தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Monday, January 31, 2011

தோழர் செல்லப்பாவின் அறியாமை!

தோழர்களே வணக்கம்!
     BSNLEU சங்கத்தைப் பற்றி, அதன் அறியாமை, இயலாமை, முயலாமை, கையாலாகாத்தனம் சரணாகதிப் போக்கு இவை யாவற்றையும் பற்றி, நமது மாநிலச் சங்கப் பத்திரிகை " ஒலிக்கதிர் " தேர்தல்  சிறப்பிதழில் ஏராளமான விஷயங்கள் 
வெளிவந்துள்ளது.   கூட்டங்களிலும் பேசி வருகிறோம்.   
   இவைஎதற்கும் பதில் சொல்லத் தயாரில்லை   BSNLEU சங்கமும், செல்லப்பாவும். 

  பணி ஒய்வு நாளன்று EL பணம்      அந்தத்               தொழிலாளருக்கு  ஒரே நாளில் கிடைத்து வந்தது.  அதுவும் நம்பூதிரி காலத்தில் LIC க்குப் போய்விட்டது.   இதைக் கொடுக்கும் முன்பாக நிர்வாகத்திடம் விவாதித்திருந்தால் RELIANCE ல் உள்ளது போல் RISK COVERAGE ஐ கொண்டு வந்திருக்கலாம்.  

    இவர்கள் ஒத்துக் கொண்டிருக்கிற இன்சூரன்ஸ் திட்டத்தில் எந்த RISK பலனும் இல்லை.   ஒரு உதாரனத்திற்க்காகத்தான் RELIANCE COMPANY கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.   RELIANCE COMPANY இடம் ஏன் இதைக் கொண்டுபோய்ப் போடவில்லை என்று நாம் கேட்கவில்லை!   RELIANCE க்கு நாம் வக்காலத்தும் வாங்கவில்லை.  
     1800 கோடி ரூபாயை RELIANCE COMPANY க்கு TRAI தள்ளுபடி செய்து BSNL க்கு நஷ்டத்தை உருவாக்கிய போது நீங்கள்தான் அங்கீகரிக்கப்பட்ட சங்கம்.  அப்போது வாய்மூடி மவுனியாகவும் இருந்தீர்கள்.  
     செல்லப்பா & CO. பொதுத்துறை  நிறுவனத்தை காப்போம் என்று சொன்னதை நமது தோழர்கள் அனைவரும் BSNL பொதுத் துறையைத்தான் சொல்கிறார்கள் என்று நம்பி இருந்தார்கள்.   இப்போதுதான் புரிகிறது அவர் LIC பொதுத் துறையைத்தான் காப்பதாகக் கூறினார் என்பது.   
     நெருங்கிக் கேட்டால் நாங்கள் பொதுத் துறையைத்தான் காப்போம் என்றுதான் சொன்னோமே தவிர எந்தப் பொதுத் துறை என்று சொன்னோமா! என்று கேட்கக் கூடும்.       BSNLEU சங்கத்திற்குத் தொழிற்சங்கம் பற்றித்தான் தெரியாமல் இருந்தது.  தமிழும் தெரியாது என்று இப்போது புரிகிறது.   
     இனியாவது 
         தமிழை தரவாய் அறிக...                ஒலிக்கதிரை  ஒழுங்காய்ப்  படிக்க....  

     BSNL தொழிலாளியிடம் சந்தா வாங்கிக் கொண்டு LIC க்கு விசுவாசம் காட்டும் BSNLEU வைப் புறக்கணிப்போம்!  
     BSNL ஐ வாழ வைப்போம்!
               NFTE ஐ ஆதரிப்போம்!
     எங்களுக்குப் பதில் தான் சொல்லவில்லை, ஒரு கேள்வி கூடவா எங்களிடம் கேட்கக் கூடாது என்ற ஆவலைப் பூர்த்தி செய்த செல்லப்பாவுக்கு நன்றி!

தோழமையுடன்,
K. நடராஜன்,
மாநிலத் துணை செயலர்,
தஞ்சை.


வருக தோழர்களே! வருக!!

     BSNL தொழிலாளர் கூட்டணிக்கு வலு சேர்க்க வந்திருக்கும் தோழர்களே! உங்களை நெஞ்சு நிறை நன்றியோடு வரவேற்கிறோம்!

BSNLEU விலிருந்து ........
     தோழர். U. கணேசன், TM, மதுக்கூர்.
     தோழர். M.S. ராஜேந்திரன், TM, மதுக்கூர்.
BSNLEU விலிருந்து கூட்டணிச் சங்கம் SNATTA விற்கு.....
     தோழியர். நித்யா, TTA, மதுக்கூர். 

Saturday, January 29, 2011
பணத்திற்கு -  பதவிக்கு ஆசைப்படாது,  
வாழவைத்த துறையை வாழ்விக்க  பேரம் பேசாது, 
தனித்தன்மையை காட்டுகிறேன் என்ற போர்வையில் 
துரோகத்திற்கு  துணை போகாது, 
இந்தத் தருணத்தில் உதவாது 
வேறு எப்போது என்னால் உதவ முடியும் 
என்று கரம் கோர்த்த தலைவர்களை வாழ்த்தி வணங்குகிறோம்!

 

Thursday, January 27, 2011

நம்பூதிரி ஏமாந்தாரா! ஏமாத்துறாரா!! S. சிவசிதம்பரம், பட்டுக்கோட்டை.

     நம்பூதிரி ஏமாந்தாரா!  இல்லை ஏமாத்துறாரா!!   எது நடந்தாலுமே ஊழியருக்கு நஷ்டம்தான்!   EU சங்கத்தின் உறுப்பினர்களே!  உங்கள் தலைவரைப் பற்றி குற்றம் சொல்கிறேன் என்று கோபப்படாதீர்கள்! தலைமையிடம் சரியா தவறா என்று கேட்டுச் சொல்லுங்கள் அல்லது நீங்களாவது கேட்டுப்புடுங்க.   

     தவறு, தப்பு எல்லாமே இன்னைக்கி மூட்டையா குமிஞ்சிரிச்சி.       அதை கொறைக்கணும், அல்லது உணரவாவது  வைக்கணும்.  தேர்தல் நாள் நெருங்கிருச்சி!  தொண்டர்கள் ஆகிய நாம  எடுக்கிற முடிவுதான் நமக்கு நல்ல வாழ்க்கையை அமைச்சித் தரும்.  
     
     சரிதானே!  இப்ப விஷயத்துக்கு வர்றேன்!

     LEAVE ENCASHMENT க்காக நம்ம டிபாட்மென்ட் பணம் 4853 கோடி ரூபாயை இப்ப LIC இல போட்டிருக்காங்கள்ள,   அந்த பணத்த வங்கியில போட்டா 8.5 % வட்டியா ரூபாய் 420 கோடி நமக்கு தருவாங்க.  அத 2.75 லட்சம் பேருக்கு பிரிச்சா 15000 ரூபாய் கெடைக்கும்ல.  ( அண்ணன் கால்குலேட்டர் போய் சொல்லாதுன்னே!).   

     அதை நம்ம தோழருக்கு போனசா கொடுக்கலாம்ல.   இதை ஏன் அவர் செய்யக் கூடாது.  LIC இல இந்த தொகையை பிரீமியமா கட்டுனதால அங்க உள்ள எல்லா LIC ஊழியருக்கும் 3 % இன்செண்டிவாங்க.   கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு ஓடைக்கலாமா?   இவருக்கு ஏதும் கமிஷன் கொடுத்தாங்களா! அது நமக்குத் தெரியாது.

     அது மட்டுமில்ல, இந்த  LEAVE ENCASHMENT தொகை (10 நாள் சரண்டர் பண்ணுனா 10  நாள் சம்பளம்)   குடுத்ததுக்காக நம்ம CMD க்கு அபிமன்யு  எப்படி லெட்டர் எழுதியிக்கிறார் பாத்தீங்களா!   போனஸ் இல்லேன்னா நீங்க எப்படி 10  நாள் சம்பளத்தைக் கொடுக்கலாம்?  எந்தச் சங்கம் உங்களிடம் கோரிக்கை வைத்தது? ஏன் இப்படி செய்தீர்கள்? என்று எழுதியிருக்கிறாரே!  இது நியாயமா?  தொழிலாளிக்கு போனஸ் தான் கெடைக்கலே, இதாவது கெடைச்சுதே என்று ஆறுதல் படுவார்னு பாத்தா கோவப்படுறாரே! சரியா. 

     கோவப்படுற நேரத்திலே கோட்டை விட்டுட்டு, அமைதியா இருக்குற நேரத்துல கொவப்படுரார!   இவர வச்சி வாழ முடியுமா!   நீங்களே சொல்லுங்க!

     3 பீரியடு அங்கீகாரத்துல இருந்தும் அன்னைலேயிருந்து உள்ள 40 க்கு மேற்பட்ட கோரிக்கைகளை இன்னைக்கும் வச்சிருக்கார்னா, எப்படிங்க!

அண்ணே!  யோசிங்கண்ணே !!   

Tuesday, January 25, 2011

வெற்றிக் கூட்டணியில் இன்று பகுஜன்!

நமது அணியில் பகுஜன் தொழிற்சங்கமும் இணைந்துள்ளது. இதோடு 10 சங்கங்கள் BSNL தொழிலாளர் கூட்டணிக்கு ஆதரவளித்துள்ளது.
NFTE, SNATTA, ATM, WRU, ES SEWA, PEWA, AIBCTES, BSNLEC, & BTU.

BTU வை வாழ்த்தி வரவேற்கிறோம்!

புதிய உதயம்

     குடந்தையில் இன்று தோழர் R.K அவர்களால் வலைத்தளம் துவங்கப் பட்டிருக்கிறது.  BSNL தொழிலாளர்  கூட்டணிக்கு வாக்குகள் கேட்டு பயணத்தை துவங்கியிருக்கும் கும்பகோணம் CRDA மாவட்ட வலைத்தளம் வெல்லட்டும் என்று கூறி வாழ்த்துகிறோம். 

அன்புடன்,
S. சிவசிதம்பரம்,
தஞ்சை வலைதளத்திற்காக.

வருக தோழர்களே! வருக!!


          BSNL தொழிலாளர் கூட்டணிக்கு வலு சேர்க்க வந்திருக்கும் தோழர்களே! உங்களை நெஞ்சு நிறை நன்றியோடு வரவேற்கிறோம்!

     இன்று காலை வேதாரண்யத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கீழ்க்கண்ட தோழர்கள் தங்களை NFTE பேரியக்கத்தில் இணைத்துக்  கொண்டனர்.


 BSNLEU விலிருந்து.....
தோழர். B. செங்குட்டுவன், TM, செம்போடை.
தோழர். E. முருகையன், TM, கரியாப்பட்டினம்.
தோழர். G. ராஜேந்திரன், TM, ஆயக்கரம்பலம்.


TEPU விலிருந்து .......
தோழர். V. பன்னீர்செல்வம், TM, செம்போடை. 

Monday, January 24, 2011

BSNLEU வின் கார்ட்டூன் சொல்லும் கதை!

     DOT மற்றும் BSNL என்கின்ற  ஆலமரத்தை NFTE தோழர்களும், கூட்டணித்  தோழர்களும் ( ஏற்கெனவே அவர்களை நம்பி இருந்தவர்களும்  ) வெட்டி வீழ்த்துகிறார்களாம்.   
     முழுக்க வெட்டி வீழ்த்திய பின், அது இனி துளிர்க்கவே துளிர்க்காது என்று உறுதி செய்த பின் புரட்சிக்காகவே பிறந்த BSNLEU தோழர்கள் அதைத் தாங்கிப் பிடிக்கிறார்களாம்.    
     கற்பனை என்று சொன்னாலும் உண்மையை உணர்த்திய இந்த கார்ட்டூனுக்கு நமது வாழ்த்துக்கள்!  
       இப்படி BSNL  முற்றாக அழியும்வரை நீங்கள் வேடிக்கை பார்த்ததால் தான் உங்களை அடியோடு அகற்றிட கூட்டணித் தோழர்கள் போராடிக் கொண்டிருக்கிறோம். 

2004 ல் BSNL வைத்திருந்த 40 ஆயிரம் கோடி உங்கள் காலத்தில் முற்றாக அழிந்து விட்டதல்லவா.  அதே போல் ஆண்டுக்கு 10000 கோடி பெற்று வந்த லாபம்  செத்து இன்று நட்டம் என்றாகி விட்டதல்லவா, எல்லோருக்கும் கிடைத்த போனஸ் இன்று உமது காலத்தில் எவர்க்கும்  இல்லை என்றாகி விட்டதல்லவா! இன்னும் எதை அழிக்க இப்படி அலைகிறீர்கள்!   
     தேர்தல் தரும் பாடத்தை உணர்வீர்கள் என்று நம்புகிறோம்!!

வருக தோழர்களே! வருக!!

       குடந்தைக் கோட்டம் தேர்தல் பிரசாரத் துவக்க விழா நாகையில் நடைபெற்றது.  தலைவர்கள் G. ஜெயராமன், மதுரை சேது, குடந்தை ஜெயபால், பட்டுக்கோட்டை சிவசிதம்பரம் ஆகியோர் பங்கேற்ற கூட்டத்தில் கீழ்க்கண்ட தோழர்கள் தங்களை NFTE பேரியக்கத்தில் இணைத்துக் கொண்டனர். 

 BSNLEU விலிருந்து 
தோழர். ராஜேந்திரன், TM அவர்கள்.
FNTO விலிருந்து 
தோழர் சன்மார்க்கம், TM அவர்கள். 

தோழர்களின் வருகை நமது 
எதிர்காலச் செயல்பாட்டிற்கு உவகை.  

நன்றி தோழர்களே!!

தஞ்சை மாவட்ட தேர்தல் பிரசார கூட்ட விபரம்.

       கூத்தாநல்லூரைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பிரசாரக் கூட்டங்கள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. 
     20-01-11  அன்று தஞ்சையில் தலைவர்கள் தமிழ்மணி, பட்டாபி மற்றும் கூட்டணிச் சங்கத் தலைவர்கள் கலியபெருமாள் SNATTA, ஜெயராஜ் AIBCTES, பழனியப்பன் ATM, KSK ஆகியோர்  பங்கேற்ற  சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. 
     22-01-11 அன்று ஒரத்தநாட்டில் தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.  

இனி நடக்க இருப்பவை:

25-01-2011   மாலை 5  மணி  திருத்துறைப்பூண்டி 
 கூட்டணிச் சங்கத் தலைவர்கள் 
கலியபெருமாள் SNATTA, ஜெயராஜ் AIBCTES, 
பழனியப்பன் ATM, மற்றும் NFTE மாவட்ட, மாநிலச் சங்கப் பொறுப்பாளர்கள் பங்கேற்கின்றனர்.

27-01-2011  மாலை 5   மணி  பாபநாசம். 
       சிறப்புரை: 
தோழர் குடந்தை ஜெயபால் அவர்கள்.
 கூட்டணிச் சங்கத் தலைவர்கள் 
கலியபெருமாள் SNATTA, ஜெயராஜ் AIBCTES, 
பழனியப்பன் ATM, மற்றும் NFTE மாவட்ட, மாநிலச் சங்கப் பொறுப்பாளர்கள் பங்கேற்கின்றனர்.

28-01-2011 காலை 10 மணி     மன்னார்குடி 
          சிறப்புரை: 
தோழர் குடந்தை ஜெயபால் அவர்கள்.
  கூட்டணிச் சங்கத் தலைவர்கள் 
கலியபெருமாள் SNATTA, ஜெயராஜ் AIBCTES, 
பழனியப்பன் ATM, மற்றும் NFTE மாவட்ட, மாநிலச் சங்கப் பொறுப்பாளர்கள் பங்கேற்கின்றனர்.

28-01-2011  மாலை 5 மணி          திருவாரூர். 
         சிறப்புரை: 
தோழர் குடந்தை ஜெயபால் அவர்கள்.
  கூட்டணிச் சங்கத் தலைவர்கள் 
கலியபெருமாள் SNATTA, ஜெயராஜ் AIBCTES, 
பழனியப்பன் ATM, மற்றும் NFTE மாவட்ட, மாநிலச் சங்கப் பொறுப்பாளர்கள் பங்கேற்கின்றனர்.

29-01-2011   மாலை 5 மணி    பட்டுக்கோட்டை. 
                    சிறப்புரை:  மதுரை சேது அவர்கள்.
 கூட்டணிச் சங்கத் தலைவர்கள் 
கலியபெருமாள் SNATTA, ஜெயராஜ் AIBCTES, 
பழனியப்பன் ATM, மற்றும் NFTE மாவட்ட, மாநிலச் சங்கப் பொறுப்பாளர்கள் பங்கேற்கின்றனர்.

 30-01-2011   காலை  10 மணி 
                                            தஞ்சாவூர் CTO வளாகம். 
                      
                       சிறப்புரை:   
தோழர். R. K.   அவர்கள்.
 தோழர் குடந்தை ஜெயபால் அவர்கள். 
  கூட்டணிச் சங்கத் தலைவர்கள் 
கலியபெருமாள் SNATTA, ஜெயராஜ் AIBCTES, 
பழனியப்பன் ATM, மற்றும் NFTE மாவட்ட, மாநிலச் சங்கப் பொறுப்பாளர்கள் பங்கேற்கின்றனர். 

தோழர்கள் திரளாய் பங்கேற்க அன்புடன் வேண்டுகிறேன். 
தோழமையுடன்,
T  பன்னீர்செல்வம், 
மாவட்டச் செயலர், தஞ்சை. 

Sunday, January 23, 2011

வருக தோழர்களே! வருக!!

         BSNL தொழிலாளர் கூட்டணிக்கு வலு சேர்க்க வந்திருக்கும் தோழர்களே! உங்களை நெஞ்சு நிறை நன்றியோடு வரவேற்கிறோம்!


 BSNLEU விலிருந்து NFTE க்கு.
        தோழர் R. சக்திவேல், TM,நீடாமங்கலம்.
        தோழர் பாலுச்சாமி, TM, பாப்பாநாடு.

FNTO விலிருந்து  NFTE க்கு.
     தோழர். Brother. S. ராஜேந்திரன், STSO, மன்னார்குடி.
     தோழர். A. செல்லையன், STSO, மன்னார்குடி.
     தோழர். இளஞ்செழியன் TM, பாபநாசம்.

FNTOBEA விலிருந்து    ATM க்கு 
     தோழர். R. மணி, RM, திருவாரூர். 
     தோழர். G. முருகையன், TM, திருவாரூர். 

     இன்னும் 40 க்கும் மேற்பட்ட தோழர்கள் BSNLEU விலிருந்து நமக்கு வாக்களிக்கவும், இணையவும் விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள்.  அங்கீகரிக்கப்பட்ட சங்கத்தின்  தொந்தரவுகளுக்கு ஆட்படாதிருப்பதற்காக  பெயரினை வெளியிடாதிருக்கிறோம்.  தேர்தலுக்குப் பின் சந்தாப் படிவத்தில் கையெழுத்திட்டுத் தரும்போது பெயர் விவரம் வெளியாகும். 
அன்புடன், 
S. சிவசிதம்பரம்,
பட்டுக்கோட்டை.

Wednesday, January 19, 2011

நண்பனும் வம்பனும்!


Part 3:
நண்பன்: 
வணக்கம் தோழரே!  EU வோட தேர்தல் சிறப்பிதழ் பார்த்தீங்களா!  ரொம்ப கலர்புல்லா அசத்தியிருக்கிறாங்க .

வம்பன்:
பாத்தேன் தோழரே! நல்ல கவர்ச்சிகரமா இருக்கு.   ஜனங்கள மடையனா நினைச்சு நறையா   எழுதியிருக்காங்க.  EU காரனே குழம்பிப் போற அளவுக்கு எழுதியிருக்காங்கன்னா   நீங்க பாத்துக்க வேண்டியதுதான்!

நண்பன்:  
ஒங்க பாணி பதில்தான் ரொம்ப வெவரமா இருக்குன்னு சொல்றாங்க!  ஒன்னு ஒண்ணா சொல்லுங்களேன்!   

வம்பன்:  
நீங்களும் ஒரு வருஷம் EU வுக்கு  போயிட்டு வாங்களேன்!  என்ன விட பிரமாதமா பின்னிடுவீங்க தெரியுமா?   என்னா ஒன்னு, வெவரம் தெரிஞ்சவங்க, கேள்வி கேக்குறவங்க அங்க ஒரு நாள் கூட இருக்க முடியாது.

நண்பன்:
தோழரே!  நீங்க ரொம்பதான்  நொந்திருக்கீங்கன்னு தெரியுது.  சரி.  விஷயத்துக்கு வாங்க!

வம்பன்:  
ஸ்பெக்ட்ரம் ஊழல் பத்தி வாயே தொறக்காத EU   இப்ப 1,76,000 கோடி  ஊழல்  பத்தி  எழுதுனவொன்ன, நான் ஆச்சரியப்பட்டு படிச்சா அந்த பக்கத்துல ஒரு எடத்துல கூட ராசாவோட பேர் வரலங்க.   எப்படி கூட்டணி தர்மத்தை காப்பாத்துறாங்க பாத்தீங்களா!  
     அப்புறம் பாத்தீங்கன்னா! சாதனைப் பட்டியல்!   பங்கு விற்பனையை தடுத்து, VRS ஐ தடுத்து, ஊதிய உயர்வைக் கொடுத்து, பதவி உயர்வைத் தந்து, போனசிலே போராடி அது இதுன்னு எழுதி தள்ளியிருக்காரு. 
     தேர்தல் வாக்குறுதியில பாத்தீங்கன்னா, அதே சாதனைப் பட்டியல் செய்திதான்.  எப்படி இவங்களால மட்டும்   இப்படியெல்லாம் எழுத முடியுதுன்னு எனக்கு ஓரே  ஆச்சரியம்!  .
நாம எதிர்பாக்குற  எந்த விளக்கமும் அவங்களால கொடுக்க முடியாம  தடுமார்றாங்க, தெரியுமா!

நண்பன்: 
நாம எதிர்பாக்குற வெளக்கம் என்னான்னு மறுபடியும் கொஞ்சம் சொல்லுங்களேன்!

வம்பன்:
ரொம்ப அவுங்களைப் போட்டுக் காய்ச்சாம நறுக்குன்னு நாலு கேள்வி மட்டும் கேக்கறேன் நண்பரே!   
     1. பரிச்சை இல்லாம பதவி உயர்வுன்னு முதல் தேர்தல்ல சொன்னாங்களே! அது தொடருதா! இல்லையா!  இல்ல அத கோரிக்கை லிஸ்ட்ல இருந்து எடுத்துட்டாங்களா!
      2.   போனசுக்காக டிசம்பர்  1, 2 ல எல்லாரும் சேந்து JAC சார்பா வேலை நிறுத்தம் செஞ்சோமே!  அத ஏன் வாபஸ் வாங்கினாங்க?  CMD வேலை நிறுத்தத்தை வாபஸ் வாங்குங்க! லாபம் வந்த ஒடனே ஒங்களுக்கு போனஸ் தர்றேன் அப்படீன்னதால வாபஸ் வாங்கினேன்னு அபிமன்யு சொல்றாரே! அவருக்கு, எப்பவுமே  நிர்வாகம் இது மாதிரித்தான்  வேண்டுகோள் வைக்கும் என்று வேலை நிறுத்தம் அறிவிக்கும்போதே தெரியாதா!  
     3.  இந்த இரண்டு நாள் போராட்டத்தில் தோழர் அபிமன்யு ஏன் கலந்து கொள்ளவில்லை?   அவருக்கு சம்பள வெட்டு வராமல் பார்த்துக்கொள்ளவ!!
     4.  சரி, அப்படித்தான் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதே, அதே கோரிக்கையை வைத்து மீண்டும் ஜனவரியில் ஆர்ப்பாட்டம் வைத்தாரே! அது எதற்க்காக? வேலை நிறுத்தத்தை விட ஆர்ப்பாட்டம் வெற்றியை அளித்து விடுமா? 
     5. 1.1.2007 அன்று வரவேண்டிய சம்பளக் கமிச்னுக்கு 2006   லேயே குறிப்பு கொடுக்க வேண்டிய நம்பூதிரி 2009 வரை ஏன் கொடுக்கவில்லை? ஊழியர்களுக்கு கிடைக்கக் கூடாது என்றா!  எலெக்சன் வரைக்கும் தள்ளிப் போட வேண்டும் என்பதற்க்காகவா!   அல்லது குறிப்பு கொடுக்க தெரியாததாலா!   அப்படி தாமதமாக 40 மாதம் கழித்து அறிவித்த வேளையில், 78.2 % IDA இணைப்பு  பொதுத் துறைக்கு உண்டு என்று நீதி மன்றத்தால் அறிவிக்கப்பட்ட வேளையில் அதைக் கோரிப் பெறாதது எதனால்?
     6. 4 கட்ட பதவி உயர்வு என்பது நம்பூதிரி கேட்ட ஒன்று அல்ல.  அது அதிகாரிகளுக்கு கொடுக்கும் போது அதே மாதிரி பெறப்பட வேண்டிய ஒன்று.  சரிதானே!  ஒரு பதிவு செய்யப்பட அதிகாரிகள் சங்கம் 4-4-4-4  என்று பெரும் போது, அங்கீகாரம் பெற்ற சங்கம் அதை ஏன் 4-7-7-8 என்று பெற வேண்டும்?
   போதுமா தோழரே!

நண்பன்:
போதும் தோழரே! போதும்!  சொல்லச் சொல்ல எவ்வளவு இழப்புகள் EU வின் கையாலாகாத்தனத்தினால் ஏற்பட்டிருக்கிறது  என்பதை என்னும்போது ரொம்ப வேதனையா இருக்கு!  இதற்கு பதில் சொல்கிறார்களா பார்ப்போம்!
வம்பன்: 
     பதில் சொல்லவே மாட்டாங்க!!   அவுங்களைப்  பத்தி எனக்கு ரொம்ப நல்லாவே தெரியும்!

     நேர்மையான சங்கம்னா பதில் சொல்லியே தீரும்.  EU  தோழர்கள் அவுங்களோட தலைமையை கட்டாயப் படுத்தி பதில் வாங்கினாத்தான் உண்டு.  நாம போய் கட்டாயப் படுத்த முடியுமா!  
தொடரும்...........
பேட்டி தொகுப்பு
உங்கள் சீனாதானா

Saturday, January 15, 2011

நண்பனும் வம்பனும்!

Part 2:
நண்பன்:  
என்னா தோழரே!  நம்பூதிரியோட பச்சைப் பொய்யை அழகாப் புட்டு புட்டு வைச்சீங்க!   இன்னைக்கு என்னா சொல்லப் போறீங்க?
வம்பன்: 
இன்னைக்கும் ஒரு மோசம்போன கதைதான்.  சொல்றேன் கேளுங்க.   போனசே மத்திய அரசு ஊழியருக்கு இல்லாத காலத்திலே ஒனக்கும் உண்டுடா போனஸ் என்று சொல்லி நம்ம தாத்தன் குப்தா போராடி ஜெயிச்சு 15  நாள்ல ஆரம்பிச்சு 77  நாள் வரைக்கும் போனசைக்  கொண்டு போய் நிருத்தினார்ல!   அது இன்னைக்கி என்னாச்சு?
நண்பன்: 
இல்லாத ஒண்ணாச்சு.   அதானே!
வம்பன்: 
அது இல்லாம போனதுக்கு முக்கிய காரணம் என்னா தெரியுமா? 
நண்பன்: 
அதான் எனக்கும் புரியாமப் போச்சு.   அது இல்லாமப் போனா நமபூதிரிக்குத்தானே கெட்ட  பேரு..   எதுனால இப்படி ஆச்சு?   ஆனாலும் BSNL  நஷ்டத்துல இருக்கும்போது எப்படிங்க போனஸ் கொடுக்க முடியும்?
வம்பன்: 
இதான், இதான்! அந்த ஆளுக்கு மூலதனம். இப்படிச் சொல்லித்தான் அந்த ஆளும் காலத்தை ஓட்டிக்கிட்டிருக்காரு!  நீங்களும் நம்பிக்கிட்டிருக்கிறீங்க!  வெவரமாச் சொல்றேன் கேளுங்க?
நம்பூதிரிக்கு மொதல்ல குப்தா எதைச் செஞ்சாலும் புடிக்காது.  PLI  போனஸ் அதாவது உற்பத்தியோடு இணைந்த போனஸ் என்பது குப்தா கொண்டு வந்தது.  அத லாபத்தோடு இணைந்த போனஸ் அப்படீன்னு நம்பூதிரி மாத்தினார்.  மாத்தினதோடு  மட்டுமில்லாம வருஷத்துக்கு 50000 கோடிக்கு மேலே லாபம் வந்தா  எனக்கு 10000 போனஸ் தரனும்னார்.
நிர்வாகமும் ரொம்ப நாளா இது மாதிரியான ஆளைத்தான்  தேடிக்கிட்டு இருந்திருக்கும் போலிருக்கு.  ஒடனே OK சொல்லிருச்சு.  
லாபம் போச்சா!  போனஸ் போயே போச்சு!!
தன்னோட தெறமை எந்த அளவுக்கு இருக்குன்னு அவருக்கே தெரியல்லே!  அதுனால வந்த சிக்கல்தான் இது.   பக்கத்துல போஸ்டல்ல ED க்கு இந்த வருஷம் 6000 ரூவா போனஸ். நம்ம கேசுவல் லேபர்க்கு நாம 2000 ரூவா வாங்கிக் கொடுத்திருக்கிறோம்.
ஆனா நமக்கு இல்லாமப் போயிருச்சி.  
நண்பன்:
இருந்தாலும் நான் வாங்கிக் கொடுத்திடுவேன்.  அதுக்காகத்தான் டிசம்பர் 1,2  ல போராட்டம் சேந்து பண்ணோம்.   இப்பக்  கூட  ஆர்ப்பாட்டம் வச்சிருக்கோம் தெரியுமா என்று சொல்றாரே!
வம்பன்:
JAC அதாவது அதிகாரிகள் உள்பட அனைத்து ஊழியர்களும் சேர்ந்து போராடியும் கிடைக்காத ஒன்று, தனியா EU மட்டும் போராடினா கெடைச்சிருமா  என்ன?
அதோடு மட்டுமல்ல தோழர்!  நம்பூதிரி தோழர்கள் கிட்டே நாம அங்கீகாரத்தில் இருந்த போது எப்படி போராட்டம் நடத்தினோம்.   இப்போ அபிமன்யு எப்படி நடத்துரார்னு தெளிவா  கேக்கணும் .    
பேருதான் அபிமன்யு!   ஒரு வியூகம் கூடவா வகுக்கத் தெரியாது.  போராடுவாராம்.  CMD கேட்டுக்குவாராம்!   இவுரு வாபஸ் வாங்கிடுவாராம்!   அப்புறம் அதுக்காகவே ஆர்ப்பாட்டம் நடத்துவாராம்.  என்ன சின்னப்புள்ளத்தனமா இருக்கு!
 வம்பன்:
     இப்ப நம்பூதிரித் தோழர்களே ரொம்ப பீல் பண்றாங்க தெரியுமா?  இவுங்கள நம்பி, இவுங்களுக்கு ஆதரவா இருந்து 6 வருஷத்தை வீணடிசுட்டமேன்னு சிலர் வேதனைப்படுறாங்க.    சிலர் ஆத்தமாட்டாதவன்  இடுப்பிலே  அம்பத்திரெண்டு கருக்கருவாள் எதுக்குன்னு கிண்டலும் பண்றாங்க தோழரே!
நண்பன்:  
     அதுனாலதான் காசக் குடுத்து சங்கத்த ஒடைச்சி, எப்படியாவது ஜெயிச்சிப் புடலாம்னு பாக்குறாரு.   
வம்பன்: 
இந்த முறை அது நடக்காது.  அவரு கனவு கண்டுக்கிட்டே இருக்க வேண்டியதுதான்.    சரிங்க தோழரே! நாளைக்கி நேரம் இருந்தா சந்திப்போம்.
பேட்டி தொகுப்பு:
உங்கள் Seenathaana

Friday, January 14, 2011

பொங்கல் திருநாளில் புலரட்டும் நல் மாற்றம்!!

விளைந்த வெள்ளாமை வீட்டுக்கு வர வேண்டும்
விவசாயி வாழ்வு வெளிச்சம் பெற வேண்டும்.
2010 -ல் இழந்தவை ஏராளம்
அது தொடரலாமா தாராளமாய் இவ்வாண்டும்?

DOT இடமிருந்து BSNL பொதுத் துறைக்கு
என்னென்ன எடுத்து வந்தது NFTE அன்று. 

போனசும், பென்சனும், துறையின் நிதி ஆதாரமும்
ஊழியர் வாழ்வாதாரமும்
போராடிப் பெற்றிட்ட புதுமைப் பயன்அன்றோ!
கானல் நீராய் அது இன்று  காட்சியளிக்க விடலாமா!

கையிருப்பும்  கரைந்து,  
துறை வருமானமும் மறைந்து
வாடும் பயிராய் இன்று வதை படுவது  யாராலே!

வெற்று ஆரவாரம், பொதுமைப் புரட்சி வேடம்
குறுக்கு வழிச் சிந்தனைகள், கூடா நட்புக்கள்
இவையனைத்தும் கொள்கையாய்க் கொண்டிட்ட
EU வின் தலைமை இனி நமக்கு தேவைதானா?
நல்லதொரு விடியல் நமக்கினி வந்திடவே!
செழுமையாய்  உழைத்திடுவீர்!
செயலூக்கம் பெற்றிடுவீர்!!

இனிய நல் பொங்கல் வாழ்த்துக்கள்!
அன்புடன், 
S. சிவசிதம்பரம், 
பட்டுக்கோட்டை.

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்
WWW.NFTETNJ.BLOGSPOT.COM

Sunday, January 9, 2011

நடந்தது என்ன? தோழர் பட்டாபியின் (Audio) பேட்டியிலிருந்து ஒரு பகுதி:

                                                                                                    PART - 2.
துறைக்கு  நஷ்டம்:
       அதே மாதிரி கடந்த 9 ஆண்டுகளள லாபம்  சம்பாதித்த BSNL முதன் முறையாக  நட்டம் என்று வந்ததும் இவர்கள் காலத்தில்தான்.   நிர்வாகச் சீர்கேடுகள், நிதி ஒழுங்கீனங்கள்  போன்ற எல்லாவற்றையுமே தட்டிக் கேட்காமல் இன்னைக்கி BSNLEU    கண்காணிக்க  வேண்டிய  கடமையிலிருந்து  தவறியதால  நஷ்டம்  வந்திச்சு.  

போனஸ் போச்சு:
     அதே மாதிரி இன்னைக்கி தொழிலாளிக்கு போனஸ் இல்லை என்ற நிலைமை உருவாகி இருக்கு. 30 ஆண்டுகளுக்கு மேலாக, 1979 வாக்கில, போனசே இல்லாத காலத்துல, ரயில்வேயும் நாமும் போராடி, மத்திய அரசு ஊழியருக்கு போனசா என்று கேலி செய்கிற காலத்தில ரயில்வே, நாமெல்லாம் சேர்ந்து சண்டை போட்டு வாங்கின ஒன்று இன்னக்கி இல்லாம போயிருச்சு.   அது ஒயர்ந்து கிட்டே போயி 77 நாள் வரைக்கும் போச்சு.       அதற்குப் பின்னால இன்னைக்கி என்னாச்சி?   நட்டம் வந்தா போனஸ் இல்லைன்னு ஆச்சி. அப்போ PLB போனசாக இருந்திச்சு.  எவ்வளவு உற்பத்தி அதிகமாச்சுதோ அதுக்கு தகுந்தமாதிரி போனசும் உயர்ந்து கொண்டே போச்சு.       இப்பொழுது உற்பத்தி அதிகமாயிருக்குது.  ஆனா விலை    குறைப்பின் காரணமாக அல்லது    TARIFF வீழ்ச்சியின் காரணமாக வருவாய் குறைந்தது.  லாபத்தோடு, BSNL லோட  வருவாயைக் கட்டிப் போட்டு, இதையெல்லாம்  BSNLEU ஏற்றுக் கொண்ட காரணத்தால்  லாபம் இல்லை, அதனால் உங்களுக்கு போனஸ் இல்லை என்று BSNL சொன்னதை இவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று.             முதன் முதாலாக எல்லோரும் போனஸ் வாங்கும்போது, நமக்கு இல்லாமப் போச்சு. ED க்குப் போனஸ், இன்னைக்கி CONTRACT LABOUR க்கெல்லாம் போனஸ் வாங்கித் தந்த நமக்கு போனஸ் இல்லை என்ற நிலை வந்திருக்கிறது.    அதையெல்லாம் எதிர்த்து BSNLEU  வால  போராட முடியாம நமது உரிமையை கை விட்ட நெலமை வந்தாச்சு.  

தலைக்கு மேலே தொங்கும் கத்தி:  
     அதே மாதிரி கார்ப்பொரேஷன்  உருவாகும்போது தோழர் குப்தா  அவர்கள் மூணு நாட்கள், 90 % ஊழியர்களை வைத்துப்  போராடி பென்சன் உண்டு என்ற நிலைமையை பெற்றோம்.  அன்றைக்கு BSNLEU தோழர்கள் போராடவில்லை.       அப்போது BSNL ன்   நிதியாதாரம், பணிபாதுகாப்பு போன்ற கோரிக்கைகளும் வைத்துப் போராடினோம். வெற்றியும் கண்டோம்.  அப்போ BSNLEU தோழர்கள் கிண்டலடித்தார்கள்.      வாஜ்பாய் காலத்திலே அந்தப் போராட்டம் மாபெரும் வெற்றி பெற்று, பென்சன் உறுதியும் செய்யப்பட்டது.          அரசாங்கமே பென்சனைக் கொடுக்கும் என்ற உறுதிமொழியை வாங்கினோம்.  அது மட்டுமல்ல Consolidated fund of India பண்டிலிருந்து பணத்தை எடுத்து மத்திய அரசாங்கமே கொடுக்கும் என்ற உறுதிமொழியை பெற்று இன்று பென்சன் வாங்கி வருகிறோம்.  இவர்கள் ஆட்சி காலத்திலே, 2006 லே திடீரென்று 100 % Pension liability யை அரசு ஏற்கும் என்ற நிலைபாட்டிலிருந்து மாறி  எங்களுக்கு வருகின்ற வருவாயில 60 % க்கு மேலே பென்சனை நாங்க ஏற்க மாட்டோம் என்கின்ற ஒரு புதிய விதியைப் போட்டு சிக்கலுக்கு உள்ளாக்கி அது DOT க்கும்,  மத்திய அரசுக்கும் என்ற நிலைமையில் போய்க் கொண்டிருக்கிறது.   இருந்தாலும் அது 2006 லிருந்து இன்று வரைக்கும் தலைக்கு மேலே தொங்கிக்கொண்டிருக்கின்ற கத்தியாகவே இருக்கிறது.           பென்சனுக்கு ஒரு மறைமுகமாக ஆபத்து விளைவிக்கக் கூடிய விதி இன்றைக்கும் இருந்து கொண்டிருக்கிறது.  இந்த விதியும் BSNLEU காலத்தில்தான் வந்தது.

கேடர் சீரமைப்பு:
         தோழர் குப்தா காலத்திலே அல்லது NFTE காலத்துல இருந்ததை - நம்பூதிரி இல்லை, இல்லை என்பதை சேர்த்துக் கொண்டே வந்தார்.  1979 லிருந்து தொடர்ந்து பெற்று வந்த போனஸ் இல்லை என்றாகி விட்டது.  அதே மாதிரி தொழில்நுட்ப மாற்றம் வந்து கொண்டிருக்கின்ற ஒரு இலாக்காவுல, பயிற்சி மறு பயிற்சி மூலம் கேடர்களை மேல்நிலைப் படுத்த வேண்டும் என்று சொல்லி கேடர் சீரமைப்பு என்ற முறையைக் கொண்டு வந்தோம்.
       1996 ல ஐந்தாவது சம்பளக் கமிஷனுக்கு பின்னாலும் கூட, கேடர் சீரமைப்பைக் கொண்டு வந்து, அதன் மூலமாக சம்பள உயர்வைக் கொடுத்து,  ஒரு சம்பளக் கமிஷன் இல்லாமலேயேக் கூட லட்சக் கணக்கான ஊழியர்களுக்கு சம்பள உயர்வைக் கொடுத்தோம்.
       ஆனால் இவர்கள், அந்தக் கேடர் சீரமைப்பு ஆட்களை வீட்டுக்கு அனுப்பும் திட்டம், அது கேடர் சீரழிவுத் திட்டம் என்றெல்லாம் கொச்சைப்படுத்தி, அதனை எதிர்த்தார்கள்.    அதையெல்லாம் தாண்டித்தான் இன்றைக்கு சம்பள முன்னேற்றம் வந்திருக்கிறது.  இதற்கு அடிப்படையான் காரணமே அந்த கேடர் சீரமைப்புத் திட்டம்தான். இதன் மூலம் எல்லோரையுமே மேல்நிலைப்படுத்துவது என்ற நிலையை உருவாக்கியிருக்கிறோம்.  RM ....TM, TTA என்றும், TO-TOA .....Sr.TOA, STS-SSS, CTS என்றும், TTA....JTO என்று போக முடிந்தது.

JCM:
     அதேபோலே நிர்வாகத்தோடு பேச்சு வார்த்தை நடத்துவதற்கான கருவியாக JCM உருவாக்கப்பட்டது.  மத்திய அரசு, தபால் தந்தி, DOT ஊழியர்களுக்கும் அது வந்தது.  அதே முறை  வேண்டுமென்று NFTE இல NATIONAL கவுன்சில்  ஒன்று  உருவாக்கினோம்.    ஆனால் இவர்கள் JCM என்பது அரசாங்கத்தோடு சேர்ந்து கூட்டு சதி செய்வதே என்று கிண்டலடித்தார்கள்.  ஆனால், இன்றைக்கு அதை ஏற்றுக் கொள்ளும் நிலைமைக்கு வந்திருக்கிறார்கள்.   அவர்களுடைய அடிப்படையே எல்லாவற்றையும் தவறாகப் புரிந்து கொள்வதுதான். ஊழியர்களுக்கு நலம் பயக்கும் எந்த திட்டமாயினும் எதிர்ப்பது என்ற வகையிலேதான் வளர்ந்திருக்கிறார்கள்.


பொதுத் துறை பயம்:
அதே போல பொதுத் துறையைக் காப்பது என்பது NFTE யினுடைய COMMITMENT.    ஆனால் BSNLEU வினுடைய முன்னோர்கள், தலைவர்கள் எல்லாம் பொதுத் துறையை வளர்ப்பது ஆபத்து, அது  முதலாளித்துவத்தை  வளர்க்கக்கூடிய  ஒரு  கருவி   என்று கருதினார்கள்.   ஆகவே பொதுத் துறையைக் கொண்டாட வேண்டாம் என்ற கருத்தோடு  இருப்பவர்கள் BSNLEU காரர்கள்.   அவர்களுக்கு இந்த COMMITTMENT இருப்பதற்கான வாய்ப்பு இல்லை.   அப்படியான கருத்து அவர்களுக்கு இல்லையானால் அவர்கள்  அதை இன்றைக்கு சொல்லவேண்டும்.  ஆகவே அவர்களுடைய கண்ணோட்டமே பொதுத் துறைபால் தவறான, ஊனமான் கண்ணோட்டமாக இருந்திருக்கிறது  என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.    

குரூப் இன்சூரன்ஸ்:

இன்னமும் பாத்தீங்கன்னா! இவர்களுடைய காலத்தில்தான் குரூப் இன்சூரன்ஸ் என்ற திட்டம் சிக்கலுக்குள்ளானது.   DOT இல இருந்த அந்தத் திட்டம்.   தபால் தந்தி ஊழியருக்கும்  இருந்தது.  அதே போன்ற திட்டம் BSNL ஆன பிறகு, நிர்வாகம் அதை நிறுத்துவேன் என்று சொன்ன  போது தோழர் குப்தா அதை போராடி இழுத்துக் கொண்டு வந்தார்.    இவுங்க அங்கீகாரத்துக்கு வந்த பின்னால் நிறுத்துவோம் என்று நிர்வாகம் சொன்னது. உடனே ஒத்துக்  கொண்டார்கள்.   
     அன்றைக்கு வெறும் 30 ரூபாய் செலுத்தக் கூடிய ஊழியர்களுக்கு 185 ரூபாய் அவர்களுடைய கணக்கில் போய்ச் சேர்ந்தது.   9 சதவீதம் வட்டி கொடுத்து வந்தார்கள்.   இந்தத் திட்டத்தை திடீரென்று நிறுத்தி ஊழியர்களுக்கான மூலதனத்தை பிரித்துக் கொடுத்ததன் காரணமாக, புதிய திட்டமாக 105 ரூபாய் திட்டத்தை கொண்டு வந்தார்கள்.  அதனால் ஊழியர்கள் 105 ரூபாய் போட்டால் கூட 70 ரூபாய்தான் அவர்கள் கணக்கில் வந்து சேர்ந்தது.  30 ரூபாய்  போட்டு  105 ரூபா  சேரக்   கூடிய  ஒரு  காலத்தில், அந்தத் திட்டத்தை நிறுத்திவிட்டு   105 ரூபாய்   போட்டு 70 ரூபாய் கிடைக்கக் கூடிய ஒரு திட்டத்தை இவர்கள் சேர்த்தார்கள்.   ஆகவே எவ்வளவு பெரிய நஷ்டத்தை உருவாக்கியிருக்கிறார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். 

கையாலாகாத்தனம்:
     குப்தா DOT யிலேருந்து எல்லாவற்றையும் இங்கே கொண்டு வந்து சேர்த்தார்.  இவர்கள் DOT யிலேருந்து வந்ததை BSNL நிறுத்துவேன் என்று சொன்னபோது உடன்பட்டார்கள்.
ஆனா,  குப்தா DOT க்கும் BSNL க்கும் ஒரு COMMITMENT ஐ இணைத்துக் கொண்டே வந்தார்.   அந்த இணைப்பை BSNL வெட்ட வரும்போது இவர்கள் உறுதுணையாக இருந்தார்கள்.   இப்போது BSNL சில விஷயங்களை வெட்ட விரும்புகிறது.   அதற்கும் உடன்பட்டார்கள். 

CDA விதி:
இப்பொழுது BSNL நினைக்கிறது.  55 வயதுள்ள ஒரு ஊழியரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற CDA விதியே இவர்கள் காலத்தில்தான் உருவாக்கப்பட்டது. CONDUCT DICIPLINE APPEAL என்ற ரூல் 2006 லே இவர்கள் பொறுப்பில் இருந்த காலத்தில் நம்மீது திணிக்கப்படுகிறது.  எதிர்ப்பை பதிவு செய்யவில்லை BSNLEU.   ஒரு DE, AGM   நினைத்தால் கூட 55  வயதுள்ள ஒரு ஊழியரை எந்த காரணமும் சொல்லாமல் வெளியேற்றலாம் .   ஒரு காலத்தில் CCM , GM, CHAIRMAN நினைத்தால் கூட எவரையும் வெளியேற்ற முடியாது என்ற நிலை இருந்தது.   சமீபத்தில   இன்னும் மோசமான ஷரத்து ஒன்னு வந்திருக்குது. 61 1 4 என்று சொல்வார்கள்.  அதன் படி நம்மோட CMD நினைத்தாலே, நம்மோட DOT காலத்து பென்சனை நிறுத்திப்புடலாம்.  இதை பற்றியும் எந்தவிதமான ஞானமும் இல்லாமல், இது மாதிரி வந்திருக்கிறது என்ற தகவலைக் கூடச் சொல்லாமல் BSNLEU ஓடிக்கொண்டிருக்கிறது.   NFTE போராடிக் கொண்டிருக்கிறது.   DOT காலத்துல வாங்கின பென்சனை எவனும் கை வைக்க முடியாது என்ற உத்தரவை தோழர் குப்தா வாங்கிக் கொடுத்தார்.  
      ஆனால் CDA விதிகள்ள DOT காலத்துப் பென்சனை அரசாங்கமே கை வைக்க முடியாது -  DOT  யே கை வைக்க முடியாது   என்ற ஒன்றை ஒரு சாதாரண CMD நினைத்தால் கூட வெட்டி விடலாம் என்ற நிலைமை வந்துள்ளது. .   நமது காலத்தில், NFTE காலத்தில் எதெல்லாம் கஷ்டப்பட்டு, பெரும் சாதனையாகப் பெற்றோமோ அதெல்லாம்   தானடித்த மூப்பாக செய்யப்பட்டு  வருகிறது.     இன்றைக்கு ஒரு லட்சம்  பேரை  வீட்டுக்கு அனுப்பலாம் என்ற பரிந்துரை வந்திருக்கிறதே.  யார் காலத்தில்? அதுவும் BSNLEU காலத்திலேதான் வந்திருக்கிறது.    அதே போல 30 % பங்குகளை விற்போம் என்றும்  சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். 

பரிவு அடிப்படைப் பணி:
     BSNLEU வினுடைய இந்த ஆறாண்டு அங்கீகார காலத்தில் நடந்த பல்வேறு விஷயங்களை நாம் பேசிக் கொண்டிருக்கிறோம்.  ஊழியர்கள் தம்முடைய பணிக் காலத்தில் இறந்து போனால், அவர்களுடைய குடும்பத்திலே ஒருவருக்கு வேலை என்பது DOT காலத்திலேயிருந்து,  நாம் உடனுக்குடன் பெற்று வந்தோம்.   இப்போது அது  கிடைக்கக் கூடாது  என்ற வகையில்  வரையறைகள்  வந்துள்ளது .  அந்த குடும்பத்துடைய வறுமை 55 % இருக்கிறதா என்று பார்க்கப்படுகிறது.   வறுமை நிலை நிர்ணயிக்கப்பட்டு அவர்களுக்கு வேலை தரப்படுகிறது.   ஒரு காலத்திலேயே  DE,  DGM, JTO என்ற அளவிலே கூட பரிவு அடிப்படை வேலை கொடுக்கப்பட்டது.  குடும்பத்தில் யாருக்கு வேண்டுமானாலும் வேலை கொடுக்கலாம் என்ற நிலை இருந்து வந்தது.  இவர்கள் காலத்தில் எல்லா கணக்கும் பார்க்கப்பட்டு குடும்பத்திலுள்ள பெண்களுக்கு மட்டும் இப்போது வேலை கொடுக்கப்பட்டு வருகிறது.   ஆக, இன்றைக்கு குரூப் D வேலை கூட பரிவு அடிப்படையில் கிடைக்கக் கூடாது என்ற நிலை வந்து விட்டது.    மிகக் கடுமையான மதிப்பீடு, அதாவது புள்ளி முறை என்பது வேலை கிடைக்கக் கூடாது  என்கின்ற நிலைமைக்கு கொண்டு வந்துள்ளது.  நமது NFTE  இந்த 55 சதவீதத்தை எப்படியாவது குறைக்க வேண்டும் என்று போராடி வருகிறது.    இதற்கு மறைந்த தலைவர் விசாரே அவர்கள் குறிப்புகள் கொடுத்திருக்கிறார்கள், தமிழகத்தில் நாம் கூட குறிப்பு கொடுத்திருக்கிறோம்.   இந்தப் புள்ளிகளை 35 என்ற அளவிலாவது குறைத்தால்தான் இன்னும் சில குடும்பங்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.    அதோடு, NFTE -ல் LUMP SUM என்கின்ற அளவிலே மொத்தமாக கொடுக்க வேண்டும் என்றும் OPTION வைத்துள்ளோம்.      ஆனால் BSNLEU இதிலே எந்தவித பொறுப்புமில்லாமல்,  55 % புள்ளியை குறைக்க வேண்டி NATIONAL JCM  மிலே வலியுறுத்த வேண்டும் என்ற சிந்தனை கூட இல்லாமல் இருந்து வருகிறது.    

தொடரும் .....
தொகுப்பு: S . சிவசிதம்பரம்.

EU வின் குறள் நெறி!

எப்பொருள் NFTE யால் கிடைத்திடினும்  அப்பொருள்
EU வால்  கிடைத்திடாது அழியும். 

எண்ணித் துணிய மாட்டாது   EU   துணிந்தாலும்
தூங்கிக் கெடுத்துவிடும். 

இன்னா செய்த EU வை இனிமேலும் 
தேர்தலில் வெல்ல விடேல்.

அங்கீகாரம் ஆற்றலைக் கொடுக்கும் அதுவும் 
நம் EU வால் தோற்கடிக்கப்படும். 

செல்வத்துள் செல்வம் சந்தாச் செல்வம் அச் செல்வம்
சேர்ப்பதொன்றே தலை.

BSNLEU அங்கீகார காலத்தில் நடந்தது என்ன? தோழர் பட்டாபியின் பேட்டியிலிருந்து ஒரு பகுதி:

   BSNLEU வின் ஆறாண்டுகால அங்கீகாரத்தில் நமது துறையில் ஏற்பட்ட  எதிர்மறை மாற்றங்களில் ஒரு சிலவற்றை மட்டும் கூறுகிறேன்.

அந்நிய நேரடி முதலீடு:
     ரொம்ப BSNLEU எதிர்ப்பதாக சொல்லக் கூடிய அந்நிய நேரடி முதலீடு இவங்க காலத்தில்தான் 49 சதவீதத்திலிருந்து 74 சதவீதமா மாறிச்சு.  இதுக்கு என்ன பொருள்னா தனியார் கம்பனிகளுக்கு வெளிநாட்டு மூலதனம்  வந்து குவியும்.    அவுங்களுக்கு வந்து RESOURCE CRUNCH என்பதே இருக்காது.      அதாவது  அவர்களுக்குப் பணப்புழக்கம் என்பதோ, முதலீடுப் புழக்கம் என்பதோ குறையவே குறையாது.      கடன வாங்கி வச்சிட்டு அவுங்க பண்ணிக்கிட்டே இருப்பாங்க.       அது ஒரு விதத்துல SECURITY க்கும் ஆபத்தாகும்.     அதுனால தனியார் கம்பெனிங்க தொடர்ந்து பணத் தட்டுப்பாடு இல்லாம விரிவாக்கப் பணிகள் செஞ்சிக்கிட்டே இருப்பாங்க.  இந்த வாயப்புகள  FDI கொடுக்கும்.   ஆனா BSNL க்கு அந்த வாய்ப்பு கிடையாது.          போட்டிய வலுப்படுத்தக் கூடிய ஆயுதமாக  தனியார் கம்பெனிகள் FDI  -யினுடைய  வரவை      வலியுறுத்திப் பெற்றுக் கொண்டார்கள்.

SHARING & UNBUNDLING:
     அதேபோல நம்ம தயாநிதி மாறன், ராசா காலத்திலேயே டெல்லி,  மும்பை ஆகிய இடங்கள்ள நம்மோட கோபுரங்கள SHARE பண்ணிக்கலாம் என்ற  முறை வந்திச்சு.   அதன் காரணமாக ஒரு டவர்ல ரெண்டு கம்பனி, மூணு கம்பனி SHARE பண்ணிக்க்கலாம்கறது வந்திச்சு.      இதுனால நம்ம டவர தனியார்களும் SHARE பண்ணிக்கிற வாய்ப்பு வந்துச்சு.  இதத் தொடர்ந்து இப்ப நம்ம சாம் பிட்ரோட என்னா சொல்லிட்டார்னா  ஒங்களோட கேபிளையும் UN BUNDLING கொடுங்க அப்படீன்னுட்டார்..   அதையும் கொடுத்துட்டோம்ன நம்மளோட லேண்ட் லைன், BROAD BAND இதோட விரிவாக்கம்  எல்லாம் பாதிக்கும்கிறதுனால நாம எதித்துக்கிட்டு வர்றோம்.      இதுவும் BSNLEU  காலத்தில்தான் வந்துது.  தடுக்க முடியல.  

ADC வருவாய்  ரத்து: 
அதே மாதிரி BSNL ளோட வருவாய் வளர்ச்சிக்கு ரொம்ப உதவிகரமா இருந்த, தனியார் நிறுவனங்களால் தரப்பட்டு வந்த ADC கட்டணம் என்று சொல்லப்படுகிற   கட்டண முறை முற்றிலுமாக நின்று போனது.   ஏறத்தாழ  நாலைந்து ஆண்டுகளில்   40,000 கோடி என்று கணக்கிடப்பட்டு ஒரு 15000, 16000 கோடி BSNL பெற்று விட்டது.      அது நின்று போகின்ற வருஷத்துல 8000 கோடி என்று BSNL கணக்கிட்டுக் கொடுத்தது.   இப்போ ஒரு பைசா கூட  கிடையாது என்று ADC கட்டணம் நிறுத்தப்பட்டு விட்டது.  டாட்டா போன்ற மிகப் பெரிய தனியார் கம்பனிகள் எல்லாம்    BSNL ஐ எதிர்த்து நீதிமன்றம் சென்று, D.D. ஷா என்று சொல்லக் கூடிய  TELECOM DISPUTE SETTLEMENT ATHORITY மூலமாக  அந்தப் பிரச்சனையையும் தங்களுக்குச் சாதகமாக மாற்றிக் கொண்டதும் இந்த  BSNLEU   காலத்தில்தான்.         அதுனால நம்மளோட வருவாய் மிகப் பெரிய அளவுக்கு வீழ்ச்சி அடைந்தது ADC போன்ற  கட்டண இழப்பினால்தான்.    TRAI இதுல செய்த சதியை  வெளிக்கொணராமல் அதை எதிர்த்து மிகப் பெரிய போராட்டத்தை நடத்தாமல் வெறும் ஆர்ப்பாட்டம் என்ற கண்துடைப்போடு  BSNLEU நிறுத்திக் கொண்டது.;   இப்படி 10000 கோடிக்கு இழப்பு ஏற்பட்டதும் BSNLEU காலத்தில்தான்.    
                                                                                                                          தொடரும்..............
தொகுப்பு: S. சிவசிதம்பரம்.                          

வெற்றிக்கொடி நாட்டிடுவோமே!!

ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்!
ஒருவரையும் காசு கொடுத்து சேர்க்க வேண்டாம்.

ஒண்ட வந்த பிடாரியாக  இருக்க வேண்டாம்!
ஒற்றுமையை எந்நாளும் கெடுக்க வேண்டாம்!

EU வைப் போல் பொய்யைச் சொல்ல  வேண்டாம்!
இழந்ததுவே போதும் இனி இழக்க வேண்டாம்.

பொன் போன்ற போனசினைப் பெற்றிடலாமே!
கண் போன்ற நம் துறையைக் காத்திடலாமே.

கையாலாகா EU வை விரட்டிடுவோமே! தேர்தல்
களத்தினிலே வெற்றிக்கொடி நாட்டிடுவோமே!!

Tuesday, January 4, 2011

நண்பனும் வம்பனும்!

நண்பன்:  வணக்கம் தோழரே!  திரும்ப நம்ம சங்கத்துக்கு நீங்க வந்தது, அதுவும் இந்த நேரத்துல வந்தது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.  காரணத்த தெரிஞ்சிக்கலாமா? 

வம்பன்:  இதுல என்னா தோழர் இருக்கு.   ஒங்களுக்குத் தெரிஞ்ச காரணம்தான்!   யேன் வாயால சொல்லனும்னு நெனைக்கறீங்க! அதானே?  சொல்றேன். ஒத்த வரியில சொல்லி முடிக்க முடியாது.   இருந்தாலும் சுருக்கமா சொல்ல முயற்சி பண்றேன்.     நோட் பண்ணிக்குங்க
பாயின்ட் நம்பர் 1 :
ஒங்களுக்குத்தான் தெரியும   நான் அதிகம் படிக்காதவன்னு.  நாமல்லாம் பால்ட்டே பாத்துக்கிட்டு காலத்த ஓட்ட வேண்டியதுதான். நமக்கெல்லாம் புரோமோஷன்  எங்க கெடைக்கப் போவுதுன்னு நெனச்சிக்கிட்டு இருக்கிறப்பதான்  எனக்கு ஒரு ஆசைய கெளப்பி உட்டாங்க.   என்னான்னா, நீங்க படிக்கலேன்னா பரவாயில்ல!  ஒங்களுக்கு  நாங்க பரிச்சை இல்லாமலேயே  ஒசந்த பதவி வாங்கித் தருவோம்னாங்க   நானும் அத நம்பித்தான் நம்பூதிரிச் சங்கத்துல சேர்ந்தேன்.
     இப்போ என்னடான்னா அதப் பத்தியே பேச மாட்டேங்கிறான்.   கேட்டா .... முடியும் முடியலேன்னாவது சொல்லனும்ல!   வர்க்கம், ஒத்துமை, ப்ரான்ஸ்ல கூட அப்புடித்தான் .... அது இதுன்னு  சுத்தி வளச்சி என்னென்னமோ பேசுறாங்க!   இந்த காலத்துல   எல்லாராலையும்   சொன்னபடி நடந்துக்க முடியுமாங்க்றது செரமம்னு எல்லாருக்கும் தெரிஞ்ச வெஷயம்தானே!    எனக்கு என்ன வருத்தம்னா, அவுங்க கொஞ்சம் கூட அதப் பத்தி பீல் பண்ணலேங்கிரதுதான்.    
     பொய் சொன்னா தாங்கிக்கலாம்.   லோக்கல் அரசியல்வாதி மாதிரி  பச்சையாப்  பொய்  சொன்னா தாங்கிக்க முடியுமா!   அதான் வந்துட்டேன்!

நண்பன்: ரொம்ப நல்லா உணர்ந்து சொல்லியிருக்கீங்க !   இது மாதிரி ஒவ்வொன்னையும் தெளிவா புரிஞ்சிக்கிட்டா தூங்குமூஞ்சிக்கெல்லாம் அங்கீகாரம் கெடைக்காதுல்ல!

வம்பன்:  கண்டிப்பா.  என்ன  வம்புக்காரன்னுதான நீங்க நெனைசிருக்கீங்க!  நாளைக்கு   
                 இதே நேரத்துக்கு வாங்க பாய்ண்டு பாய்ண்டா  இன்னம் புட்டு புட்டு வைக்கிறேன்.  

நண்பன்: EU சங்கத்தில இருந்து வந்த நீங்க சொல்றது தான் உணர்ந்து சொல்றதா இருக்கு.  
                கண்டிப்பா நாளைக்கு சந்திப்போம். தோழரே!                                                        
பேட்டி பதிவு 
உங்கள் seenathaana.

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR