தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Saturday, March 30, 2019

26/03/2019 அன்று 
 அறந்தாங்கியில் நடைபெற்ற 
NFTE திருச்சி மாவட்ட சங்கத்தின்
7வது மாவட்ட மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட 
பொறுப்பாளர்களை தஞ்சை மாவட்டச் சங்கம் 
வாழ்த்தி மகிழ்கிறது.

தலைவராக தோழர். ஆறுமுகம்.
செயலராக தோழர். பழனியப்பன்.
பொருளாராக தோழர். ஆண்டியப்பன் 
ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அன்புடன்,
கே. கிள்ளிவளவன்,
தஞ்சை மாவட்டச் செயலர்.



DA 2.6 % உயர்வு 
01-04-2019 முதல் 
மொத்த IDA 141.4 %


ஒப்பந்த ஊழியர் VDA உயர்வு
----------------------------
01/04/2019 முதல்
ஒப்பந்த ஊழியர்களுக்கான
VDA உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
 ----------------------------------------------------------------
UNSKILLED ஒப்பந்த ஊழியர்களுக்கு
---------------------------------------------------------------------
பிரிவு நகரத்தில்
நாளொன்றுக்கு ரூ.558/= என்றிருந்த நாள்கூலி 
ரூ.584/= என
நாளொன்றுக்கு ரூ.26/=  உயர்ந்துள்ளது.
---------------------------------------------------------------------
பிரிவில்...
நாளொன்றுக்கு ரூ.466/= என்றிருந்த நாள்கூலி
ரூ.487/= என
நாளொன்றுக்கு ரூ.21/= உயர்ந்துள்ளது.
 ---------------------------------------------------------------------
பிரிவில்...
நாளொன்றுக்கு ரூ.373/= என்றிருந்த நாள்கூலி
ரூ.390/= என
நாளொன்றுக்கு ரூ.17/= உயர்ந்துள்ளது.
 ---------------------------------------------------------------------
கடந்த காலங்களில் மிகவும் சொற்பமான அளவில் உயர்ந்த 
VDA இம்முறை சற்றுக் கூடுதலாக உயர்ந்துள்ளது
ஒப்பந்த ஊழியர்களுக்கு ஆறுதலை அளிக்கின்றது.

Monday, March 25, 2019

Sunday, March 24, 2019

இம் மாதம் பணி ஓய்வு பெறும் தோழர்கள் 
*******************************************************************
தோழர். N. மேகநாதன் TT தஞ்சை.
NFTE மாநில துணைத் தலைவர்.

தோழர். N. மோகன் JE தஞ்சை 

தோழர். S. ஜெயபால் TT தஞ்சை 

தோழர்களின் பணி நிறைவுக் காலம் 
சிறப்பாகவும், செழிப்பாகவும் அமைந்திட 
மாவட்டச் சங்கம் மனதார வாழ்த்தி மகிழ்கிறது.

அன்புடன்,
கே. கிள்ளிவளவன்,
தஞ்சை மாவட்டச் செயலர்.

Friday, March 22, 2019

மார்ச் 5, டெல்லி கன்வென்ஷன்
பொதுத் தேர்தலில் நமது கோரிக்கை:
டெல்லி கான்ஸ்டிடூஷனல் கிளப் அரங்கில் 10 மத்திய தொழிற்சங்கத் தலைவர்களும் தோழர்களும் ஜனவரி 8, 9 பொது வேலைநிறுத்தத்திற்குப் பிறகு மீண்டும் 2019 மார்ச் 5 மாநாட்டில் கூடினர். நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலில் நமது கடமையை நினைவூட்டியது மட்டுமல்ல, 17வது மக்களவையை அமைப்பதற்காகப் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் பரிசீலனைக்காகத் தொழிலாளர்களின் கோரிக்கைப் பட்டியலை இந்தியத் தொழிலாளி வர்க்கத்தின் உரிமை சாசனமாகவும் முன் வைத்துள்ளனர். இது, மத்திய தொழிற்சங்கங்களும் சுதந்திரச் சம்மேளனங்களும் விடுத்துள்ள அறைகூவல். 
மாநாட்டின் முதல் நிகழ்வாக புல்வாமாவில் தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிர்த்தியாகம் செய்த CRPF படைவீரர்களுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். ஏஐடியுசி, சிஐடியு முதலிய10 மத்திய தொழிற்சங்கங்களின் தலைவர்கள் கூட்டுத் தலைமை ஏற்றனர். ஏஐடியுசி-யின் பொதுச் செயலாளர் தோழர் அமர்ஜித் கௌர், ’மாநாட்டின் தீர்மான நகல், தொழிலாளர்களின் கோரிக்கையை உதாசீனம் செய்த மோடி அரசை வீழ்த்தும் ஆயுதமாகட்டும் –தேசத்தைக் காக்கட்டும்’ என்று கர்ஜித்தார். 
சிஐடியு-வின் தோழர் தபன்சென் முதலான தலைவர்கள் உரைகளில் நகல் தீர்மானத்தின் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். அவர்கள் இந்த அரசின் தோல்விகளைப் பட்டியலிட்டனர். பொய்யான வாக்குறுதிகளில் மீண்டும் ஏமாறாது இருக்க எச்சரித்த அவர்கள், பாஜக அரசு தனது முந்தைய வாக்குறுதிகளை நிறைவேற்றாததை மூடி மறைக்க – நமது கவனத்தைத் திசை திருப்ப – பொய்யான தேசபக்தி உணர்வுகளை விசிறிவிட்டு, போர்ப் பதற்றம் என நாடகமாடுவதைத் தோலுரித்தனர். இதற்கு மாறாக, தொழிலாளர்களின் , உழைக்கும் பாட்டாளி மக்களின் கோரிக்கைகளைப் பொதுத் தேர்தலுக்கு முன் அரசியல் கட்சிகளின் கவனத்திற்குக் கொண்டு வரவே இந்த கன்வென்ஷன் கூட்டப்பட்டிருக்கிறது என்பதை விளக்கினர். 
வீரம் செறிந்த ஜனவரி 8, 9 பொது வேலைநிறுத்தத்திற்குப் பிறகு பல இடங்களில் பகுதிவாரி கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. எனவே முந்தைய 12 கோரிக்கைகளை விரிவுபடுத்தி ’இந்தியாவிற்கான தொழிலாளர்களின் சாசனம்’ 43 கோரிக்கைகளை முன் வைத்துள்ளது. தலைவர்கள் கையெழுத்திட்டு வெளியிட்ட நான்கு பக்க அறிக்கையில் கோரிக்கைகள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. சாசனத்தில் இடம் பெற்றுள்ள முக்கிய கோரிக்கைகள் வருமாறு:

  1. இந்தியத் தொழிலாளர் மாநாட்டின் (15-வது ILC) சிபார்சின்படி தேசிய குறைந்த பட்ச ஊதியத்தை நிர்ணம் செய். உச்சநீதிமன்றத்தின் (ரெப்டகாஸ் & பிரட்) தீர்ப்பும் இதை வலியுறுத்தியுள்ளது.
  2. தொடர்ந்த பணி இருக்கும் இடங்களில் ஒப்பந்த ஊழியர் முறையைக் கைவிடு. அதுவரை உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி அத்தகைய ஊழியர்களுக்குச் சமவேலைக்குச் சம ஊதியம் வழங்கு
  3. சுவாமிநாதன் கமிஷன் சிபார்சின்படி விவசாய விளைபொருள்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையை வழங்கு. பொதுக் கொள்முதல் முறையை வலிமையாக்கு
  4. விவசாயிகளுக்கு கடன்தள்ளுபடி மற்றும் சிறு, குறு விவசாயிகளுக்கு விவசாயக் கடன் வழங்கு
  5. விவசாயத் தொழிலாளர்கள் உள்பட அனைத்து தொழிலாளர்களுக்கும் பணி வரன்முறை, பணிநிலைமை மேம்பாடு, ஒருங்கிணைந்த சமூகப் பாதுகாப்புச் சட்டங்களை உருவாக்கு
  6. வேலைஇல்லா திண்டாட்டத்தைக் கட்டுப்படுத்து, போர்க்கால அடிப்படையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கு
  7. அனைவருக்கும், அரசு திட்டம் சார்ந்த அனைத்துவகை ஓய்வூதியத் திட்டங்களிலும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ6000/= உறுதிசெய்
  8. காலவரம்புடைய ஒப்பந்த பணி முறையை (ஃபிக்சட் டெர்ம் எம்ப்ளாய்மெண்ட்) உடனடியாகக் கைவிடு
  9. பொதுத்துறை நிறுவனங்களில் பங்குவிற்பனை, மற்றும் ஏனைய வழிகளில் விற்பனை செய்வதை நிறுத்து
  10. பொதுநலன் கருதி (BSNL முதலிய) பொதுத்துறை நிறுவனங்களின் மறுகட்டமைப்புத் திட்டங்களுக்கு முக்கியத்துவமளித்து விரைந்து நிறைவேற்று
  11. புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்! பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் அமலுக்கு கொண்டு வருக !
  12. தொழிலாளர் விரோதமாக – முதலாளிகளுக்கு ஆதரவாக — தொழிலாளர் நலச் சட்டங்களில் திருத்தங்களைக் கைவிடு! நடைமுறையில் உள்ள தொழிலாளர் நலச் சட்டங்களைக் கறாராக அமல்படுத்து!
  13. பெண் பணியாளர்களுக்கு 26 கால பேறுகால ஊதியத்துடன் கூடிய விடுமுறைச் சலுகையை வழங்கு! குழந்தைக் காப்பக வசதியை ஏற்படுத்து! திருத்தப்பட்ட மகப்பேறு நலச்சட்டத்தினை அமல்படுத்துவதற்காக முதலாளிகளுக்கு அரசு அமல்படுத்த உத்தேசித்துள்ள ஊக்கத் தொகை திட்டத்தைக் கைவிடு
  14. பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல் சம்பவங்களில் கடும் நடவடிக்கை எடு. பணியிடங்களில் பெண்பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்
  15. பட்டியலின மக்களின் அரசியல் சாசனம் உறுதியளித்த இடஒதுக்கீட்டை / முந்தைய ஆண்டுகளின் நிரப்பப்படாத காலிப்பணி இடங்களை நிரப்ப முன்னுரிமை வழங்கு! பட்டியலின மக்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை கறாராக அமல்படுத்து
  16. மனித மாண்பிற்கு எதிரான மனிதக் கழிவை மனிதனே சுத்தப்படுத்தும் –சுமக்கும்– கேவலத்தை உடனடியாக ஒழித்திடுக! மலக்குழியில், சாக்கடை கழிவுநீர் தொட்டிகளில் உள் இறங்கி சுத்தப்படுத்தும்போது உயிரிழந்த சுகாதாரப் பணியாளர் குடும்பத்திற்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்திய உரிய இழப்பீடு வழங்கு
  17. சாலையோர வியாபாரிகளின் நலனை உறுதி செய்! மாநிலங்களில் அதற்குத் தேவையான சட்டங்களை நிறைவேற்றச் செய்
  18. சாதிக் கலப்பு மற்றும் மதக் கலப்பு (சாதி, மத மறுப்பு) திருமணத் தம்பதியருக்குப் பாதுகாப்பு வழங்கு
  19. தேசிய மொத்த வருவாயில் 10 சதவீதத்தை கல்விக்கு ஒதுக்கீடு செய்
  20. சுகாதாரத் திட்டங்களுக்கான ஒதுக்கீட்டை மொத்த வருவாயில் 5 சதமாக உயர்த்து
    முதலிய 43 கோரிக்கைகளை மாநாடு பட்டியலிட்டுள்ளது.
    நமது நியாயமான இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற, அதற்கேற்றதொரு அரசை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். இன்றைய மத்திய அரசு நமது கோரிக்கைகளை நிராகரித்தது என்பதற்குச் சாட்சியம் தேவையில்லை. தொலைத்தொடர்பு சரித்திரத்தில் இல்லாத ஒரு காட்சியாக மின்சார கட்டணம் கட்டவில்லை என்று தொலைபேசி நிலையங்கள், தொலைத்தொடர்பு டவர்களின் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்ட அவலத்தைக் கண்டோம். அரைகுறையாக ஊதியம் வழங்கப்பட்டோம் – நம்மிடம் நமது ஊதியத்தில் பிடித்த தொகை வங்கிகளுக்கு, கூட்டுறவுச் சங்கக் கடன் தவணைகளுக்காக, இன்ஷுரன்ஸ் பிரீமியம் கட்டாது தாமதப்படுத்தினர். இந்த மாதம் அந்த அரைகுறை சம்பளமும் வருமா என ஏங்க வைத்தனர். நாம் கோயிலாக மதித்துப் பணியாற்றும் நம் துறையை மூடிவிடுவார்களோ என்ற வதந்தியை மக்கள் மத்தியில் பரவக் காரணமாய் இருந்து நமது நிறுவனத்தின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையைச் சிதைத்தார்கள்.
    இது நமது முறை. உரியவர்களுக்கு உரிய முறையில் பாடம் புகட்டுவோம்! எல்லோரையும் எல்லா காலமும் ஏமாற்ற முடியாது! டெல்லி சாசனம் ஆள விரும்புவோர்க்கு ஒரு எச்சரிக்கை! 
    நாட்டின் செல்வத்தை உற்பத்தி செய்பவர்கள் உழைப்பாளிகள். ஒரு வர்க்கமாகத் திரண்டு நின்று வருங்கால சமூக அரசியல் மாற்றத்தை முன்னறிவிப்பவர்கள். திக்குத்திசை தெரியாமல் நாடு நாற்சந்தியில் நிற்கும்போது ஒடுக்கப்பட்டவர்களுக்கும் வாழ்வு மறுக்கப்பட்டவர்களுக்கும் முன்னேற்றத்திற்கான சரியான பாதையைக் காட்டுவது, பாட்டாளிவர்க்கம். சரித்திரத்தின் வழிநெடுக எந்தப் பக்கத்தைத் திருப்பினாலும், எல்லா பக்கங்களிலும் இந்த உண்மை நிரூபிக்கப்பட்டே வந்திருக்கிறது. நாம் மீண்டும் நிரூபிப்போம்!

Thursday, March 21, 2019

பெரிதும் வருந்துகிறோம்!

மறைந்தார் 
தோழர். முருகையா 
BSNLEU மாநில உதவிச் செயலர் 

TNTCWU மாநிலத் தலைவரும், BSNLCCWF ன் அகில இந்திய துணைத் தலைவருமான தோழர் முருகையா அவர்கள் காலமானார் என்ற செய்தி கேட்டு பெரிதும் வருந்துகிறோம்!
அவரது இழப்பால் வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும், 
தோழர்களுக்கும் தஞ்சை மாவட்டச் சங்கம் 
தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
தோழமையுடன்,
கே. கிள்ளிவளவன்,
மாவட்டச் செயலர்.


Friday, March 8, 2019

அதிகார வர்க்கத்தால் சூறையாடப்பட்ட 

வங்கிப் பணம் ரூ.70,000 கோடி

========================================
பொதுத் துறை வங்கிகளில் அதிகாரம் செலுத்தும் அதிகார வர்க்கம் ரூ. 70,000 கோடி மக்கள் பணத்தை ஏப்பம் விட்டிருக்கிறது.
மூன்று ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளில் நிகழ்ந்த மோசடியால் ஏற்பட்ட நஷ்டம் 70 ஆயிரம் கோடி ரூபாய். இது தவிர, விஜய் மல்லையா போன்றவர்கள் வங்கிகளில் கடனைப் பெற்று அதை திரும்ப செலுத்தாமல் நாட்டை விட்டு ஓடியதால் வங்கிகளில் அதிகரித்த வாராக்கடன் ரூ. 10.25 லட்சம் கோடி.
கடந்த நிதி ஆண்டில் மட்டும் ரூ. 30 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடிகள் வங்கிகளில் அரங்கேறியுள்ளன. மோசடிகளின் எண்ணிக்கை மட்டுமே 6,500. இதில் நீரவ் மோடி, மெகுல் சோக்சி கூட்டணி நிகழ்த்திய மோசடி ரூ. 12 ஆயிரம் கோடி.
பெரிய தொகை சம்பந்தப்பட்ட மோசடிகள் மட்டுமே வெளிச்சத்துக்கு வந்தன. வங்கிகளின் ஸ்திரத் தன்மையை சீர்குலையச் செய்யும் மோசடிகளைக் கட்டுப்படுத்தா விட்டால் வங்கிகளின் எதிர்காலம் கேள்விக் குறிதான் என எச்சரிக்கிறது ஊழல் கண்காணிப்பு ஆணையம் (சிவிசி). பொதுவாக ஊழலை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் சிவிசி இம்முறை வங்கிகளில் நிகழ்ந்த 100 மோசடி சம்பவங்களை ஆராய்ந்தது.
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சிவிசி அறிக்கை பல அதிர்ச்சிகரமான நிகழ்வுகளை படம் பிடித்துக் காட்டியுள்ளது. வங்கிகளில் இப்படியெல்லாமா மோசடிகள் நிகழ்ந்துள்ளன என்று வியப்பி லாழ்த்தும் வகையிலான மோசடிகளை பதிவு செய்துள்ளது டி.எம். பாசின் தலைமையிலான சிவிசி.
ஜூவல்லரி, உற்பத்தி, வேளாண்துறை, ஊடகம், விமான போக்குவரத்து, சேவைத் துறை, 13 துறைகளில் மோசடி எப்படி நிகழ்ந்துள்ளது என்பதை ஆராய்ந்துள்ளது. எந்தெந்த வங்கிக் கணக்குகளில் மோசடி நிகழ்ந்துள்ளன, கடன் பெற்று மோசடி செய்த நபர், அவர் சார்ந்த நிறுவனம் உள்ளிட்ட விவரங்களை பாசின் குழு வெளியிட்டுள்ளது.
அதேசமயம் இத்தகைய மோசடிகளை நிகழ்த்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், இதில் வங்கி அதிகாரிகளின் பங்கு இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைத்துள்ளது.
 ஜூவல்லரி துறையினர் வங்கிகளை எவ்விதம் ஏமாற்றுவர் என்பதற்கு நீரவ் மோடி, மெகுல் சோக்சி உதாரணம் என்றாலும், அது தவிர இத்துறையினர் இறக்குமதி செய்யப்படும் வைரங்களின் மதிப்பை மிக அதிகமாக காண்பித்து கடன் பெற்றுள்ளனர்.
ஏற்றுமதி ஆர்டர்களைக் காண்பித்து கடன் பெற்றுள்ளனர். ஆனால் ஏற்றுமதி செய்யும்போது உண்மையில் அவர்கள் கடன் பெற்ற அளவுக்குக் கூட ஏற்றுமதி இருக்காது. இது தவிர, ஒரு வங்கியில் கடன் பெறுவது பிறகு வைர ஏற்றுமதி செய்வோரிடம் மற்றொரு போலி ரசீது பெற்று அதற்கு கடன் பெறுவது என நூதன முறைகளைக் கையாண்டு ஏமாற்றி யுள்ளனர். நிறுவனங்களும் ஆவணங்களில் பெருமளவு தில்லுமுல்லு செய்து வங்கிகளை ஏமாற்றியுள்ளன.
இதேபோல உற்பத்தித் துறையைச் சேர்ந்த ஒரு நிறுவனம் தனது ஆண்டு நிதி அறிக்கையை தவறாக தயாரித்துள்ளது. ரூ. 23.74 கோடி லாபம் ஈட்டியது போன்று அறிக்கை தயாரித்து கடன் பெற்றுள்ளது. பின்னர் அந்நிறுவனம் உண்மையான நிதி அறிக்கையை தாக்கல் செய்தபோது நிறுவனத்தின் லாபம் வெறும் ரூ. 34 லட்சம் மட்டுமே என்பது தெரியவந்துள்ளது. அடுத்த நிதி ஆண்டில் இந்நிறுவனம் நஷ்டத்தை சந்தித்துள்ளது.
ஆனால் முந்தைய ஆண்டு தாக்கல் செய்த நிதி அறிக்கையையே அந்நிறுவனம் வங்கிக்கு தொடர்ந்து தாக்கல் செய்து ஏமாற்றியது பின்னர் தெரியவந்துள்ளது.
அடுத்தது நிரந்தர சேமிப்புக் கணக்கு மோசடி. பொதுவாக இத்தகைய மோசடி பேர்வழி நிறுவனங்களில் தன்னை வங்கி பிரதிநிதி என்றும், வங்கியில் தான் நிறுவனங்களின் நிதி ஆலோசகர் என்று கூறி மோசடியை நிகழ்த்தியுள்ளார். இந்த மோசடியில் மட்டும் 7 மாநில அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்தது.
வங்கிக்கு தம்மால் அதிக டெபாசிட் திரட்டித் தர முடியும் என்றும், நிறுவனங்களிடம் தம்மால் வங்கியில் கடன் பெற்றுத் தர முடியும் என்று கூறி மோசடி செய்துள்ளது தெரிய வந்துள்ளது. இந்த வகையில் ரூ. 604.33 கோடி அளவுக்கு மோசடி நிகழ்த்தப்பட்டுள்ளது.
வங்கிகள் ஏற்றுமதியாளர்களுக்கு அளிக்கும் உறுதியளிப்பு கடிதத்தை மட்டுமே வைத்து ரூ. 12 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி செய்தது நீரவ் மோடி கோஷ்டி. இதன் பிறகுதான் ரிசர்வ் வங்கி இத்தகைய உறுதியளிப்பு கடிதம் அளிப்பதை ரத்து செய்துள்ளது என்பதும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
வங்கிகளில் மோசடி நிகழ்வதில் வங்கியாளர்களுக்கு எந்த அளவுக்கு பொறுப்பு உள்ளது என்பதை சுட்டிக் காட்டியுள்ள சிவிசி, இத்தகைய மோசடிகளில் ஆடிட்டர்கள், வழக்கறிஞர்களுக்கும் பொறுப்புள்ளது. எனவே அவர்களையும் பொறுப்பாளியாக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. போலியாக ஆவணம் தயாரித்து தரும் ஆடிட்டர்கள், அதற்கு சான்றளிக்கும் வழக்கறிஞர்களும் இனி தப்பிக்க முடியாது என்ற சூழலை உருவாக்க வேண்டும் என்றும் சிவிசி வலியுறுத்தியுள்ளது.
இதுபோன்ற தணிக்கையாளர்கள், வழக்கறிஞர்களைக் கண்டறிந்து அவர்களை பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் அப்போதுதான் வங்கிகளை ஏமாற்றுவது குறையும் என்றும் குறிப்பிட்டுள்ளது. மோசடி பேர்வழிகளுக்கு பயந்து கடன் வழங்காமல் போனால் வங்கிகளின் உண்மையான நோக்கம் நிறைவேறாது. அது பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பாசின் குறிப்பிட்டுள்ளார். இந்தியன் வங்கியின் முன்னாள் தலைவராயிருந்த பாசினுக்கு வங்கியாளர்களின் பிரச்சினை நன்கு தெரியும். வங்கிகள் எதிர்கொள்ளும் பிரச்சினை, சவால்களும் அவர் அறிந்ததே.

Thursday, March 7, 2019

நமது நிரந்தர ஊழியர்களையும் உள்ளடக்கி, 
ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெறும் 
உலக மகளிர் தின விழா 
இவ்வாண்டு முப்பெரும் விழாவாக நடத்துகிறது
நமது தஞ்சை மாவட்ட ஓய்வூதியர் சங்கம்.
விழா சிறக்க NFTE தஞ்சை மாவட்டச் சங்கம் 
தனது வாழ்த்துக்களையும்,
முன்னெடுத்துச் செல்லும் AIBSNLPWA தஞ்சை மாவட்டச் செயலர் 
தோழர். வி. சாமிநாதன் அவர்களுக்கு பாராட்டையும் 
தெரிவித்து மகிழ்கிறது.  
===========================================






Monday, March 4, 2019

TMTCLU மாவட்டச் செயற்குழு 
=============================
மார்ச் 2 ம் தேதி மன்னார்குடி தொலைபேசி இணைப்பகத்தில் மாவட்டத் தலைவர் தோழர். நாடிமுத்து தலைமையில் 70 பேர் பங்கேற்ற மாவட்டச் செயற்குழு சிறப்பாக நடைபெற்றது. 

மாவட்டச் செயலர் தோழர். கலைச்செல்வன் செயற்குழுவின் நோக்கங்களை விரிவாக எடுத்துக் கூறி மாவட்டச் செயற்குழுவை துவக்கி வைத்தார்.  

பொருளாளர் ஆர்.கே. ராஜேந்திரன் நிதி
 நிலைமைகளை எடுத்துக் கூறினார்.
 இறுதியாக NFTE மாவட்டச் செயலர் தோழர் கிள்ளிவளவன் சிறப்புரையாற்றினார். தஞ்சையில் மாநில மாநாட்டை  எவ்வாறு சிறப்பாக நடத்துவது என்பது பற்றியும், நடந்து முடிந்த வேலை நிறுத்தம், ஒப்பந்த, நிரந்தர ஊழியருக்கு சம்பளம் வராதது, ஒப்பந்த ஊழியர் ஆட்குறைப்பு செய்யப்படுவார்களா என்பது போன்ற தோழர்களின் கேள்விக்கு விரிவான பதிலை எடுத்துச் சொன்னார். 

கீழ்கண்ட தீர்மானங்கள் 
ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
=======================
1. மார்ச் மாத இறுதிக்குள் தஞ்சையில் மாநில மற்றும் மாவட்ட மாநாட்டை இணைத்து நடத்திட வேண்டும்.
2. ஒப்பந்த ஊழியர்கள் குறைந்தபட்சம் 100 ரூபாய் நிதி அளித்திட வேண்டும்.
4. மாநாட்டுப் பணிகளை தஞ்சையில் இருந்து கவனித்துக் கொள்வதற்காக தோழர். ஜோதிவேல் இணைப் பொருளராக பணியாற்றுவார்.

இறுதியாக தோழர். ஆர்.கே. ராஜேந்திரன் நன்றி கூற செயற்குழு இனிதே நிறைவுற்றது. 

 
 

























செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR