தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Friday, August 23, 2013

வன்மையையாய் கண்டிக்கின்றோம்

மும்பையில் பெண் பத்திரிக்கை நிருபர் 5 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 1 குற்றவாளி கைது செய்யப்பட்டிருப்பதாக மும்பை காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.
மும்பையில் சக்தி மில் என்ற இடத்தில் வியாழக்கிழமை மாலை புகைப்படம் எடுக்கச் சென்ற பெண் நிருபர் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான சம்பவத்தில் தொடர்புடைய ஒரு குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மற்ற 4 பேரும் அடையாளம் காணப்பட்டு தேடும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் காவல்துறை ஆணையர் சத்யபால் சிங் தெரிவித்தார்.                    

                                             
K .நடராஜன் MA ,TTA /PSM 
ACS /NFTE -BSNL 
தஞ்சாவூர். 


ஓய்வு பெறும் வயதை உயர்த்தும் எண்ணம்


புதுடெல்லி : மத்திய அரசின் ரெயில்வே உள்பட பல துறைகளில் 50 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உள்ளது. நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கி வரும் சூழ்நிலையில் ஓய்வு பெறும் வயதை உயர்த்துவதன் மூலம் அவர்களுக்கு வழங்க வேண்டிய பணிக்கொடை உள்ளிட்ட பணப்பயன்கள் வழங்குவதை தள்ளிப்போட முடியும். எனவே, மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 62 ஆக உயர்த்த மத்திய அரசு ஆலோசித்து வருவதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. இதுதொடர்பாக டெல்லி மேல்சபையில் மத்திய பணியாளர் நலன், ஓய்வூதியம் மற்றும் பிரதமர் அலுவலக ராஜாங்க மந்திரி வி.நாராயணசாமி எழுத்துபூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில், ‘தற்போதைய சூழ்நிலையில் மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்தும் எண்ணம் அரசுக்கு இல்லை’ என்று தெரிவித்துள்ளார்.


K .நடராஜன் MA ,TTA /PSM 
ACS /NFTE -BSNL
தஞ்சாவூர். 

Thursday, August 22, 2013

குடந்தையில் உற்சாகமான விழா

21-8-2013 காலை 10.30 மணிக்கு  தோழர் தமிழ்மணி தலைமையில் ஒலிக்கதிர் பொன்விழா கலந்தாய்வு கூட்டம் தொடங்கியது.தோழர் கணேசன் குடந்தை மாவட்ட செயலர் வரவேற்று பேசினார்.கூட்டத்தில் பங்கேற்ற பொன்விழா கமிட்டி உறுப்பினர்கள் மற்றும்  தோழர்கள் பாண்டி காமராஜ், கடலூர் ஸ்ரீதரன், கோவை ராபர்ட் ,குன்னூர் ராமசாமி, சிவில் ஆறுமுகம், CGM அலுவலகம் மனோஜ், வேலூர் சென்னகேசவன், மதுரை லட்சம், விஜயரெங்கன், சேலம் பாலகுமாரன் ,வெங்கட், கஜேந்திரன் ,குடந்தை விஜய் ஆரோக்யராஜ்,மற்றும் தோழியர் லைலாபானு,திருநெல்வேலி   சங்கர் ,தஞ்சை நடராஜன் ஆகியோர்கள்  பொன்விழா சிறப்பாக நடத்திட  தங்களது கருத்தை பதிவு செய்தனர் . 50 வது பொன்விழாவை நவம்பர் மாதத்தில் கடலூரில்  சிறப்பாய் நடத்திட முடிவு செய்யப்பட்டது.இறுதியாக தோழர் R K ,குடந்தை ஜெயபால்
 மற்றும் மாநிலச்செயலர் பட்டாபி ஆகியோர் நிறைவு செய்து பேசினார். தோழர் R K ரூபாய் 1000/ கொடுத்து பொன்விழா வசூலை தொடக்கி வைத்தார் .
தோழர் T .P ஜோதி மாவட்ட தலைவர் தலைமையில் 
மாலை சங்கக்கொடி  ஏற்றத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது .சங்கஅலுவலகத்தை தோழர் R K திறந்து வைத்தார், தலைவர்கள் திருஉருவப்படம் திறந்து வைக்கப்பட்டது. மூத்த தோழர்கள் இசக்கி ,தனபால்,
குடந்தை மாலி, V S ,அதிகாரிகள்,மற்றும் தோழமை சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள் .DGM குத்து விளக்கு ஏற்றினார்.மாநிலச்செயலர் பட்டாபி சங்க பலகையை திறந்து வைத்தார் .TEPU சங்கம்,BSNLEU பரிசு பொருள் கொடுத்து கௌரவித்தனர். மொத்தத்தில் விழா ஏற்பாடும் ,நிகழ்வும் குடந்தையின் பெயரை மேன்மை படுத்தியது.    
குடந்தை மாவட்ட சங்கத்திற்கு நமது நெஞ்சுநிறை நன்றி.தோழர் கலியமூர்த்தி கலந்து கொண்டு சிறப்பித்தார்.
கூட்டத்தில் தோழர் பட்டாபி,RK ,தமிழ்மணி, ஜெயபால் உற்சாகமாக உரை நிகழ்த்தினர் . கலந்து கொண்டோர் அனைவரும் உற்சாகமுடன் சென்றனர். 
                          K .நடராஜன் MA ,TTA /PSM 
ACS /NFTE -BSNL 
தஞ்சாவூர். 

Tuesday, August 6, 2013

வினோதகன்மருத்துவமனைஅங்கீகரிக்கப்பட்டுள்ளது

              வினோதகன்மருத்துவமனைஅங்கீகரிக்கப்பட்டுள்ளது

நமது நிர்வாகத்திற்கும்  வினோதகன் மருத்துவமனைக்கும் 19-7-2013 அன்றுMOU கையெழுத்து  ஆகியுள்ளது .தோழர்கள்  சிகிச்சைக்கு பயன்படுத்திக்கொள்ளலாம் .அடுத்த ஓராண்டிற்கு இந்த ஒப்பந்தம் அமுலிலிருக்கும் .


தகவல்
தோழர் S .பிரின்ஸ்
மாவட்டத்தலைவர்                                                     
NFTE -BSNL , தஞ்சை.     

                                                                


                               

                                                                  K .நடராஜன்    MA ,TTA ,PSM ,
                                                                   ACS -NFTE -BSNL ,தஞ்சை . 
                                           

                                                                                                                                                                                  

                                         


                                                                                                

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR