றதற்காக இன்று கைது செய்யப்பட்டார். போராட்டம் இல்லாது யாராட்டமும் செல்லாது என்கின்ற கொள்கைவழி நின்று தீரமுடன் போராடிய தலைவர் R.K அவர்களை வாழ்த்திப் பாராட்டுகிறோம்.    அந்தத் திசைவழி செல்ல நாமும் பயணப்படுவோம்.

தோழமையுடன்,
தஞ்சை மாவட்டச் சங்கம்.                   

மாவட்டச் சங்கச் செய்திகள்:

மாவட்டச் சங்கச் செய்திகள்:
     - மன்னார்குடி மற்றும் கூத்தாநல்லூர் கிளைகளின் இணைந்த கூட்டம் மன்னையில் நடைபெற்றது. தோழர்கள் நடராஜன் ACS, பன்னீர்செல்வம் DS, கிள்ளிவளவன் DS, TMTCLU ஆகியோர் பங்கேற்ற கூட்டத்தில், கோவையில் நடைபெறவிருக்கும் அகில இந்திய சம்மேளனச் செயற்குழுவுக்கு ரூபாய் 5000 நன்கொடை பெறப்பட்டது.  நன்கொடை தந்த கிளைக்கு மாவட்டச் சங்கம் நன்றியையும் , வாழ்த்துகளையும்   தெரிவித்துக்கொள்கிறது .
     - அனைத்து  OUTDOOR  TM தோழர்களுக்கும் சிம் கார்டு 300 இலவச அழைப்புகளுடன் வழங்கப்படுகிறது.
     -ரெயின் கோட்டு   வாங்குவதற்காக ரூபாய் 500 இம்மாத சம்பளத்துடன் வழங்கப்படும்.
     - காரைக்குடியில் நடைபெறும் இளைஞர் மாநாட்டிற்கு தோழர்கள் திரளாய் பங்கேற்க வேண்டுகிறோம்.
     - மாவட்டம் முழுமையும் தோழர்கள் TOP UP கார்டுகளை விற்றுக் கொடுத்து நிர்வாகத்திற்கு ஒத்துழைக்க வேண்டுகிறோம்.
தோழமையுடன்,
T . பன்னீர்செல்வம்,
மாவட்டச் செயலர்,
தஞ்சை.      

Friday, August 12, 2011

சொசைட்டி செய்திகள்

சொசைட்டி செய்திகள்
     10 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் 3 சொசைட்டி உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு கீழ்க்கண்ட வாறு சொசைட்டி சார்பில் பரிசளிக்கப்பட விருக்கிறது.  OC, SC/ST என தனித்தனியாக பிரித்து பகிர்ந்தளிக்கப்படுகிறது.
   10 ஆம் வகுப்பு மாணவ மாணவியர்க்கு:
முதல் பரிசு :                          ரூ. 6000
இரண்டாம் பரிசு:                 ரூ. 3000
மூன்றாம் பரிசு:                    ரூ. 2500        
 + 2     ஆம் வகுப்பு மாணவ மாணவியர்க்கு:   
முதல் பரிசு :                         ரூ. 6000
இரண்டாம் பரிசு:                 ரூ. 4000
மூன்றாம் பரிசு:                    ரூ. 3000     

விண்ணப்பப் படிவம் DOWN LOAD செய்து கொள்ளவும் அல்லது என்னிடம் பெற்றுக் கொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட விண்ணப்பம் 31 - 08 - 2011 க்குள் சொசைட்டிக்கு வந்து சேர வேண்டும்.

அன்புடன்,

எஸ். சிவசிதம்பரம்,
RGB , பட்டுக்கோட்டை.      
                         

Monday, July 18, 2011

Sunday, July 17, 2011

                 இவ் ஆண்டு நம்மிடம் இணைந்த புதிய உறுப்பினர்கள் 


  1.  R. கீதா                               RM                    SDOT தஞ்சாவூர்.
  2.  J. அமர்நாத் ராவ்          RM                   CORP. ACCTS. தஞ்சாவூர்.
  3.  L. அறிவழகன்               TM                    EAST தஞ்சாவூர்.      
  4. S. சிங்கராயர்                  TM                    TD & PP தஞ்சாவூர்.
  5. S . சரவணகுமார்          TTA                    PRSU - தஞ்சாவூர்.                                    
  6. J. கீதா                                 TTA                   கரந்தை,  தஞ்சாவூர்.
  7. B. ரவிசங்கர்                   SS (O)               CCC - தஞ்சாவூர்.                                       
  8. B. கவிதா                          TOA (G)            DRAWAL SECTION    தஞ்சாவூர்.
  9. A. பாஸ்டின்
              அமலநாதன்          TOA (G)            CORP. ACCOUNTS - தஞ்சாவூர்.

10. S. வள்ளி                           RM                   பாபநாசம்.
11. L. இளஞ்செழியன்       TM                    பாபநாசம்.
12. R. வளர்மதி                     RM                  அய்யம்பேட்டை.      
13. G. ராமலிங்கம்              TM                  அய்யம்பேட்டை.

14. D. ஜெயலெட்சுமி        RM                   மாரியம்மன்கோவில்.
15. J. கணேசன்                    TTA                  மாரியம்மன்கோவில்.
16. M. முருகன்                    TM                   குருங்குளம்.

17. S . ராஜேந்திரன்           STS (O)             மன்னார்குடி.

18. V. ராஜேந்திரன்           TM                    பட்டுக்கோட்டை.
19. M.S. ராஜேந்திரன்       TM                   மதுக்கூர்.
20. U. கணேசன்                   TM                   மதுக்கூர்.
21. M. லெட்சுமணன்        TM                      திருத்துறைப்பூண்டி.
22. A. செல்லையன்          STS (O)               திருத்துறைப்பூண்டி.
23. D. வேலாயுதம்            SS (O)                  திருத்துறைப்பூண்டி.

24. R. முருகேசன்              TM                       தகட்டூர்.
25. E. முருகையன்            TM                       கரியாப்பட்டினம்.
26. G. குணாளன்                 TTA                      கரியாப்பட்டினம்.
27. V. பன்னீர்செல்வம்    TM                       செம்போடை.
28. B. செங்குட்டுவன்       TM                      செம்போடை.      


     NFTE தஞ்சை மாவட்டச் சங்கத்திற்கு மெருகூட்ட 
வருகை தரும் அன்புத் தோழர்களே!  தோழியர்களே !! 
உங்களை வணங்கி, வாழ்த்தி வரவேற்கிறோம்!
                                                  தோழமையுள்ள,
                             T. பன்னீர்செல்வம், மாவட்டச் செயலர், தஞ்சை.

Thursday, July 14, 2011

Wednesday, July 6, 2011

Monday, July 4, 2011

சேவைச் செய்திகள்

BSNL -ன் BROAD BAND சேவையில் 
உங்களுக்கு புதிதாக ஒரு சலுகை.
     நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள BB பிளானின்படி  செலுத்த வேண்டிய மாத வாடகைத் தொகையை  முன்னதாகவே செலுத்தினால் கீழ்க்கண்டவாறு பலனைப் பெறலாம். 
     1. 10 மாதத் தொகையை கட்டினால் 1 ஆண்டு கால  சேவை.
     2. 18 மாதத் தொகையை கட்டினால் 2 ஆண்டு கால  சேவை.
     3. 2 ஆண்டுக்கான தொகையை கட்டினால் 3 ஆண்டு கால  சேவை.  அதோடு, கூடுதலாக ரூபாய்  1450 மதிப்புள்ள மொபைல் சிம்மில் வேலை செய்யும் வீட்டு போன் ( Fixed Wirless Phone )  இலவசமாக வழங்கப்படுகிறது. 
          PLAN CHANGE க்கு இது ஒரு தடை அல்ல.  
     அதோடு லேண்ட் லைன் வைத்திருப்பவர்கள் உங்கள் மொபைல் எண்ணை உடன் வாடிக்கையாளர் சேவை மையத்தில் பதிவு செய்யுங்கள்.  இதன் மூலம் உங்களின் கட்டண தொகை அறிவிப்பும், கட்டிய பின் கட்டி விட்டீர்கள் என்ற அறிவிப்பும் SMS மூலம் அனுப்பி வைக்கப்படும்.

வாடிக்கையாளர் சேவை மையம், BSNL, பட்டுக்கோட்டை.         

சொசைட்டி செய்திகள்

சொசைட்டி செய்திகள்

(சாதாரணக் கடன் உச்சவரம்பு உயர்வு தொடர்பாக 
சொசைட்டி தலைவர் திரு. வீரராகவன் அவர்களின்
30 - 06 - 11 -ம் தேதிய சுற்றறிக்கையிலிருந்து.)    
   
     1. 01-07-2011 முதல் சாதாரணக் கடன்  தொகை ரூபாய் 3,50,000 ஆக உயர்த்தப்படுகிறது.          இக் கடன் 90 மாதத் தவணைகளில் பிடித்தம் செய்யப்படும். 

     2. பணிக் காலம்   குறைவாக உள்ள அங்கத்தினர்களுக்கு அதிகப் பட்சக் கடன் வழங்கிட இயலாது. 

     3. கடன் பெறுபவர்கள் மாதத் தவணை  தொகைகளில் நிலுவையின்றி பார்த்துக் கொள்ள வேண்டப்படுகிறார்கள். அனைவரும் எளிதாய் கடன் பெற இது உதவும். 

தோழமையுடன், 
எஸ். சிவசிதம்பரம்,
RGB, பட்டுக்கோட்டை.                       
 

Wednesday, June 15, 2011

சொசைட்டி செய்திகள்

 சொசைட்டி செய்திகள்

       கடந்த 14-06-11 அன்று RGB கூட்டம் சென்னை செங்குன்றத்தில் நடைபெற்றது. 

     சென்னை தொலைபேசியில் 55 (66) , தமிழ் மாநிலத்தில் 129 (143) என மொத்தம் 184 (209) RGB க்கள் பங்கேற்றனர். 

     அனைத்து RGB க்களையும் வெள்ளானுர் கிராமத்தில்  ஊழியர்களுக்காக வாங்கிப் போடப்பட்டிருந்த 95 ஏக்கர் நிலத்தை பார்வையிடச் செய்தனர்.   நிலப் பகுதி முழுமையும் நேர்த்தியாக முள் கம்பி வேலி போடப்பட்டு, முகப்பில் பாதுகாவல் அறையுடன் நுழைவாயில் வளைவும் அமைக்கப்பட்டுள்ளது. கண்காணிக்க பாதுகாவலரும் போட்டிருக்கிறார்கள்.    

     பின்னர் நடைபெற்ற பிரதிநிதித்துவ மகா சபைக் கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. 

     1 .  நிலம் முழுமையும் கண்டிப்பாக சொசைட்டி உறுப்பினர்களுக்கே வழங்கப்படும் என்று தலைவர் பலத்த கரவொலிக்கிடையே அறிவித்தார். 

     2 . இடைக்காலமாக சாதாரணக் கடன் ரூபாய் 25000 உயர்த்தி தரப்படுகிறது.  இது 15-06 -11 முதலே அமுலுக்கு வருகிறது.  1 அல்லது 2 மாதத்திற்கு முன்னர் கடன் பெற்றவர்களும் உடன் இக் கடனைப் பெறலாம். 
     3. ஜூலை மாதத்தில் சாதாரணக் கடன் 3 .25 லட்சத்திலிருந்து 4 லட்சமாக உயர்த்திட பெருமுயற்சி எடுக்கப்படும்.  அது கிடைக்கும் பட்சத்தில் குடும்ப நல நிதி தொகை ரூபாய் 400 -ரிலிருந்து 600 ஆக மாற்றப்படும்.     அத்துடன் இன்சூரன்ஸ் தொகை 2 லட்சம் என்பது 3 லட்சமாக உயர்த்தப்படுகிறது.     

     4 . வட்டி விகிதம் உயர்த்தப்பட மாட்டாது.   

அன்புடன்,
எஸ். சிவசிதம்பரம்,
RGB
பட்டுக்கோட்டை. 
                             

Tuesday, June 7, 2011

தோழர் ஜெகன் நினைவு நாள்

     ஜூன் - 7  

இன்று தோழர் ஜெகன் நினைவு நாள்.   
     அவரது உழைப்பை, 
                       செயல்பாட்டை, 
                                       தன்னலமில்லா செயல்திறனை 
உள்வாங்குவோம்.   
             அவரது தியாகம் நமக்கு, 
                        நமது துறைக்கு,  
                                    உழைப்போருக்கு ஆதர்சமாக 
                                                          இருந்து வழிகாட்டும். 
மாவட்டச் சங்கம்,
தஞ்சாவூர்.   

Sunday, May 29, 2011

Thursday, May 26, 2011

சென்னை கூட்டுறவு சொசைட்டி செய்திகள்


     1. Thrift  fund க்கு வட்டி 1 % உயர்த்தப்பட்டுள்ளது. 

     2. 23 - 5 - 2011 முதல் நகைக் கடன் பெறும் தொகை கிராமுக்கு 
ரூபாய் 1300 -ரிலிருந்து 1500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.  

எஸ். சிவசிதம்பரம், RGB
பட்டுக்கோட்டை.
                     

Friday, May 6, 2011

ஜெகன் இல்லம்

     தமிழ் மாநிலச் சங்கக் கட்டிட 
திறப்பு விழா!
     தமிழக தொலைபேசி ஊழியர்களின் கனவு இல்லம், நமது சொந்தக் கட்டிடம் வருகிற மே ஒன்பதாம் தேதி  திறக்கப்படவிருக்கிறது.   ஜெகன் இல்லாத இது மாதிரியான பெரிய நிகழ்வுகளை நம்மால் எண்ணிப் பார்க்க முடியவில்லை.  காலம் நம்மை தண்டித்துவிட்டது.  எப்பேர்ப்பட்ட நம்பிக்கை நட்சத்திரம்!   வருகிற  ஒன்பதாம் தேதி  சிலையாக தரிசிக்கப் போகிறோம்.   

     நமது இயக்கத்தின் இருபெரும் ஜாம்பவான்கள் குப்தாவும், ஞானையாவும் விழாவினைச் சிறப்பிக்கிறார்கள்.  இப் புதுமனைப் புகு விழாவிலே ஏராளமான தோழர்கள், தலைவர்கள் திரள்கிறார்கள்.  பொதுச் செயலர் சந்தேச்வர் சிங்கும், சகோதரச் சங்கத் தலைவர்களும் பங்கேற்கிறார்கள். 


     குடந்தையிலிருந்து  தலைவர் ஜெயபால் தலைமையில்  தொண்டால் பொழுதளந்த தூய தலைவனின்    சிலையை இன்று மாலை அழைத்து  வருகிறார்கள். 


     திரளாய் வாருங்கள் தோழர்களே!  நமது நம்பிக்கை நட்சத்திரமாம் NFTE யின் தமிழ் மாநிலச் சங்க இல்லத்தில் ஒன்றாய்ச் சந்தித்து மகிழ்வோம்!       


     நம்மால் நிதி கொடுக்கப்பட்டிருக்கலாம்!   உருவாக்கப் பணியில்  ஈடுபட்டிருக்க முடியுமா!  அந்தக் களப் பணியில் ஈடுபட்ட  போராளிகளை நேரில் சந்திப்போம்! வாயார வாழ்த்துவோம்!  வாழ்த்துப் பெறுவோம்.  


அன்புடன்,
எஸ். சிவசிதம்பரம்,
பட்டுக்கோட்டை.

Tuesday, May 3, 2011

புதிய CMD பதவியேற்பு


     திரு. R.K. உபாத்யாயா அவர்கள் 
நமது புதிய CMD ஆக 30-04-2011 முதல் பதவியேற்றிருக்கிறார்.   TCIL லிலிருந்து வந்திருக்கும் அவரை வாழ்த்தி வரவேற்கிறோம்.  நெருக்கடியான நேரத்தில் பணியேற்றிருக்கும் அவரால் BSNL தழைக்கும் என்று நம்புவோம்.   நேர்மையான, எந்தவொரு மாற்றத்திற்கும் அவருக்கு உறுதுணையாவோம்.


Sunday, May 1, 2011

126-வது மே தின வாழ்த்துக்கள்தங்கள் உதிரத்தை வேர்வையாகச் சிந்தி உழைத்து மானுட நாகரிகத்தின் வளர்ச்சிக்கு மாபெரும் பங்காற்றிய உழைப்பாளர்கள் 8 மணிநேரம் கொண்ட உழைப்பு நாளை தங்களுடைய உரிமையாக போராடிப் பெற்ற நாளே மே தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது!
எல்லோரும் நினைப்பதுபோல மே தினம் என்பது முதன் முதலில் பொதுவுடமை புரட்சி நடந்த சோ‌விய‌த் ரஷ்யாவிலோ அல்லது அதன் பிறகு பொதுவுடமை நாடான சீனாவிலோ பிறக்கவில்லை. மாறாக பொதுவுடமைத் தத்துவத்திற்கு பெரும் எதிர்ப்பு காட்டிவரும் அமெரிக்காவில்தான் முதன் முதலில் உழைப்பாளர்களின் அடிப்படை உரிமை நிலைநாட்டப்பட்டது.
இன்றிலிருந்து 125 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் அந்த உரிமை கோரிக்கை போராட்ட வடிவத்தைப் பெற்றது.
ஒவ்வொரு நாளும் 10 மணிநேரம் 12 மணிநேரம் 14 மணிநேரம் என்று உழைப்பாளர்களும் பணியாளர்களும் நேர வரையறையற்று வேலை வாங்கப்பட்டு வந்த அந்த நாளில் 8 மணிநேரம் மட்டுமே பணியாற்றுவோம் என்றும் வாரத்தில் ஒருநாள் விடுமுறை அளிக்க வேண்டும் என்றும கோரியும் தொழிலாளர்கள் முதன் முதலாக 1880ஆம் ஆண்டு குரல் கொடுத்தனர்.
அந்த உரிமை கோரிக்கை அடுத்த 4 ஆண்டுகளில் மிகப்பெரிய தொழிலாளர் ஒற்றுமைக்கு வழிவகுத்தது. 1884ஆம் ஆண்டு தொழிலாளர்கள் மற்றும் சிறு வணிகர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (ஃபெடரேஷன் ஆஃப் ஆர்கனைஸ்ட் டிரேடர்ஸ் அண்ட் லேபர் யூனியன்ஸ்) ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.
அடுத்த 2 ஆண்டுகளில் அதாவது 1886ஆம் ஆண்டு மே மாதம் முதல் தேதி முதல் அனைத்து தொழிலாளர்களும் நாள் ஒன்றிற்கு 8 மணிநேரம் மட்டுமே பணியாற்றுவோம் என்று கூறி அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தங்களுடைய கோரிக்கையை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகவும் அறிவித்தது.
ஆனால் தொழிலாளர்களின் கோரிக்கை ஏற்கப்படவில்லை.

1886ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிகாகோ நகரில் இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் தொழிலாளர்கள் கலந்துகொண்ட மே தின இயக்கம் தொடங்கியது.
தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை உடைக்க சிகாகோ கமர்ஷியல் கிளப் எனும் முதலாளிகள் சங்கம் 2 ஆயிரம் டாலர்கள் செலவு செய்து இயந்திரத் துப்பாக்கிகளைப் பெற்று இலினாய்ஸ் தேசியப் படையினருக்கு வழங்கி தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை ஒடுக்குமாறு கேட்டுக் கொண்டது.
உரிமைகள் நிலைநாட்ட உறுதிபூண்ட அந்தத் தொழிலாளர் இயக்கம் சிகாகோவில் உள்ள பலதரப்பட்ட தொழில்களில் ஈடுபட்டிருந்த மேலும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களைக் கவர்ந்தது.

ஆனால் தொழிலாளர்களின் இயக்கத்தை உடைத்தே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்ட சிகாகோ கமர்ஷியல் கிளப் உறுப்பினர்களின் தூண்டுதலின் காரணமாக இலினாய்ஸ் தேசியப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயமடைந்தனர்.
தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட இந்தக் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலைக் கண்டிக்க அனார்க்கிஸ்ட் எனும் தொழிலாளர் அமைப்பு மே 4ஆம் தேதி ஹே மார்க்கெட் ஸ்கொயர் எனுமிடத்தில் ஒரு கண்டனக் கூட்டத்தை ஏற்பாடு செய்தது.
அந்தக் கண்டனக் கூட்டத்தில் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் கூடினர். கூட்டம் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அங்கு வந்த 180 பேர் கொண்ட இலினாய்ஸ் தேசியப் படையினர் தொழிலாளர்களை கலைந்து செல்லுமாறு கட்டளையிட்டனர்.
மேடையில் பேசிக் கொண்டிருந்தவர்கள் கீழே இறங்கியபோது திடீரென்று தேசியப் படையினர் மீது குண்டு ஒன்று வீசப்பட்டது. அதில் ஒருவர் கொல்லப்பட்டார். 70 பேர் காயமடைந்தனர். கோபமுற்ற தேசியப் படையினர் தொழிலாளர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒரு தொழிலாளி கொல்லப்பட்டார். பலர் காயமுற்றனர்.
தேசியப் படையினர் மீது குண்டு வீசியது யார் என்று யாருக்கும் தெரியவில்லை. ஆனால் அதை காரணமாக்கி தொழிலாளர் இயக்கத்தின் மீது அடக்குமுறை ஏவிவிடப்பட்டது. இயக்கத்தை ஏற்பாடு செய்து வந்த தலைவர்களின் இல்லங்கள் சோதனை என்ற பெயரில் சிதைக்கப்பட்டது. நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு எந்தக் காரணமும் கூறப்படாமல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தொழிலாளர் இயக்கத்தை முன் நின்று நடத்திய அனார்க்கிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த 8 பேர் கொலை சதித் திட்டம் தீட்டியதாகக் கூறி வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் 8 பேரையும் குற்றவாளிகள் என்று எவ்வித ஆதாரமும் இல்லாமல் தீர்ப்பளித்தது. குற்றவாளிகள் அனைவரும் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட வேண்டும் என்றும் தண்டனை விதிக்கப்பட்டது.
1887ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி அனார்க்கிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த ஆல்பர்ட் பார்ஸன்ஸ், ஆகஸ்ட் ஸ்பைஸ், அடாஃல்ப் ஃபிஷ்ஷர், ஜார்ஜ் ஏங்கல் ஆகியோர் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டனர். லூயிஸ் லிங்க் என்பவர் சிறைச் சாலையில் தற்கொலை செய்து கொண்டார். மற்ற மூவரும் 1893ஆம் ஆண்டு மன்னிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து தொழிலாளர்களின் உரிமை கோரிக்கையும் இயக்கமும் வலிமை பெற்றது. 8 மணிநேரம் கொண்ட உழைக்கும் தினமும் வாரத்தில் ஒரு நாள் விடுமுறையும் கிடைத்தது. உலகெங்கிலும் உழைக்கும் மக்களின் உரிமைகள் நிறைவேற, மானுடத்தை உயர்த்த அரும்பாடுபட்ட அந்த உழைக்கும் மக்கள் கூட்டத்தை மனிதாபிமானத்தோடு பார்க்க உலகம் கற்றுக்கொண்டது.
அமெரிக்காவில் உருவான மே தினம் தொழிலாளர்களின் ஒற்றுமை தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
‘உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்’ என்பதே மே தினம் அளித்த உரிமை முழக்கமாகும்.

Tuesday, April 12, 2011

ஊழல் மலிந்த அரசியல் சூழலில் தூய்மையாய் பூத்த தும்பைப் பூ அன்னா ஹசாரே!!

     லஞ்சம், ஊழல், குற்றங்கள் எல்லாம் எங்குதான் இல்லை.  உலகம் முழுதும்  பரவியிருக்கிறது. என்ன! அது நம்ம நாட்டில் கொஞ்சம் ஓவர்!   அவ்வளவுதான்!! என்று நியாயப்படுத்தப்பட்ட சூழலில், 
     அப்போ, இதற்கு விடிவே கிடையாதா!  தடுப்பதற்கு மாற்று வழிதான் என்ன? என்ற கேள்வி நல்லவர்கள் மத்தியில்  பதைபதைத்து எழுந்தபோது, எங்கு தேடினும் அதற்கான பதிலோ, வழியோ தென்படவில்லையே ஏன்?

     லஞ்சம், ஊழலை எதிர்த்து பெரிதும் அக்கறை கொள்பவர்கள் இடதுசாரிகள்.   ஆனால் அவர்களிடம் ஒன்றுபடும் அக்கறை, சகோதர கட்சிகளை, சங்கங்களை சகித்துக் கொள்ளும் தன்மை  குறைந்து விட்டது. அங்கும், பதவி ஆசை பற்றிக்கொண்டு விட்டதோ!

     இருப்பினும், மாற்றத்தைக் கொண்டு வர உழைப்பவர்கள், என்கின்ற அடிப்படையில்  அவர்களின் கரத்தை வலுப்படுத்துவதோடு, நாமெல்லாம் உதவிகரமாகவும் இருப்போம்!     

     காந்தியவாதி திரு. அன்னா  ஹசாரே அவர்கள்  தனது பட்டினிப் போரை 4 தினங்கள் தொடர்ந்து நடத்தியிருக்கிறார்.   அந்த லோக்பால் மசோதாவின் நியாயத்தை    உணர்ந்து மத்திய அரசு இறங்கி வரவில்லை.    தேசம் முழுதும் ஆதரவு அலை எழுச்சியோடு எழுந்ததால் இன்றைக்கு அதை  ஒப்புக் கொண்டுள்ளது.  

     இதை அமுலுக்கு கொண்டு வருவது என்பதும் அவ்வளவு எளிதான காரியமல்ல.   நமது தொடர்ந்த ஆதரவும், அக்கறையுடனான பரப்புரையும்தான்  அம் மசோதாவை வெற்றி பெறச் செய்யும்.   இம் மசோதா இக் கால கட்டத்தில் மிக மிக அவசியம் என்பதை நாம் கண்டிப்பாக உணர்ந்தாக வேண்டும்!

      இதை ஆதரித்து பேசுகின்ற அதே நேரத்தில்,   நம் நாட்டில் இது சாத்தியமில்லை, இதை சட்டம் போட்டெல்லாம் மாற்ற முடியாது.  எவன் ஆட்சிக்கு வந்தாலும் இப்படித்தான் நடக்கும் என்கிற அபஸ்வரங்களும் ஒலிக்க ஆரம்பிக்கும், அவைகளை சட்டை செய்யாதீர்கள்.

     பொதுவாக, அதிகாரத்தில் இருப்பவர்கள் பலருக்கு இவ் விஷயங்களில் அக்கறை இருக்காது.  இவர்களும் வேதாந்தம்தான் பேசுவார்கள்.  இன்னும் சிலர், அக்கறை காட்டுவார்கள், ஆனால்  செயல்பட மாட்டார்கள்.  

     அப்போ யார்தான் இதில் அக்கறை காட்டுவார்கள்?   என்று யோசிப்பதை விட யாரால் இவ் விஷயத்தில் பொறுப்பாக இருந்து செயல்பட முடியும் என்று யோசித்தால், நம்மைப் போன்ற நடுத்தர - தொழிலாளி வர்க்கத்தால் நிச்சயம்  முடியும் என்பது புலனாகும்.    ஆனால், நடுத்தர வர்க்கம் சின்னஞ் சிறிய அல்லது சில்லறைத்தனமான ஊழல்களில் ஆட்படுகின்ற காரணத்தால், அவைகளின் போர்க்குணம்  மழுங்கடிக்கப்படுகிறது.

    எனவே, பெரும்பான்மையாகவும், தாங்கும் சக்தியும் உள்ள நம்மால்தான் மாற்றத்தை உருவாக்க முடியும் என்ற நிலைப்பாடு இருக்கின்றபோது, நாம் அவைகளிலிருந்து விடுபடுவது நல்லதுதானே!   இனி  விடுபடத் துவங்குவோம்!!

     நம்மால் முடியாதது யாராலும் முடியாது என்று நினைக்க வேண்டாம்.   அவர்களாலேயே முடியும்போது, நாம் ஏன் இந்த அற்பமான வாழ்க்கையை  வாழ்கிறோம்  என்ற   எண்ணத்தை   பலருக்கு இத் தன்மை தோற்றுவிக்கும்.  

     இந்த எண்ணத் தோன்றலே முதல் வெற்றி.     இனி, அன்னா ஹசாரேயின் புதிய லோக்பால் மசோதா பற்றி எங்கும்  விளக்கிப் பேசுவோம், பரப்புரைப்போம்.   பொது மக்கள் அறியும் வண்ணம் பல்வேறு வடிவங்களில் ஆதரவினைக் காட்டுவோம்.   
     வாழ்க! அன்னா ஹசாரே!!

தோழமையுடன்,
எஸ். சிவசிதம்பரம்,
பட்டுக்கோட்டை.

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR