தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Tuesday, October 31, 2017

பணி நிறைவு பாராட்டு விழா 
தோழர். T. தனபால் TT, மன்னை 
அவர்களுக்கு 
இன்று 31-10-2017 மாலை மன்னார்குடி 
மனமகிழ் மன்றத்தின் சார்பில் நடைபெற்றது.  

தோழர்கள் திரளாய் பங்கேற்று வாழ்த்தினர்!

 மன்னார்குடியில் நாளை 01-11-17 அன்று நடைபெறவிருந்த கிளை ஆண்டு விழாவும், பணி நிறைவு பாராட்டு விழாவும் 
நாளை மறுநாள் 02-11-17 வியாழன் மாலை 3 மணிக்கு நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.  தோழர்கள் தவறாது பங்கேற்று சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

S. மோகன்,
பொறுப்புச் செயலர்,
மன்னார்குடி கிளை. 


                   31-10-2017

REGULAR: 220   =    220
                      550   =    575
                    1100   =  1200 

FRESH:         70   =      70

=============================================


         
           BEST PLANS
           BEST RATE CUTTER [STV]
                BEST DATA

==========================================
PLAN 429:     90 நாட்கள்.
                          அனைத்து நெட்வொர்க்கும் இலவசம்.
                          தினசரி 1 GB டேட்டா.
                          லோக்கல், STD தமிழ்நாடு முழுமையும். 
                          ரோமிங் கிடையாது.
SMS KEYWORD: PLAN BSNL429    >      123  Rs. 364/- மட்டும்.  
==========================================
   
PV 485:          90 நாட்கள்.
                                    அனைத்து நெட்வொர்க்கும் இலவசம்.
                          தினசரி 1 GB டேட்டா.
                          லோக்கல், STD இந்தியா  முழுமையும். 
                          ரோமிங் உண்டு.
===========================================

PV 186:           28 நாட்கள். 
                        அனைத்து நெட்வொர்க்கும் இலவசம்.
                          28 நாட்களுக்கும் 1 GB டேட்டா.
                          லோக்கல், STD தமிழ்நாடு முழுமையும். 
                          ரோமிங் கிடையாது.
=========================================
தொடரும்.........

மிகச் சிறந்த எழுத்தாளர் 
தோழர். மேலாண்மை பொன்னுச்சாமி அவர்கள் 
இன்று [ 30-10-2017 ]மறைந்தார்.


விருதுநகர் மாவட்டம் மேலாண்மறை நாடு கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி. கரிசல் பூமி தந்த சிறந்த எழுத்தாளர்களில் இவரும் ஒருவர். கரிசல் பூமி மக்களின் வாழ்க்கையை எதார்த்தமாகவும், உயிரோட்டமாகவும் எழுதுவதில் தலை சிறந்தவர். சிறுகதை செம்மல் என அழைக்கப்படும் பொன்னுச்சாமியின் கதை நூல்கள் தமிழக அரசின் விருதையும் பெற்றுள்ளன. 
இவருடைய மானாவரிப்பூ 33 சிறந்த சிறுகதைகள் அடங்கிய தொகுப்புக்கு சி.பா. ஆதித்தனார் இலக்கிய விருது கிடைத்துள்ளது. மளிகைக் கடை நடத்துகிறார்.
இவ்வளவு சிறந்த எழுத்தாளராக திகழும் பொன்னுச்சாமி 5 வது வகுப்பு வரை மட்டுமே படித்தவர். மளிகைக் கடை நடத்தி வருகிறார். 
சாஹித்ய அக்டாமி விருது குறித்து மேலாண்மை பொன்னுச்சாமி கருத்து தெரிவிக்கையில், இதை நான் எதிர்பார்க்கவில்லை. ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றிய இலக்கிய வெளிப்பாட்டுக்குக் கிடைத்த வெற்றியாக இதைக் கருதுகிறேன் என்று கூறியுள்ளார். 
மேலாண்மை பொன்னுச்சாமி இதுவரை 24 சிறுகதைத் தொகுப்பு, 6 நாவல்கள், 6 குறு நாவல்கள், ஒரு கட்டுரைத் தொகுப்பை எழுதியுள்ளார். பல ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை நிறுவியவர்களில் இவரும் ஒருவர்.

Monday, October 30, 2017

நமது NFTE மாநில துணைச் செயலாளர் 
தோழர். A. ராபர்ட்ஸ் அவர்களின் 
மகன் திருமண விழா கோவையில் வெகு சிறப்பாக நடந்தேறியது. மாநிலம் முழுவதிலுமிருந்தும் 
தலைவர்கள், தோழர்கள் பங்கேற்று வாழ்த்தினர்.  
நமது மாவட்டச் செயலர் தோழர். கிள்ளிவளவன் 
அவர்கள் மன்னைத் தோழர்களுடன் சென்று சிறப்பித்தார்.


மணமக்கள் நீடூழி வாழ்கவென 
தஞ்சை மாவட்டச் சங்கம் 
வாழ்த்தி மகிழ்கிறது.

Saturday, October 28, 2017

திருவாரூரில் 
தோழர் S.  மோகன் STS அவர்களுக்கு  
பணி நிறைவு பாராட்டு விழா 
இன்று 28-10-2017 
சிறப்பாக நடைபெற்றது.  
தோழர், தோழியர்கள் திரளாக 
பங்கேற்று வாழ்த்தினர். 

பாராட்டு விழா காட்சிகள்:

Friday, October 27, 2017

NFTE - BSNL 
தஞ்சை மாவட்டம்.

நமது தஞ்சை மாவட்ட துணைத் தலைவர்  
தோழர். T. தனபால்
டெலிகாம் டெக்னீஷியன், மன்னார்குடி அவர்கள் 
31-10-2017 ல் பணி ஓய்வு பெறுகிறார்.
====================================

மன்னை தந்த மாவீரன்!

சிறந்த கிளைச் செயலர் 
சீரிய செயல்பாட்டாளர்
 சிம் விற்பனையில் 
அவர் சாதனையாளர்.
சேவையிலும் நேர்மையாளர்.

கருப்பு, சிவப்பு அவரைக் கவர்ந்த ஒன்று.
ஆனால்  சிவப்புதான்  அவரை சிறைபிடித்தது.
அரசியல் அமைப்பு அவரை ஆர்த்திழுத்தபோது 
உயிரும், ஆன்மாவுமாய் விளங்கிய 
NFTE யை  ஏந்திப் பிடித்தவர்.

சிவப்புச் சிந்தனையை சிந்தையில் ஏற்றி 
சங்கத்தில் சிங்கமாய் கர்ஜிப்பார்.
அவரது பணி நிறைவு காலம் 
சிறப்பாய், செழிப்பாய் அமைந்திட 
மாவட்டச் சங்கம் மனதார வாழ்த்துகிறது!NFTE - BSNL 
தஞ்சை மாவட்டம்.
NFTE பேரியக்கத்தின் மூத்த தலைவரும், 
முன்னாள் திருவாரூர் கிளைச்செயலாளருமான 
தோழர். S. மோகன்  STS அவர்கள்  
31-10-2017 ல் பணி ஓய்வு பெறுகிறார்.
====================================

மயக்கும் மோஹனா!

ஆரூரை அழகுபடுத்த வந்த 
கேரளத்து குயில் எங்கள் மோகன்!
பாடுவார், பரதம் ஆடுவார் 
பைந்தமிழ்க் கவிதையும் தருவார்.

ஆரூர் ஒப்பந்தத் தொழிலாளிக்கு 
இவர் அறிவு பூர்வ உதவியாளர்.
சிவப்புச் சிந்தனையாளரான இவர் 
ஆரூர் கிளைக்கு நல்  ஆலோசகரும் கூட.

பட்டாபியின் படைப்பாக பேசப்படும் 
 தோழர். மோகன் இம்மாதம்  
பணியிலிருந்து விடுபடுகிறார்.
அவரை வாழ்த்துவோரும் வாழ்த்துவர்!
தூற்றி மகிழ்வோரும் வாழ்த்துவர்! 

தஞ்சை மாவட்டச் சங்கம் அவரது 
தன்னேரில்லா உழைப்பை 
பாராட்டி மகிழ்கிறது.
நாளும் வாழ்க! நலமே வாழ்க!!


Thursday, October 26, 2017மார்க்கெட்டிங் மற்றும் CSC தோழர்கள் கவனத்திற்கு!

MNP யில் வரும் ரிலையன்ஸ் வாடிக்கையாளர்களுக்கு BSNL, PORT IN  UPC CODE  வரவில்லையென்றால் உடன் கீழ்கண்ட முகவரிக்கு மெயில் செய்யவும்.

ரிலையன்ஸ் CLOSURE நடைபெறும் இத் தருணத்தில், தோழர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுகிறோம்!

mnptncbebkup@gmail.com   

நன்றி தோழர்களே!
NFTE, தஞ்சை மாவட்டம்.


                                   26-10-17
======================================
எப்பொழுதும் திரையரங்குகள் மீது எனக்கு 
இனம் புரியா மரியாதை உண்டு...!!
எளியவர்களை முன் இருக்கைகளில் அமர வைத்து
அழகு பார்க்கும் ஒரே இடம்...!!!
===================================================
படிச்சவன் பாடம் நடத்தறான்..
படிக்காதவன் பள்ளிக்கூடம் நடத்தறான்..!
=====================================================
ஒரிஜினல் எலுமிச்சையை காரில் நசுக்கிவிட்டு,
கெமிக்கல் எலுமிச்சையை குடித்து களிக்கிறோம்..!!
=====================================================
திருடர்களை குறை சொல்வதை விட
ஏமாறாமல் இருப்பதே அறிவுடைமை*

======================================

Wednesday, October 25, 2017


NFTE  -  TMTCLU 
  பட்டுக்கோட்டை கிளை 
புகழஞ்சலி  கூட்டம் 

பெருமகளூர் தொலைபேசி இணைப்பகத்தில் கடந்த 20 ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றிய ஒப்பந்தத் தொழிலாளி 
தோழர். P. பழனிவேல் அவர்கள் 
கடந்த 21-10-2017 அன்று மாரடைப்பால் மரணமானார்.
அவருக்கு 25-10-2017 இன்று புகழாஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது. 

நமது மாவட்டச் செயலர் தோழர். 
K. கிள்ளிவளவன்,
 TMTCLU மாவட்டச் செயலர் தோழர். 
D. கலைச்செல்வன் 
மற்றும் மாவட்ட முழுமையிலிருந்தும் 
சுமார் 50 க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர்.

மறைந்த தோழரின் குடும்பத்திற்கு உதவிட நிவாரண நிதி வழங்குவது, இன்சூரன்ஸ் தொகை பெற்றுத் தருவது, அவரது துணைவியாருக்கு இலாகாவில் வேலை பெற்றுத் தருவது ஆகிய 
பணிகள் குறித்தும், கேட்டகரைசேஷனில் கவனிக்க 
வேண்டிய அம்சம் குறித்தும்  தலைவர்கள் கிள்ளி, கலை ஆகியோர் 
வழிகாட்டி, விளக்கமளித்துப் பேசினார்கள்.

படம் வெளியிட மனமில்லை!
நேற்று அந்தப் புகைப்படத்தைப் பார்த்ததில் இருந்து மனம் நிலைகொள்ளாமல் தவிக்கின்றது. மனித உணர்ச்சி கொஞ்சமாவது உள்ள யாரையுமே நடுங்கச் செய்துவிடும் காட்சிகள் அவை. இரவு முழுவதும் தூக்கம் பிடிக்கவில்லை. அந்தக் குழந்தைகளின் அலறல் சத்தம் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது. நெருப்பு பிடித்து உடல் முழுவதும் எரியும் போது அந்தக் குழந்தைகள் எப்படி துடித்திருப்பார்கள்! நம்வீட்டில் குழந்தைகளுக்கு ஏதாவது லேசான அடிபட்டு அழ ஆரம்பித்தாலே மனமெல்லாம் பிசைய ஆரம்பித்து விடுகின்றது. எந்த அளவிற்கு மனம் வெறுத்திருந்தால் பெற்ற குழந்தைகளையே நெருப்பு வைத்துச் சாகடிக்க அந்த பெற்றோர்கள் துணிந்திருப்பார்கள். வேறு வாய்ப்புகளே கிடையாது, சாவதைத் தவிர என்ற முடிவிற்கு அவர்களை இழுத்துச் சென்ற பாவிகள் எவ்வளவு குரூர மனம் படைத்த மிருகங்களாக இருப்பார்கள்.
நெருப்பு வைத்துக்கொண்டு மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டு இருக்கும் இசக்கிமுத்துவுக்கு வயது வெறும் 28 தான் ஆகின்றது. இறந்துபோன அவரது மனைவி சுப்புலட்சுமிக்கு 25 வயதுதான் ஆகின்றது. அதற்குள்ளாகவே அவர்களது வாழ்க்கையை கந்துவட்டி கும்பலும், காவல்துறையும், மாவட்ட ஆட்சியரும் சேர்ந்து முடித்து வைத்திருக்கின்றார்கள்.
இசக்கிமுத்துவின் மனைவி சுப்புலட்சுமி, முத்துலட்சுமி என்ற பெண்ணிடம் 1 லட்சத்து 45 ஆயிரம் ரூபாயை கந்துவட்டிக்குக் கடன் வாங்கி இருக்கின்றார். வாங்கிய கடனுக்கு மேல் 2 லட்சத்து 34 ஆயிரம் ரூபாயை கொடுத்துள்ளார். ஆனால் கொடுத்த முதலுக்கு மேல் 89 ஆயிரம் ரூபாயை வட்டியாக வாங்கியும் போதாமல் கொடுத்த பணம் 1 லட்சத்து 45 ஆயிரத்தையும் திருப்பி கொடுக்க வேண்டும் என்று மிரட்டி இருக்கின்றார் கந்துவட்டி முத்துலட்சுமி. இது தொடர்பாக இசக்கிமுத்து, அச்சன்புதூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக கந்துவட்டி கும்பலுக்கு ஆதரவாக இசக்கிமுத்துவையும், அவரது மனைவியையும் காவல்துறை மிரட்டியுள்ளது. மாவட்ட ஆட்சியரிடம் 6 முறை புகார் கொடுத்தும் அந்தப் புகாரின் பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கலெக்டர் வேறு எதையோ கழற்றிக் கொண்டிருந்திருக்கின்றார்.
இதனால் மனம் வெறுத்துப்போன நிலையில் தான் இசக்கிமுத்து தன்னுடைய மனைவி மற்றும் 5 வயது, ஒன்றரை வயது குழந்தைகளுடன் நெருப்பு வைத்துக் கொண்டு சாக முடிவெடித்திருக்கின்றார். இசக்கிமுத்து கொடுத்த புகார் மனுவை மயிரளவுக்குக் கூட மதிக்காமல் அலட்சியமாக இருந்துவிட்டு, இப்போது மூன்று பேரை துடிதுடிக்க கொன்று போட்டுவிட்டு, வெட்கமே இல்லாமல் நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கந்துவட்டி கும்பல் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்கின்றார். இதே போல திருநெல்வேலி மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அருண் சக்தியும் அச்சன்புதூர் காவல் நிலைய காவலர்கள் மீது குற்றம் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெட்கமே இல்லாமல் சொல்கின்றார்.
வங்கிகள் எல்லாம் அம்பானிக்கும், அதானிக்கும், டாட்டாவுக்கும் , மல்லையாவுக்குமானதாக மாறிவிட்ட சூழ்நிலையில் அவர்கள் முழுக்க முழுக்க இந்தக் கந்துவட்டி கும்பலையே நம்பி தங்கள் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு இருக்கின்றார்கள். காலையில் இருந்து வேகாத வெய்யிலில் உட்கார்ந்து வியாபாரம் செய்து ஒரு 100 ரூபாயோ, இல்லை 200 ரூபாயோ முதலுக்கு மேல் லாபம் ஈட்டினால் அதில் பாதிக்கு மேல் கந்துவட்டி கும்பலின் கைகளுக்குச் சென்றுவிடும். உழைக்காமல் தங்கள் மூலதனத்தை கந்துவட்டி கும்பல் இப்படித்தான் பெருக்கிக் கொள்கின்றது. அதே சமயம் மாடுபோல உழைத்த சாமானிய மக்கள் தொடர்ந்து கந்துவட்டிக்குக் கடன்வாங்கியே ஆகவேண்டும் என்ற சூழ்நிலையும் உருவாகி விடுகின்றது.
ஒரு பக்கம் விவசாயிகள் தற்கொலை, அரசே முன்னின்று நடத்தும் டெங்கு கொலைகள், மற்றொரு பக்கம் ஆளும்கட்சியின் துணையுடனும் கட்டப்பஞ்சாயத்து நிலையங்களின் துணையுடனும் நடக்கும் கந்துவட்டிக் கொலைகள் என ஒட்டுமொத்த தமிழ்நாடே சுடுகாடாய் மாறிக்கொண்டு இருக்கின்றது. இன்னும் என்ன என்ன எல்லாம் தமிழக மக்களை இந்த மானங்கெட்ட கோமாளிகளின் அரசு செய்யப் போகின்றதோ என நினைத்தாலே அடிவயிறு கலங்குகின்றது.
கலங்குகின்றது.

Tuesday, October 24, 2017

It is understood that today morning in BSNL Full Broad Meeting, the presentation on 3rd PRC implementation with 15% fitment benefits was made by Director(HR), BSNL Board, wherein it seems that the issue will get clearance  of BSNL Board.

It is also understood that BSNL Board has cleared increase on superannuation benefits from 3% to 5% and modification in SDE RR.

The confirmation on the above issues will be available after the signature of all the Board of Directors on the minutes.
அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் 
இணைந்த கருத்தரங்கம்.
 22-10-2017 அன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது.
நமது அகில இந்தியச் சங்கத்தின் பொருளாளர் 
தோழர். ராஜமௌலி பங்கேற்றார்.

கருத்தரங்க முடிவுகள்.

 
 

3rd  PRC பற்றி 
மேனேஜ்மென்ட் கமிட்டி
கொடுத்த அப்ரூவல்  மீது 
விவாதம் செய்ய 
 24-10-2017 இன்று
BSNL போர்டு மீட்டிங்  
துவங்குகிறது.

Monday, October 23, 2017


===========================================
எவரெஸ்ட் சிகரத்தின் உயரம்
 நினைவில் நிற்க ஒரு எளிமையான வழி:

எட்டு எட்டா நாலு எட்டு போனா போதும்.
 8848 மீட்டர். 
=============================================

கிரீன்விச் நாட்டில் இப்போது என்ன நேரம்
 என்று அறிய வேண்டுமா?

 உங்கள் கடிகாரத்தை அப்படியே
தலைகீழாக பாருங்கள். அதுதான்.
=================================================

 a,b,c,d என்ற எழுத்துக்கள் ஜீரோ (Zero) , 
ஒன்று (One) முதல் தொண்ணூற்று ஒன்பது (Ninety Nine) 
வரையுள்ள ஆங்கில வார்த்தைகளில் இடம்பெறவில்லை..

=========================================================

நாம் வாழப் பொருள் வேண்டும்.
நாம் வாழ்வதிலும் பொருள் வேண்டும்.
========================================

Sunday, October 22, 2017

நீ எஜமானா? தலைவனா?

எது தலைமைப் பண்பு?

எல்லோரிடமும் கலகலப்பாகப் பேசி, சிறந்த பேச்சாற்றலோடு இருப்பவர்களெல்லாம் மனிதத் தொடர்பு அறிவுத்திறன் கொண்டவர்கள் அல்ல. மேலோட்டமாகப் பார்க்கும்போது இவர்களுடைய பலம் பேச்சுத் திறன் எனத் தோன்றும். ஆனால் இவர்களுடைய உண்மையான பலம் பேசுவதில் அல்ல கேட்பதில் இருக்கிறது. பிறர் சொல்வதைக் கவனித்து, அவர்களுடைய குரலுக்குச் செவிமடுத்து பின்பு எதிர்வினை ஆற்றுவதே இவர்களுடைய தனிச் சிறப்பு. இவர்களால் மற்றவர்களுடைய உணர்வை நன்றாகப் புரிந்து கொள்ள முடியும்.
அடுத்தவருடைய பிரச்சினைக்கு வெறுமனே அனுதாபப்படாமல் அவர்களுடைய நிலையில் தன்னைப் பொருத்திப் பார்த்து பிரச்சினையை அணுகுவார்கள். தன்னுடைய ஈகோவை விட்டுக்கொடுத்துக்கூட உறவில் பிணைப்பை ஏற்படுத்த கடும் பிரயத்தனம் செய்வார்கள். அதிகாரத்தின் மூலம் பிறரைத் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயலமாட்டார்கள். அனைவருக்கும் ஒத்துழைப்பு நல்குவார்கள். புதிய சூழலில், பலவிதமான மனிதர்களோடு உற்சாகமாக இணைந்து செயல்படுவார்கள். கூட்டு முயற்சியில் ஈடுபட விரும்புவார்கள். இவர்களுடைய அணுகுமுறை நல்ல தலைமைப்பண்பை வெளிப்படுத்தும்.
“நீ போகலாம் என்பவன் எஜமான். வா! போகலாம் என்பவன் தலைவன். நீ எஜமானா? தலைவனா?” எனும் வைரமுத்து வரிகளை மனிதத் தொடர்பு அறிவுத்திறனுக்கான கவித்துவமான ஒரு வரி விளக்கமாக எடுத்துக் கொள்ளலாம். இது அறிமுகம்தான். மனிதத் தொடர்பு அறிவுத்திறன் தொடர்பாகத் தெரிந்துகொள்ள இன்னும் எவ்வளவோ உள்ளன! 

நன்றி: தி ஹிந்து தமிழ்.

Saturday, October 21, 2017

பெருமகளூர் தொலைபேசி இணைப்பகத்தில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளி தோழர் P. பழனிவேல் அவர்கள் நேற்று மதியம் மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டார். அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கு NFTE - TMTCLU  மாவட்டச் சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. 
இவரது பணிக்குப் பின்னர்தான்  பெருமகளூர் இணைப்பகம் நல்ல வளர்ச்சியடைந்துள்ளது என்ற பாராட்டை பெற்ற தோழர்.  
           மாவட்டச் செயலர் தோழர். கிள்ளிவளவன் அவர்கள் ஒப்பந்தத்தாரிடம் பேசி அவருக்கு ரூபாய் 3000/- கிடைக்க ஏற்பாடு செய்துள்ளார்.  
          அதே போல் அவருக்கு UAN எண் உள்ளதால் இன்சூரன்ஸ் தொகை ( ரூபாய் 2 லட்சம் ) வாங்கித் தர முயற்சி மேற்கொண்டுள்ளார். 
           
        நேற்று நேரில் சென்று ஆறுதல் கூறி அஞ்சலி செலுத்திய பட்டுக்கோட்டை கோட்டப் பொறியாளர் திரு. பிரகலாதன் அவர்கள், மிகவும் பின் தங்கிய நிலையில், 2 கைக்குழந்தையுடன் (இரட்டை) சிரமப்படும் அக் குடும்பத்திற்கு நம்மால் இயன்றதை எல்லா வகையிலும் செய்து  தருவோம்  என்று கூறி வந்துள்ளார். தோழர். கிள்ளி அவர்களும் நிதியினை திரட்டிக் கொடுப்போம் என்று கூறியுள்ளார். 
       அவரது உடல் நல்லடக்கம் இன்று 21-10-17 அன்று காலை 11 மணிக்கு பெருமகளூரில் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR