நண்பன்: வணக்கம் தோழரே! திரும்ப நம்ம சங்கத்துக்கு நீங்க வந்தது, அதுவும் இந்த நேரத்துல வந்தது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. காரணத்த தெரிஞ்சிக்கலாமா?
வம்பன்: இதுல என்னா தோழர் இருக்கு. ஒங்களுக்குத் தெரிஞ்ச காரணம்தான்! யேன் வாயால சொல்லனும்னு நெனைக்கறீங்க! அதானே? சொல்றேன். ஒத்த வரியில சொல்லி முடிக்க முடியாது. இருந்தாலும் சுருக்கமா சொல்ல முயற்சி பண்றேன். நோட் பண்ணிக்குங்க
பாயின்ட் நம்பர் 1 :
ஒங்களுக்குத்தான் தெரியும நான் அதிகம் படிக்காதவன்னு. நாமல்லாம் பால்ட்டே பாத்துக்கிட்டு காலத்த ஓட்ட வேண்டியதுதான். நமக்கெல்லாம் புரோமோஷன் எங்க கெடைக்கப் போவுதுன்னு நெனச்சிக்கிட்டு இருக்கிறப்பதான் எனக்கு ஒரு ஆசைய கெளப்பி உட்டாங்க. என்னான்னா, நீங்க படிக்கலேன்னா பரவாயில்ல! ஒங்களுக்கு நாங்க பரிச்சை இல்லாமலேயே ஒசந்த பதவி வாங்கித் தருவோம்னாங்க நானும் அத நம்பித்தான் நம்பூதிரிச் சங்கத்துல சேர்ந்தேன்.
இப்போ என்னடான்னா அதப் பத்தியே பேச மாட்டேங்கிறான். கேட்டா .... முடியும் முடியலேன்னாவது சொல்லனும்ல! வர்க்கம், ஒத்துமை, ப்ரான்ஸ்ல கூட அப்புடித்தான் .... அது இதுன்னு சுத்தி வளச்சி என்னென்னமோ பேசுறாங்க! இந்த காலத்துல எல்லாராலையும் சொன்னபடி நடந்துக்க முடியுமாங்க்றது செரமம்னு எல்லாருக்கும் தெரிஞ்ச வெஷயம்தானே! எனக்கு என்ன வருத்தம்னா, அவுங்க கொஞ்சம் கூட அதப் பத்தி பீல் பண்ணலேங்கிரதுதான்.
பொய் சொன்னா தாங்கிக்கலாம். லோக்கல் அரசியல்வாதி மாதிரி பச்சையாப் பொய் சொன்னா தாங்கிக்க முடியுமா! அதான் வந்துட்டேன்!
நண்பன்: ரொம்ப நல்லா உணர்ந்து சொல்லியிருக்கீங்க ! இது மாதிரி ஒவ்வொன்னையும் தெளிவா புரிஞ்சிக்கிட்டா தூங்குமூஞ்சிக்கெல்லாம் அங்கீகாரம் கெடைக்காதுல்ல!
வம்பன்: கண்டிப்பா. என்ன வம்புக்காரன்னுதான நீங்க நெனைசிருக்கீங்க! நாளைக்கு
இதே நேரத்துக்கு வாங்க பாய்ண்டு பாய்ண்டா இன்னம் புட்டு புட்டு வைக்கிறேன்.
நண்பன்: EU சங்கத்தில இருந்து வந்த நீங்க சொல்றது தான் உணர்ந்து சொல்றதா இருக்கு.
கண்டிப்பா நாளைக்கு சந்திப்போம். தோழரே!
பேட்டி பதிவு
உங்கள் seenathaana.
No comments:
Post a Comment