தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Thursday, February 28, 2019

TMTCLU 
தஞ்சை மாவட்டச் செயற்குழு 
=============================================
02-03-2019 சனிக்கிழமை மாலை 4 மணி
தொலைபேசியக வளாகம், மன்னார்குடி.

பொருள்:
*          தமிழ் மாநில மாநாடு 
**        தஞ்சை மாவட்ட மாநாடு 
***      ஒப்பந்தத் தொழிலாளர்கள்  20 %     
            ஆட்குறைப்பு சம்பந்தமாக.
****    டிசம்பர், ஜனவரி 2 மாத சம்பளம் வராதது 
            சம்பந்தமாக. 

அனைவரும் வருக! வருக! 
என அன்புடன் அழைக்கும்,
C. நாடிமுத்து, மாவட்டத் தலைவர், TMTCLU, பேராவூரணி.
D. கலைச்செல்வன், மாவட்டச் செயலர், TMTCLU, தஞ்சை.
R.K. ராஜேந்திரன், மாவட்டப் பொருளர், TMTCLU, வேதாரண்யம். 

அழைப்பின் மகிழ்வில் 
கே. கிள்ளிவளவன், 
NFTE, மாவட்டச் செயலர், தஞ்சை.
தஞ்சை மாவட்டத்தில் இம்மாதம் 28-02-19ல் 
பணி ஓய்வு பெறும் தோழர்கள் 
===============================================================
தோழர். S. கிருஷ்ணமூர்த்தி TT /ARP 
தோழர். T. ராஜேந்திரன் TT/TPG 
தோழர். V. ராஜேந்திரன் OS/MNG 

இவர்களின் பணி ஓய்வுக் காலம் 
சிறப்பாகவும், செழிப்பாகவும், 
நல் ஆரோக்கியத்துடனும் விளங்கிட 
தஞ்சை மாவட்டச் சங்கம் தனது 
புரட்சிகர வாழ்த்துக்களைக்  
கூறி மகிழ்கிறது.
அன்புடன்,
கே. கிள்ளிவளவன்,
மாவட்டச் செயலர்.
======================================================================
தோழர். எஸ். கிருஷ்ணமூர்த்தி 
பணி நிறைவு பாராட்டு விழா காட்சிகள்:

=======================================================================
 தோழர். T. ராஜேந்திரன் TT /TPG 
பணி நிறைவு பாராட்டு விழா காட்சிகள்:
Wednesday, February 27, 2019


குடந்தை கோட்ட மாநாடு
26-02-19 காரைக்கால்
===========================================
இன்று காரைக்காலில் நடைபெற்ற 
குடந்தை மாவட்ட மூன்றாவது
மாநாட்டில் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 
மாவட்ட சங்க நிர்வாகிகளை தஞ்சை மாவட்டச்
சங்கம் வாழ்த்தி மகிழ்கிறது.

தலைவர்
தோழர் பாலசுப்ரமணியன்
மயிலாடுதுறை.


செயலர்
தோழர் விஜய் ஆரோக்கியராஜ்

பொருளர்
தோழர் பன்னீர்செல்வம்
காரைக்கால்

ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.
முந்தைய பொறுப்பாளர்களுக்குநன்றியும்
புதிய பொறுப்பாளர்களுக்கு வாழ்த்துக்களையும்
தஞ்சை மாவட்டச் சங்கம்
தெரிவித்துக்கொள்கிறது.

அன்புடன்,
கே. கிள்ளிவளவன்,
மாவட்டச் செயலர், தஞ்சை.


சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் எங்கே?

முகிலன் காணாமல் போய் 10 நாட்களுக்கு மேலாகி விட்டது. சமூக மாற்றத்தில் நம்பிக்கையுடன் களமாடும் அனைவரும் அவர் எங்கே இருக்கின்றார் என்று தெரியாமல் தேடிக் கொண்டு இருக்கின்றார்கள். அவர் இருக்கின்றாரா? இல்லையா? என்பதே கேள்விக்குள்ளாகி இருக்கின்றது. 'முகிலன் எங்கே?' என்ற கேள்வி சமூக வலைத்தளங்களை தாண்டி பொதுச் சமூகத்தின் கேள்வியாக மாறிக் கொண்டு இருக்கின்றது. முகிலன் எங்கே என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் நாம் அனைவரும் பெரும் துயரமும் அச்சமும் அடைந்துள்ள நிலையில், அதற்கு சட்டப்படி பதில் தர வேண்டிய அரசு எந்தவித செயல்பாடும் அற்று, இரை தின்ற மலைப்பாம்பைப் போல அசைவற்றுக் கிடக்கின்றது. அவர்களுக்கு முகிலனைப் பற்றி கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை. அவர்களைப் பொருத்தவரை முகிலனைப் போன்றவர்கள் இருப்பதைவிட இல்லாமல் போவதே நல்லது. அதிகாரத்திற்கும் அடக்குமுறைக்கும் எதிராக கேள்வி எழுப்பும் அனைவரும் காணாமல் போக வேண்டியவர்கள் என்றே அரசு நினைக்கின்றது.
இந்த அரசுக்குத் தெரியாமல் முகிலன் காணாமல் போய் இருக்க ஒரு துளி அளவு கூட வாய்ப்பில்லை. ஸ்டெர்லைட் ஆலைக்காக 13 பேரை படுகொலை செய்த இந்த குற்றக் கும்பல் தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக எந்த எல்லைக்கும் செல்லும் என்பது அனைவருக்கும் தெரியும். முகிலன் வெளியிட்ட துப்பாக்கி சூடு பற்றிய ஆதாரங்கள் இத்தனை நாட்களாக இந்த அரசு சொல்லி வந்த அப்பட்டமான பொய்யைக் கிழித்து இருக்கின்றது. அரசு, காவல்துறை, ஸ்டெர்லைட் மூன்றும் கூட்டாக இணைந்து திட்டமிட்டு இந்தப் படுகொலைகளை நிகழ்த்தியிருப்பதை முகிலனின் வீடியோ அம்பலப்படுத்தி இருக்கின்றது. இந்த வீடியோவின் மூலம் பின்வரும் தகவல்கள் நமக்குத் தெரிய வருகின்றது.
11:55:24 மணிக்குத்தான் மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு உள்ளே வருகின்றார்கள். காவல்துறை சரியாக 11:57:50 மணிக்குத் துப்பாக்கிச் சூட்டைத் தொடங்குகிறது. அதற்கு முன்பாக அங்கிருந்த CCTV கேமாரக்கள் சிலரால் திட்டமிட்டு உடைக்கப்படுகின்றன. துப்பாக்கிச்சூடு தொடங்கிய ஒரு நிமிடம் பதினான்கு விநாடிகளுக்குள் மக்கள், ஆட்சியர் அலுவலகத்தைவிட்டு வெளியேறி விடுகின்றன‌ர். அதற்குப் பிறகு காவல்துறை அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை, தடுத்து விடுகின்றார்கள். அதன்பின் 12:06 மணிக்கு ஸ்டெர்லைட்டின் அடியாள் கும்பல் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் இருந்த வாகனங்களுக்குத் தீ வைக்கின்றது. இதை அங்கிருந்த காவல்துறையினர் அனைவரும் கைகட்டி வாய்பொத்தி வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கின்றார்கள். ஆனால் துணை வட்டாட்சியர் சேகர் மூலமாக 11 மணிக்கே போராட்டக்காரர்கள் தீ வைப்பு நிகழ்த்தி விட்டதாகவும், அதனால் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டதாகவும் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. ஆனால் ஆட்சியர் அலுவலகத்துக்கு உள்ளே மக்கள் வந்ததே 11:55:24 மணிக்குத்தான். அப்படி இருக்கும்போது எப்படி 11 மணிக்கே தீ வைக்க முடியும்?
மேலும் 11.48 மணிக்குத் தீ வைக்கப்பட்டதாக திருநெல்வேலி காவல்துறை உதவி ஆணையர் புகார் அளித்ததாகவும், அதனால் 11.50 மணிக்குத் தீயணைப்பு வாகனங்களை அனுப்பியதாகவும் போலியான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்தப் போலியான ஆவணத்தைத் தாக்கல் செய்தவர் தீயணைப்புத்துறை அதிகாரி சண்முகம் ஆவார். ஸ்டெர்லைட்டின் கூலிப்படை தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபடுவதற்கு முன்பே துப்பாக்கிச் சூடு நடந்து முடிந்துள்ளது. ஆனால் திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்த கொலைகளை மறைப்பதற்காகவே காவல்துறையின் துணையுடன் ஸ்டெர்லைட் தன்னுடைய கூலிப்படையை வைத்து தீவைப்பு சம்பவங்களில் ஈடுபட்டது சந்தேகத்திற்கு இடமின்றி இந்த வீடியோ மூலம் அம்பலமாகி இருக்கின்றது.
ஆனால் சில சமூக விரோதிகள் தீ வைப்பு சம்பவங்களில் ஈடுபட்டதால்தான் சுட நேர்ந்தது என இத்தனை நாட்களாக அரசும், காவல்துறையும், தினமலர் போன்ற விபச்சார ஊடகங்களும், சில விஷ நாக்குப் பேர்வழிகளும் தொடர்ந்து பரப்புரை செய்து வந்தார்கள். ஆனால் முகிலனின் வீடியோ இதை எல்லாம் பொய் என்று நிரூபித்து இருக்கின்றது. மக்களவைத் தேர்தலும் தமிழக சட்டசபையில் காலியாக உள்ள தொகுதிகளுக்குமான தேர்தலும் நெருங்கி வரும் சமயத்தில் இந்த வீடியோவை முகிலன் வெளியிட்டது அரசைக் கோபப்படுத்தி இருக்கலாம். ஸ்டெர்லைட்டுடன் தனக்குள்ள கள்ளக்கூட்டையும், கொலையில் தனக்குள்ள பங்கையும் அம்பலப்படுத்துவதால் மக்களின் கோபம் முழுவதும் உண்மையான தேச விரோதிகளான தங்கள் மீதும், தங்களை இயக்கிக் கொண்டிருக்கும் பார்ப்பன பயங்கரவாத பிஜேபியின் மீதும் திரும்பி, மக்கள் தங்களை படுதோல்வி அடையச் செய்து விடுவார்கள் என்ற கோபத்தில் தான் அரசு திட்டமிட்டு முகிலனை ஏதோ செய்திருக்க வாய்ப்பிருக்கிறது. இந்த அரசின் மீதும், அதன் கூலிப்படையாக செயல்படும் தமிழக காவல்துறை மீதும் சந்தேகப்படுவதற்கான அத்தனை காரணங்களும் மிக வலுவாகவே உள்ளன‌.
முகிலனுக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கான முழு பொறுப்பும் இந்த அரசையே சேரும். ஸ்டெர்லைட் கம்பெனிக்காக தன் சொந்த நாட்டு மக்களை இரக்கம் இல்லாமல் சுட்டுக் கொன்ற இந்த அரசு மக்கள் மன்றத்தின் முன் தண்டிக்கப்பட வேண்டிய அரசு ஆகும். கொலைகாரர்களும், கொள்ளைக்காரர்களும், ஊழல் பேர்வழிகளும் நம்மை ஆட்சி செய்து கொண்டிருக்கும் போது முகிலன் மட்டுமல்ல, இந்த குற்றக் கும்பலுக்கு எதிராகப் போராடும் அனைவரும் காணாமல் போகும் நிலை நிச்சய‌ம் வரும். காஷ்மீரில் ஆயிரக்கணக்கான மக்கள் இந்திய ராணுவத்தால் காணாமல் போகச் செய்யப்பட்டதைப் போல இனி தமிழ்நாட்டிலும் நடக்கும். எல்லா வகையிலும் தோற்று வெட்கக்கேடான முறையில் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் இந்தக் குற்றக் கும்பல் தன்னை காப்பாற்றிக் கொள்ள மிகக் குரூரமான வழிகளை தேர்ந்தெடுத்துள்ளது. இந்த ஆட்சி கொலைகளின் மூலமும், காணாமல் போகச் செய்வதன் மூலமும் தன்னை தக்க வைத்துக் கொள்ளப் பார்க்கின்றது.
நாம் அனைவரும் முகிலனுக்கு ஆதரவாக உரத்துக் குரல் கொடுப்போம். அதே சமயம் ஸ்டெர்லைட் ஆலைக்காக அப்பாவி பொது மக்களை கொலை செய்த, கொலை செய்யத் தூண்டிய அனைவரையும் விசாரணைக்கு உட்படுத்தி தண்டனை பெற்றுத் தரவேண்டும் என்பதற்காகவும் போராட்டத்தை முன் எடுப்போம்.
Govt plans Rs 8,500 crore VRS 
for MTNL, BSNL : 

Saturday, February 23, 2019

வருகிற 26-02-2019 ல் 
குடந்தை மாவட்ட மாநாடு 
காரைக்காலில் நடைபெறவிருக்கிறது.
======================================Friday, February 22, 2019

Wednesday, February 20, 2019

மூன்று நாள் போராட்டத்தை வெற்றிகரமாக்கிய தோழர்களுக்கு பாராட்டும் நன்றியும்.
===============================================

கிஞ்சித்தும் சளைக்காமல் மூன்று நாள் வேலை நிறுத்தப்  போராட்டத்தை அனைத்து வழிகளிலும் முன்னெடுத்துச் சென்று வெற்றிகரமாக முடித்துத் தந்தீர்கள்.   44 ராணுவ வீரர்கள் உயிர்ப்பலி, தேர்தல் கூட்டணி பரபரப்பு இவைகளூடாகவே நமது போராட்டமும்  நடைபெற்றிருக்கிறது.

நமது கோரிக்கைக்காக  கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே, பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்திருக்கிறோம்.  மத்திய அரசு தனது சொந்தத் துறையையே காவு கொடுக்கும், அது எதற்கும் கவலைப்படாது, மீண்டும் மீண்டும் நாட்டை ஆள வேண்டும்,  அதற்காக அது எதை வேண்டுமானாலும் செய்யும் என்பதையெல்லாம் தெரிந்துதான்  நாம் போராடியிருக்கிறோம்.  அதுதான் தொழிலாளி வர்க்கக் கடமை. 

மூன்றாவது நாள் போராட்ட முடிவில், நம் முன் இருக்கும் சவால்களை எண்ணிப்பார்த்து, அவற்றை எதிர் கொள்ளும்  உத்திகளை அகில இந்திய, மாநிலச் சங்கங்கள் நமக்கு அறிவிக்கும். அதனை இன்னும் விழிப்பாக தோழர்களிடம் கொண்டு சென்று நடைமுறைப்படுத்துவோம்!

ஆபத்தான மதவெறி சக்திகள் தமிழகத்தில் காலூன்றக் கூடாது என்று இதுநாள் வரை அனைத்து அரசியல் சக்திகளும் உறுதியாகவிருந்தோம்.
ஆனால் இன்று அதை துளிர்க்க வைக்க சில சக்திகள் முயல்கின்றன. இவற்றில் நாம் விழிப்பாய் இருப்பதும், முறியடிப்பதும் அவசியம். 

44 ராணுவ வீரர்களின்  தியாகம் பலியாக்கப்பட்டிருக்கிறது.  நன்றாயிருக்கும் நாட்டை, கலவர பூமியாக்கி அதில் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள். எச்சரிக்கையாகவிருப்போம்.

மஞ்ச நோட்டிஸ் கொடுத்த தம்பி அனிலுக்கு பொதுத் துறை HAL ஐ பலிகொடுத்து ரபேல் விமான ஒப்பந்தத்தை கொடுத்தார் மோடி.
அதே போல் அண்ணன் முகேஷுக்கு BSNL ஐப் பலியாக்க ஜியோவுக்கு 
4 ஜி தருகிறார் நமது பிரதமர்.

ஏற்கனவே கல்வி, மருத்துவம், தொழில்கள் தனியார் மயத்திற்கு மாறிவிட்டது. அதேபோல், தொலைத்தொடர்பு, வங்கி, இன்சூரன்ஸ், பாதுகாப்பு, ரயில்வே ஆகியவற்றையும் தனியார் மயமாக்கும் முயற்சியில் தீவிரப்படுகிறது மோடி அரசு.

அதன் ஒரு பகுதியாகத்தான் போராடும் தொழிலாளி வர்க்கத்தை அலட்சியப்படுத்திப் பார்க்கிறது ஆளும் அரசாங்கம்.  இந்த மோசடிப் பேர்வழிகளிடம் ஒரு கண்ணாயிருப்போம் தோழர்களே!  நல்ல சேவையை, நமது மக்களுக்கு தர நாளை துரிதப்படுவோம்! நன்றி! வணக்கம்!

வாழ்த்துக்கள் தோழர்களே!
கே. கிள்ளிவளவன்,
தஞ்சை மாவட்டச் செயலர்.
Sunday, February 17, 2019


அங்கேயே! காத்திருப்போம்!
===================
வேலை நிறுத்தம்! வேலை நிறுத்தம்!!
வெற்றிகரமான வேலை நிறுத்தம்!
சங்கங்களெல்லாம் சேர்ந்திருக்கின்றோம்!
சாதிக்கும் தந்திரம் கற்றிருக்கின்றோம்!

அரசாங்கம் நமக்கு ஒப்புதல் அளித்த 
கோரிக்கை தீரவே போராடுகின்றோம்!
அரசுத் துறை வளர்ச்சியையும் 
உறுதிப்படுத்தவே போராடுகின்றோம்!

பல லட்சம் ஏக்கர் நெலம் இருக்கு,
பல மீட்டர் ஒயர டவர்கள் இருக்கு.
ஆபீசு, நிர்வாகம், ஆளு பலம் 
ஒண்ணேமுக்கால் லட்சம் மேல இருக்கு!

பல லட்சம் கோடி சொத்து நமக்கு! 
ஒரு பைசா வங்கியில் கடனில்லை.
 நாடு பூரா செப்புச் சுரங்கம் 
பூமிக்கு அடியில் கேபிளாக

இது பொட்டிக் கடை நிர்வாகமில்லே!
ஊரெங்கும் ஆபீசு உள்ளவர் நாம்!
அத்தனை இருந்தும் அரசாங்கம் 
அழிக்க நினைப்பது எதனாலே!

கல்வி, மருத்துவம், ஆலைகள் எல்லாம் 
கார்ப்பரேட்டு  மயமாய் மாற்றி 
காசு பார்த்த ருசியினாலே!

தகவல் தொடர்பு, தொழில்நுட்பம் 
தனியார் மயம் ஆகிப்போனால் 
தட்டுப்பாடே இருக்காது 
தரங்கெட்ட ஆட்சியாளருக்கு!

நாளொன்றுக்கு கோடிக்கணக்கில் 
லாபம் பார்த்த நமது துறை 
நட்டமாய் போனது யாராலே!
நாற்பதாயிரம் கோடி இருப்பு 
காற்றாய் கரைந்தது யாராலே!

லாபமீட்டும் செல்போன் தொழிலை 
தனியாருக்கு ஏன் தந்தான்!
கடனை கொடுத்து, அவனை வளர்த்து,
அதையும் ரைட் ஆப் செய்தது ஏன்!

BSNL தொலைய வேண்டும்!
பாக்கெட் நிரம்பி வழிய வேண்டும்!
இதைத் தவிர வேறென்ன!

இதனால்தான் தோழர்களே!
இத்தனை பேரும் சேர்ந்திருக்கின்றோம்!
இந்த வாய்ப்பை விடலாமா!
நாம் வாழும் உயர்ந்த வாழ்வு 
நமக்காய் போராடிய தோழர்களாலே!

நாம் நடத்தும் போராட்டம் 
நமக்காய் மட்டும் அல்ல! அல்ல!!
நமது துறையைக் காத்திடவும்,
நாட்டின் சொத்தாய் மாற்றிடவும்!

எல்லாவற்றையும் சரி செய்ய 
பணமும் உண்டு, வழியும் உண்டு.
மனமில்லாத ஆள்வோரிடம்,
போராட்டம் தவிர மார்க்கமில்லை.

காலையில் ஆபீஸ் வந்திடுவோம்!
பலியான போர் வீரர்களுக்கு 
அஞ்சலிக் கூட்டம் நடத்திடுவோம்!
அனைத்திலும் தியாகம் மேற்கொள்வோம்!

வேலைநிறுத்தம் வெற்றிகரமாக்க, 
அங்கேயே களம் அமைப்போம்!
3 நாளும் முனைப்பாய் நின்று 
முழு வெற்றிக்குப் பாடுபடுவோம்!

NFTE- தஞ்சை.
AUAB சார்பாக வேலை நிறுத்த விளக்க 
தெருமுனைப் பிரச்சாரம்.
===================================
திருவாரூர்
16-02-19 சனி மாலை 4 மணி 
இடம்: ரயிலடி, திருவாரூர். 
===================================
6 பெண்கள், 2 ஓய்வூதியர்கள் உள்ளிட்ட 
30 தோழர்கள் பங்கேற்றனர்.  AUAB சார்பாக வேலை நிறுத்த விளக்க 
தெருமுனைப் பிரச்சாரம்.
===================================
மன்னார்குடி
16-02-19 சனி மாலை 3 மணி 
இடம்: மேல ராஜ வீதி, மன்னார்குடி 
(பெரியார் சிலை அருகில்)
===================================
12பெண்கள், 5 ஓய்வூதியர்கள் உள்ளிட்ட 70 தோழர்கள் பங்கேற்றனர். 

ஒலிபெருக்கி அமைக்கப்பட்டு, TV, பத்திரிகை நிருபர்கள் பங்கேற்று தலைவர்களிடம் பேட்டி எடுக்கப்பட்டது.செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR