தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Wednesday, February 20, 2019

மூன்று நாள் போராட்டத்தை வெற்றிகரமாக்கிய தோழர்களுக்கு பாராட்டும் நன்றியும்.
===============================================

கிஞ்சித்தும் சளைக்காமல் மூன்று நாள் வேலை நிறுத்தப்  போராட்டத்தை அனைத்து வழிகளிலும் முன்னெடுத்துச் சென்று வெற்றிகரமாக முடித்துத் தந்தீர்கள்.   44 ராணுவ வீரர்கள் உயிர்ப்பலி, தேர்தல் கூட்டணி பரபரப்பு இவைகளூடாகவே நமது போராட்டமும்  நடைபெற்றிருக்கிறது.

நமது கோரிக்கைக்காக  கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே, பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்திருக்கிறோம்.  மத்திய அரசு தனது சொந்தத் துறையையே காவு கொடுக்கும், அது எதற்கும் கவலைப்படாது, மீண்டும் மீண்டும் நாட்டை ஆள வேண்டும்,  அதற்காக அது எதை வேண்டுமானாலும் செய்யும் என்பதையெல்லாம் தெரிந்துதான்  நாம் போராடியிருக்கிறோம்.  அதுதான் தொழிலாளி வர்க்கக் கடமை. 

மூன்றாவது நாள் போராட்ட முடிவில், நம் முன் இருக்கும் சவால்களை எண்ணிப்பார்த்து, அவற்றை எதிர் கொள்ளும்  உத்திகளை அகில இந்திய, மாநிலச் சங்கங்கள் நமக்கு அறிவிக்கும். அதனை இன்னும் விழிப்பாக தோழர்களிடம் கொண்டு சென்று நடைமுறைப்படுத்துவோம்!

ஆபத்தான மதவெறி சக்திகள் தமிழகத்தில் காலூன்றக் கூடாது என்று இதுநாள் வரை அனைத்து அரசியல் சக்திகளும் உறுதியாகவிருந்தோம்.
ஆனால் இன்று அதை துளிர்க்க வைக்க சில சக்திகள் முயல்கின்றன. இவற்றில் நாம் விழிப்பாய் இருப்பதும், முறியடிப்பதும் அவசியம். 

44 ராணுவ வீரர்களின்  தியாகம் பலியாக்கப்பட்டிருக்கிறது.  நன்றாயிருக்கும் நாட்டை, கலவர பூமியாக்கி அதில் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள். எச்சரிக்கையாகவிருப்போம்.

மஞ்ச நோட்டிஸ் கொடுத்த தம்பி அனிலுக்கு பொதுத் துறை HAL ஐ பலிகொடுத்து ரபேல் விமான ஒப்பந்தத்தை கொடுத்தார் மோடி.
அதே போல் அண்ணன் முகேஷுக்கு BSNL ஐப் பலியாக்க ஜியோவுக்கு 
4 ஜி தருகிறார் நமது பிரதமர்.

ஏற்கனவே கல்வி, மருத்துவம், தொழில்கள் தனியார் மயத்திற்கு மாறிவிட்டது. அதேபோல், தொலைத்தொடர்பு, வங்கி, இன்சூரன்ஸ், பாதுகாப்பு, ரயில்வே ஆகியவற்றையும் தனியார் மயமாக்கும் முயற்சியில் தீவிரப்படுகிறது மோடி அரசு.

அதன் ஒரு பகுதியாகத்தான் போராடும் தொழிலாளி வர்க்கத்தை அலட்சியப்படுத்திப் பார்க்கிறது ஆளும் அரசாங்கம்.  இந்த மோசடிப் பேர்வழிகளிடம் ஒரு கண்ணாயிருப்போம் தோழர்களே!  நல்ல சேவையை, நமது மக்களுக்கு தர நாளை துரிதப்படுவோம்! நன்றி! வணக்கம்!

வாழ்த்துக்கள் தோழர்களே!
கே. கிள்ளிவளவன்,
தஞ்சை மாவட்டச் செயலர்.








No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR