தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Tuesday, January 26, 2016

TMTCLU -வின் எழுச்சிமிகு  செயற்குழு.

          நமது தஞ்சை மாவட்ட TMTCLU  செயற்குழு 25-01-2016 மாலை 5 மணிக்கு வெகு சிறப்பாக நடைபெற்றது.    100 க்கு மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர்.  செயற்குழுவை கூத்தாநல்லூர் மற்றும் மன்னார்குடி தோழர்கள் முன்னின்று நடத்தினர்.

          TMTCLU மற்றும் NFTE கிளைச் செயலர்கள் தங்களது பிரச்சினைகளை விரிவாக எடுத்துக் கூறினார்கள்.    மாவட்டச்  செயலர் தோழர். கலைச்செல்வன், நாடிமுத்து, R.K. ராஜேந்திரன், மாநிலத் துணைச் செயலர் தோழர். நடராஜன், கிள்ளி , T. பக்கிரிசாமி, சிவசிதம்பரம் ஆகியோர் நிலைமைகளை விரிவாக எடுத்துரைத்தார்கள்.      மாவட்ட நிர்வாகத்தை எதிர்த்து  கடுமையான போராட்டத்தை நடத்துவதுதான்   பிரச்சினை தீர்வுக்கு வழி என்பதை விளக்கமாக எடுத்துரைத்தார்கள்.

          இறுதியில் மாநிலச் செயலர் தோழர். R. செல்வம் நிறைவுப் பேருரையாற்றினார்.   மாநிலச் சங்கத்தின் மூலம் ஒப்பந்தத் தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளுக்காக நீதிமன்றம் போகப் போவதையும் அதற்கான காரணத்தையும் விளக்கமாகக் கூறினார்.   தீவிரமான போராட்டத்தை தஞ்சை மாவட்டம் நடத்திட வேண்டும்.   அதன் மூலம்தான் நாம் பல்வேறு மாற்றங்களை மாநிலம் முழுமைக்கும் கொண்டுவர இயலும் என்றார்.   உங்கள் போராட்டத்திற்கு மாநிலச் சங்கம் முழுமையாக  துணை நிற்கும் என்றும் கூறினார். 

          தஞ்சை மாவட்டச் சங்கத்தின் சார்பாக RTI  யில் விளக்கம்  கேட்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.          

Saturday, January 23, 2016

NFTE - BSNL
TMTCLU
மாவட்டச் செயற்குழு 

நாள்: 25-01-2016 திங்கள் கிழமை மாலை 3 மணி. 
இடம்: கூத்தாநல்லூர் தொலைபேசியகம் 

தலைமை: 

தோழர். C. நாடிமுத்து, மடட்டத் தலைவர்.
 தோழர். A. பன்னீர்செல்வம். மன்னை கோட்டச் செயலர். 

முன்னிலை:
தோழர்கள் காளிதாஸ் & ராஜசேகர்.


சிறப்புரை:
தோழர். R. செல்வம், TMTCLU   மாநிலச் செயலாளர்.
தோழர்.K. நடராஜன், மாநில துணை செயலாளர், NFTE    

கருத்துரை:
தோழர். S. பிரின்ஸ், NFTE மாவட்டத் தலைவர்.
தோழர். T. பன்னீர்செல்வம், NFTE மாவட்டச் செயலர். 
தோழர். S. சிவசங்கரன், மாநில அமைப்புச் செயலர்.
தோழர். தாமஸ் எடிசன், மாநில அமைப்பு செயலர்.
தோழர். K. கிள்ளிவளவன், TMTCLU முன்னாள் மாவட்டச் செயலர்.
தோழர். S. சிவசிதம்பரம், முன்னாள் மாநில துணைத் தலைவர்.

தொடரும் கோரிக்கைகள்: 
  • ஒப்பந்தக்காரர்களின் பில்கள் உரிய தேதிக்குள் பட்டுவாடா செய்யப்பட வேண்டும். அதன் மூலம் ஒப்பந்த ஊழியருக்கு குறித்த தேதியில் கூலி தரப்பட வேண்டும்.
  • அடையாள அட்டை உடனே வழங்கப்பட வேண்டும்.
  • EPF மற்றும் ESI நலத்திட்டங்களுக்காக  இலாக்கா வழங்கும் தொகை  ஊழியரின் கணக்கில் உரிய முறையில் செலுத்தப்படுகிறதா என மாவட்ட நிர்வாகங்கள்  கவனம் செலுத்த வேண்டும்.
  • E - PASSBOOK எனப்படும்  மின்னணு வைப்புநிதி சேமிப்பு புத்தகம் சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
  • ஒப்பந்தத்தில் உள்ள நிபந்தனைகள் TENDER CONDITIONS கட்டாயம் அமுல்படுத்தப்பட வேண்டும்.
 நமது பிரச்சினைகளுக்கு முடிவு கட்டிட,  கோரிக்கைகளில்
 முன்னேற்றம் காண போர்த்திட்டம் வகுத்திடுவோம். 
திரண்டு வாருங்கள் தோழர்களே!
                                             தோழமையுடன்,
C. நாடிமுத்து.   T. கலைச்செல்வன்.      R.K. ராஜேந்திரன்.
    தலைவர்                செயலர்                     பொருளாளர்.


Friday, January 22, 2016

நமது தமிழ் மாநில FORUM சார்பாக.புன்முறுவலுடன் சேவைசெய்வோம்" என்ற தாரக மந்திரத்தை முன் 
வைத்து...மாநிலம் தழுவிய சிறப்பு கருத்தரங்கம்
19-01-2016 செவ்வாய்க்கிழமை அன்று 
புதுவை கம்பன் கலையரங்கத்தில்
காலை 10.00 மணிக்கு மிகச்சிறப்பாகதுவங்கியது    .TMTCLU தஞ்சை மாவட்ட அவசர செயற்குழு 25-1-2016 திங்கள் கிழமை மாலை 4.00 மணிக்கு கூத்தாநல்லூர் தொலைபேசி நிலையத்தில் நடைபெறும் ,,தோழர்கள் கலந்து கொண்டு கருத்தினை பதிவு செய்ய வேண்டுகிறோம் ,,,

TMTCLU மாநில செயலர் தோழர் விழுப்புரம் செல்வம் பங்கேற்பு 
Image result for conference


தகவல் தோழர் D .கலைச்செல்வன் மாவட்ட செயலர் TMTCLU தஞ்சை 


Monday, January 18, 2016

                             
7வது உறுப்பினர் சரிபார்ப்பு 

தற்காலிக கால அட்டவணை 
கலந்து கொள்ளும் சங்கங்களுக்கு அழைப்பு விடுத்தல்           14/01/2016

தேர்தல் தேதி அறிவிப்பு                                                                    18/02/2016

விண்ணப்பங்களை விலக்கிக்கொள்ள கடைசி தேதி                 22/02/2016

தேர்தல் நடைபெறும் நாள்                                                                26/04/2016

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள்                                        28/04/2016

முடிவு அறிவிக்கும் நாள்                                                                   28/04/2016

அங்கீகார காலம் 3 ஆண்டுகள்                                            
29/04/2016 - 28/04/2019

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR